spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைவிலைபோன அடிமைகள்! தராதரமற்ற தரகர்கள்!

விலைபோன அடிமைகள்! தராதரமற்ற தரகர்கள்!

- Advertisement -
kalaiyarasi sundaravalli

கிறிஸ்தவமும்
அதன் கோரத் தாண்டவமும்

பாரத தேசம் உலகிற்கே வழிகாட்டியாக இருந்த நாடு, வருங்காலத்திலும் அப்படிதான் என்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்கூடாக  தெரிகிறது. இந்தக் காலக்கட்டத்தில் நாம் வாழ்கிறோம் என்பது பெருமைக்குரியது..

மேற்சொன்ன வாக்கியம் உண்மையாவதற்கு முதலும் முக்கியமுமான  காரணம் மதம் இல்லாத பாரதம். ஆம் பாரதம் சனாதன தர்மம் என்ற நெறிமுறையை பின்பற்றி தான் தன் மக்களை வழி நடத்தி வந்தது. 

சனாதன தர்மம் (தற்போது ஹிந்து தர்மம் என்று அழைக்கப் படுகிறது ) வாழ்க்கை முறை என்பதால் அது அரவணைப்பையும், போதனைகளையும், வாழ்க்கை சிக்கலை தீர்க்கும் முறைகளையுமே பறை சாற்றியதால் அது மதமாக மதம் பிடித்து அலையாமல் மக்களை மனிதர்களாக மாற்றும் வித்தையை மட்டும் கையாண்டது. அதனாலதான் கல்வி என்று  என்று வரும்போது கூட அது (man making) மனிதர்களை உருவாக்குவதாக  இருக்க வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்.

ஹிந்து தர்மம் நாடு பிடிக்கும் எண்ணம் இல்லாதது, ஆள் பிடிக்கும் கட்டுமானத்தை உள்ளடக்காதது. இதை உண்மை என்று நாம் சொல்வதை விட இந்த தேசத்திற்கு அடைக்கலம் வந்த யூதர்களும், பார்சிகளும் சொல்கிறார்கள் என்பதுதான் இதற்கான அத்தாட்சியாக அமைகிறது. கொட்டிகிடக்கும் சமய நூல்களும், உபநிடதங்களும் ஏதோ ஒரு விதத்தில் இதை பறைசாற்றி கொண்டே இருந்தன. 

திருவள்ளுவர் என்ற சனாதன ரிஷி தனது குறள் மூலம் பண்பை வளர்க்கிறார், பாவ புண்ணியங்களை விளக்குகிறார், சிறியோர் யார் பெரியோர் யார் என்கிறார்.. கல்வியின் பயனை விளக்குகிறார். மழையின் பெருமையை உணர்த்துகிறார்… இப்படி முழுக்க முழுக்க வாழ்வியல் சம்பந்தப்பட்டே இருக்கும் அந்த பொது மறையில் மதம் வளர்க்கும் சமாச்சாரமே இல்லை

உதாரணமாக …
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு
(அதிகாரம்:அடக்கமுடைமை குறள் எண்:129)

குறள் 163: அதிகாரம் அழுக்காறாமை

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.

பொருள் : பிறர் உயர்வு கண்டு மகிழாமல் பொறாமைப்படுபவன், அறத்தால் வரும் புண்ணியத்தை வேண்டா என மறுப்பவன் ஆவான்.

அது போல் தான் வேதங்களும் …
அசதோமா சத்கமைய
தமசோமா ஜ்யோதிர்கமைய
ம்ருத்யோர்மா அம்ருதம்கமைய
ஒம் ஷாந்தி ஷாந்தி ஷாந்திஹி! என்கிறது

பொருள்:
“பொய்யான இந்த உலகத்தனிலிருந்து மெய்யான ‘என்’னுள் என்னை அழைத்து செல்வாய்
மாயை என்ற இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு எம்மை வழி நடத்துவாய்
இறப்பு என்ற பயம் நீக்கி அழிவற்ற ஆன்ம ஞானம் உணரச்செய்வாய்
இறைவா என்று
நம்மை வழி நடத்துகிறது.

தாயுமானவ சுவாமிகளோ எல்லாரும் இன்புற்று இருப்பதை நினைப்பதுவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே …
என்று சர்வே ஜனஹா சுகினோ பவந்து என்ற வேத வரிகளை மொழிபெயர்த்தது போல் கூறுகிறார்.

ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு
(அதிகாரம்:புறங்கூறாமை குறள் எண்:190)  என்று தெற்கே உள்ள ஞானி சொல்வதை படிக்காமலேயே அதே கருத்தை கூறுகிறார் அன்னை சாரதா தேவி

ஆம் . Before finding Fault with others Rather find your own faults   என்கிறார் அன்னை. இப்படி சொல்லி கொண்டே போகலாம்…

இந்த ஹிந்து தர்மம் அந்நிய மதங்கள் ஊடுருவும் போது… அவர்களால் ஹிந்து மதம் என்றும் இந்த வாழ்வியல் வசந்தத்தில் இருப்போர் ஹிந்துக்கள் என்றும்… தன் மதவெறி பிடித்த சமூகத்திற்கு அடையாள படுத்துகிறது. 

அத்தோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லை.. அதற்கு அடுத்தப்படியாக  இந்த விஷ ஜந்துக்கள் விஷத்தை கக்குகின்றன. ஆம் ஆள் பிடிக்கும் கட்டமைப்பை ஏற்படுத்துகின்றன. அதற்கான பதவிகளும் அறிவிக்க படுகிறது ..

அவர்கள் பிடித்த ஆட்கள் ஏதாவது ஒருவழியில் வசதியாக இருக்க தன் அசுர பலத்தை உபயோகப்படுத்துகிறார்கள். பின்பு அவர்களிடம் தசமபாகம் போன்ற பங்கினை பெற்று மத அமைப்புகள் வசதி வாய்ப்போடு தன் மதப் பெருக்கலை செய்ய ஏற்பாடுகள் செய்கிறது. அரசாட்சி அவர்கள் கையில் இருந்ததாலும் பெரும் நிலப்பகுதிகள் ஆக்கிரமிப்பாலும். ஆக்கிரமிப்பு இடங்களில் தொண்டு சார்ந்த வேலைகளை நிறுவுவதாலும் .. கிருத்துவ மதம் மிகப்பெரும் மதம் மாற்றும் வேலையில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி கொண்டே இருக்கிறது.

ஆங்கிலத்தில் loosely linked என்று சொல்லும் ஆழ் பற்று இல்லா சனாதன தர்மிகள், சாத்வீகிகள் , எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக் கொள்வான் என்று சோம்பேறியாய் இருப்போர் என்று ஹிந்து தர்மிகள் அதிகம் இருப்பதாலும், இடையில் வந்த சாதி , அதன் கோரத்தாண்டவம் .. தீண்டாமை தீ போன்றவற்றாலும் இந்த் நாடு பிடிக்கும் கயவர்கள் மிக சந்தோஷத்துடன் தங்கள் வருவாய் பெருக்கதொடு தங்கள் ஏசு விற்பனையை பெருக்கி கொண்டே போகிறார்கள். சைக்கிளில் சென்று மத போதகம் செய்த தினகரன், லாசரஸ் இன்று பணக்குவியலின் உச்சியில் நின்று கொண்டு ஹிந்து கோவில்களையும் சாத்தானின் அரண் என்று பகிரங்கமாக கூறும் நிலையிலும்.. இயற்க்கை வளங்களை  கபளீகரம் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.    

ஹிந்து தர்மம் என்ற வீட்டின் வெளியே இருந்து கன்னம் வைக்கும் கயவர்களுக்கு சுவரின் அஸ்திவாரமும் உறுதியும் அதிகமாக இருப்பதால் .. தங்கள் வியாபாரம் சிறக்க வீட்டின் உள்ளேயே கன்னம் இடும் வேலையை சில நாத்திகர்களிடமும், மொழி பிரிவினை வாதிகள் இடமும் கொடுத்து உள்ளனர். இதில் பல லாபங்களை ஏற்படுத்த எஸ்ரா சற்குணம் என்ற அரசியல் தரகர்கள் மிக சிறந்த ஓட்டரசிய்ல் திணிப்பை ஏற்படுத்து கின்றனர்.  
.
சமீபத்தில் இவர்கள் புது யுக்தியாக கலையரசி என்ற ஞானஸ்தானம் பெற்ற விபூதி பூசிய சைவப் பாட்டி  வேஷதாரியை இறக்கி உள்ளனர். சிவனை தான் வணங்குகிறாய் என்றால் நீ முழங்க வேண்டியது மகா சிவராத்திரி அன்று.. சைவ மேடைகளில்… ஆனால் கிருத்துவ மேடையில் நீ முழங்க வேண்டிய அவசியம்  என்ன?..கோவிலை இடிப்பேன் என்று சொல்லும் திருமாவளவன் உனக்கு நெருக்கம் ஆனால் ஒரு சைவ அடியாரும் உனக்கு ஞானியாக பட வில்லை. ஒரு பேட்டி கொடுக்கக் கூட உனக்கு சுந்தரவள்ளி போன்ற தரங்கெட்டு பேசும் நாத்திக பெண்மணி துணை ஏன்?.

ஹிந்து என்று சொன்னால் உடம்பெல்லாம் எரிகிறது என்கிற உனக்கு நீ வணங்குவதாக சொல்லும் சிவனை (கடவுளை ) இல்லை என்று சொல்லும் சுந்தரவள்ளிகள் மணப்பதேன். ஹிந்து கடவுள்கள் சிவன் உட்பட சாத்தான்கள் என்று சொல்லும் கிருத்துவ உறவு உனக்கு உடன் பிறவா சகோதர உணர்வு என்று பிரகடனப் படுத்த கொடுக்கப் பட்ட கூலி எவ்வளவு?

ஹிந்து என்றால் திருடன் என்றான் தகப்பன்..விபூதியை அழிப்பேன் என்றான் தனையன் அவனை பார்க்கும் போது உனக்கு உடல் குளிர்கிறது என்றால் நீ எதற்காக ஹிந்து விரோதியாக இருக்கிறாய் என்று கூடவா புரியாத அளவு ஹிந்து சமுதாயம் உள்ளது !

பூர்ணமத:பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே |
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே|
ஓம் சாந்தி:சாந்தி: சாந்தி ||    

என்ற உயரிய கருத்துடை சனாதன தர்மத்தை ஆனானப்பட்ட மெக்காலே படையாலேயே கூட பெரிதாக அசைக்க முடிய வில்லை. இனியும் கிருத்துவம் தன் அகோர ஆட்பிடிக்கும் பயங்கரவாதத்தை நிறுத்திக் கொள்ளாவிடில், மிகச் சிறிதாக ஏற்படும் எதிர்ப்புச் சலனம் மிகப் பெரிதாகி பெரு நெருப்பாக மாறி அழிக்கவும் கூடும்!

1 COMMENT

  1. சந்தானம் என்பது உங்களுக்கு இனிப்பாக இருக்கிறது.. இல்லையா..?? இந்தியாவில் மதம் இல்லாத பாரதமா? வேடிக்கையாக இருக்கிறது உங்களின் கூற்று.

    சனாதனம் உங்களுக்கு வாழ்க்கை முறையா?? நீ கீழே பிறந்தவன், நீ வயிற்றில் பிறந்தவன், நீ தலையில் பிறந்தவன் என்ற ஒருவனின் பிறப்பையே பிரித்து பார்க்கும் மதம்தான் ஒரு மனிதனின் வாழ்க்கைமுறை என்று நீங்கள் நினைத்தால், தவறு!

    திருவள்ளுவரை திருவள்ளுவர் என்று மட்டுமே கூறுங்கள். தயவு செய்து அவரையும் உங்களின் சனாதன ரிஷியாக மாற்றி விடாதீர்கள். அவர் எப்போதும் தமிழின் தலைவனே. ஹிந்து தர்மத்திற்கும் அவருக்கும் எந்த ஒரு உறவும் கிடையாது. திருக்குறள் ஒரு உலக பொதுமறை அது ஹிந்து மதத்திற்கு என்று கூறி கலங்க படுத்த வேண்டாம்.

    அது என்ன கலையரசி பாட்டி என்பவரை வேஷதாரி என்று கூறுகிறீர்கள்! ஏன் ஒருவர் ஹிந்து மதத்தை பத்தி பேசினால் மட்டும் அவர்களை வேஷதாரிகள் என்றும், கிறிஸ்த்துவ மிஷனரிகள் என்றும் முத்திரை குத்துகிறீர்கள். அவர்கள் ஹிந்து மததில் இருக்கிற குறைகளை கூறும்போது அந்த குறைகளை மாற்ற முயற்சி செய்யுங்கள் அதை விடுத்து நீ யார் என்னை கேள்வி கேட்பது? நீ எப்படி எங்களை கேள்வி கேட்கலாம்? உனக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது? என்று கேள்வி கேட்பது அடி முட்டாள் தனம் மட்டும் அல்ல அகந்தையும் கூட.

    இப்படி அகந்தையுடன் மற்றவர்களை கேள்வி கேட்க விடாமல், மற்றவர்களை வாழ விடாமல் இருந்தால், நீங்களும் வாழ மாட்டீர்கள் உங்களுடன் இருப்பவரையும் வாழ விட மாடீர்கள். கேள்வி கேட்கும் உரிமை அனைவருக்கும் உள்ளது. முடிந்தால் பதில் சொல்லுங்கள் இல்லையேல் பதில் சொல்லுபவரை அனுப்புங்கள்.

    அதென்ன தரங்கெட்ட நாத்திக பெண். பல ஹிந்து பெண் தலைவர்கள் தரங்கெட்ட வேலையை செய்து இருக்கிறார்கள் இன்னும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களையும் இப்படித்தான் சொல்லுவீர்களா? (ஹிந்து மகாசபை தலைவர் பூஜா ஷகுன் பாண்டே வை இப்படித்தான் கூறுவீர்களா?, காந்தியின் நினைவு தினம் அன்று அவர் காந்தியின் படத்தை சுட்டு சந்தோச பட்டார் நீங்கள் அதற்க்கு கண்டனம் தெரிவித்தீர்களா??, இல்லை அவரையும் இப்படித்தான் தரங்கெட்ட பெண் என்று கூற உங்களுக்கு தைரியம் இருக்கா ?) எப்ப பார்த்தாலும் ஹிந்து தர்மம்.. ஹிந்து தர்மம்.. என்று கூறுகிறீர்கள் எங்கே இருக்கிறது அங்கே தர்மம். கூறுங்கள். வெறும் எழுத்தளவில் மட்டும் அல்ல அதை மக்களின் மனதில் அல்லவா விதைக்க வேண்டும். மனதில் விதைப்பது எல்லாம் விஷம். அவன் இந்த ஜாதி, இவன் இந்த ஜாதி .. பெண் ஆணுக்கு கீழ் .. அந்த கீழ்ஜாதி ஆண் மேல் ஜாதி பெண்ணுக்கு கீழ், அந்த மேல் ஜாதி பெண் அந்த உயர் ஜாதி ஆணுக்கு கீழ் … இப்படியே அல்லவா போகிறது ஹிந்து தர்மம். இதில் தர்மம் என்று கூற என்ன உள்ளது?

    தமிழ்நாடு மதம் சார்ந்து என்றுமே அதிகம் கவலை கொண்டது இல்லை. இங்கே இருப்பவர்கள் அங்கொன்றும் இங்கொன்றும் சிறியதாகவும் பெரியதாகவும் ஜாதி சண்டை போட்டு கொண்டு இருக்கிறார்கள் ஆனால் ஒருநாளும் வாட மாநிலங்களை போல மனித தன்மை இன்றி இருந்தது கிடையாது. அதுக்கு கரணம் இங்கே கல்வி அதிகம் கிடைத்ததும் நல்ல அரசியல் தலைவர்கள் கிடைத்ததும் தான். எங்களுக்கு ஒரு நாளும் ஹிந்து/கிறிஸ்த்துவம் / முஸ்லீம் மதம் சார்ந்த தலைவர்கள் வேண்டாம். வேண்டவே வேண்டாம். இது திராவிட நாடு. இங்கே தனிமனித வாழ்க்கை / தனிமனித குலதெய்வ வழிபாடு மட்டும் தானே ஒழிய எல்லோருக்கும் ஒரு தெய்வம் எல்லோரும் ஹிந்துக்கள் என்று என்றுமே தேவை இல்லை. நாங்கள் ஹிந்துக்களும் அல்ல.

    நன்றிகள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe