May 11, 2021, 12:55 am Tuesday
More

  விவசாய(?) போராட்டம் திட்டமிட்ட சதி! பளிச்சென வெளிவந்த ரகசியம்!

  விவசாய (?) போராட்டம் திட்டமிட்ட சதி என எக்ஸ்போஸ் செய்த 'காலநிலை போராளி' கிரேட்டா துன்பர்குக்கு நன்றிகள்

  farmers-agitation
  farmers-agitation

  விவசாய (?) போராட்டம் திட்டமிட்ட சதி என எக்ஸ்போஸ் செய்த ‘காலநிலை போராளி’ கிரேட்டா துன்பர்குக்கு நன்றிகள் கோடி ! அசிங்கப்பட்ட சர்வதேச மாஃபீயா!

  பள்ளிக்கூடம் போய் படிக்காமல், பில் கேட்ஸ் / ஜார்ஜ் சோரோஸ் சோமாறிகளின் கைத்தடிகளாக செயல்படும் பலரில், ஸ்வீடனை சேர்ந்த இந்த ‘சிறுமி’ கிரேட்டாவும் ஒருத்தி.

  இவளது இந்த ஒரு ட்வீட்டால் – அவள் பகிர்ந்த ஆவணத்தால் – இந்த போராட்டம் முழுக்க இப்போது எக்ஸ்போஸ் ஆகியிருக்கிறது.

  இந்த ட்வீட்டை கிரேட்டா டிலீட் செய்திருந்தாலும், பலரும் ஸ்கிரீன்ஷாட் எடுத்துள்ளனர் – இது என் ஸ்கிரீன்ஷாட்.

  அந்த டாக்குமெண்ட்டையும் (https://tinyurl.com/26jy2ugg) அந்த ட்வீட்டை டிலீட் செய்தாகிவிட்டது (https://twitter.com/GretaThunberg/status/1356932781339791360) . என்றாலும், பலரும் அதை பிரதி எடுத்து வைத்துவிட்டனர். தேவைப்படுவோர் இங்கே https://tinyurl.com/qwcz1ycd காண்க.

  UPDATE: additional link
  https://archive.org/details/1.-global-farmers-strike-first-wave-schedule-links/mode/1up (Thanks Ganapathy Subramanian Ji)

  “அந்த ஆவணத்தில் அப்படி என்னதான் இருக்கிறது?” என்றால்…

  ஜனவரி 26இல் எப்படி கலவரம் செய்ய வேண்டும் என்பது முதல் ரிஹானா என்ன ட்வீட் செய்ய வேண்டும் என்பது பிப்ரவரியில் இந்தியாவின் தூதரகங்களை எப்படி முற்றுகையிடுவது, எப்படி ஹேஷ்டாக் போடுவது, யார் யாரை டேக் செய்வது (ஆம் ஆத்மி, காங், ஊடகம்), யாரை தொடர்பு கொள்வ்வது (இமெயில்) உள்ளிட்ட அத்தனை விவரங்களும் அதில் உள்ளன.

  இது திட்டமிட்ட சதி என்பதை இந்த ஆவணம் நிரூபிக்கிறது.

  காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தாததன் காரணம் இப்போது புரிகிறது. ஒருவர் உயிரிழந்திருந்தாலும் நாட்டை தீக்கிரையாக்கியிருப்பார்கள். மத்திய அரசுக்கு இந்த சதி விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும். அதனால் தான் இந்த மாதிரி காந்தீய நடவடிக்கை.

  இந்த ஆவணத்தை கூகுளில் பகிர்ந்திருப்பதால் (கூகுள் டாக்) இது பிரிவு 69ஏ படி குற்றம். கூகுளை அழைத்து விவரங்களை அரசு அதிகாரபூர்வமாக பெற முடியும், பெறும் (இன்று ட்விட்டருக்கு செம டோஸ் விட்டுள்ளது அரசு).

  இந்த கூகுள் டாக்கை அப்லோட் செய்தவர்கள் சில சர்வதேச ஊடக கைக்கூலிகள் என்பதும் தெரியவந்துள்ளது.

  இந்த விவகாரத்தில் அனேகமாக யோகேந்திர யாதவ் கதை முடியும் என தெரிகிறது.

  பிரதமர் இதுபற்றி எதுவும் பேசாவிட்டாலும், உள்துறை அமைச்சர், வெளியுறவு அமைச்சர், பாஜக தலைவர் என அனைவரும் கண்டித்துள்ளனர். பிரதமர் பின்னர் பேசுவார் – தோலுரிப்பார் எதிரிகளை.

  ஆளே கிடைக்கவில்லை என மியா கலிஃபா போன்ற நீலப்பட பெண்ணையெல்லாம் விட்டு ட்வீட் செய்ய வைத்திருப்பது கொடுமை.

  லதா மங்கேஷ்கர், டெண்டுல்கர், கோலி, பாலிவுட் நடிக நடிகைகள், சைனா நேவால் உள்ளிட்டோர் “இந்தியாவின் இறையாண்மையை காப்போம்” போன்ற ட்வீட்டுகள் தன்னிச்சையானவையா அல்லது யாரும் சொல்லி நடந்ததா தெரியாது. என்றாலும் நல்ல உத்தி / விஷயம்.

  மேலும் பல விவரங்கள் உள்ளன…

  • Selvam Nayagam
  IMG-20210204-WA0007
  IMG-20210204-WA0007
  IMG-20210204-WA0004
  IMG-20210204-WA0004
  IMG-20210204-WA0005
  IMG-20210204-WA0005
  IMG-20210204-WA0006
  IMG-20210204-WA0006
  IMG-20210204-WA0003
  IMG-20210204-WA0003

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,234FansLike
  0FollowersFollow
  19FollowersFollow
  74FollowersFollow
  1,178FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »