ஏப்ரல் 22, 2021, 8:06 மணி வியாழக்கிழமை
More

  Jaac கம்யூனிச சித்தாந்த அரசியல் சார்பில் இயங்கி வருகிறதா?! வழக்கறிஞரின் பரபரப்புக் கடிதம்!

  கம்யூனிச அரசியலுக்கு JAAC துணை போகிறதா என்ற கேள்வி என்னை போன்ற பல வழக்கறிஞர்கள் மத்தியில் எழுந்துள்ளது

  kutralanathan protest in palay busstand
  kutralanathan protest in palay busstand

  கடந்த சில மாதங்களாக Jaac அமைப்பு கம்யூனிச சித்தாந்த பின்புலத்தில் அரசியல் சார்போடு இயங்கி வருகிறதோ என்ற சந்தேகம் அதன் நடவடிக்கைகள் மூலம் எனக்கு மேலோங்கி வருகிறது என்று வழக்குரைஞர்கள் சங்கத்துக்கு கேள்வி எழுப்பியுள்ளார் நெல்லையைச் சேர்ந்த வழக்குரைஞர் கா.குற்றாலநாதன்.

  அவர் அனுப்பியுள்ள கடிதம் இது…

  அனுப்புநர்
  கா.குற்றாலநாதன் MA,BL
  வழக்கறிஞர்
  4 வழக்கறிஞர் வளாகம்
  மாவட்ட நீதிமன்றம்
  திருநெல்வேலி 2

  பெறுநர்
  தலைவர் / செயலாளர் /நிர்வாகிகள்
  JAAC

  வணக்கம் !

  நான் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 17 வருடங்களாக வழக்கறிஞராக தொழில் செய்து வருகிறேன். வழக்கறிஞர் தொழிலை மட்டுமே ஜீவனமாக வைத்து தினமும் நீதிமன்ற நடவடிக்கைளில் பங்கேற்கும் பல்லாயிரக்கணக்கான சாதாரண வழக்கறிஞர் நானும் ஒருவன்

  2016 ம் ஆண்டு JAAC துவங்கப்பட்ட ஈரோடு பொதுக்குழு முதல் தேனி தஞ்சாவூர் என Jaac ஆரம்ப காலகட்ட பல கூட்டங்களில் பங்கேற்றுள்ளேன்.

  வழக்கறிஞர் தொழில் சட்ட விதிகள் திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற சென்னை உயர்நீதிமன்ற முற்றுகை போராட்டம் நெல்லை ரயில் மறியல் போராட்டம் ஆர்ப்பாட்டம் உண்ணாவிரதம் என வழக்கறிஞர் தொழில் சார்ந்த JAAC ன் பல போரங்களில் பங்கேற்று பல வழக்கறிஞர்களோடு கைது செய்யப்பட்டு வழக்குகளுக்கு உள்ளாகியிருக்கிறேன்.

  கடந்த சில மாதங்களாக Jaac அமைப்பு கம்யூனிச சித்தாந்த பின்புலத்தில் அரசியல் சார்போடு இயங்கி வருகிறதோ என்ற சந்தேகம் அதன் நடவடிக்கைகள் மூலம் எனக்கு மேலோங்கி வருகிறது

  கடந்த வருடம் கம்யூனிஸ்டுகள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் அறிவித்த போது அதே நாளில் Jaac ஏதேதோ காரணம் சொல்லி நீதிமன்ற புறக்கணிப்பு நடத்தியது

  கம்யூனிச நக்சல் சிந்தனையுடைய வழக்கறிஞர் திரு செம்மணி அவர்களுக்காக தமிழகம் முழுவதும் போராடியது JAAC. . சரி அது வழக்கறிஞர் நலன் சார்ந்தது என வைத்துக்கொண்டால்

  திருநெல்வேலி வழக்கறிஞர் சங்க சகோதரர் பூபதி காவல்துறையால் தாக்கப்பட்ட போது Jaac ஏன் போராடவில்லை. இது போல் தமிழகம் முழுவதும் பல வழக்கறிஞர்கள் காவல்துறை அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட போது தனிதனியாக அவர்களுக்காக ஏன் Jaac மாநில அளவில் போராடவில்லை ?

  இந்த கேள்வியை நான் சமூக வலைதளங்களில் எழுப்பியதால் சமீபத்தில் சகோதர வழக்கறிஞர் பிரம்மாவுக்காக போராடியதாக தெரிய வருகிறது

  இன்று விவசாயிகள் ஆதரவு போராட்டம் என்ற பெயரில் கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளும் அதன் சார்பு இயக்கங்களும் பாரத்பந்த் போராட்டம் அறிவித்துள்ளனர். அதற்கு ஆதரவாக Jaac ம் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் அறிவித்துள்ளது.

  விவசாயிகள் போராட்டம் அரசியல் தூண்டுதல், பயங்கரவாதிகள் பின்னணி, கோடீஸ்வர இடைத்தரகர்களின் பின்புலம் என்றெல்லாம் கூறப்படுவதை சரியா தவறா என அலசி ஆராய்வது வழக்கறிஞர்கள் வேலையில்லை . இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் என சொல்லப்படும் அத்தகைய போராட்டத்திற்கு JAAC ஆதரவளிப்பதேன் ?

  Jaac விவசாயிகள் சங்கமா ? வழக்கறிஞர்கள் சங்கமா ?

  எல்லோரும் சாப்பிடுறோம் அரிசி உழவன் என்றெல்லாம் உணர்சிபூர்வமாக காரணம் சொல்லாதீர்கள்.

  ஹரியானா பஞ்சாப் போன்ற ஒரு சில வட மாநிலங்களை தவிர வேறு எங்கும் பெரிய போராட்டம் இல்லை. அதிலும் தமிழகத்தில் விவசாயிகளே பெரிய அளவில் அதை எதிர்த்து போராடாத சூழ்நிலையில் வழக்கறிஞர் சங்கத்திற்கு அதில் என்ன அக்கறை வந்தது ?

  கொரோணா பாதிப்பு காரணமாக பல மாதமாக மூடப்பட்ட நீதிமன்றங்கள் தற்போது வரை முழுமையாக இயங்கவில்லை. ஆன்லைன் நீதித்துறை நடவடிக்கையில் வழக்கறிஞர்களுக்கு பல இடர்பாடுகள், பல நீதிமன்றங்களில் வழக்கறிஞர்ளுக்கு தொழில் ரீதியாக பல பிரச்சனைகள் இருக்கும் நிலையில் அதற்கு தீர்வு காணப்படாத நிலையில் விவசாயிகளுக்காக Jaac ஆதரவு போராட்டம் அவசியமா ?

  கம்யூனிச அரசியலுக்கு JAAC துணை போகிறதா என்ற கேள்வி என்னை போன்ற பல வழக்கறிஞர்கள் மத்தியில் எழுந்துள்ளது

  உங்கள் விருப்பு வெறுப்பு அரசியலுக்காக தமிழக வழக்கறிஞர்களையும் பல வழக்கறிஞர் சங்கங்களையும் தயவுசெய்து பலிகடா ஆக்காதீர்கள்

  வழக்கறிஞர் சங்கம் அரசியல் சார்பற்று வழக்கறிஞர் நலனை மட்டுமே கருத்தில் கொண்டதாக இருக்க வேண்டும். எல்லா வழக்கறிஞர்களும் வெவ்வேறு அரசியல் இயக்கங்களை சார்ந்த சித்தாந்தவாதிகளாக உள்ளனர். ஆனாலும் வழக்கறிஞர் நலன் என வரும் போது அரசியல் சார்பற்று ஒன்றுபட்டு செயல்பட்டு வருகின்றனர். ஆனால் அதை கம்யூனிஸ்டுகளின் மத்திய அரசு வெறுப்பு அரசியலுக்கு இரையாக்காதீர்கள்

  JAAC ன் தொடர் அரசியல் திணிப்பு போராட்டங்களை முறியடிக்க அன்றைய தினத்தில் நீதிமன்றத்தில் சென்று தொழில் செய்ய ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் மனதளவில் தயாராக உள்ளனர்.

  ஆனால் அது வழக்கறிஞர்கள் ஒற்றுமையை சீர்குலைப்பதாக அமைந்து விட கூடாது என்பதால் விவசாயிகள் போராட்ட ஆதரவு போன்ற jaac போராட்டங்களுக்கு ஆதரவும் எதிர்ப்பும் இன்றி அமைதி காத்து ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

  ஆனால் இதையே சாதகமாக நினைத்து கம்யூனிஸ்டுகளின் அரசியல் போராட்டங்களுக்கு தொடர்ந்து Jaac ஆதரவாக செயல்படுமேயானால் அது வழக்கறிஞர்கள் ஒற்றுமையை சீர்குலைப்பதாக அமைந்துவிட கூடும் என்ற வருத்தத்தில் இதனை பதிவு செய்கிறேன் இனி வரும் காலங்களில் அரசியல் சார்பற்று வழக்கறிஞர் நலனுக்காக மட்டுமே செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கையில் . . . .

  நன்றி

  கா.குற்றாலநாதன், வழக்கறிஞர்.

  நகல் :தலைவர் / செயலாளர்
  திருநெல்வேலி வழக்கறிஞர் சங்கம்

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »