spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைமோடியால் சிதறும் சீனா... சாத்தியமே!

மோடியால் சிதறும் சீனா… சாத்தியமே!

- Advertisement -
modiji
modiji

சீனாவின்  வடக்கு மாகாணமான இன்னர் மங்கோலியா மாகாணத்தில் உள்ள மங்கோலிய மக்கள் சீன அரசுக்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள்.

சீனாவின் புதிய கல்விக் கொள்கையின் படி இனி மாண்டரின் மொழியிலேயே அனைத்து பாடல்கள் மட்டுமல்ல இலக்கியங்கள் வரலாறும் எழுதப்படும் என்பதால் மங்கோலியர்கள் தங்க ளின் தாய் மொழியான மங்கோலிய மொழியை பாதுகாக்க சீன அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சீனாவில் தனி நாடு கேட்டு பல மாகாணங்களில் வாழும் மக்கள் போராடி வந்தாலும் அவற்றை சீன அரசு அடையாளம் தெரியாமல் அழித்து விடும். ஆனால் மங்கோலியர்களை சீன அரசினால் அடக்கிவிட  முடியாது. ஏனென்றால் சீனாவையே ஒரு காலத்தில் ஆண்டவர்கள் தான் மங்கோலியர்கள்.

*உங்களுக்கு ஒன்று தெரியுமா? சீனா வின் பரம்பரை எதிரி என்று சொல்லப் படும் மங்கோலியாவுக்கு சென்ற ஒரே இந்திய பிரதமர் மோடி தான். மங்கோலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஒரே  வெளி நாட்டு தலைவர் மோடி மட்டும் தான்.

கடந்த 2019 ம் ஆண்டு மோடி மங்கோலி யா சென்று வந்த பிறகு மங்கோலியா இந்தியா இடையே உறவு மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இது சீனாவை உடைத்து வட சீனாவில் வாழும் மங்கோலியர்களுக்கு தனி நாடு கேட்டு நடைபெறும் போராட்டங்களுக்கும் துணை நிற்கும் என்றே கூறலாம்.

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியில் ஸாங் குவோ ஸான் லூகாங் என்கிற ஒரு சிந்தனையாளர்  இருக்கிறார்..அவரோட  சிந்தனை என்னவென்றால் *இந்தியாவை பல துண்டுகளாக உடைக்க வேண்டும்.இதற்கு தடை யாக இருப்பது இந்தியாவில் மேலோங்கி இருக்கும் இந்து மதம் தான்.* அதனால் இந்தியாவில் உள்ள இனக்குழுக்களின் இன அடையாளத்தை தூண்டி மத அடை யாளத்தை மறையவைத்து பிறகு அவர்கள் மூலமாக தனிநாடு கேட்டு போராட வைத்து பக்கத்து நாடுகளோடு சேர்ந்து இந்தி யாவை துண்டாட வேண்டும் என்பது தான்

இதற்காக அவர் கொடுத்த ஐடியா என்னவென்றால் காஷ்மீர் அஸ்ஸாம் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இன ரீதியான போராட்டங்களை தூண்டி விட்டு அவர்க ளை இந்திய அரசோடு இணங்காமல் தனியாக செல்ல வைத்து இந்தியாவை உடைக்க வேண்டும் என்பது தான் சீனாவின் கனவு.

இந்த கனவை மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தகர்த்து விட்டார். அஸ்ஸாமில் பிஜேபி.. தனி நாடு  கேட்டு இந்தியாவுக்கு எதிராக துப்பாக்கி தூக்கிய போடோ பழங்குடி மக்களின் பிரதிநிதிகளாக உள்ள போடோ மக்கள் முன்னணியுடன் கூட்டணி வைத்து ஆட்சிக்கு வந்ததன் மூலமாக சீனாவின் கனவான அஸ்ஸாம் மூலமாக இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களை உடைக்கும் கனவை சிதைத்து விட்டார் மோடி.

ஜம்மு காஷ்மீரில் பிஜேபி கூட்டணிஆட்சி அடுத்து  ஆர்டிகிள் 370 வது பிரிவு ரத்து செய்து  மாநில அந்தஸ்து  இல்லாமல் யூனியன் பிரதேசமாக உருவாக்கியதன் மூலமாக ஜம்மு காஷ்மீர் இனிமுழு அளவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் படி செய்து விட்டார்.

இனி எஞ்சி இருப்பது தமிழ்நாடு தான். இவர்கள் துப்பாக்கியே பார்த்து இராமல்  வெறும் வாயால் வடை சுடும் கூட்டம் என்பதால்  வாய் வலித்து ஓயும் வரை வடை சுடட்டும் என்று  வேடிக்கைப்பார்த்து கொண்டு இருக்கிறார் மோடி.

*இப்படி இந்தியாவை உடைக்க  சீனா எடுத்த திட்டத்தை உடைத்து நொறுக்கிய மோடி இப்பொழுது பதிலுக்கு சீனாவை உடைக்க மூன்று மாகாணங்களை கையில் எடுத்து இருக்கிறார்.* 

திபெத் இன்னர்மங்கோலியா ஜின்ஜியாங்   ஆகிய மூன்று மாகாணங்களிலும் உள்ள மக்களை சீன கம்யூனிச அரசுக்கு எதிராக தூண்டிவிடும் வேலையை மோடி அரசு செய்து வருகிறது.

ஆச்சரியம் என்னவென்றால் இந்தியாவை உடைக்க சீனா திட்டம் போட்டு தேர்ந்தெடுத்த மாநிலங்களை போலவே மோடி சீனாவை சிதறடிக்க தேர்ந்தெடுத்த மாநிலங்களும் மக்களும் கலாச்சாரம் குணம் ரீதியாக ஒத்துப்போவது தான் ஆச்சரியமாக இருக்கிறது.

இந்த திபெத் இருக்கிறது அல்லவா. அது தமிழ்நாடு மாதிரி தான். தமிழர்களை போலவே திபெத்தியர்களும் வரலாறு பேசியே வாயால் வடை சுடும் வீரர்கள். 

அடுத்து ஜின்ஜியாங் மாநிலத்தில் உள்ள உய்குர் முஸ்லிம்கள் கிட்டத்தட்ட காஷ்மீர் முஸ்லிம்கள் மாதிரி அரை வேக்காடுகள் என்றே கூற வேண்டும்.

சுமார் 70 ஆண்டுகளாக காஷ்மீர் முஸ்லி ம்கள் எப்படி இந்தியாவில் தனி நாடு கேட்டு அரை வேக்காடுகளாக போராடினார்க ளோ அதே மாதிரி தான் சீனாவில் உய்குர் முஸ்லிம்களும் போராடி வருகிறார்கள்.

ஆச்சரியம் என்னவென்றால் இந்தியாவுடன் காஷ்மீரும் சீனாவுடன் கிழக்கு துர்கிஸ்தான் என்கிற ஜின்ஜியாங் மாநிலமும் இணைந்ததும் ஒரே காலகட்டத்தில் நிகழ்ந்த அதிசய ஒற்றுமையாகும்.

சீனாவின் இன்னர் மங்கோலிய மாகாணம் இருக்கிறது அல்லவா அது கிட்ட த்தட்ட நம்முடைய அஸ்ஸாம் மாநிலம் மாதிரியே இருக்கிறது. அஸ்ஸாமில் உள்ள போடோ மக்கள் மாதிரியே சீனா வில் உள்ள மங்கோலியர்களும் பழங்குடி மக்களும் வீரம் செறிந்த பழங்குடி மக்களே..

china-mangolia-modi
china mangolia modi

மோடி சீனாவை உடைக்க திபெத்தியர்கள் உய்குர் முஸ்லிம்கள் மங்கோலியர்கள் என்று மூன்று இன மக்களை பயன்படுத்தினாலும் சீனாவை சிதறடிக்கும் வல்லமை யாருக்கு இருக்கிறது என்று பார்த்தால் அது சீனாவின் வடபகுதியில் உள்ள இன்னர்மங்கோலியா மாநிலத்தில்  உள்ள மங்கோலியர்களுக்கு மட்டுமே இருக்கிறது என்று அறிய முடியும்.

மங்கோலியர்கள்  என்றவுடன்  நாம் கண்ணை மூடிக்கொண்டு  அது செங்கிஸ்கான் பூமி என்று தானே சொல்வோம். அந்த அளவிற்கு  மங்கோலியர்களின் வரலாறு செங்கிஸ்கானின் வரலாறுடன் தான் பின்னி பிணைந்துள்ளது. 

அந்த செங்கிஸ்கான் மண்ணில் கால் வைத்து செங்கிஸ்கான் ஆண்ட மண்ணில் உரையாற்றிய ஒரே வெளி நாட்டுத்தலைவர்  மோடி தான்! கான் என்று முடிவதாலேயே  செங்கிஸ்கானை நீங்கள்  ஒரு முஸ்லிம் என்று நினைக்க வேண்டாம்.  செங்கிஸ்கான் மங்கோலியாவைச் சார்ந்த தெங்கிரி என்கிற பழங்குடி மதத்தைச் சார்ந்தவர் , இஸ்லாமின் பொற்காலம்? என கூறப்படும் கலிபாக்களின் ஆட்சியை  முடிவுக்குக் கொண்டு வந்த மாவீரன் செங்கிஸ்கான்தான்.

கி.பி 1162 ம் ஆண்டில் பிறந்த செங்கிஸ்கானின் நிஜப்பெயர் தெமுசின். வயதுக்கு வந்தவுடன் தெமுசின் செய்த முதல் காரியம் தன் பெயரை மாற்றிக்கொண்ட து தான்.செங்கிஸ்கான்’ என்றால், முழுமையான போர்வீரன் என்று மங்கோலிய மொழியில் அர்த்தமாம்.

செங்கிஸ்கான்  மங்கோலியாவை விட்டு வெளிப்பட்டவுடன், முதலில் கால் வைத்த  நாடு சீனா. சீனாவின் உலகப் புகழ்வாய்ந்த கோட்டைச் சுவர் (The Great Wall of China) செங்கிஸ்கானுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை.அந்தச் சுவரைக் காத்த வீரர்கள் அனைவரையும் வெட்டித் தள்ளி விட்டு, மங்கோலியப் படை சீனாவுக்குள் புகுந்து 1214 ஆம் ஆண்டுக்குள் வடசீனா முழுவதையும் கைப்பற்றி விட்டது.

சீனாவை சூறையாடி அங்கிருந்து எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு திரும்பிய மங்கோலியப் படை, மேற்குப் பக்கம் நோக்கிக் கிளம்பியது. போகிற வழியில் இருந்த இந்தியாவுக்குள் செங்கிஸ்கான் நுழையாதது ஆச்சர்யமான விசயம் தான்!

இதனால் இந்தியாவின் மீது செங்கிஸ்கானுக்கு இருந்தது பக்தியா? இல்லை பயமா? என்று வரலாறு ஆசிரியர்கள் இ்ன்றும் விடை தெரியாது முழித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஐம்பதாயிரம் வீரர்கள் அடங்கிய மங்கோலிய குதிரைப்படை,  ஆப்கானிஸ்தான் உஸ்பெஸ்கிஸ்தான் ஈரான் ஈராக் என்று இஸ்லாம் பரவி இருந்த மேற்கு ஆசிய நாடுகளில் நுழைந்து அந்த நாடுகளை தரை மட்டமாக்கிய செங்கிஸ்கானின் வீரம் முன் யார்தான் நிற்க முடியும்?

அதிலும் உஸ்பெகிஸ்தான் நாட்டு மக்கள் இப்பொழுதும் செங்கிஸ்கானை  மறக்க முடியாது. ஏனென்றால் அங்குள்ள உலக புகழ் பெற்ற புகாரா நகரின் மசூதிக்குள் நுழைந்து மசூதியை தரை மட்டமாக்கி அதில் ஒளிந்து இருந்த இஸ்லாமிய படை வீரர்களைகளை சித்ரவதை செய்து கொன்றதை இன்றும் உஸ்பெகிஸ்தான் மக்கள் செங்கிஸ்கான் வரலாற்றை பயத்துடனே  படித்து வருகிறார்கள்.

சீனர்கள் மாதிரி ரஷ்யர்கள் வாயால் வடை சுடும் கோமாளிகள் அல்லர். உலகையே ஆட்டிப் படைத்த பிரான்சின் நெப்போலியன் ஜெர்மனின் ஹிட்லர் கூட ரஷ்யாவை கனவில் தான் கைப்பற்றி கொண்டார்களே  தவிர அவர்களால் ரஷ்யாவை நெருங்க முடிய வில்லை. ஆனால் வெறும் 25 ஆயிரம் வீரர்களை மட்டுமே வைத்துக் கொண்டு சுமார் 1 லட்சம் வீரர்களுடன் போருக்கு வந்த ரஷ்யாவின் இளவரசர்  ஸ்டிஸ்லாவ்வை தோற்கடித்து கைது செய்து மிதித்தே கொன்ற செங்கிஸ்கான் வீரம் பற்றி ரஷ்யர்கள் இன்றும் பிரமிப்புடனே இருக்கிறார்கள்.

செங்கிஸ்கான் ஆட்சியில் மங்கோலியப் பேரரசு சீனா, கொரியா, ஈரான், ஈராக், துருக்கி, ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான், ஆர்மேனியா, ஜியார்ஜியா, குவைத், உஸ்பெகிஸ்தான் போன்ற பல நாடுகளை ஆட்கொண்டிருந்தது. 

ஆனால் இந்தியா மீது மங்கோலியர்களுக்கு ஒரு வித பயம் இருந்த காரணத்தினால் இங்கே வரவில்லை. அதே மாதிரி இந்திய ஆட்சியாளர்களும் சீனா மீது இருந்த பயத்தினால் மங்கோலியா  பக்கமே எட்டி பார்த்தது இல்லை. ஆனால் அதை உடைத்து மங்கோலியாவுக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் மோடி தான்! மங்கோலியா என்பது, எப்போதும் நெருங்கும் தீ என பொருளாகும் அந்த தீ இப்பொழுது சீனாவில் வளர்ந்து வருகிறது

வளர்த்து வருபவர் மோடி. அப்பொழுது செங்கிஸ்கானுக்கு பயந்த சீனர்கள் இப்பொழுது மோடிக்கு பயந்து நிற்கிறார்கள் ! காங்கிரஸ் ஆட்சியின் காலத்தில் உடையும் இந்தியா என்று உலா வந்த  செய்திகள் மோடி ஆட்சியில் காணாமல் போய் இப்பொழுது சிதறும் சீனா என்கிற செய்திகளே  வலம் வந்து கொண்டு இருக்கிறது!

சிதறும் சீனா என்றவுடன் உங்களுக்கு சான்ஸே இல்லை என்று தான் நினைக்கத் தோன்றும் .ஆனால் உடையும் இந்தியாவை முறியடித்த மோடியினால் சிதறும் சீனா சாத்தியமே…!

  • கட்டுரை: விஜயகுமார் அருணகிரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe