Home உரத்த சிந்தனை இந்தியா மீது… அறிவிக்கப் படாத போர்கள் ஏன்?!

இந்தியா மீது… அறிவிக்கப் படாத போர்கள் ஏன்?!

pm-modi-with-shivaji-statue-backround
pm-modi-with-shivaji-statue-backround

ஏன் மற்ற நாடுகளும் கம்மினிஸ்டுகளும் மற்ற மத ஆட்களும் இங்கே இந்தியாவிலே வன்முறை நடக்கவேண்டும், முன்னேற்றம் இருக்ககூடாது என பல்லாயிரக்கணக்கான கோடிகளை கொட்டுகிறார்கள்? பொருளாதாரம் மட்டும் தான் காரணமா? மதவெறீயா?

இந்த ஜார்ஸ் சோரஸ், வெளிநாட்டு ஆட்கள் எல்லாம் ஏன் நம் நாட்டின் மீது இப்படி ஒரு வெறுப்பை வைத்து நாசம் செய்ய வரவேண்டும் என பல நண்பர்கள் பல முறை ஆச்சரியப்பட்டு எழுதியிருக்கிறார்கள். பலருக்கும் தோன்றும் கேள்வி, இதனால் அவர்களுக்கு என்ன லாபம்? ஒரு நாட்டை அழிக்க இப்படி வேலை செய்தால் கொள்ளையடிக்க முடியுமா எனவும் கேள்விகள்.

இதை புரிந்து கொள்ள காலனிய ஆதிக்கம் என்று சொல்லப்படும் மற்ற நாடுகளை அடிமையாக்கும் முறை எப்படி வேலை செய்கிறது என புரிந்து கொள்ளவேண்டும். படையெடுத்து வந்து அடிமைகளாக பிடித்து போய் சவுக்கால் அடித்து வேலைவாங்குவது எல்லாம் பழைய முறை, அது வேலைக்கு ஆகாது அதைவிட அது பாவம் என எல்லோருக்கும் தெரியும் எனவே நல்லவன் என காட்டமுடியாது என்பதால் இரண்டாம் உலகப்போருக்கு பின்பு பொருளாதாரம், அறிவியல் போன்ற முறைகளிலே அடிமைத்தனமாக வைத்திருக்கமுயன்றார்கள்.

யார் என்ன பொருள் தயாரித்தாலும் மேற்கத்திய நாடுகள் தான் அதற்கான விதிமுறைகள், அது எப்படி இருக்கவேண்டும் போன்றவை, அதன் விலையை நிர்ணயிக்கும். இன்றைக்கும் லண்டனிலே தான் பெரும்பாலான பொருட்களின் விலை நிர்ணையிக்கப்படுகிறது. பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகள் தான் பொருள்களின் தரத்தை நிர்ணையிக்கும் விதிமுறைகளை உருவாக்குகின்றன.

அடுத்து அறிவியல். நீங்கள் என்ன கண்டுபிடிக்கவேண்டுமென்றாலும் எதை செய்யவேண்டுமென்றாலும் இந்த நாடுகளின் பல்கலைகழகங்களுக்கு போய்த்தான் நிற்கவேண்டும். யார் என்ன தொழில் நுட்பம் வைத்துக்கொள்ளலாம் என இந்த நாடுகள் தான் தீர்மானிக்கும்.

ஆனா நாம தான் இங்கே தயாரிக்கிறோமே, இப்பக்கூட தடுப்பூசி என ஆரம்பிச்சீங்கன்னா அங்க தான் பிரச்சினையே. ஆனா சீனாவுக்கு பிரச்சினை பண்ணலியே அப்படீன்னு கேட்கலாம் இல்லையா?

அங்கன தான் இந்த அடிமைத்தன முறை வேலை செய்யுது.

நாம இங்கன கூலி வேலை செய்யறதோட நிறுத்திக்கனும் அதுக்கு மேலே ஏதும் பேசக்கூடாது. இல்லாட்டி சீனா மாதிரி எப்ப ஆட்சி கவிழுமோ எப்ப எவன் வந்து நம்ம போட்டு தள்ளுவானோன்னு அந்த ஆட்சியாளர்கள் பயத்திலேயே இருக்கனும். அப்படீன்னா சரி.

பங்களாதேஷிலே ஆரம்பித்து, மியான்மார், லாவோஸ், வியட்நாம், மலேசியா, இந்தோனேசியான்னு இந்தப்பக்கம் முழுசும்
அந்தப்பக்கம் பாக்கீஸ்தான், ஈரான், சிரியா, துருக்கி, வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் எனவும்

எல்லா நாடுகளிலேயும் ராணுவ ஆட்சியோ, தனிநபரின் கொடுங்கோல் ஆட்சியோ இருந்தப்போ முதல்ல போயி ஆதரிக்கறது இந்த மேலை நாடுகளாத்தான் இருக்கும்

இப்பவும் துருக்கியின் கொடூர ஆட்சியான எர்துகானின் ஆட்சிக்கு ஐரோப்பிய நாடுகள் ஜால்ரா போட்டுட்டு இருக்கு. துருக்கியிலே உள்ளே தூக்கி வைக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தை தாண்டும். எழுத்தாளர்கள், கருத்து சொல்பவர்கள், கவுஜை எழுதுபவர்கள் அப்படீன்ன தூக்கி பொடனியிலேயே மிதிச்சு சிறையிலே தள்ளிடுவாங்க. அங்கே ஒரு ஜோக் உண்டு.

சிறையிலே இருக்கும் ஒருவர் சிறையின் நூலகத்துக்கு போய் ஒரு புத்தகத்தின் பெயரை சொல்லி இந்த புத்தகம் இருக்கிறதா என கேட்கிறார்.அதற்கு சிறை அதிகாரி பதில் சொல்கிறார்.

அந்த புத்தகம் இல்லை ஆனால் அதை எழுதிய எழுத்தாளர் இங்கே இருக்கிறார் என.

இப்போது மக்களாட்சி மண்ணாங்கட்டி என கூவும் எந்த ஒரு பத்திரிக்கையாவது இதை எழுதியோ அல்லது எர்துகானை பாஸிஸ்ட் என அழைத்து கட்டுரை எழுதி படித்தது உண்டா?

எகிப்திலே அல் ஜசீரா பத்திரிகையாளரை நாலு வருடம் உள்ளே வைத்து ஊமக்குத்தா குத்தி கொஞ்சநாள் முன்பு தான் வெளியே விட்டாங்க.
மியான்மாரிலே ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ரண்டு பேரை தூக்கி வைச்சு குமுறி எடுத்தாங்க.

இப்படியே சொல்லிட்டே போலாம். அங்கெல்லாம் இவுனுக ஏன் போய் வேலையை காட்டுவதில்லை?

சீனா பத்தி சொல்லவே வேண்டாம். பெரிய ஆளுங்களையே தூக்கி உள்ளே வைச்சு போட்டுத்தள்ளும் நாடு அது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எல்லாத்துக்கும் தடை போட்டிருக்கு.

ஏன் இங்கே மட்டும் வந்து ஆடுதுக? நாம அப்படி வன்முறையை பயன்படுத்தலியா? என்ன காரணம் அப்படீன்னா

இந்த நாடுகள் எல்லாமே எப்போ ஆட்சி கவிழும் என இருக்கும் நாடுகள். சீன அதிபர் ஜி ஜிங்க்பின்க் தன்னோட கட்சியின் தலைமை அலுவக கூட்டத்துக்குள்ளே கடும் பாதுகாப்போட தான் உக்கார்ந்துட்டு இருப்பார். ரண்டு நாள் முன்னாடி வந்த சீனாவின் சந்திர ஆண்டின் கொண்டாட்டத்திலே கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகளுக்கும் சீன அதிபருக்கும் நடுவிலே பாதுகாப்பு படையினர் உக்காந்து பாதுகாப்பு கொடுத்துட்டு இருக்காங்க.

இதே கதை தான் எல்லா நாடுகளிலேயுமே. இம் என அமெரிக்க அதிபரோ மேலைநாடுகளின் பிரதமரோ சொன்னால் போதும் உடனே காலால் இட்டவேலையை தலையால் செய்து முடிக்கும் மற்ற நாடுகள். சீனாவோ எப்படியும் ஆடு கசாப்புக்குத்தானே வரப்போவுது பாத்துக்கலாம் என விட்டு வைச்சிருக்காங்க.

ஆனா நம்ம நாடு????

2014க்கு முன்னாடி வரைக்கும் நாமளும் இப்படித்தான் இருந்தோம்.
அணு ஆயுத ஒப்பந்தம் என்ற ஒன்ற மன்மோகன்சிங் கையெழுத்து போட்டாரே ஞாபகம் இருக்கா? அதனாலே இப்பவரைக்கும் என்ன பலன் என சொல்லமுடியுமா?
அமெரிக்கா கையெழுத்து போடுன்னு சொல்லுச்சு நம்மாளுங்க போட்டாங்க அவ்வளவு தான்.

2014க்கு முன்னாடி உலக வங்கி, சர்வதேச நிதி ஆணையம் போன்ற அமைப்பின் ஆட்கள் எல்லாம் வந்து அறிவுரையா அள்ளித்தெளிச்சுட்டு போவாங்களே அவிங்க எல்லாம் 2014க்கு அப்புறம் பாத்திருக்கோமா?

இந்த ரகுராம்ராஜன்ன்னு ஒருத்தரை சிகாகோ வியாபார கல்லூரியிலே இருந்து கொண்டு வந்து அப்படிக்கா நேரா ரிசர்வ் வங்கி கவர்னராக்கினாங்களே அவருக்கு நாட்டை பத்தியும் பொருளாதாரத்தை பத்தியும் ஏதாச்சும் தெரியும் அப்படீன்னா? அவரு இதுக்கு முன்னாடி என்ன வேலை செஞ்சுட்டு இருந்தாரு? எந்த தகுதியிலே ஆக்கினாங்க?

தகுதியாவது திறமையாவது அமெரிக்கா ஆட்கள் ரெக்கமண்டேசன் பண்ணினாங்க. உடனே பதவி கொடுத்தாச்சு அம்புட்டு தான்.

2014க்கு அப்புறம் இது போயிடுச்சு.
மோடியோ நம்ம நாடோ இப்ப கவிழுமோ அப்பூறம் கவிழுமோன்னும் இல்லை.

பாக்கீஸ்தான் பூச்சாண்டி, சீனா பூச்சாண்டி என எதுவும் வேலைக்கு ஆகல.
இப்படி பாக்கிஸ்தான் சீனான்னு இருந்தாக்கூட விட்டுட்டுவாங்க.

பிரிட்டன் பிரதமரே நேரடியா வந்து எங்களோட பொருட்களை வாங்கிக்கோங்கன்னு சொன்னதுக்கு வாங்கிக்கறோம் ஆனா உங்க பல்கலைகழகத்திலே படிக்க எங்களோட மாணவர்களுக்கு நிறையா இடம் கொடுக்கனும். அப்படி கொடுத்தா இதுக்கு சரின்னு வெளிப்படையாவே மேடையிலேயே சொல்லிட்டாரு மோடி.

உலகையே ஆண்ட பிரித்தானிய அரசின் பிரதமர் சொல்லி கேட்காம திருப்பி கண்டிசனா போடுறது? இந்த கறுப்பினத்தவனுக்கு எம்புட்டு கொழுப்பு பாத்தியான்னு கோபம் கொழுந்து விட்டு எரியுது.
சரி ஏதோ ஆசை போலிருக்கு கூட்டிட்டுபோய் கொஞ்சம் மரியாதை எல்லாம் நடத்தி அனுப்பின்னா உடனே சரியாயிடுவார் போலன்னு இங்கிலாந்துக்கு கூட்டிட்டு போய் பாரளுமன்றத்திலே பேசவிடறது, அரசியோட விருந்து, அரசியோட அரச விருந்தினர் என எல்லாம் பண்ணியும் பார்த்தாங்க. இப்படி மரியாதை செய்யப்பட்ட முதல் இந்திய பிரதமர் மோடி தான். ஆமாங்க. நேரு கீருவை எல்லாம் ஆங்கிலேயன் வைக்கும் இடத்திலே தான் வைத்திருந்தான்.

மோடி அதுக்கெல்லாம் மசியல. இந்த வேலையெல்லாம் எங்கிட்ட நடக்காதுன்னு சொல்லிட்டு வந்துட்டார்.

ஐரோப்பிய நாடுகளோடபோட்ட முதலீட்டு ஒப்பந்தத்தை எல்லாம் தூக்கி போட்டுட்டு இதெல்லாம் சரியில்லை வேணுமின்னா வேற பாத்துக்கலாம் என சொல்லியிருக்கார். ஏன்? அதிலே எல்லாம் பிரச்சினைன்னா வெளிநாட்டு கோர்ட்டுக்குத்தான் போகனுமின்னு இருக்கு. அவிங்க கோர்ட்டு அவிங்க கம்பெனிக்கு சாதகமா இல்லாம நீதி நேர்மைன்னா இருக்கும்?

இதுக்கு முன்னுதாரணமும் இருக்கும். நேரு நம்மோட நாட்டு ஆறுகளை பாக்கிஸ்தானுக்கு தாரை வார்த்தாரே ஞாபகம் இருக்கா? சிந்து நதிநீர் ஒப்பந்தம் அப்படீன்னு பேரு. அதிலே பிரச்சினைன்னா உலகவங்கி தான் பஞ்சாயத்து பண்ணனும். அதிலே நிபுணர்கள் தேர்ந்தெடுக்க அமெரிக்க பல்கலைகழக அதிபர்கள் தான் தேர்ந்தெடுத்து தரனும். ஆமாங்க நம் நாட்டு பல்கலைகழகம் எல்லாம் கிடையாது. நேரா அமெரிக்க பல்கலைகழகம் தான்.

முன்னாடி சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகளிலே எந்த அணைக்கட்டு கட்டுறதுன்னாலும் உடனே இந்த பாக்கிச்தான் ஆட்கள் உலகவங்கிட்ட பஞ்சாயத்துக்கு போவும்கள். உலக வங்கியும் உடனே அணைக்கட்டு கட்டுறத நிறுத்திடும்.

ஆனா மோடி வந்தபின்பு உலகவங்கியை கூப்பிட்டு உன்னோட வேலை என்னவோ அதை மட்டும் பாரு சும்மா இந்த கட்ட பஞ்சாயத்து வர்றவேலை எல்லாம் வைச்சுக்காதன்னு அரசு சொல்லிடுச்சு. ஏன்னா சட்டப்படி ஒப்பந்தம் அப்படித்தான் இருக்குது. உலகவங்கியும் நாங்க ஏதும் பண்ணமுடியாது இரண்டு பேரும் சேர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வாங்க என சொல்லிட்டு போயிடுச்சு.

சூரிய ஒளிமூலம் மின்சக்தி தயாரிக்கும் முறையை நாம் எடுத்துப்போயி இப்போ 2014 இல் இருந்தத விட 11 மடங்கு நிறுவியிருக்கிறோம். மொத்த நிறுவப்பட்ட திறனிலே சோலார் மின்சாரம் மட்டும் இப்போ 10 சதவீதம். நிறுவப்பட்ட திறன் 30 கிகா வாட். உற்பத்தியிலே மூன்று சதவீதம். அது 1,391 டெரா வாட்ஸ்.

மொபைல் போன் உற்பத்தி, அதிநவீன கணினிகள், எல்லையிலே சாலைகள் என பல விஷயத்திலேயும் இந்த மேலைநாடுகள் சொல்வதை கேட்காம நாம பாட்டு முன்னேறிட்டு இருக்கோம்.

தடுப்பூசிகள், மருந்துபொருட்கள் பற்றி சொல்லவேண்டியதில்லை. உலகத்தின் மூன்றில் இரண்டு பங்கு தடுப்பூசிகள் இங்கிருந்து தான் போகிறது.

குண்டுவெடிப்புகள் இல்லை, ஆயுதம் என்ன தங்கமே கடத்த முடியலையாம் இதுல ஆயுதம் வேறையா? போதைப்பொருள் கடத்த முடியலன்னு ஏகப்பட்ட சிக்கல்கள்.

இதெல்லாம் போதாதுன்னு மோடியோ, அமீத்ஷாவோ, யோகியோ ஏன் மற்ற தலைவர்களோ உசிருக்கு பயப்படாம இஷ்டத்து மீட்டிங்க் அப்படீன்னு இப்படீன்னு நாடு முழுக்க போயிட்டு வர்றாங்க.

இதையெல்லாம் பார்த்தா காண்டாகுமா ஆகாதா? எரியுமா எரியாதா?

சரி பொருளாதாரத்தோட விட்டுடுவாருன்னு பார்த்தா ராமர் கோவில் கட்டுவது, காசி கோவிலை சீரமைப்பது, மற்ற கோவில்களுக்கு நிதி, புத்தகம் போடுவது, திருடி கடத்தின கோவில் சொத்துக்களை மீட்பதுன்னும் இருந்தா

அப்புறம் இந்துக்கள் சுதந்திரத்தை அனுபவிச்சு எங்களுக்கு உரிமை வேண்டுமின்னு கேட்டா? அதை எப்படி பொறுத்துக்கறது?

200 வருசமா ஏன் 1200 வருசமா போர், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கோவில் இடிப்பு, சாதியை பத்தி தப்பா எழுதினது, சதி எனும் வழக்கத்தை பத்தி தப்பா எழுதினது, எல்லாம் பண்ணியும்

இப்படி மோடின்னு ஒரு ஆள் வந்து எல்லாத்தையும் ஒரு அஞ்சாறு வருசத்திலே உடைச்சு போடுவாருன்னு நினைச்சு கூட பார்க்கல.

அதுக்குத்தான் இந்த விவசாய போராட்டம் இன்னபிற கூத்து எல்லாம்.

இந்தியா முன்னேறக்கூடாது அதுவும் இந்துக்கள் முன்னேறவே கூடாது. ஏழையாவே இருந்தா மதம் மாத்தலாம். ஏழ்மைக்கே இந்து மதம் தான் காரணம் என ஜல்லியடிக்கலாம்.

நல்ல வசதியா வாழ்ந்தா, நாமளே பொருள் தயாரிச்சு வித்தா எப்படி அதை ஒத்துக்கறது?

இதை வேற வேற வார்த்தைகளிலே வேற வேறமாதிரி சொல்லிவிடுவானுக. இங்கே காசை வீசி இறைச்சா பொறுக்கிட்டு கூவும் சில ஜந்துக்கள் இருக்குது. அப்புறம் என்ன பூந்து வெளையாடவேண்டியது தான் இறங்கிடுச்சு.

இதுகளோட கணக்கு என்னனா இந்த எர்துகான், டிரம்ப், ஜி ஜிங்க்பின்க், விக்டர் ஓர்பான், புடின், முபாரக் மாதிரி மோடி ஒரு தனி ஆள். ஏதாச்சும் புரட்சி புறம்போக்குன்னு தூக்கிட்டு வந்தா உடனே மக்கள் கிளர்ந்து எழுந்து போராடுவாங்க.

அரபு வசந்தம், வர்ண புரட்சிகள் மாதிரி இங்கேயும் ஏதாச்சும் ஒன்னு வராதான்னு முயற்சி பண்ணுதுகள். அமெரிக்க தொழில்நுட்ப கம்பெனிகள், ஐரோப்பிய பணம் என இறக்கி உக்ரேன், டுனீசியா, எகிப்து, சிரியா, லிபியா, ஏமன், மியான்மர் போல இங்கேயும் ஒரு வெளிநாட்டு உதவியோட புரச்சி பண்ணிடலாம் என இறங்கியிருக்காங்க.

இந்தியாவிலே வாக்குசீட்டு மூலம் மோடியை தோற்கடிக்க முடியாது. இனி வெளிநாட்டு உதவி தான் ஒரே வழி என கான்கிரஸ், கம்மினிஸ்ட் ஆட்கள் நேராவே வெளிப்படையாவே பேசிட்டு இருக்காங்க.

அவிங்களுக்கு தெரியும் மோடிக்கு என தனி ஆதரவு உண்டு. அமைப்புரீதியான ஆதரவும் உண்டு என. அப்பூறமும் எந்த தைரியத்திலே இப்படி செய்யறாங்க?

என்ன தைகிரியம்னா 1200 வருசம் அடிமையாகவே இருந்த இளிச்சவாய இந்துக்கள் தானே அவுனுகளுக்கு எப்படி ஒற்றுமை கிற்றுமை எல்லாம் வந்திடபோவுது அப்படீன்னு தான். எப்படியும் நடுநிலை நக்கிக்ள் இந்துக்களை வைச்சு காரியம் சாதிச்சிடலாமின்னு தான்.

இந்த விவசாய போராட்டம் இப்போ சாதிப்போராட்டமாக இன்னோர் ஐயாக்கண்ணு போராட்டமாக மாறீக்கொண்டிருக்கிறது. அந்த சாதிப்போராட்டத்தையும் இந்த சாதி ஒழிப்பு போராலீகள் ஆதரிக்கீறது.

  • ராஜசங்கர் விஸ்வநாதன்

1 COMMENT

  1. போடா சங்கி. நாட்டு மக்கள காவு குடுத்துட்டு இப்ப உலக அரசியல்ல மோடி மணி அடிக்கிறீங்க. எங்க போய் முடியும்ணுதெரியல உங்க அராஜகமெல்லாம்.

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version