Home உரத்த சிந்தனை புதிய விவசாய சட்டம்: ஏன் போராடுகிறார்கள்?!

புதிய விவசாய சட்டம்: ஏன் போராடுகிறார்கள்?!

sad-provide-free-diesel-to-farmers-heading-towards-delhi
sad provide free diesel to farmers heading towards delhi

புதிய விவசாய சட்டம் உண்மை என்ன?

எப்பொழுதும் எல்லா சட்டத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் இந்தியாவில் இப்பொழுது விவசாய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு வலுக்கின்றது

இந்த புதிய சட்ட திருத்தம் சொல்வது என்ன? அதாவது அரிசி,கோதுமை, பருப்பு,எண்ணெய் வித்துக்கள் போன்றவை அத்தியாவசியம் என்ற வகையில் இருந்து ஏற்றுமதி போன்ற பிரிவுக்கு மாற்றபடுகின்றது.இதன் மூலம் வேளாண் விளைபொருட்களின் ஏற்றுமதி அதிகரிக்கும். விவசாயிகளுக்கு கூடுதல் இலாபம் கிடைக்கும்.

இது போக விலை உத்திரவாதம், வேளாண் சேவைகள் திருத்தம் என கூட இரண்டு திருத்தங்களை செய்கின்றது

நெல்லும் கோதுமையும் அரசால் ஒரு குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்படும். இனி தனியார்கள் அடிமாட்டு விலைக்கு வாங்குவார்கள் என ஒலமிடுகிறது விவசாயத்திற்கு நேரிடையாக சம்மந்தப்படாத ஒரு கூட்டம்.

அரசோ அப்படி அல்ல எங்களின் கொள்முதல் எக்காலம் போல் தொடர்ந து நடக்கும் கொள்முதல் செய்யாமல் நாம் நியாவிலை கடைகளை நடத்தமுடியாது, எங்களை விட தனியார் அதிக விலை கொடுத்தால் அது உங்களுக்கு லாபம் அல்லவா என விவசாயிகளிடம் விளக்கம் அளிக்கின்றது

இதுவும் யோசிக்க வேண்டிய விஷயம்

ஒரு குறைந்தபட்ச விலை எப்பொழுதும் உண்டு, அரசு கொள்முதலும் உண்டு,அதற்கு மேல் நல்ல விலை இருந்தால் தாராளமாக விற்கலாம் என அரசு சொல்வதும் ஏற்புடையதே

இது எதை நோக்கி செல்கின்றது என்றால் ஏற்றுமதியினை நோக்கி செல்கின்றது

அதாவது இங்கு அத்தியாவசியம் என சொல்லி பல விவசாய பொருட்கள் தேக்கி வைக்கபடுகின்றன. அரிசி,கோதுமை, பருப்பு என ஏகப்பட்டது உண்டு

அவைகள் பலநேரம் பெருமளவு வீணாகவும் போவது உண்டு

மிகுந்த கட்டுபாட்டுக்கு இடையில் ஏற்றுமதி உண்டே தவிர இங்கு தேங்குவதும் நாசமாவதும் இன்றுவரை அதிகம்

இந்தியாவின் நிலப்பரப்பில் 50ல் ஒருபங்கு கூட இல்லாத வியட்நாமும், பர்மாவும், தாய்லாந்தும் உலகுக்கே அரிசி விற்கின்றது, பாகிஸ்தான் அரிசி கோதுமையினை பெருமளவு ஏற்றுமதி செய்கின்றது.

இந்தியாவில் இருந்து சிலவகை அரிசிகள் பெரும் கட்டுப்பாட்டுடன் ஏற்றுமதியாகும், இது மிக மிக சிறிய அளவே.

மீதெமல்லாம் உணவு பாதுகாப்பு என இங்கு வைக்கபடும், இப்பொழுது இந்தியாவில் உணவு பஞ்சம் இல்லை எனும் நிலையில் அரசு அதை விற்பனை செய்ய எண்ணுகின்றது

ஏற்றுமதிகள் பெருகினால் நமக்கு அன்னிய செலாவணி பெருகும் விவசாயிகளுக்கும் நல்ல லாபம் வரும் என்பது மத்திய அரசின் கணக்கு

இப்பொழுது வெங்காயம் ஏற்றுதியாகும் ஆனால் ஒரு கட்டத்தில் நாட்டில் தட்டுப்பாடு என்றால் ஏற்றுமதிக்கு தடைவிதிக்கின்றோம் அல்லவா, அப்படி உணவு பொருள் தட்டுப்பாடு வந்தால் அதையும் தடை செய்வோம் என்கின்றது அரசு

இது நியாயமான விளக்கமாகவே நமக்கு படுகின்றது

விவசாயத்தில் வாழை ஓரளவு லாபம், அதுவும் எப்பொழுது லாபமென்றால் ஏற்றுமதி சரியாக இருக்கும் காலங்களில் லாபம், ஏற்றுமதி இல்லையென்றால் அதுவுமில்லை

விவசாயி செய்யும் செலவுக்கு ஒரு வாழைதார் 1000 ரூபாய்க்கு சென்றால்தான் கட்டுபடியாகும், அந்த விற்பனை விலை இந்தியாவில் சாத்தியமில்லை, ஏற்றுமதி ஒன்றேதான் வழி

கவனியுங்கள் இந்தியாவில் திடீரென தக்காளி தெருவெல்லாம் கிடக்கும், காய்கறி கேட்பாரற்று கிடக்கும், விலையில்லா நிலையில் விவசாயி வேதனையில் அழுவான்.அதற்கு ஒரு வழி சொல்ல எவருமில்லை.

இதையே ஏற்றுமதி என சொல்லி பாருங்கள் அவற்றிற்கு நிச்சயம் நல்ல விலை கிடைக்கும்.இதனால் விவசாயி நஷ்டபட மாட்டான்

தேவைக்கு அதிகாக இருப்பதை விற்பது ஒன்றும் தவறல்ல, இதை விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும் ஆனால் அரசியல்வாதிகள் விடமாட்டார்கள்.

மாணவர்கள் உட்பட எல்லோரையும் பயமுறுத்தியே அரசியல் செய்யும் கூட்டம் இப்பொழுது விவசாயிகளை தூண்டிவிட கிளம்பிவிட்டது

சரி இதுகாலம் இவர்கள் விவசாயிக்கு என்ன செய்தார்கள் என்றால் சொல்ல தெரியாது.

ஏன் விவசாயிகள் திருத்த சட்டத்துக்கு இவ்வளவு எதிர்ப்பு? விவசாயிகள் மேல் அக்கறையா இல்லை, சுத்தமாக இல்லை

இது விவசாயிகளை சுரண்டும் தனியார் சந்தைகள் உட்பட இரக்கமில்லா வியாபார கூட்டத்துக்கு பெரும் அடியாக அமையும்

ஆம், இங்கு உழவர் சந்தையெல்லாம் மாடியில் காய்கறி வளர்க்கும் வீட்டுகார விவசாயிக்கானது, சுமார் 50 கிலோ வரைதான் அவனால் சந்தையில் விற்க முடியும்

அதுவும் அவன் சந்தையில் அமர்ந்து வியாபாராம் பார்பானா? அல்லது விவசாயம் செய்வானா?.

ஆயிரம் கிலோ, இரண்டாயிரம் கிலோ என உற்பத்தி செய்யும் விவசாயி காய்கறிகளையோ இல்லை தானியங்களையோ எங்கு விற்பான்?

அவன் சந்தைக்கே செல்வான், அங்குதான் புரோக்கர் உலகம் ஆரம்பிக்கும், வியாபாரிகளோடு கை கோர்த்து கொண்டு அவர்கள் விவசாயிகளை சுரண்டுவதுதான் உலகின் மிகபெரிய சுரண்டல்

ஆம், உதாரணத்துக்கு ஒரு கத்தரிக்காய் மூட்டையினை ஆயிரம் ரூபாய்க்கு விற்று கொடுத்தால் அவன் புரோக்கர் கமிஷன் 200 ரூபாய் (வியாபாரியிடம் வாங்குவது தனி கணக்கு)

இது போக வாடகை, சந்தை கமிஷன் என உறிஞ்சபட்டு விவசாயிக்கு வருவது வெறும் 400 ரூபாய்தான்

இவ்வளவுக்கும் அந்த மூட்டை 3 ஆயிரத்துக்கு விற்றால்தான் கட்டுபடியாகும், நிச்சயம் அந்த மூட்டை 3 ஆயிரம் ரூபாய்க்கு செல்லும்., ஆனால் புரோக்கரும் வியாபாரியும் செய்யும் தந்திரத்தால் விவசாயிகள் சுரண்டப்படுகிறார்கள்.

இதைத்தான் அரசுகள் தடுக்க வேண்டும்.

எதிர்கட்சிகள் விவசாயிகளின் கடன் தள்ளுபடி என சொல்லவருமே தவிர ஒருகாலமும் இந்த தனியார் கொள்ளைக்கும், விவசாயி சுரண்டலுக்கும் முடிவு சொல்லாது.

இங்கு விவசாய மானியமும், கடன் தள்ளுபடியும் இந்த வியாபார புரோக்கர் கூட்டத்துக்குத்தான் லாபமே தவிர, விவசாயிக்கு மிஞ்சுவது மண்ணே

முதல் முறையாக மோடி அரசு விவசாயிகளின் விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்கவும், கிடைக்கும் நல்லவிலை இந்த இடைதரகர்களின் இம்சைகள் இன்றி விவசாயிகளின் கையில் கிடைக்கவும், அதனால் ஏற்றுமதி பெருகி நாட்டுக்கும் வருமானம் வரவும் சில நல்ல நடவடிக்கைகளை எடுக்கின்றது

அதற்குத்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் சந்திக்கும் இன்னல்கள் ஏராளம். பெருகிவிட்ட விலைவாசி, வேலைக்கு ஆட்கள் கிடைக்காத நிலையில் வேலையாட்களின் மிகபெரிய சம்பளம் என அவனின் போராட்டம் பெரிது

இதிலும் வறட்சி, வெள்ளம், காற்று, மின்சாரம், பருவகால நோய் என எல்லாவற்றையும் தாண்டித்தான் அவன் விளையவைக்க முடிகின்றது

ஒரு கிலோ அரிசி 300 ரூபாய்க்கு விற்றால்தான் அவன் வாழமுடியும், ஒரு கிலோ பருப்பு 500 ரூபாய்க்கு விற்றால்தான் அவன் தொடர்ந்து நிற்க முடியும்

அதை இங்கு செய்தால் ஒருவனுக்கும் உணவு கிடைக்காது, அப்படி செய்யாமல் விவசாயி வாழவும் முடியாது.

இதனால் இங்கு உணவுபொருள் எல்லோருக்கும் கட்டுபடியாகும் விலையில் வழங்கவும், அதே நேரம் விவசாயியும் வாழவும் பெரும் கட்டுபாடற்ற ஏற்றுமதி ஒன்றே வழி

இந்திய அரசு அந்த நோக்கில்தான் சட்டத்தை திருத்தியிருக்கின்றதுஇது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விவசாயி அழியபோகின்றான் என்று சிலர் முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள்.

விவசாயிகளை ஏற்கனவே அழித்துவிட்டார்கள். அவன் கொஞ்சம் உயிரோடு முணங்குகின்றான், அவனை உயிர்பிக்க நடவடிக்கை எடுக்கின்றது அரசு

இல்லை அவன் அப்படியே கிடக்க வேண்டும், அவ்வப்பொழுது அவன் வாயில் பால் ஊற்றி சாகாமலே வைத்து அரசியல் செய்வோம் என கிளம்பியிருக்கின்றன எதிர்கட்சிகள். கொடுமை இது பெருங்கொடுமை.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version