ஏப்ரல் 20, 2021, 2:49 காலை செவ்வாய்க்கிழமை
More

  கெரகம் புடிச்சவனுக… ஒரு பொங்கலக்கூட நிம்மதியா கொண்டாட வுடமாட்றானுங்க!

  கெரகம் புடிச்சவனுக ஒரு பொங்கலக்கூட நிம்மதியா கொண்டாட வுடமாட்றானுங்க

  goundamani-senthil
  goundamani-senthil

  அண்ணே, சமத்துவப் பொங்கல் கொண்டாட எல்லா ஏற்பாடுகளும் ரெடி, வாங்கண்ணே ஓரெட்டு போயிட்டு வந்துடலாம்.

  ஆமா, அதென்ன சமத்துவ பொங்கல்? பொங்கப் பானையிலே
  போட்டி யும் ஈரலும் போட்டு பொங்கப் போறியா?

  திஸ் இஸ் டூ மச் ண்ணே, என்ன பேசுறீங்க?

  தெரிஞ்சு தான்டா பேசுறேன் பெருச்சாளி க்குப் பொறந்தவனே.

  பொங்கல் ன்னா என்ன?

  கெழக்காம சூரியனப் பாத்து அடுப்பு வச்சு
  அடுப்பு க்கு அரணா
  மூனு கரும்ப நிக்க வச்சு
  பானையிலே திருநீறு பூசி
  மஞ்சக்கெழங்க நூல்லகட்டி
  பானையோட கழுத்துல ஏத்தி
  பச்சரிசி வெல்லம்
  ஏலக்கா முந்திரி திராட்சை நெய்யி
  இதெல்லாம் சேத்து
  பொங்குறப்ப குலவை சத்தம் போட்டு
  பொங்கலோ பொங்கல் ன்னு குரல குடுத்து,
  மொத அகப்பைய சாமிக்கு படைக்கோனும்.

  அதுசரி டா, இதுதானே பொங்கல்?

  என்னண்ணே இவ்வளவு வெலாவாரியா தம்கட்டி சொல்றேன்
  நக்கல் பண்ணிகிட்டு?

  அதில்லடா அர மண்டையா, இப்போ, பாய்வீட்ல விஷேசம்ன்னா என்ன செய்வாங்க?

  அண்ணே, ரம்ஜானு பக்ரீத்து மிலாடி நபின்னு பிரியாணி செஞ்சு அசத்துவாங்கண்ணே.

  அதுசரி கிருஸ்துவங்க வீட்ல?

  அவங்களும் அப்பிடித்தான்ணே கிருஸ்துமஸ் கேக்கு ஈஸ்டருக்கு
  பாஸ்டரு பேஸ்ஸா டேஸ்ட்டா கேக்கும் பிரியாணி யும் செய்வாங்க
  நானும் சாப்ட்ருக்கேனே.

  அதுசரிடா சோத்துக்கு செத்தவனே, அவங்கள்லாம் எப்பவாவது
  சமத்துவ பிரியாணி சமத்துவ கேக் ன்னு செஞ்சு பார்த்திருக்கியா,
  இல்லே பொங்கலத்தான் இப்ப நீ சொன்னியே தம்கட்டி, அப்பிடி செய்வாங்களா? அவங்க அவங்களோட வழக்கப்படி என்ன செஞ்சாலும் நாம சாப்ட்டு நல்லா இருக்கு பாயம்மா அருமையா இருக்கு மேரியம்மா ன்னு மனசார பாராட்றோம்ல்லே, நீ பொங்கி படச்ச பொங்கல அவங்களுக்கு குடுத்தா அதேமாதிரி சாப்ட்டு சந்தோசப்படுவாங்களா?

  அது வந்து ண்ணே அவங்க வாங்கவே மாட்டாங்ங்ங்ககக,

  அப்புறம் என்னடா சமத்துவ பொங்கலு சவரப்பெட்டி செங்கலுன்னு? நாயே ஓடிப்போயிடு நின்னியின்னா அடிச்சே கொன்னுடுவேன், கெரகம் புடிச்சவனுக ஒரு பொங்கலக்கூட நிம்மதியா கொண்டாட வுடமாட்றானுங்கடா?

  • சமூகத் தளப் பகிர்வு

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,114FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »