Home உரத்த சிந்தனை பார்ப்பான் அலகு குத்திப்பானா? பார்ப்பான் தீயில் இறங்குவானா?

பார்ப்பான் அலகு குத்திப்பானா? பார்ப்பான் தீயில் இறங்குவானா?

sripadam3
sripadam3

பார்ப்பான் அலகு குத்திப்பானா?

தோளில் காயம் ஏற்பட்டுத் தழும்பாகும்வரை சப்பரம் தூக்குவான்; பெருமாள் ஆஸ்தானம் ஏளும்வரை இடையில் ஆயக்கால் substitute போட்டுச் சப்பரச் சுமையைத் தள்ளி வைக்க முடியாது; இருதோள்களிலும் மாறி மாறிச் சுமக்க வேண்டும்.
இடைவழியில் இல்லங்கள் தோறும் நிற்க வேண்டும். எம்பெருமானுக்கான உபசாரங்கள் பூர்த்தி பெறும்வரை பொறுமை காக்க வேண்டும். பல அடியார்களுக்குத் தோள்புண் கழலைபோல் நிரந்தர அடையாளமாகி விடும்.

விண்ணகரங்களில் ஸ்ரீபாதம் தாங்கிகள் குழுவாகச் சேர்ந்து செய்திருக்கும் கைங்கர்யங்கள் பல. இவர்களுக்குக் கைங்கர்யம் ஸ்வரூபம்; விளம்பரத்துக்கானதன்று.

sripadam4

திருவல்லிக்கேணி விண்ணகரத்துக்கென்றே சுமார் 60 அடியார்கள்; மேலும் பலர் வெளியூர்களில்; சந்தர்பம் வாய்க்கும்போது கலந்து கொள்வர். ஆண்டின் 365 நாள்களில் 270 உத்ஸவங்கள் சிறிதும், பெரிதுமாக. பஞ்ச பர்வம், பத்தியுலா உள்ளிட்ட அனைத்திலும், ஏறத்தாழ ஆண்டு முழுவதும் ஸ்ரீபாதம் தாங்கிகள் கைங்கர்யம் செய்ய வேண்டும்.

மெய்வருந்தப் பணி செய்யும் அம்மெய்யடியார்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை மேலும் விவரிக்கலாம்; ஆனால் இந்துக்களிடையே சாதிப் பிரிவினை செய்வதில் பி ஹெச்டி வாங்கி, அன்னியக் கைக்கூலிகளாக, பிரிவினை மூட்டுவதே முழுநேர வேலையாக அலையும் பலர் முகநூலில் உள்ளனர். அவர்கள் சாதிச்சண்டையாக ஊதிப் பெரிதாக்கி விடுவர். ஆகவே அவற்றை எழுதவில்லை.

sripadam1

ரதோத்ஸவத்தில் பெரிய தேர்ச்சக்கரங்களுக்கு அருகில் நின்றுகொண்டு வாகான முறையில் கனத்த சன்னக்கட்டை போடுவதிலும் இவர்கள் முன்னிற்பர். சாய்வான சன்னக் கட்டையில் வழுக்கிக் கொண்டு தேர்ச்சக்கரம் சீராக ஒரே பாதையில் செல்லும்.

(அசுல்க தாஸர்களான இவர்கள் அனைவரும் இளவயதினராக இருப்பர்; இதில் இடையறாமல் ஈடுபட்டிருக்கும் Thirumalai Vinjamoor Venkatesh என் இனிய நண்பர். இவர்களே இறைத் தொண்டின் முன்னோடிகள்

sripadam2

ஓசிச்சோத்து வெட்டிமணியைத் திருவல்லிக்கேணி தெற்கு மாடவீதி திருப்பம்வரை சட்டையைக் கழற்றச் செய்து ஸ்ரீபார்த்தஸாரதியைச் சுமக்கச் சொல்ல வேண்டும்.

கருஞ்சட்டை வாய் வணிகர்களைப் பார்த்தசாரதியைச் சுமந்துகொண்டு ஏப்ரல் மாதக் கோடையில் ஈக்காட்டுத் தாங்கல்வரை (திருவூறல் உற்சவம்) ஓடவிடுங்க என்கிறார் ஒரு அடியார். போகவர சுமார் 30 கிமீ தூரம். இடையில் பல மண்டகப்படிகள்.

கால்ல செருப்பில்லாம தோள் சுமையோட அசுப வீ செட்டியாரு ஓடுவாரா?

sripadam5

இதுபோல் காஞ்சீபுரம் பெருமாளுக்கும் பல உத்ஸவங்கள்; வைணவ அடியார்கள் மனமொன்றி ஆர்வத்துடன் உழைப்பர்; வெளி இடங்களுக்கும் அத்திகிரி வரதனை எழுந்தருளச் செய்வர்.
திருத்தோளில் சாலைக் கிணற்று நீர் சுமந்து, கச்சி வரதருக்குத் தொண்டு செய்தார் ஸ்ரீ பாஷ்யகாரர்
மாட்டு வண்டியில் கிணற்று நீர் கொணர்ந்து மயிலை ஸ்ரீநிவாஸருக்கு வழுவிலா அடிமை செய்யும் வைணவர் உளர்.

பார்ப்பான் தீயில் இறங்குவானா?

சண்டீ ஹவனம் முடியும்வரை ஹோமகுண்டம் அருகில் உட்கார்ந்து பார்த்தால் தெரியும். பூக்குழி இறங்கி ஒரே ஓட்டமாக ஓடுவது ஈசி.

(பதிவு இக்கேள்வியை எழுப்பிய விசிக மாமாவளவனுக்கு அனுப்பப்பட்டது;ஆறு மாதம் ஓடிவிட்டது; ஐயா விடை கூறவில்லை. கோபுர பொம்மை ஆராய்ச்சி இன்னும் முடியவில்லை போல)

  • தேவ் ராஜ்

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version