ஏப்ரல் 21, 2021, 7:48 மணி புதன்கிழமை
More

  பழைய பாதையில்… பாமக! ’வன்முறை’ அரசியலை வறுத்தெடுக்கும் வலைத்தள வாசிகள்!

  தமிழகத்தில் வேரோடும் வேரடி மண்ணோடும் களையப்பட்டு அழித்து ஒழிக்க வேண்டிய கட்சிகளில் சாதிக்கட்சி பாமகவும் ஒன்று.

  jayalalitha
  jayalalitha

  வன்னியர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டத்தை தற்போது அறிவித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியினர் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக சாலை மறியல் ரயில் மீது கல்வீச்சு வன்முறை என்று ஈடுபடுவதைப் பார்த்து சமூக வலைதள வாசிகள் கடுமையாக வறுத்தெடுத்து வருகின்றனர் 

  பாமக., பழைய பாதையில் செல்லத் தொடங்கி இருக்கிறது என்று தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் சிலர்.  அன்று மரங்களை வெட்டிச் சாய்த்து சாலை நடுவே போட்டு போக்குவரத்தை தடை செய்தனர். இன்று ரயில்கள் மீது கல்வீசி தாக்குதல் தொடுக்கின்றனர் இந்த லட்சணத்தில் அன்புமணி ராமதாஸ் பாமக வன்முறையில் ஈடுபடாது என்று வேறு சொல்கிறார் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன!

  பாமகவின் தற்போதைய வன்முறைகள் 20 சதவிகித இடத்தை எதிர்பார்த்து அல்ல 20 சட்டமன்ற தொகுதிகளை எதிர்நோக்கி என்றவாறு கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.

  சமூகவலைத்தளங்களில் வைரலான கருத்துகளில் சில…

  ஜெயலலிதா என்கிற இரும்பு பெண்மணி ….

  பாட்டாளி மக்கள் கட்சி என்கிற கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் … 1980 இல் கட்சியை ஆரம்பித்த பொது – இதே போல சாலைகளை மறித்து – பல போராட்டங்கள் செய்து தங்கள் ஜாதிக்கு 20% ஒதுக்கீடு கேட்டு பலர் அந்த குடி இன மக்கள் போலீஸ் கேஸ் துப்பாக்கி சூட்டில் இறந்தும் …. பல துன்பங்களை அனுபவித்து – எம்ஜியார் இவர்களது வன்முறையை கண்டு – தயக்கம் காட்டி முடிவு எடுக்க முடியாமல் – ஒரு கூட்டம் கூட்டி .. அது தனி கதை ..

  ஆசிரியர்கள் போராடினால் – கழக ஆட்சி வாளாக இராது – இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவோம் என்று பேசும் கருணாநிதி கூட இந்த கட்சியில் சாலையில் பொது வெளியில் செய்யும் அராஜக போக்கை கண்டிக்க தயங்கினார் ..

  வருடம் 2013 ஏப்ரல் மாதம் மரக்காணம் பகுதியில் ஜாதி கலவரம் – காரணம் சொல்ல தேவை இல்லை – 30 ஏப்ரல் 2013 …. எங்கள் மீது கை வைத்து பார் என்று பலர் சவால் விட்டனர் .. -ஜெயலலிதா அரசு – டாக்டர் ராமதாஸ்யை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் வைத்தனர் ..

  மே மாதம் 5 ஆம் தேதி அவருக்கு பிணை கிடைத்தும் பல வித வழக்குகள் போட்டு வெளியில் வர முடியாமல் உள்ளேயே இருக்க வைத்தார் – விழுப்புரம் மாவட்டத்தில் கலவரக்கார்கள் கிராமம் கிரமாமாக கைது செய்து உள்ளே வைக்கப்பட்டனர் !!!

  அன்றைய பாமக எம் எல் ஏ மற்றும் அந்த கட்சியின் பரபரப்பான தலைவர் – காடு வெட்டி குரு சிறையில் இட்டு பல வித தொல்லைகள் குடுத்தார்கள் ..

  அப்பாவி இன மக்களை தூண்டி விடுகிரவர்களை உள்ளே வச்சு இதை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்கிற தகிரியமான முடிவை எடுக்கும் திறன் கொண்ட ஒரே தலைமையாக அவர் இருந்தார் ..

  1960 களில் அண்ணாதுரை கருணாதியை -ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பொது – அசாம் மிசோராம் பகுதியில் கொண்டு சிறையில் வைத்து இருந்தா – இந்த திராவிட தீதுகள் கையில் இருந்து நாம் தப்பி இருப்போம் – ரோடில் வரும் அப்பாவியை சுட்டு – அன்றைய காங்கிரஸ் அரசு கேட்ட பெயர் வாங்கியது

  ” “It was former Chief Minister Jayalalithaa who put Mr. Ramadoss behind bars in Tiruchi Central Prison. He was treated shabbily in the jail. We all witnessed that.

  Jayalalithaa had also ordered the arrest of Vanniyar Sangam leader and former PMK MLA Kaduvetti J. Guru. It was because of his incarnation in jail that he fell ill and died” – TNCC working president M.K. Vishnu Prasad who is also the brother-in-law of PMK leader Anbumani Ramadoss. –

  சிறையில் திரு ராமதாஸ் அவர்கள் ஒரு சாதாரண கைதி போல நடத்தப்பட்ட விதம் – அவரது குடும்பத்தவர் அனைவரையும் மிரட்டி விட்டது …

  ராமதாஸ் குடும்ப பெண்கள் ஜெயலலிதாவை அவரது வீட்டில் சந்தித்து – இனிமேல் அவர் ஆட்சி காலத்தில் பொது சொத்து சேதம் விளைவிக்கும் போராட்டங்கள் நடத்த மாட்டேன் என்று எழுதி குடுத்தால் விடுவிக்கப்பட்டார் என்று பேச்சு உண்டு ..

  ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்தில் ரோடில் சவுண்ட் விடும் ஆட்களை துவைத்து எடுக்க போலீஸ் கைகளை – கட்டி வைக்காமல் – விரித்து வைத்து இருந்தவர் ஜெயலலிதா ..

  இரண்டு நாளாக சென்னையை முற்றுகை இட்டு பல ரௌடிதனம் நடைபெற்று கொண்டு இருக்கிறது … அம்மாவின் பெயரால் நடக்கும் ஆட்சி தூங்கி கொண்டு இருக்கிறது ..

  ஆத்தா செத்து போய் விட்டாய் … நீ இருந்த போது நாங்களெல்லாம் ரோடில் புள்ளை குட்டியோட நிம்மதியாக போய் வந்து கொண்டு இருந்தோம் …. we teribly miss you now

  வேரும் வேரடி மண்ணோடும் களையப்பட வேண்டியது…

  pmk-protest-chennai
  pmk-protest-chennai

  இரண்டு மருத்துவர்களைத் தலைமையாகக் கொண்ட ஒரு கட்சி தொடக்கத்திலிருந்தே வன்முறையைக் கையாள்கிறது. மரங்களை வெட்டிச் சாய்த்தவர்கள் ஓடும் ரயில் மீது கல்லெறிவதும் சாலைத் தடுப்புகளை தூக்கிக் கடாசுவதுமாக பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளனர்.

  பெருங்களத்தூர் ராணிப்பேட்டை என்று முற்றிலுமாகப் பல மணி நேரங்கள் போக்குவரத்தை முடக்கியதற்கு சிறிதும் வருத்தம் தெரிவிக்காத மருத்துவர் அன்புமணி வன்முறை செய்த தன் குண்டர்களை உத்வேகப் படுத்துவது போல் பேசுகிறார்.

  வெட்கக்கேடு… மருத்துவர் ஐயாக்களா.. பாமக என்று பெயர் மாற்றினாலும் சாதிக்கட்சி என்ற கொண்டையை அவர்கள் மறைப்பதே இல்லை.

  நன்கு படித்தவர்களைத் தலைமையாகக் கொண்ட கட்சி எத்தனை வன்முறையைத் தூண்டி வளர்க்கிறது பாருங்கள்.இனி பாஜக பாமகவோடு கூட்டணி வைத்தால் நிச்சயம் நாம் பாஜகவை டைவோர்ஸ் பண்ணிடுவோம்.(என் பையன் சின்னதுல அப்டித்தான் சொல்லும். நீ மருந்து குடுக்குறே. உன்னை டைவர்ஸ் பண்ணிடுவேன் என்பான்.)

  படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோன்னு போவான்..முண்டாசுக்கவியின் சாபம்.

  இன்று நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில் கலந்து கொள்ள வந்த மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் தவித்துப் போயிருக்கின்றனர்.

  யாரால்?

  மருத்துவர் அய்யாக்கள் நடத்தும் வன்முறைக் கட்சியின் அடாவடிச் செயல்களால்.

  திருவண்ணாமலை போன்று வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் செய்வதறியாது தவித்திருக்கிறார்கள்… பெருங்களத்தூரில் வன்முறையாளர்களைக் கண்ட பெற்றோரும் பிள்ளைகளும் பதறி ஓடி இருக்கின்றனர்.

  சரியான நேரத்துக்குப் போக முடியுமா என்ற பரிதவிப்பு.
  பல மடங்கு சார்ஜ் கொடுத்து கிடைத்த ஆட்டோவில் ஏறி சந்து பொந்துகள் வழியாக கலந்தாய்வு நடைபெறும் இடத்தை அடைந்துள்ளனர்.

  யாரேனும் சில மாணவர்களுக்கேனும் கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியாது போயிருந்தால் சாதி கட்சி டாக்டருங்க இரண்டு பேரும் அவங்களுக்கு மெடிகல் சீட் வாங்கிக் கொடுத்துடுவாங்களா?

  நீட் தேர்வை எதிர்க்கும் வேஷதாரிகள் இதற்கு என்னடா பதில் சொல்வீங்க? அனிதா புனிதான்னு போலிக் கண்ணீர வடிப்பானுகள். தேவையான மதிப்பெண்களைப் பெறாதவர்களுக்கும் பெற்றோரின் வற்புறுத்தலால் விதியே என்று நீட் தேர்வை எழுதி விட்டு ரிசல்ட் வரும் நேரம் பெற்றவர்களுக்குப் பயந்து தற்கொலை செய்து கொள்ளும் முட்டாள் பிள்ளைகளுக்காகவும் அப்படியே வருந்தித் துடித்து மெழுகாய் உருகுவது போல் நடித்து மக்களை முட்டாளாக்கி வைத்திருக்கும் கட்சிகள் எல்லாம் இந்த சாதிக்கட்சி உட்பட இதற்கு என்ன பதில் சொல்லும்.?

  டாக்குட்டரய்யா ..பதில் சொல்லுங்க.

  தமிழகத்தில் வேரோடும் வேரடி மண்ணோடும் களையப்பட்டு அழித்து ஒழிக்க வேண்டிய கட்சிகளில் சாதிக்கட்சி பாமகவும் ஒன்று.

  வீட்டு வேலைக்காரர்களையோ ,கார் டிரைவர்களையோ ,குறைந்த பட்சம் வீட்டின் வாட்டர் டேங்க் க்ளீன் செய்ய வரும் பையனைக் கூட நல்லவனா ?

  அசந்த சமயம் வீட்டைக் கொள்ளை போட்டு விடுவானோ என்ற ஒரு பயத்தோடு கூடுமானவரை விசாரித்து வேலைக்கு அமர்த்துகிறோம்.

  அங்கே சாதி இல்லை. நல்லவனாகவும் வேலையில் கெட்டிக்காரனாகவும் இருந்தால் போதும். ஆனால் அரசியல் ,தேர்தல் இவற்றில் மட்டும் சாதிக்காக கட்சிகளைத் தேர்வு செய்வதும் வாக்களிப்பதும் ஏன்?

  நாட்டின் சொத்துகளின் மீதும் இயற்கை வளங்களின் மீதும் திருக்கோவில்கள் ,கோவில் சார்ந்த சொத்துகள் மீதும் அக்கறையில்லை. அவை நம் சொத்து என்ற எண்ணமில்லை.
  நாட்டின் சொத்துகளை அவனவன் பெயரில் பட்டா போட்டுக் கொடுத்தால் மட்டுமே கொள்ளையடிப்பவன் மீது கோபம் வரும் போல.

  தன் வீட்டு எல்லைக்குள் அடுத்தவன் வீட்டு மாடு ,கோழி மேய்ந்தால் கூட வெட்டு குத்துதான். நிலம் என்றாலோ துப்பாக்கிச் சூடுதான். ஆனால் கோவில் சொத்தோ பொதுச் சொத்தோ சேதமானாலும் கொள்ளை போனாலும் கவலையில்லை.
  மக்கள் பொதுச் சொத்துகளை தன் வீட்டுச் சொத்தாக பாவிக்கும் எண்ணம் வரும் வரை அரசியல்வாதிகளின் கொள்ளை, ஊழல், வன்முறை இவற்றுக்கு மறைமுகமாகத் துணை போய்க் கொண்டுதான் இருப்பார்கள்.

  சுயநலமும் பேராசையும் கொண்ட மக்கள். தேசபக்தி வளர வேண்டும்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »