Homeஉரத்த சிந்தனைகோயிலுக்குள் சிற்பமாய்... காவல்பறையன் (எ) மணிக்கிரீவன்!

கோயிலுக்குள் சிற்பமாய்… காவல்பறையன் (எ) மணிக்கிரீவன்!

sankarankoil-kavalparaiyan-manikrivan1
sankarankoil-kavalparaiyan-manikrivan1

சும்மா எதற்கெடுத்தாலும் இரண்டாயிரம் வருடமாக தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வாதத்தை முன் வைப்பது நகைப்புக்குரியது. அதற்கு ஏதாவது முகாந்திரம் வேண்டாமா? உதாரணமாக பறையர்கள் எப்போது தாழ்ந்தவர்களாக குறிக்கப்படுகிறது? என்பதை சொல்ல முடியுமா?

சங்கப்பாடலில் மாங்குடி மருதனார் எழுதிய பாடல் சொல்கிறது “துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று இந்நான் கல்லது குடியும் இல்லை” என்று.

வாகைத்திணையில் பாடப்பட்ட பாடல் இது வாழ்வின் வெற்றிகரமான பக்கத்தை சொல்லும் திணை அதில் மூதின் முல்லை துறையில் சொல்கிறார். அந்த முதுமக்களின் பூக்கள், உணவு, குடிகள் என எல்லாவற்றையும் புகழ்ந்து விட்டு இவர்கள் அனைவரும் வணங்குவது நடுகல்லான வீரனையே.

இதை விட வேறென்ன தெய்வம் உண்டு என்று புகழ்கிறார். எனவே இது ஒரு தொல்குடிகளின் இணையற்ற வீரத்தை அவர்கள் வாழ்வை உயர்த்தி கூறும் பொருட்டே சொல்லப்படும் பாடல். இதே கவிஞர்தான் மதுரை காஞ்சி எழுதினார்.

ஆக இந்த குடிகளை தமிழ் நிலத்தின் தொன்மை மிக்க குடிகளாகவும் இவர்களுக்கு இணையில்லை என்றும் புகழ்கிற வண்ணம் உள்ளது. சங்க காலத்தில் பறையர்களை இழித்து பேசுவது இல்லை.

பிற்கால சோழர் காலத்தில் கிடைத்த கல்வெட்டுகளிலும் பறையர்களை தீண்டாதவர்கள் என்றோ, சண்டாளர்கள் என்றோ சொல்லும் சாட்சிகள் இருப்பதாக தெரியவில்லை. பறையர்கள் தனித்தனி சேரிகளில் வாழ்ந்தார்கள். அது கீழ் மேல் என்பதாக இல்லை.

பார்ப்பனச் சேரி, கம்மாளர் சேரி என்பது போலே பறைசேரியும் இருந்தது.”சேரி” என்ற வார்த்தை இன்று Slum என்பதோடு பொறுத்திப் பார்க்கப்படுகிறது. அது தவறானது சேரி என்பது கூட்டுக்குடியிருப்பு என்பதாகவே பயின்று வந்தது வெகு காலமாக. அதோடு எல்லா சமூகங்களை போலவே பறையர்களுக்கும் தனிச்சுடுகாடு இருந்தது.

பறையர்கள் பல்வேறு பிரிவுகளாக தனக்குள்ளே இருந்தனர். “உழுபறையன்” “காவாக்கார பறையன்” “ஊர்ப்பறையன்” “வள்ளுவப் பறையன்” என்று அழைக்கப்பட்டன. இதில் புல்லு பறிக்கிற பறையர்கள் தாழ்ந்தவர்களாக கருதப்பட்டார்கள்.

அது பறையர்களுக்குள்ளேயும் கூட. அதே போல புலையர் என்பவர்களும், ஈமச்சடங்கு செய்பவர்களும் தனியாக இருந்தனர். இதில் புலைத்தொழில் மற்றும் ஈமச்சடங்கு செய்பவர்களையே சமூகம் ஒதுக்கி வைத்துள்ளதாக தெரிகிறது.

மற்றபடி எல்லோரையும் போல சொத்துரிமை இருந்தது. ‘ஊர்ப்பறையன் மண்டை சோமநாதன் ஏழிசை மோகப்படைச்சன்’ என்பவன் ராஜராஜசோழன்-1 காலத்தில் கோவிலுக்கு சந்தி விளக்கு நிவந்தம் கொடுத்துள்ளான்.

கல்வெட்டுகளில், கிராம தீர்மானங்களில் பறையர்கள் கையெழுதிட்டிருக்கிறார்கள். குலசேகர பாண்டியன் ஆட்சியில் திருமய்யத்தில் நீர்நிலை விற்பனை செய்யப்பட்டபோது அதற்கான விற்பனை தொடர்பான ஆவணத்தில் பெரியநாட்டுப் பறையன், கானாட்டுப் பறையன், ஐநூற்றுப் பறையன், அரசர் மிகா பறையன், அகலிங்கப் பறையன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

sankarankoil-kavalparaiyan-manikrivan

படம்:- சங்கரன் கோவில் ஆலயத்தில் ஒரு சிற்பம்.

கல்வெட்டு வடிக்கும் முன் ஓலையில் எழுதி கையெழுத்துவிடும் முறை இருந்தது. கையெழுத்து போடத் தெரியாதவர்கள் ஓலையில் எழுத்தாணியால் கீறி விடுவார்களாம் அதற்கு பக்கத்தில் அவருடைய பெயரை எழுதி ‘தற்குறி’ என்று எழுதுவார்களாம்.

அவர்களுடைய பெயர் எழுதி பின் தற்குறியிடம் கேட்டறிந்தேன் என்று வேறொருவர் கையெழுத்திடும் முறை உள்ளது. இதுதான் இன்றும் நாம் எழுதப்படிக்க தெரியாதவர்களை தற்குறி என்று அழைக்க காரணம்.

ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் நான்காவது ஆட்சியாண்டுக் காலத்திய கல்வெட்டொன்றில், துக்கைப்பட்டன், சொக்கப்பட்டன் என்ற சிவபிராமணர்கள் கையெழுத்திடத் தெரியாத நிலையில் தற்குறி இட்டுள்ளனர்.

ஆனால் இதே கல்வெட்டில் அரசர் மிகா பறையர்,கானாட்டுப்பறையன் என்பவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ஆக சிவபிராமணர்கள் கையெழுத்திட தெரியாத நிலையில் பறையர்கள் கையெழுத்திட்டிருந்தால் அவர்கள் எப்படி தாழ்த்தப்பட்டிருப்பார்கள்?

நாயன்மார்களாக, ஆழ்வாராக, ஈடுஇணையற்ற தமிழின் சொத்தான திருக்குறள் கொடுத்த வள்ளுவர்களாக இருந்தவர்கள் எங்களால்தான் மேலே வந்தார்கள் என்று பாதிரியார்கள் சொல்வது யாரை ஏமாற்ற?

பெரியார்தான் உங்களுக்கு அநாதரட்சகர் என்று திராவிடம் ஏமாற்றும் அதே பண்ணையாரிய முறையைத்தான் வாடிகனும் செய்கிறது. இவற்றிலெல்லாம் பறையர்கள் மயங்காமல் நாம் ஒரு மேன்மைமிக்க சமூகத்தை சேர்ந்தவர்கள். நாம்தான் இந்த தொல்பண்பாட்டின் கூறு என்று உணர வேண்டும்.

  • சுந்தர் ராஜ சோழன்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

Follow Dhinasari on Social Media

19,100FansLike
380FollowersFollow
75FollowersFollow
74FollowersFollow
3,950FollowersFollow
17,300SubscribersSubscribe

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

பொன்னியின் செல்வன்-3 நாட்களில் ரூ.200 கோடி வசூல் ..

மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் பாகம் 1' திரைப்படம் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ.200...

வலிமை, பீஸ்ட் படங்களுக்குப் பிறகு வசூலில் கலக்கும் பொன்னியின் செல்வன் ..

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செப்30இல்  வெளியான இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்...

படம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்களை!

புத்தம் புது படம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்களை!...

பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் பிரபல பாடகி ஜோனிடா காந்தி..

பிரபல பின்னனி பாடகி ஜோனிடா காந்தி , பஞ்சாபி தெலுங்கு மராத்தி குஜராத்தி கன்னட...

Latest News : Read Now...

Exit mobile version