Homeஉரத்த சிந்தனைமத்திய அரசின் விவசாய சட்டம்… கருத்துகள் சில..!

மத்திய அரசின் விவசாய சட்டம்… கருத்துகள் சில..!

modi-farmerss
modi-farmerss

மத்திய அரசின் விவசாய சட்டங்கள் மூலம் , இந்தியாவில் விவசாயத்துறைக்கு விடுதலை கிடைத்துள்ளதாக கலீஜ் டைம்ஸ் நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் பல அரசுகள், விவசாயத்துறையில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் எனக்கூறின. ஆனால், வேளாண் மசோதாக்கள் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட போது, பல்வேறு அரசியல்கட்சிகள், அமளியில் ஈடுபட்டு, பல ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த பேச்சளவில் இருந்த சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.

விளைபொருட்களுக்கு உரிய விலையை உறுதிசெய்யும் விவசாயிகள் ஒப்பந்த மசோதா, விவசாய விளைபொருள் வர்த்தக மேம்பாட்டு மசோதா ஆகியவை , இந்தியாவில் விவசாயத்துறைக்கு விடுதலை அளிப்பதுடன், விவசாயிகள் , தங்களது விளைபொருட்களை, தங்களது விருப்பத்திற்கு ஏற்பவும், எந்தநேரத்திலும் விற்பதற்கு சுதந்திரம் அளிக்கிறது. இந்த மசோதாக்கள், விவசாயிகளின் விருப்பங்களுக்கு உள்ள தடையை நீக்குவதுடன், குறிப்பிட்ட காலத்தில் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாத விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதை உறுதி செய்கிறது. மாநிலங்களில் உள்ள மண்டிகளில்தான், விவசாயிகளை தங்களது விலைபொருட்களை விற்க வேண்டிய அவசியமில்லை.

பொருட்களை இருப்பு வைக்க வேண்டிய கட்டுப்பாடுகளை நீக்கியது மட்டுமல்லாமல், இடைத்தரகர்களின் பிடியில் இருந்து விவசாயிகளுக்கு சுதந்திரம் அளித்துள்ளது. ஒரு சில நேரங்களில், விவசாய பொருட்களின் விலை 65 சதவீதம் முதல் 70 சதவீதம் அதிகரிக்கிறது. இதற்கு இடைத்தரகர்களின் தலையீடு தான் காரணம். பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டாலும், இந்த மசோதாக்கள் விவசாயிகள் மற்றும் நுகர்வோர்களுக்கு கிடைத்த வெற்றியாகும். இதற்கான பெருமை நரேந்திர மோடி அரசுக்கு தான் கிடைக்கும். இவ்வாறு அந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

modi-farmer
modi-farmer

மோடி #வேர்களை_வெட்டுகிறார், #கிளைகளையல்ல..

வேளாண்மை மசோதாவால் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிராவின் இரண்டு அரசியல் குடும்பம் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டது…

1.சுகின் சுக்பீர் அக்ரோ… பஞ்சாப் ஆண்டுக்கு குறைந்தது 5000 கோடி வருமானம் இருந்தது. அது எஃப்.சி.ஐ மற்றும் விவசாயிகளுக்கு இடையே கமிஷன் முகவராக இருந்தது. அந்த நிறுவனம் 2.5% கமிஷனைப் பெற்றது. அனைத்து கிடங்குகளும் அந்த நிறுவனத்துக்கு உரியது.

சுக்பீரின் வேளாண் முத்திரை இல்லாமல் பெரும்பாலான விவசாயிகள் ஒரு டன் கோதுமையை கூட எஃப்.சி.ஐக்கு விற்க முடியாது. மோடியின் அடியால் காலியாகிவிட்டது.

  1. மகாராஷ்டிராவில் உள்ள ஷரத் பவாரின் மகள் சுப்ரியா ஆண்டுக்கு 10,000 கோடி விவசாய வருமானமாக காட்டினார். இந்த குடும்பம் வெங்காயம், மிளகாய் மற்றும் திராட்சை வர்த்தகத்தின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தது. இந்த மசோதா சரத் பவாரின் லாபியை காலி செய்து விட்டது.

வேர்களை வெட்டுவோம் ; கிளைகளையல்ல..

modi-farmers
modi-farmers

விரைவில் தமிழகத்தின் நாசகார வேர்கள் வெட்டப்படும்

எப்பொழுதும் எல்லா சட்டத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் இந்தியாவில் இப்பொழுது விவசாய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு வலுக்கின்றது

இந்த சட்ட திருத்தம் என்ன சொல்கின்றது என்றால் இதுதான், அதாவது அரிசி கோதுமை பருப்பு எண்ணெய் வித்துக்கள் போன்றவை அத்தியாவாசியம் என்ற வகையில் இருந்து ஏற்றுமதி போன்ற பிரிவுக்கு மாற்றபடுகின்றது

இது போக விலை உத்திரவாதம், வேளான் சேவைகள் திருத்தம் என கூட இரு திருத்தங்களை செய்கின்றது

இது விவசாயிகளை கொந்தளிக்க வைக்கின்றது, நெல்லும் கோதுமையும் அரசால் ஒரு குறைந்த விலையில் கொள்முதல் செய்யபடும். இனி தனியார்கள் அடிமாட்டு விலைக்கு வாங்குவார்கள் என அச்சமூகம் அஞ்சுகின்றது

அரசோ அப்படி அல்ல எங்களின் கொள்முதல் எக்காலம் போல் நடக்கும் அது அல்லாமல் நாம் நியாவிலை கடைகளை நடத்தமுடியாது, எங்களை விட தனியார் அதிக விலை கொடுத்தால் அது உங்களுக்கு லாபம் அல்லவா என விளக்கம் அளிக்கின்றது

இதுவும் யோசிக்க வேண்டிய விஷயம் ஒரு குறைந்தபட்ச விலை எப்பொழுதும் உண்டு, அரசு கொள்முதலும் உண்டு,அதற்கு மேல் நல்ல விலை இருந்தால் தாராளமாக விற்கலாம் என அரசு சொல்வதும் ஏற்புடையதே

இது எதை நோக்கி செல்கின்றது என்றால் ஏற்றுமதியினை நோக்கி செல்கின்றது

அதாவது இங்கு அத்தியவாசியம் என சொல்லி பல விவசாய பொருட்கள் தேக்கி வைக்கபடுகின்றன. அரிசி கோதுமை பருப்பு என ஏகபட்டது உண்டு

அவைகள் பலநேரம் வீணாகவும் போவது உண்டு

மிகுந்த கட்டுபாட்டுக்கு இடையில் ஏற்றுமதி உண்டே தவிர இங்கு தேங்குவதும் நாசமாவதும் அதிகம்

இந்தியாவின் பரப்பில் 50ல் ஒருபங்கு கூட இல்லா வியட்நாமும், பர்மாவும், தாய்லாந்தும் உலகுக்கே அரிசி விற்கின்றது, பாகிஸ்தான் அரிசி கோதுமையினை அள்ளி எறிந்து வீசுகின்றது

இந்தியாவில் இருந்து சிலவகை அரிசிகள் பெரும் கட்டுப்பாட்டுடன் ஏற்றுமதியாகும், இது மிக சிறிய அளவே

மீதெமல்லாம் உணவு பாதுகாப்பு என இங்கு வைக்கபடும், இப்பொழுது இந்தியாவில் உணவு பஞ்சம் இல்லை எனும் நிலையில் அரசு அதை விற்பனை செய்ய எண்ணுகின்றது

ஏற்றுமதிகள் பெருகினால் நமக்கு அன்னிய செல்வாணி பெருகும் விவசாயிகளுக்கும் லாபம் வரும் என்பது அரசின் கணக்கு

இப்பொழுது வெங்காயம் ஏற்றுதியாகும் ஆனால் ஒரு கட்டத்தில் நாட்டில் தட்டுபாடு என்றால் ஏற்றுமதிக்கு தடைவிதிக்கின்றோம் அல்லவா, அப்படி உணவு பொருள் தட்டுபாடு வந்தால் அதையும் தடை செய்வோம் என்கின்றது அரசு . இது நியாயமான விளக்கமாகவே படுகின்றது

விவசாயத்தில் வாழை ஓரளவு லாபம், அதுவும் எப்பொழுது லாபமென்றால் ஏற்றுமதி சரியாக இருக்கும் காலங்களில் லாபம், ஏற்றுமதி இல்லையென்றால் அதுவுமில்லை

விவசாயி செய்யும் செலவுக்கு ஒரு வாழைதார் 2000 ரூபாய்க்கு சென்றால்தான் கட்டுபடியாகும், அந்த விற்பனை இந்தியாவில் சாத்தியமில்லை, ஏற்றுமதி ஒன்றேதான் வழி

கவனியுங்கள் இந்தியாவில் திடீரென தக்காளி தெருவெல்லாம் கிடக்கும், காய்கறி தேடுவாரற்று கிடக்கும், விலையில்லா நிலையில் விவசாயி அழுவான்

இதையே ஏற்றுமதி என சொல்லிபாருங்கள் அவை நிச்சயம் நல்ல காசுக்கு செல்லும் விவசாயி நஷ்டபட மாட்டான்

தேவைக்கு அதிகாக இருப்பதை விற்பது ஒன்றும் தவறல்ல, இதை விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும் ஆனால் அரசியல்வாதிகள் விடமாட்டார்கள்.

மாணவர்கள் உட்பட எல்லோரையும் பயமுறுத்தியே அரசியல் செய்யும் கூட்டம் இப்பொழுது விவசாயிகளை தூண்டிவிட கிளம்பிவிட்டது

சரி இதுகாலம் இவர்கள் விவசாயிக்கு என்ன செய்தார்கள் என்றால் சொல்ல தெரியாது

ஏன் விவசாயிகள் திருத்த சட்டத்துக்கு இவ்வளவு எதிர்ப்பு? விவசாயிகள் மேல் அக்கறையா இல்லை, சுத்தமாக இல்லை

இது விவசாயிகளை சுரண்டும் தனியார் சந்தைகள் உட்பட இரக்கமில்லா வியாபார கூட்டத்துக்கு பெரும் அடியாக அமையும்

ஆம், இங்கு கருணாநிதியின் உழவர் சந்தையெல்லாம் மாடியில் காய்கறி வளர்க்கும் வீட்டுகார விவசாயிக்கானது, சுமார் 50 கிலோ வரைதான் அவனால் சந்தையில் விற்க முடியும்

அதுவும் அவன் இருந்து வியாபாராம் பார்பானா? விவசாயம் செய்வானா?.

ஆயிரம் கிலோ, இரண்டாயிரம் கிலோ என உற்பத்தி செய்யும் விவசாயி காய்கறிகளையோ இல்லை தானியங்களையோ எங்கு விற்பான்?

அவன் சந்தைக்கே செல்வான், அங்குதான் புரோக்கர் உலகம் ஆரம்பிக்கும், வியாபாரிகளோடு கை கோர்த்து அவர்கள் விவசாயினை சுரண்டுவதுதான் உலகின் மிகபெரிய சுரண்டல்

ஆம், உதாரணத்துக்கு ஒரு கத்தரிக்காய் மூட்டையினை ஆயிரம் ரூபாய்க்கு விற்று கொடுத்தால் அவன் புரோக்கர் கமிஷன் 200 ரூபாய் (வியாபாரியிடம் வாங்குவது தனி கணக்கு)

இது போக வாடகை, சந்தை கமிஷன் என உறிஞ்சபட்டு விவசாயிக்கு வருவது வெறும் 400 ரூபாய்தான்

இவ்வளவுக்கும் அந்த மூட்டை 5 ஆயிரத்துக்கு விற்றால்தான் கட்டுபடியாகும், நிச்சயம் அந்த மூட்டை 3 ஆயிரம் ரூபாய்க்கு செல்லும்., ஆனால் புரோக்கரும் வியாபாரியும் செய்யும் தந்திரம் விவசாயியினை சுரண்டும்

இதை தடுக்க சொன்னால் கருணாநிதி அதை செய்யாமல் “உழவர் சந்தை” என உழப்பிவிட்டார். ஆம், அவர் செய்தது உழவர் துரோகம், மிகபெரும் துரோகம்

காங்கிரஸ் விவசாயிகள் கடன் தள்ளுபடி என சொல்லவருமே தவிர ஒருகாலமும் இந்த தனியார் கொள்ளைக்கும், விவசாயி சுரண்டலுக்கும் முடிவு சொல்லாது.

இங்கு விவசாய மானியமும், கட்ன தள்ளுபடியும் இந்த வியாபார புரோக்கர் கூட்டத்துக்குத்தான் லாபமே தவிர, விவசாயிக்கு மிஞ்சுவது மண்ணே

முதல் முறையாக மோடி அரசு விவசாயிகளின் விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்கவும், கிடைக்கும் நல்லவிலை இந்த இடைதரக இம்சைகள் இன்றி கையில் கிடைக்கவும், அதனால் ஏற்றுமதி பெருகி நாட்டுக்கும் வருமானம் வரவும் சில நடவடிக்கைகளை எடுக்கின்றது அதற்குத்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டம்

விவசாயி சந்திக்கும் இன்னல் மிகபெரிது, பெருகிவிட்ட விலைவாசி, ஆட்கள் கிடைக்கா நிலையில் வேலையாள் மிகபெரிய சம்பளம் என அவனின் போராட்டம் பெரிது

இதிலும் வறட்சி, வெள்ளம், காற்று, மின்சாரம், பருவகால நோய் என எல்லாவற்றையும் தாண்டித்தான் அவன் விளையவைக்க முடிகின்றது

ஒரு கிலோ அரிசி 500 ரூபாய்க்கு விற்றால்தான் அவன் வாழமுடியும், ஒரு கிலோ பருப்பு 800 ரூபாய்க்கு விற்றால்தான் அவன் தொடர்ந்து நிற்க முடியும்

அதை இங்கு செய்தால் ஒருவனுக்கும் உணவு கிடையாது, அப்படி செய்யாமல் விவசாயி வாழவும் முடியாது

இதனால் இங்கு உணவுபொருள் எல்லோருக்கும் கட்டுபடியாகும் விலையில் வழங்கவும், அதே நேரம் விவசாயியும் வாழவும் பெரும் கட்டுபாடற்ற ஏற்றுமதி ஒன்றே வழி

இந்திய அரசு அந்த நோக்கில்தான் சட்டத்தை திருத்தியிருக்கின்றது, இது தவறாக புரிந்து கொள்ளபட்டு விவசாயி அழியபோகின்றான் என இங்கு விவகாரமாக்குகின்றது விவசாயி ஏற்கனவே அழிந்துவிட்டான், அவன் கொஞ்சம் உயிரோடு முணங்குகின்றான், அவனை உயிர்பிக்க நடவடிக்கை எடுக்கின்றது அரசு

இல்லை அவன் அப்படியே கிடக்க வேண்டும், அவ்வப்பொழுது அவன் வாயில் பால் ஊற்றி சாகாமலே வைத்து அரசியல் செய்வோம் என கிளம்பியிருக்கின்றன எதிர்கட்சிகள்

#விவசாயிகளின்_காவலன்_மோடி

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,114FansLike
377FollowersFollow
73FollowersFollow
74FollowersFollow
3,352FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

பிரேவ்’க்கு பின்னர்25 வருடங்களுக்கு கழித்து படம் இயக்கும் ஹாலிவுட் நடிகர் ஜானிடெப் ..

ஹாலிவுட் நடிகர் ஜானிடெப் 'தி பிரேவ்'க்கு பின்னர் 25 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும்...

ஐமேக்ஸ் தொழில்நுட்ப த்தில் வெளியாகவுள்ளபொன்னியின் செல்வன்..

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் -பாகம்1 திரைப்படம் செப்டம்பர் 30-ஆம்...

சிவகார்த்தின் அதிதி நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பு இன்று துவங்கியது

பிரபலமான பிரமாண்ட இயக்குனர் சங்கர் மகள் , அதிதி ஷங்கர் விருமன் படத்தில் கார்த்தி...

என் திரைப்பயணம் சிறப்பானதாக இருந்தது ஆனால்?-நடிகை மல்லிகா ஷெராவத்..

என்னிடம் விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லாததாலே பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வில்லை என்று கமல்ஹாசன்...

Latest News : Read Now...