May 8, 2021, 9:13 am Saturday
More

  ரெண்டு மோசடி… மூணு துரோகம்: திருமா சர்ச்சைப் பேச்சின் பின்னணி!

  இந்த மூன்று கேள்விகளுக்கும் நேர்மையாக பதிலளிக்க ஏதாவது ஒரு திராவிடக் குஞ்சோ, சிறுத்தைக் குட்டியோ தயாரா?

  manudarma-sastram
  manudarma-sastram

  ரெண்டு மோசடி… மூணு துரோகம்…
  திருமா சர்ச்சைப் பேச்சின் பின்னணி
  – காளிதாஸ்

  “மனு தர்மத்தில் இருப்பதைத்தானே திருமா சொன்னார்? அவர் எதை இழிவு படுத்தினார்?”

  • இப்படி ஒரு அயோக்கியத்தனமான கேள்வியை பலர் கேட்கின்றனர். இவர்களிடம் மூன்று எதிர்க் கேள்விகள்.
  1. திருமா சொன்ன அபவாதம் மனு ஸ்ம்ரிதியில் எங்கே உள்ளது?
  2. மனு ஸ்ம்ரிதி இந்து மதத்தின் பிரதிநிதி நூலா?
  3. மேலே இரண்டும் இல்லை என்றால், அது வெறும் வெறுப்புப் பேச்சா இல்லையா?

  இந்த மூன்று கேள்விகளுக்கும் நேர்மையாக பதிலளிக்க ஏதாவது ஒரு திராவிடக் குஞ்சோ, சிறுத்தைக் குட்டியோ தயாரா? உங்கள் மனம்போனபடி இந்து தர்மத்தை இழிவுபடுத்தினால், இனி பலமான எதிர்வினை இருக்கும். இந்துக்களை அடித்தால், திரும்ப அடி விழாது என்று மனப்பால் குடித்தால் இப்படித்தான் சப்பை கட்டு கட்ட வேண்டி வரும்.

  “பிறப்பிலேயே சூத்திரர்கள் வேசி மகன்கள்” என்று இப்படித்தான் இன்னொரு வார்த்தையை தூக்கிக்கொண்டு சுற்றுகிறார்கள். இதற்கும் அதே மூன்று கேள்விகள்தான்.

  இந்த மூன்று கேள்விகளை ஒவ்வொரு இந்துவும் முன்வைக்க வேண்டும். ஒவ்வொரு விஷயத்திலும் முன்வைக்க வேண்டும்.

  சரி, இப்படி திருமாவளவனின் கேவலமான பேச்சுக்கு முட்டுகொடுப்பது யார்? மேலே சொன்னது போல, திராவிடக் குஞ்சுகளும், சிறுத்தைக் குட்டிகளும். அவர்கள் இரண்டுபேருமே தங்கள் சித்தாந்தத்தை பரஸ்பரம் அடகு வைத்து திமுகவுக்கு அடிமை வேலை பார்ப்பவர்கள். அதனால் வேறு எதையும் அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது, போகட்டும்.

  ஆனால், சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர்களும் இதே வேலையைச் செய்துவருவது அவர்களுக்கே மிகவும் ஆபத்தாக முடியும்.

  காரணம், இந்து தர்மத்துக்கும் பிற மதங்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. பிற மதங்கள் எதிர்ப்புகள் நிறைந்த சூழலில், போராட்டத்துக்கு இடையே, அரசியல், ராணுவம் போன்ற உந்துசக்திகளால் உருவாயின.

  சனாதன தர்மத்துக்கு இப்படிப்பட்ட எந்த இக்கட்டும் கிடையாது. மேலும் ஒரு குறிப்பிட்ட நம்பிக்கை உள்ள ஒரு மக்கள் கூட்டம் தன்னையும், தன் நம்பிக்கையையும் தக்கவைத்துக் கொள்ள, காப்பாற்றிக் கொள்ளப் போராடியது பிற மதங்களின் வரலாறு. ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள், எதிர்ப்புகள் இல்லாத ஆரோக்கியமான சூழலில் உருவாகி வளர்ந்தது சனாதன தர்மம்.

  மற்ற மதங்களுக்கு ஒரே புத்தகம். நல்லதாக இருந்தாலும் அல்லதாக இருந்தாலும் அந்த ஒரே நூலில் இருந்துதான் வந்தாக வேண்டும். சனாதன தர்மத்துக்கு அந்த நெருக்கடியும் கிடையாது. ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு சூழ்நிலையிலும், மனிதனின் தனிப்பட்ட விடுதலைக்கு எது தேவையோ அதை உருவாக்கும் கருவிகள்தான் இந்து மத நூல்கள்.

  இதன் அடிப்படையில் பார்த்தால், இந்துக்களின் நிலைப்பாடு குறை கூற இடமில்லாத ஒன்று. எதிர் வினையாக, சிறபான்மை மதத்தவரிடம் பைபிள் குர்ஆனை வைத்து இந்துக்கள் பதில் கேள்வி கேட்டால், அவர்களுக்கு ஓடவும் ஒளியவும்கூட வேறு இடமே இல்லை என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். இந்துக்கள் என்று தங்களை தேவைக்கு ஏற்ப சொல்லிக்கொள்ளும் இந்தப் புல்லுருவிகளை இந்துக்கள் பார்த்துகொள்கிறோம். தேவை இல்லாமல் பிற மதத்தை சேர்ந்தோர் ஜால்ரா தட்டுவது அவர்களுக்கு நல்லதல்ல.

  “இதுதான் எங்கள் ஆதார நூல்!” என்று எந்த நூலையும் இந்துக்கள் சொல்வது இல்லை. அப்படி ஒரு கேள்விக்கு பதில் கூறியே தீரவேண்டும் என்றால், “பிரஸ்தானத் த்ரயம்” என்பதே பதில். மூன்று நூல்கள். பகவத் கீதை, பத்து உபநிஷத்துகள் மற்றும் பிரம்ம சூத்திரம். இம்மூன்று நூல்களும் நமக்கு அடிப்படை. அதுவும் சமூக, அரசியல், பொருளாதார விஷயங்களில் கிடையாது. ஆன்மீக முன்னேற்றம் சம்மந்தமான விஷயங்களில் மட்டுமே இவை அடிப்படையாகக் கொள்ளப்பட வேண்டும் என்று நமது முன்னோர் தெளிவாக வரையறை செய்துள்ளனர்.

  வெளி விஷயங்களில் எண்ணற்ற நூல்கள் உள்ளன. அந்த நூல்களில் எதை ஏற்பது? எதை வேண்டுமானாலும் ஏற்கலாம். ஒரே ஒரு நியதியை மட்டும் பின்பற்ற வேண்டும். எந்த நூலாக இருந்தாலும், அது “காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்ப” இருக்க வேண்டும் என்பதே அந்த நியதி. இதன் அடிப்படையில் எதையும் ஏற்கும் உரிமையும் நமக்கு உண்டு, தள்ளும் உரிமையும் நமக்கு உண்டு. இந்த உரிமையை அந்த நூல்களே நமக்குக் கொடுக்கின்றன. மேலும் இந்தத் துறைகளில் ஏதேனும் சந்தேகம் வந்தால், எந்தப் புத்தகத்தை எப்படி விளக்கிக் கொள்வது என்ற குழப்பம் வந்தால், என்ன செய்வது? இதற்கு எல்லா நூல்களிலும் விளக்கம் உள்ளது. உதாரணமாக இங்கே சர்ச்சைக்கு உள்ளான மனு ஸ்மிருதி சொலும் பதில்:

  த₃ஶாவரா வா பரிஷத்₃யம் த₄ர்மம் பரிகல்பயேத் ।
  பத்துபேர் சேர்ந்த குழுவை அமைத்து விவாதிக்க வேண்டும். அவர்கள் எதனை அந்த சூழலுக்கு ஏற்ற தர்மம் என்று கூறுகிறார்களோ அதை ஏற்க வேண்டும்.

  சரி பத்துபேர் கூட ஒன்றாக முடிவெடுக்க முடியவில்லை. அப்போது என்ன செய்வது?

  த்ர்ய்(அ)வரா வா(அ)பி வ்ருத்தஸ்தா₂ தம் த₄ர்மம் ந விசாலயேத் ॥ 12।110॥

  மூன்று பேராவது கூட வேண்டும். அம்மூவரும் தங்களது கடமைகளை முழுமையாக செய்தவர்களாக, வயதில் மூத்தவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் ஆலோசித்து எதை தர்மம் என்று சொல்கிறார்களோ அதை ஏற்க வேண்டும். அதற்கு மேல் விவாதம் செய்யக்கூடாது.

  இது எவ்வளவு அற்புதமான அணுகுமுறை! இந்து தர்மத்தின் அத்தனை நூல்களையும் போட்டு எரித்துவிட்டால்கூட, நமது ஆன்றோர்கள், அறிஞர்களில் மூன்று பேர் இருந்தால் போதும். தர்மத்தை அறிந்துகொண்டு நிலை நிறுத்தி விடலாம். இதற்கு ஆட்சி, அதிகாரம், பெரும்பான்மை எதுவுமே வேண்டாம். ஒரு நூறு இந்துக்களை கொண்டுபோய் ஏதோ ஒரு வேற்று கிரகத்தில் விட்டுவிட்டால் கூட தர்மம் அங்கேயும் தொடரும். இப்படி ஒரு அதிசயமான கருத்தியலைப் புரிந்துகொள்ள கொஞ்சம் பொறுமையும் நிறைய உழைப்பும் வேண்டும்.

  இவை இரண்டுமே இல்லாத நிலையில் “இதுதான் உங்கள் நூல்!” என்று கூறுவது முதல் தவறு. அப்படி ஒரு நூலில் இல்லாத விஷயத்தை எடுத்து அதை நமது மொத்த சமூகத்தின் மீதும் பழியாகச் சுமத்துவது இரண்டாவது தவறு . அது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். இந்த இரண்டு மோசடிகளையும் மூன்று துரோகங்களின் மீது கட்டமைத்துள்ளனர்.

  தொடர்ந்து இந்து தர்மத்துக்கு எதிரான கருத்துகளை தமிழர்கள் மீது திணித்தது முதல் துரோகம்.

  ஆட்சி அதிகாரத்தை வைத்து, நமது தர்மத்தின் அடிப்படைகளை நம்மைத் தெரிந்துகொள்ள விடாமல் செய்தது இரண்டாவது துரோகம்.

  இன்று தர்மம் தெரியாமல் நிற்கும் மக்களிடம் இப்படிப்பட்ட அதர்ம வார்த்தைகளை சொல்லி, “இதுதான் உங்கள் தர்மமாக இருந்தது” என்று பிரசாரம் செய்வது மன்னிக்க முடியாத மூன்றாவது துரோகம்.

  இந்த துரோகம் நமக்குப் புரிய வேண்டும். அதைவிட முக்கியமான துரோகிகளைப் புரிந்துகொள்ள வேண்டும். புரிந்துவிட்டது என்று நம்புகிறோம். அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறது. நினைவில் கொளுவோம்.

  ரெண்டு மோசடி மூன்று துரோகமும்
  உண்டு இந்துவே கண்டு கொள்ளுவாய்!
  சிண்டு முடியிற த்ரவிஷத்தை நாம்
  பெண்டு நிமிர்த்தினா தர்மம் நிற்குமே!

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,233FansLike
  0FollowersFollow
  19FollowersFollow
  74FollowersFollow
  1,163FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »