ஏப்ரல் 20, 2021, 3:34 காலை செவ்வாய்க்கிழமை
More

  இருக்கும் போதே என் லட்சியத்தை எட்டிவிட்டேன்!

  அயோத்தி வழக்கில் 40 நாள்களாக நின்றபடியே வாதாடிய வழக்கறிஞர் பராசரன்..

  sriparacharan
  sriparacharan
  • இருக்கும் போதே… என் லட்சியத்தை எட்டிவிட்டேன்..
  • அயோத்தி வழக்கில் 40 நாள்களாக நின்றபடியே வாதாடிய வழக்கறிஞர் பராசரன்..

  ”மிஸ்டர். பராசரன், நீங்கள் நீண்டநேரம் நின்றுகொண்டே விவாதம் செய்கிறீர்கள்… உங்கள் வயது மூப்பை கருத்தில் கொண்டு இருக்கை அளிக்கிறேன். அதில், அமர்ந்துகொண்டு விவாதம் செய்யலாமே…”

  ”மை லார்ட்! என்மீது நீங்கள் காட்டும் கருணைக்கு நன்றி. ஆனால், ஒரு வழக்கறிஞர் நின்றுகொண்டு வாதிடுவதுதான் சரி. நான் அந்த மரபைக் கடைபிடிப்பவன்!” என்று எதிர்முனையில் பதில் வந்தது.

  அயோத்தி வழக்கின்போது இப்படி கேட்டவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி. பதிலளித்தவர், 92 வயது வழக்கறிஞர் பராசரன் அவர்கள்.

  40 நாள்களாக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக அயோத்தி வழக்கு நடந்துவந்தது.அந்த 40 நாள்களும் தவறாது ஆஜராகி வாதிட்டார் பராசரன்அவர்கள்.

  ஒவ்வொரு நாளும் காலை 10.30 மணியளவில் தொடங்கும் விவாதம், மாலை 4-5 மணி வரைகூட நீடிக்கும். இவரின், வயதைக் கருத்தில் கொண்டுதான் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் , ‘சேரில் அமர்ந்து வாதிடலாமே’ என்று அக்கறை காட்டினார்.

  ”இந்த வழக்குதான் என் கடைசி வழக்கு. இனிமேல் எந்த வழக்கிலும் நான் ஆஜராக மாட்டேன். இறப்பதற்கு முன் என் லட்சியத்தை எட்டிவிட்டேன்” என்று தீர்ப்புக்குப் பிறகு குறிப்பிட்ட பராசரன் அவர்கள்,இன்று பூமி பூஜையை வீட்டில் அமர்ந்தபடி காணும் காட்சி..

  குறிப்பு; இவர்கள் கும்பாபிஷேகத்தை நேரில் காண அந்த ஸ்ரீராமர் அணுகிரகம் செய்ய பிரார்த்திப்போம்..

  மேலும் இவர்களைப் போல் இன்னும் எத்தனையோ பேர்..?அதில் குறிப்பிடதக்கவர்களில் முக்கியமானவர்கள், அத்வானி ஜி, முரளி மனோகர் ஜோஷி, மறைந்த பிரமோத் மகாஜன்,விஷ்வ இந்து பரிஷத் முன்னாள் தலைவர் மறைந்த அசோக் சிங்கால்,உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்.மற்றும் உமா பாரதி,இந்துத்துவாவில் வெறியாக இருந்த சாத்வி ரிதம்பரா ஆகியவர்களை குறிப்பிடலாம்.

  இன்று பூமி பூஜையில் வைக்கப்பட்ட தங்கம்,மற்றும் வெள்ளியால் ஆன கற்கள் போன்றவர்கள் இவர்கள். இவர்கள்தான் இந்த கோவிலின் அஸ்திவாரம்..அஸ்திவார கற்கள் வெளியில் தெரிவதில்லை..

  ஆனால்..? இந்த கற்களின் பலத்தால்தான் இந்த கோயில் பல ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கப் போகிறது.. இவர்களுக்கும், இந்த இடத்திற்காக உயிர் நீத்த கரசேவை தொண்டர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  • ராம சேவகன்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,114FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »