May 14, 2021, 3:13 am Friday
More

  விவசாயி, ஏஜெண்டு, கமிசன், மண்டி, வியாபாரம்… அட இதப் படிங்க… தெரியும்!

  இந்த காய்கறிகள் எல்லாம் ஆலங்குளம் பகுதிகள் முதல் களக்காடு வரையிலான விவசாயிகள் தாங்கள் விளைய வைத்த காய் கறிகள்…

  tenkasi-market
  tenkasi-market

  அதிகாலை மூணு மணிக்கு தென்காசி ஆத்து பாலத்தில நின்னீங்கன்னா காலைல ஏழு மணி வரைக்கும் ஒரே லாரியா போய்ட்டு இருக்கும்… கிட்ட தட்ட சின்னதும் பெருசுமா 300 லாரிக்கு மேல கேரளா போகும்…அதுல பெரும் பகுதி ஆலங்குளம் , பாவூர்ச்சத்திரம் சுரண்டை பகுதிகள் ல இருந்து மட்டும் தினமும் போகும்….

  எல்லாமே காய்கறி வண்டி தான்…ஆலங்குளம் பாவூர் சத்திரம் மார்கெட்ல இருந்து மட்டும் இவ்ளோ வண்டிகள் ல காய்கறிங்க கேரளா போகுது…

  இந்த காய்கறிகள் எல்லாம் ஆலங்குளம் பகுதிகள் முதல் களக்காடு வரையிலான விவசாயிகள் தாங்கள் விளைய வைத்த காய் கறிகள்…

  ஒரு உதாரணத்துக்கு களக்காடு ல ஒரு பத்து விவசாயிகளோட தோட்டங்களில் எல்லாம் சேர்த்து அங்க ஒரு லோடு காய்கறி உற்பத்தி ஆயிருக்கு னா அங்க உள்ளூர் ல லாரி வச்சிருக்குற ஒரு வியாபாரி அந்த விவசாயிகள் கிட்ட மொத்தமா வாங்குவார்(ஆனால் விலையை தீர்மானிப்பது ஏலம் தான்)….வயல் லேயே பொருளை வாங்கினாலும் காசு உடனே குடுக்க மாட்டார்…வித்த பின்னாடி தான் கொடுப்பார்..அதாவது முதல் போடாத முதலாளி…அங்க அவருக்கு ஒரு லாபம் வைப்பார்…

  அப்புறம் அவரு அங்க இருந்து ஆலங்குளம் மார்க்கெட்டுக்கு கொண்டு வருவார்…மார்க்கெட் ல ஒரே பொருள் அதிகமான அளவில் வருகை இருந்தால் நிச்சயமாக விலை வீழ்ச்சி அடையும்…அப்போது ஏலம் விடப்படும்…இந்த ஏல கமிஷன் மண்டிக்கு ஒரு லாபம்…

  ஏலம் முறை ல வித்த காய்கறிக்கு கமிஷன் மண்டிக்கு ஒரு கமிஷன் , கொண்டு வந்த வியாபரிக்கு ஒரு லாபம் , வண்டி வாடகை போக வியாபரிக்கு போய் சேருவது மிக மிக சொற்ப தொகை தான்…இதோட அந்த விவசாயியோட ஸீன் முடிஞ்சு போகுதுங்க…

  ஆனா இனிமே தான் வியாபாரியோட ஸீன் ஆரம்பமாகுது…. பெரிய வியாபாரிகள் இப்படி மார்க்கெட்டில் ஏலம் விடுற காய்கறிகளை எல்லாம் மொத்தமா ஏலம் எடுத்து ஸ்டாக் பண்ணி வச்சி கிட்டு தமிழகத்தின் பிற மார்க்கெட் களில் அந்தந்த பொருள்கள் என்ன விலைக்கு போகுது னு விசாரிப்பங்க…

  உதாரணத்துக்கு இங்க கிலோ 3 ரூபாய்க்கு தக்காளி விக்கிற அதே நேரம் விழுப்புரம் மார்க்கெட் ல 13 ரூபாய்க்கு போகும்…அந்த மாதிரி விசாரிச்சு எங்க மூணு மடங்கு நாலு மடங்கு லாபம் கிடைக்குமோ அங்க அனுப்புவாங்க… எல்லா பக்கமும் சமமா தான் விலை இருக்குன்னா மொத்தமா கேரளா அனுப்புவாங்க…அதாவது இங்க 3 ரூபாய்க்கு வாங்குற தக்காளி கேரளா மார்க்கெட் போகும் போது 15 ரூபாய்க்கு போகும்…அங்க உள்ள வாடிக்கையாளர்களிடம் அது போகும் போது 20 ரூபாய்க்கு போகும்…

  அதாவது கேரளாவில் கிலோ 20 க்கு விற்ற ஒரு கிலோ தக்காளி ல இருந்து களக்காடு ல (உதாரணம் தோராயமாக) கஷ்ட பட்டு விவசாயம் செஞ்சு விளைய வச்ச ஒரு விவசாயிக்கு கிடைப்பது 3 ரூபாயில ஏலக்கமிஷண் வண்டி வாடகை புரோக்கர் கமிஷன் எல்லாம் போக 2 ரூபாய்….மீதம் 18 ரூபாயை சாப்பிடுவது எல்லாம் இடையில் உள்ள புரோக்கர்களும் விவசாயிகளும்….

  ஆலங்குளம் பாவூர்ச்சத்திரம் சுரண்டை பகுதிகள் ல மெயின் ரோட்டை சுற்றி வாரா வாரம் ஒரு இடம் வாங்கி பத்திரம் முடிப்பது எல்லாம் யாருன்னு நெனச்சீங்க…எல்லாம் கேரளாவுக்கு காய்கறி அனுப்புற வியாபாரிகள் தான்…ஆனா விவசாயியோ இத்தனை பேரையும் வாழ வச்சு தன்னோட மகளுக்கு கல்யாணம் பண்ணனும் னா கூட தன்னோட விளை நிலங்களில் ஒரு பகுதியை விற்று தான் அதை நடத்த வேண்டிய நிலை…

  இப்படி வியாபாரம் பண்ணி இன்னைக்கு பெரும் கோடீஸ்வரர்களா ஆன வியாபாரிகள் யாருக்காச்சும் விவசாயம் பண்ண தெரியுமா னு கேளுங்க…ஊஹூம்… ஒருதருக்கும் விவசாயம் தெரியாது…தெரிஞ்சாலும் செய்ய மாட்டாங்க…அவங்களை பொறுத்த வரை விவசாயி என்பவன் லாயக்கற்றவன்…ரெண்டு மூட்ட சுரைக்காய வச்சிக்கிட்டு இன்னைக்கு விலை போகுமோ போகாதோ ன்னு ஏல கடை முன்னாடி அப்பாவியா உக்காந்திருக்குற அடிமைகள்…

  ஆனா நம்ம மோடியோட அரசு கொண்டு வந்த வேளாண் சட்டப்படி , கேரளாவில் இருந்து ஒரு வியாபாரி இங்க வந்து நேரடியா ஒரு விவசாயிக்கிட்ட ஒப்பந்தம் போட்டுக்கலாம்…கேரளாவில் இருந்து தான் வந்து போடணும் னு இல்ல…இங்க உள்ள ஆலங்குளம் பாவூர்ச்சத்திரம் பகுதிகள் ல இருந்தும் கூட வியாபாரிகள் விவசாயிகள் கிட்ட நேரடியா ஒப்பந்தம் பண்ணிக்கலாம்…இந்தியாவில் எங்கிருந்து வேண்டுமானாலும் இங்கு வந்து ஒப்பந்தம் போட்டுக்கலாம்…

  அப்படி ஒப்பந்தம் போடும் போது விற்கும் விலையை விவசாயியே தீர்மானிக்கலாம்… அது மட்டும் இல்லாம விலை வீழ்ச்சி அடையும் போது விலை உயரும் வரை அந்த விவசாயி தன்னோட விளை பொருளை கிட்டங்கிகளில் சேமித்து கொள்ளலாம்….

  இந்த நடைமுறை இங்கு மட்டும் அல்ல…அமெரிக்கா இங்கிலாந்து சுவிச்சர்லாந்து போன்ற நன்கு வளர்ந்த நாடுகளில் கூட இதே நடைமுறை தான் உள்ளது…அதானால் தான் அங்கு உள்ள விவசாயிகள் எல்லாம் பெரும் செல்வந்தராக உள்ளனர்…இந்த நடைமுறை இவ்வளவு காலமும் இல்லாமல் தான் இங்கு உள்ள விவசாயிகள் இன்னும் கோமணத்துடன் உள்ளனர்…

  சரி இதை ஏன் விவசாயிகள் எதிர்க்கின்றனர்….

  இங்கு உள்ள சில இஸ்லாமிய மதவாதிகளுக்கும் கிறிஸ்தவ மதவாதி களுக்கும் ஒரே பெரிய சவால் இங்கு மோடி ஆளக்கூடாது என்பது தான்…பாஜக வை வீழ்த்தி விட வேண்டும் என்பது தான் அவர்களுக்கு சர்வதேச நாடுகளில் உள்ள இந்திய நலனை விரும்பாத அமைப்புகள் கொடுத்திருக்கும் அசைன்மெண்ட் பாஜக வை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும்…

  ஏனெனில் உலக அளவில் மிகப்பெரிய சந்தை இந்தியாவும் சைனாவும்…இங்கு தான் அதிக நுகர்வோர் உள்ளனர்…இதில் சைனா உற்பத்தியில் தன்னிறைவை கொண்டுள்ளது…பிற நாட்டு பொருள்களை அங்கு வணிகம் செய்ய இயலுவதில்லை..

  சைனாவை அடுத்த மிகப்பெரிய சந்தை இந்தியா.. இத்தனை ஆண்டுகளாக தன்னிறைவை அடையாமல் இருந்த இந்தியா இப்போது தான் மெல்ல மெல்ல நுகர்வோர்களுக்கான பொருள் உற்பத்தியில் தன்னிறைவை அடைந்து வருகிறது…அதற்க்கு காரணமாக அமைந்தது பிரதமர் மோடி அவர்களின் மேக் இன் இந்தியா திட்டம்…உலக கார்ப்பரேட் களை இந்தியாவில் இருந்து அகற்ற உள்ளூர் கார்ப்பரேட் களுக்கு சில சலுகைகள் அளித்து ஊக்குவிக்கிறார்…அதன் காரணமாக தான் இந்துஸ்தான் யூனி லிவர் பொருள்களுக்கு போட்டியாக பதஞ்சலி பொருள்கள், vodafone , Airtel க்கு போட்டியாக jio போன்றவை வளர்த்து விடப்பட்டது…

  இந்நிலை தொடர்ந்தால் இந்திய சந்தை இந்தியர்களுக்கே என்ற நிலை வந்து விடும்…பிறகு சர்வதேச கார்ப்பரேட்டுகள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டிய சூழல் வந்து விடும் என்பதால் தான் , சர்வதேச கார்ப்பரேட்கள் பிடியில் சிக்கியிருக்கும் இந்தியாவை மீட்க துடிக்கும் பாஜக வை அகற்ற துடிக்கிறது…அதற்காக பல கோடிக்கணக்கான ரூபாய்களை முதலீடு செய்கிறது…

  சரி இதை எங்கு முதலீடு செய்வது….

  இங்கு இருக்கும் இஸ்லாமிய கிறிஸ்தவ மதவாதிகள் , இங்கு இருந்து கொண்டே பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிடும் தீவிரவாதிகள் , இந்திய இறையாண்மையை விரும்பாத துரோகிகள் ,

  இவர்களை கண்டறிந்து கோடிக்கணக்கான அளவு பணத்தை கொடுத்து மோடி அரசு என்ன சீர்திருத்த சட்டங்களை கொண்டு வந்தாலும் அதன் சாராம்சத்தைக்கூட மக்களிடம் கொண்டு சேர்க்க விடாமல் இங்கிருக்கும் உள்ளூர் அரசியல் காரணமாக பாஜக வை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் சிறிய அளவில் முன்னெடுத்து செல்லும் போராட்டங்களை இவர்கள் உதவி செய்வது போல் செய்து பெரிதாக்கி விட்டு சர்வதேச அளவில் அதை ஒரு பேசு பொருளாக்கி விடுகின்றனர்…

  எப்படி CAA , NRC போன்ற சட்டங்களின் சாராம்சம் என்ன என்றே தெரியாமலே அதை எதிர்த்தார்களோ அது போல வேளாண் சட்டத்தை எதிர்க்கும் பெரும்பாலானோர்க்கு அந்த சட்டத்தின் சாராம்சமே தெரியாது என்பதே உண்மை…

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,242FansLike
  0FollowersFollow
  19FollowersFollow
  74FollowersFollow
  1,185FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »