May 10, 2021, 1:21 am Monday
More

  மனு தர்மத்தை கொளுத்துவோம்! ஆனால்… இதையெல்லாம் தெரிந்து கொண்ட பிறகு!

  தெருநாவளவன் மாதிரி மனுதர்மம் மனுதர்மம்னு கூவிட்டே இருப்பேன்னா கூவியே சாவு

  manudharma
  manudharma

  மனு தர்மத்தை கொளுத்துவோம்…

  சுவாயம்பு மனு, ஸ்வரோசிஷ மனு, உத்தம மனு, தபஸ மனு, ரைவத மனு, சாக்ஷுசு மனு, வைவஸ்வத மனு, சாவர்னி மனு, தக்‌ஷ சாவர்னி மனு, பிரம்ம சாவர்னி மனு, தர்ம சாவர்னி மனு, ருத்திர சாவர்னி மனு, தேவ சாவர்னி மனு…..இதுல எந்த மனு தம்பி?

  தெரியாது….ஆனா மனு தர்மத்தை கொளுத்துவோம்

  நிறைய மனு இருக்காங்க, எந்த மனுவோட தர்மத்த கொளுத்துவீங்க ?

  அது வந்து……

  சரி சொல்றேன் கேளு. மனுஸ்மிருதினு சொல்லப்படற மனுதர்மம், ஸ்வயம்பு மனுவால உபதேசிக்கப்பட்டது. கிட்டத்தட்ட வெள்ளைக்கார கணக்குபடி 3500 வருஷம் முன்னாடி ஆரியவர்த்தம்ங்கற பகுதியில் ( அதாவது இப்ப இருக்கறத நேபாளம், உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், வங்காளம், குஜராத், கிழக்கு இராஜஸ்தான் பகுதி ) உபதேசிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அந்த காலத்துல முனிவர்கள் எல்லாம் சேர்ந்து சுவயம்பு மனு கிட்ட போயி, இயற்கைச் சீற்றங்களை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் சமூக வாழ்க்கை நெறி முறைகளை எப்படி கையாள்வது வாழ்வதுன்னு கேக்கும் போது, அந்த முனிவர் ஸ்வயம்பு மனு தயார் செஞ்சு கொடுத்ததுதான் மனுஸ்மிருதி. நல்லா கேட்டுக்க 3500 வருஷம் முன்னாடி… அதை மறந்துடாத. அதாவது அந்த கால இடம் பொருள் சூழ்நிலைக்கு தகுந்தா மாதிரி அவர் உபதேசிக்கிறார். அதுல பல நல்லதும் இருக்கு, இப்ப இருக்கற காலத்துக்கு பொருந்தாத பல செய்திகளும் இருக்கு.

  ஆனா இன்னும் அதே மனுதர்மம்தானே ஃபாலோ பன்றாங்க?

  யாருப்பா ஃபாலோ பன்றாங்க? எதுக்கு ஃபாலோ பன்றாங்க? கொஞ்சம் சொல்லேன் பார்ப்போம்.இப்ப நாம ஃபாலோ பண்றது சட்ட மேதை அம்பேத்கார் தலைமைல உருவான சட்ட அமைப்ப தான்.

  நாங்க சொல்றது இந்து தர்ம நியமங்கள், கடமைகள்.

  அட ரொட்டிக்கு மதம் மாறுனவனே, 3500 வருஷம் முன்னாடி உலகம் எப்படி இருந்திருக்கும்? அதுக்கு அப்புறம் எவ்வளோ மாறியிருக்கும்? நூற்றுக்கணக்கான குருமார்கள், மகரிஷிகள் யோகிகள்னு வந்து காலத்துக்கு தகுந்த மாதிரி நியமங்களை, கடமைகளை, விதிகளை மாத்திக் கொடுத்துருக்காங்க. அடிப்படை விதிகள் நியமங்கள் மாறாது ஆனா இடம், பொருள் சூழ்நிலைக்கு தகுந்தது மாதிரி வரையரைகள் மாறும்.
  உதாரணத்திற்கு குண அடிப்படையிலான வர்ண பேதங்கள் அன்னைக்கு தேவைப்பட்டுச்சு…. இன்னிக்கு கால மாற்றத்துனால அந்த வரையரை தேவைப்படலை. ஆனால் தன்னை அறிவது, எல்லோரும் நல்லா இருக்க நினைக்கறது, தூய்மையான இறைபக்தி, தியானம், யோகம், கடமையை ஆற்றுவது என்கிற அடிப்படைகள் மாறாது.

  ஆனா இந்த மனுதர்மத்தைதானே எல்லா சடங்கு சம்பிரதாயத்துக்கும் இந்து மதத்துல ஃபாலோ பண்றீங்க?

  அடேய் சடங்கு சம்பிரதாயத்துக்கு பல சம்ஸ்காரங்கள் இருக்கு.அதுவும் சூழ்நிலை, சேர்ந்த சமூகம், காலம், ஆண்பால், பெண்பால் இப்படி ஒவ்வொன்னையும் வெச்சு மாறுபடும்
  ஒவ்வொரு கால கட்டத்துல தோன்றி உருவாக்கப்பட்ட சூத்திரங்கள், சாஸ்திரங்கள், அதில் நூற்றுக்கணக்கான பிரிவுகள்னு பல பேரால முன்நிறுத்தப்பட்டவை இவை. இதுல ஒரு மனிதன் குழந்தையா வயிற்றுல உருவாகறதிலிருந்து, சாகற வரைக்கும் பல சடங்குகள் சொல்லப்படுது.
  கௌதம தர்ம சூத்திரம், க்ருஹசூத்திரம், அப்புறம் பலவிதமான சடங்குகளை குறிப்பிடற கர்பதானா, பூம்சவனா, சீமந்தநோயனா, ஜடகர்மனா, நாமகர்மனா, ( பேரு வெக்கறது) நிஷ்க்ரமனா, அன்னபிரஷ்னா, சுடக்கரனா, கர்ணவேதா ( காதுகுத்து ) வித்யாரம்பா ( படிக்க ஆரம்பிக்கறது ), உபநயனா, கேஷண்தா, ரிதுசுத்தி, சாமவர்த்தனா, விவாஹா (கல்யானம்) விரதங்கள், இறப்புக்கு அந்த்யேஷ்டி, ஷ்ரார்தானு பல பேரால முன்நிறுத்தப்பட்டது. இந்த ஒவ்வொன்னும் இடத்துக்கு தகுந்தா மாதிரி, சமூகத்துக்கு தகுந்தா மாதிரி பல இடங்கள்ள பல வகைல இந்த சடங்கு சம்பிரதாயங்கள் மாறுபடும். ஆனா மிஷநரி கூட்டங்க மட்டும் சர்.வில்லியம் ஜோன்ஸ்னு ஒரு வெள்ளைக்காரன் எசகுபிசகா சமஸ்க்ருதத்துல இருந்து இங்லீஷ்க்கு மொழிபெயர்த்த மனு தர்மத்த பிடிச்சு தொங்கிட்டு இருப்பாங்க.

  உண்மைலயே உனக்கு இந்து மதத்துல உள்ள கோட்பாடுகள், சித்தாந்தங்கள் தெரிஞ்சுக்கனும்னா பகவத் கீதை, உபநிஷத் இதையெல்லாம் படி. இல்ல தமிழ்ல பக்தி செலுத்தனும்னா திருவாசகம், திருவாய்மொழி, திருப்புகழ் இப்படி எதையாவது கத்துக்க, இல்ல தியான முறைல மன நிம்மதிய தேடிக்க பதஞ்சலி சூத்திரங்களை நல்ல குரு மூலமா கத்துக்க, இல்லைன்னா ஏதாவது ஒரு கூட்டமில்லாத கோயிலுக்கு போயி மனசார பிரார்த்தனை செய், இல்லைன்னா சமூகத்திற்கு, தேசத்திற்கு கடமையை செஞ்சு கர்ம யோகியா வாழு. இதுல எதை செஞ்சாலும் உனக்கு நற்கதி கிடைக்கும்.

  எவனோ ஒருத்தன் அப்பத்த வாய்ல போட்டு வெள்ளைக்கார வழக்கப்படி ‘பேப்டிஸம்’ ஒரு டிக்கெட் கொடுத்தா மட்டும்தான் நீ எப்படிப்பட்ட நல்லவனா இருந்தாலும் பரலோகம் போக முடியும்கற ஃப்ராடுத்தனமெல்லாம் இங்க இல்ல.

  ஆனா இது எதையுமே கேக்க மாட்டேன்….மிஷநரி திராவிட க்ரூப்கிட்ட காசு வாங்கிட்டேன், தெருநாவளவன் மாதிரி மனுதர்மம் மனுதர்மம்னு கூவிட்டே இருப்பேன்னா கூவியே சாவு !!

  சர்வம் கிருஷ்ணார்ப்பணம்….

  • Professor Jagadesan, Agriculture

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,234FansLike
  0FollowersFollow
  19FollowersFollow
  74FollowersFollow
  1,171FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »