Home அடடே... அப்படியா? பள்ளி, கல்லூரி திறப்பில் உள்நோக்கம்; மறுபரிசீலனை தேவை!

பள்ளி, கல்லூரி திறப்பில் உள்நோக்கம்; மறுபரிசீலனை தேவை!

school
school

நவம்பர் 16ஆம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் செயல்பட அனுமதி ..முதலமைச்சர் அறிவிப்பு .

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு ஓர் கேள்வி .
நவம்பர் 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது . நவம்பர் 16ம் தேதி பள்ளி கல்லூரிகளை திறக்க சொல்கிறார்கள் . எதன் அடிப்படையில் இந்த நம்பர் 16 ஆம் தேதியை தேர்வு செய்தார்கள் .
முதலாவதாக ஹிந்து பண்டிகை என்றாலே யாரும் சந்தோசமாக கொண்டாட விடக்கூடாது என்ற மனநிலையிலேயே கிறிஸ்தவ பள்ளிகள் தீபாவளி முடிந்த மறுநாள் பள்ளியை வைத்து பிள்ளைகளை பாடாய்படுத்துகிறார்கள்.
கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருடத்தை கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்காக எல்லா தேர்வுகளையும் முடித்து விட்டு மிகவும் சந்தோஷமான மன நிலையில் அவர்கள் கொண்டாடுகிறார்கள் .

  இந்துக்களாகிய நாங்கள் எங்கள் பண்டிகைகளைக் கொண்டாடும் போது மட்டும் அதிகப்படியான வீட்டுப் பாடங்கள் மற்றும் அதிகப்படியான தேர்வு நெருக்கடிகளை கொடுத்து மிகவும் நெருக்கடியான மனநிலையை இதுநாள்வரை எங்கள் குழந்தைகள் கொண்டாடிக்  கொண்டிருக்கிறார்கள் .

சரி இது எங்கள் தலையெழுத்து என்று இவ்வளவு நாள் பொறுத்துக் கொண்டுதான் இருக்கிறோம் . அதிசயமாக இந்த வருடம் நடந்த ஊரடங்கு விடுமுறையால் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாடலாம் என்ற மனநிலையில் இருந்த பள்ளி குழந்தைகளுக்கு தமிழக அரசு மன ரீதியான நெருக்கடி கொடுக்கிறது . 

இந்த நாட்டில் ஹிந்துவாக பிறந்ததை விட பெரிய பாவம் வேறொன்றுமில்லை .

இரண்டாவதாக , மாநிலம் முழுவதும் தற்சமயம் அனைத்து பகுதிகளிலும் வேலையை ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது .

தெற்குப் பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் தங்கள் வேலை நிமித்தம் வட நகரங்களுக்கு சென்று தங்களுடைய பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள் .

இவர்களுடைய இடப்பெயர்வு தீபாவளி நேரத்தில் பெருமளவில் இருக்கும் . தங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு திரும்புவார்கள் .

தீபாவளி முடிந்த இரு தினங்களில் மீண்டும் பணிக்கு செல்வதற்காக தங்கள் ஊர்களுக்கு செல்வார்கள் . இயல்பாகவே அந்த நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் .

நவம்பர் 16-ஆம் தேதி நீங்கள் பள்ளி-கல்லூரி திறப்பதாக அறிவித்ததால் அதே காலகட்டத்தில் வெளியூரில் படிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் இடப்பெயர்வு அதிக அளவு இருக்கும் . மிகவும் கடுமையான கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிக அளவு உள்ளது .

கரானா ஊரடங்கு காலகட்டத்தில் ஒரே நேரத்தில் இப்படி கல்லூரி மாணவ மாணவிகளையும் மற்றும் தொழிலாளர்கள் அனைவரையும் பொது போக்குவரத்தில் அடைப்பது மேலும் இந்த தொற்றுநோயை கடுமையாக பரப்புதற்கே வழிசெய்யும் .

குறைந்து கொண்டிருக்கும் தொற்றுநோய் அளவு உடனடியாக கூடுவதற்கு அதுவும் மாணவ மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதற்கு மிகவும் அதிக வாய்ப்புள்ளது . ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்காத கதையாக அரசாங்கத்தின் முடிவு உள்ளது .

மேலும் ஒரு வாரம் கழித்து பள்ளி கல்லூரிகள் ஆரம்பிப்பதால் எந்த கெடுதலும் இல்லை . மாறாக அந்த முடிவு நன்மையை தான் தரும் .

அனைத்து மக்களையும் ஒரு சேர போக்குவரத்து நெருக்கடியில் ஆழ்த்தி தொற்று நோயை அதிக அளவு பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

அரசு விழிக்குமா..?

  • எண்ணமும் எழுத்தும்
    நெல்லை ராம்பாபு

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version