Homeஉரத்த சிந்தனைஅடிமை வரலாறுகள் திருத்தப் பட்டாக வேண்டும்!

அடிமை வரலாறுகள் திருத்தப் பட்டாக வேண்டும்!

shivaji ramadoss
shivaji ramadoss

நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கையில் “இந்தியாவில் கல்லால் கட்டப்பட்ட ஆலயங்கள் எல்லாம் கடந்த இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர்தான் தோன்றியிருக்க வேண்டும். அதற்கு முன்னர் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பழமையான ஆலயம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை” என்றார் அவர். அதாகப்பட்டது கற்களை உபயோகித்து எப்படிக் கட்டிடங்கள் கட்டுவது என்கிற கலையை ஹிந்துக்கள் கற்றதே இந்த இரண்டாயிரம் வருடங்களில்தான் என்பது அவருடைய எண்ணம்.

ஆனால் எனக்கு அதில் சம்மதமில்லை. கிருஷ்ணன் உயிருடன் இருக்கையிலேயே அவருக்காக துவாரகையில் கற்கோயில் கட்டினார்கள் யாதவர்கள். துவாரகை என்கிற பெரும் நகரத்தில் மாட, மாளிகைகள் கட்டினான் கிருஷ்ணன். கடல் கொண்ட அந்தக் கட்டிடங்கள் இன்றைக்கும் இருக்கின்றன. புராண, இதிகாசங்களில் மேலும் ஆதாரங்கள் இருக்கலாம் என்றே நம்புகிறேன்.

shivaji maharaj1
shivaji maharaj1

நீங்கள் ஒன்றைக் கவனித்துப் பார்த்தீர்களென்றால் வெள்ளைக்காரன் எழுதிய இந்திய வரலாறும், அதன் சிறப்புகள் அத்தனையுமே ஏசு கிறிஸ்து பிறந்த காலத்திற்குப் பிறகுதான் துவங்கும் என்பதுதான். அதாகப்பட்டது ஏசு கிறிஸ்து வந்தபிறகுதான் சிலை வணங்கிப் பாகன்களான ஹிந்துக்களுக்கு அறிவு வந்தது என்று அர்த்தம். வள்ளுவர் இரண்டாம் நூற்றாண்டில் பிறந்தவர், ஆதி சங்கரர் ஏழாம் நூற்றாண்டில் பிறந்தவர், குப்தர்கள், பல்லவர்கள் எல்லாம் ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டில்தான் வந்தார்கள் என்பதுமாதிரியான வரலாறுதான் அவன் நமக்குக் காட்டுவது. அதிகபட்சம் புத்தர் இயேசு பிறப்பதற்கு முன்னால் பிறந்தவர் என்பதினை மட்டும் அரைமனதுடன் அவன் ஒப்புக் கொண்டிருப்பதனைப் பார்க்கலாம்.

வெள்ளைக்காரனின் இந்தக் கால அளவீட்டை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். ஏனென்றால் பதினைந்தாம் நூற்றாண்டுவரை ஒரு சரியான நாட்காட்டியைக் கண்டுபிடிக்கத் தேவையான அறிவு இல்லாதவன் அவன். சைபரின் உபயோகமே அவனுக்குப் பதினைந்தாம் நூற்றாண்டில் அவன் இந்தியாவிற்கு வந்தபிறகுதான் அவனுக்குத் தெரியவந்தது. அவனது அறிவு எல்லாம் இந்தியாவிலிருந்து திருடிப் போனது. அவனது நாட்காட்டிகள் எல்லாம் தவறானவை.

அப்படியாகப்பட்டவன் பல்லாயிரம் ஆண்டுகளாக அறிவுத் திறனுடன் வாழ்ந்த ஹிந்துக்களைக் குறித்து எழுதுவது, தவறான தகவல்களைத் திணிப்பது எல்லாம் புரிந்து கொள்ளக்கூடியதுதான். அப்படி எழுதியது அவனது தாழ்வுமனப்பான்மையைத்தான் காட்டுகிறது. பதினைந்தாம் நூற்றாண்டுக்கு முன்னால் ஐரோப்பாவில் கட்டப்பட்ட ஒரு கலையழகுடன் கூடிய, ஹிந்து ஆலையங்களுக்கு இணையான கட்டிடம் எதுவும் இருந்ததா? இல்லவே இல்லை என்பதுதான் உண்மை.

எனவே அவன் சொல்லுகிற வருடக் கணக்கினை நான் முற்றிலும் நிராகரிக்கிறேன். ஆதி சங்கரர் ஏழாம் நூற்றாண்டில் பிறந்தார் என்பதினையும் சேர்த்துத்தான். சங்கரர் அதற்கும் முன்னர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பிறந்திருக்க வேண்டும். ஆனால் சோம்பேறி ஹிந்துக்கள் அதனை ஆராய்ந்து வெளிக் கொணராமல் வெள்ளைக்காரன் சொல்வதற்குத் தலையை ஆட்டிக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.

ayurveda
ayurveda

நமது உண்மையான வரலாறு ஹிந்து வேதங்களிலும், ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும், விஷ்ணுபுராணம், கருட புராணம் போன்ற பல்லாயிரக்கணக்கான நூல்களிலும் மறைந்து கிடக்கிறது. அயோத்தியில் ராமன் இன்ன தேதியில், இன்ன நட்சத்திரத்தில், அயோத்தியின் சரயு நதிக்கரையிலிருந்து இத்தனை தூரத்தில் பிறந்தான் எனத் துல்லியமாக எழுதி வைத்த ராமாயணம் உண்மையா அல்லது வெள்ளைக்காரன் சொல்வது உண்மையா?

எனவே நமது ஆலயங்களையும், வரலாறுகளையும் இந்திய நாட்காட்டிகளின் அடிப்படையிலேயே ஆராய வேண்டுமேயன்றி எங்கிருந்தோ வந்த ஒரு வெள்ளைக்காரன் சொல்வதனையல்ல.

நமது வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் அறிவியல் உண்மைகள் அற்புதமானவை. மனிதகுலத்தின் தோற்றம், வளர்ச்சி குறித்த தகவல்களை உள்ளடக்கியவை. வேதங்களை நன்கு கற்றுணர்ந்த எவரும் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்கிற டார்வின் தத்துவத்தை நிராகரிப்பான். ஹிந்து வேதங்களின் முன்னால் கிறிஸ்தவம் வெறும் சுண்டைக்காய் என்கிற உண்மை வெளிவரும். எனவே கிறிஸ்தவன் ஹிந்து வேதங்களை எதிர்ப்பது, அதனைத் தூக்கியெறிய முயற்சிப்பது புரிந்து கொள்ளக்கூடியதுதான்.

அன்னிய ஆட்சிகளின் காரணமாக நமது பழமையான பேராலயங்கள் இடிக்கப்பட்டுத் தகர்க்கப்பட்டுவிட்டன. நமது முன்னோர்கள் நமக்களித்த பொக்கிஷங்களான புத்தகங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுவிட்டன. அல்லது கொள்ளையடிக்கப்பட்டு கண் காணாத இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டன. இந்திய ஹிந்துக்களின் வரலாறு அவர்களிடமிருந்து துடைத்து எறியப்பட்டுவிட்டதால் அவன் அன்னியர்கள் சொல்வதினை நம்பும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறான்.

samskrita
samskrita

இதனைச் சரி செய்வதற்கு ஒரே வழியாக நான் கருதுவது குருகுலக் கல்வியும், சமஸ்கிருதக் கல்வியும்தான். இந்த இரண்டையும் மீண்டும் உயிர்ப்பிக்க எல்லா முயற்சிகளையும் எடுக்கவேண்டும். சமஸ்கிருதக் கல்வி இந்தியர்கள் அனைவருக்கும் கிடைக்க வழிசெய்யப்பட வேண்டும். சமஸ்கிருதம் படித்தவன் நமது வேதங்களைப் புரிந்து கொள்வான். அதன் வழியாக நமது வரலாற்றையும், அதன் சிறப்பினையும் புரிந்து கொள்வான். எனவே அதனைச் செய்வது மிக, மிக முக்கியம் என்பது என் எண்ணம்.

நாடு முழுவதும் வேத ஆராய்ச்சி மையங்கள், பல்கலைக் கழகங்கள் துவக்கப்படுவதும் மிக அவசியமே. அதனைச் செய்வதற்கு உண்டான முயற்சிகளை நாம் துவக்கவேண்டும்..

  • Narendiran PS

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,121FansLike
376FollowersFollow
68FollowersFollow
74FollowersFollow
3,207FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

சிவகார்த்தின் அதிதி நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பு இன்று துவங்கியது

பிரபலமான பிரமாண்ட இயக்குனர் சங்கர் மகள் , அதிதி ஷங்கர் விருமன் படத்தில் கார்த்தி...

என் திரைப்பயணம் சிறப்பானதாக இருந்தது ஆனால்?-நடிகை மல்லிகா ஷெராவத்..

என்னிடம் விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லாததாலே பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வில்லை என்று கமல்ஹாசன்...

விக்னேஷ் சிவன்-நயன் திருமணம் விரைவில் ஓடிடியில்..

விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் திருமண போட்டோஷூட் ஒன்றை பகிர்ந்து விரைவில் வீடியோ வருகிறது என ஓ.டி.டி....

அஞ்சலி-நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்..

தமிழ் மலையாளம் தெலுங்கு இந்தி படங்களில் பிரபல நடிகராகவும் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளராக வலம்...

Latest News : Read Now...