June 21, 2021, 4:17 am
More

  ARTICLE - SECTIONS

  துரோகம் ஒருபோதும் வென்றதில்லை!

  என் இந்திய இந்து மக்கள் விழிப்படைய வேண்டும் என் தேசம் வலம் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன்

  westbengal
  westbengal

  தமிழகத்தில் பாஜகவின் பல முக்கிய தலைவர்கள் #கொல்லப்பட்ட போதும் தமிழகத்திற்கு மிக அருகில் உள்ள கேரளாவில் பலநூறு #ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கொல்லப்பட்ட போதும் வாயை மூடிக்கொண்டு கையை கட்டிக்கொண்டு இருந்த பாஜகவை சேர்ந்தவர்கள்…. என்று கூறி திரிபவர்களுக்கு… உண்மையை உணரும் வகையில்..

  ஒரு பாத்திரத்தில் நீரை தேக்கி வைப்பதற்கு அந்த பாத்திரம் ஓட்டை உடைசல் இல்லாமல் இருக்க வேண்டும்….

  ஆனால் அந்தப் பாத்திரத்தில் சட்டம் என்கிற ஆயிரம் ஓட்டைகள் இருக்கின்றபோது அந்த ஓட்டைகளை முதலில் சரி செய்ய வேண்டும். அதன் பின்னரே அதில் பாத்திரத்தில் நீரை நிரப்ப வேண்டும்.

  ஆர்எஸ்எஸின் வளர்ப்பில் வந்தவர்கள் #ஷகா விற்கு சென்று வந்தவர்கள் பாஜகவின் அடிவேர் புரிந்தவர்கள் கண்டிப்பாக எந்த ஒரு சூழ்நிலையிலும் தன் #தலைவனை விமர்சிக்க மாட்டார்கள் உயிருக்கு உயிராக தோளோடு தோளாக தன் தேசத்தை எந்த சூழ்நிலையிலும் #காப்பாற்ற களம் காண்பார்கள்….

  இன்று மேற்கு வங்காளத்தில் நடைபெறும் கலவரத்திற்கு மத்திய அரசை குறை சொல்லி வருகின்றனர். அவர்களுக்கு ஒரு உண்மை நிலை தெரியவில்லை.

  இதுவரை இந்தியாவில் எத்தனையோ கலவரங்கள் நடைபெற்றுள்ளன.

  கோவை குண்டுவெடிப்பு
  கர்நாடக கலவரம்
  மும்பை கலவரம்
  காஷ்மீர் கலவரம்
  விவசாயிகள் கலவரம்
  குஜராத் கலவரம்
  – இப்படி பல கலவரங்கள் இந்தியாவில் நடைபெற்றுள்ளன. இத்தனை கலவரங்கள் நடைபெற்றாலும் இந்திய மீடியாக்கள் உலக மீடியாக்கள் பெரிதும் பேசியது #குஜராத் கலவரத்தை மட்டும்தான்…

  இந்தியாவில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை… முஸ்லிம்களை மோடி கொலை செய்கிறார்.

  இதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் நிலையான திறமையான சுயமாக செயல்படும் #இந்து மக்களுக்கு ஆதரவான தலைவர்கள் ஆட்சியில் இருக்கக்கூடாது அவர்களை அரசியலை விட்டு துரத்த வேண்டும். இதுதான் சர்வதேச #மிஷனரிகளின் #அஜெண்டா…..

  உங்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டுமெனில் கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மொபைல் கடைக்காரருக்கு மற்றும் லோக்கல் காவலருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் இரண்டு #வணிகர்கள் இறந்தனர்.

  அவர்கள் மரணத்தை கேட்டவுடன் தமிழகம் போர்க்களமானது. இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. #ஐநா சபை அலறியது காரணம் அவர்கள்… #கிறிஸ்தவர்கள்…

  இன்று மேற்கு வங்காளத்தில் நடைபெறும் கலவரத்திற்கு கலவரத்தில் இறந்து போன அப்பாவி மக்களுக்கு இதுவரை இந்தியாவில் உள்ள எந்த #அரசியல் கட்சிகளும் #மீடியாக்களும் தங்களுடைய கருத்துக்களையும் கண்டனத்தையும் ஏன் செய்தியை கூட வெளியிடவில்லை..

  ஏனெனில் இறந்துபோனது அப்பாவி #இந்து குடிமக்கள் #பாஜகவை சேர்ந்தவர்கள் பட்டியலின #பூர்வகுடி மக்கள்…

  தன் பரம விரோதியா இருந்த கூட பெண்களை எந்த இந்துவும் அசிங்கப்படுத்த மாட்டான். கண்டிப்பாக இது இந்திய பங்காள முஸ்லிம்களின் மாபெரும் சதி செயல்….

  அவனுக்கு மட்டுமே தாய்க்கும் சகோதரிக்கும் வித்தியாசம் தெரியாதவன்.

  மேற்கு #வங்காளத்தில் 24 #பர்கான மாவட்டம் மற்றும் #முஸிதாபாத் மாவட்டம் இந்த இரண்டு மாவட்டங்களில் மட்டும் இஸ்லாமிய மக்கள் 67% வாழ்கின்றனர். ஏறக்குறைய இதில் பாதிக்கு மேல் சட்டவிரோதமாக வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவியவர்கள். இவர்களின் #வாக்குகளே இன்று மம்தாவின் வெற்றியை தீர்மானிப்பதாக உள்ளது.

  இதனால் தான் அவர் #CAA சட்டத்தை வங்காளத்தில் அனுமதிக்க மாட்டேன் என்று அறிவித்தார்.

  ஒரு மிகப்பெரிய #ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட #பாராளுமன்ற உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டு இந்திய #குடியரசுத் தலைவரால் ஒப்புதல் பெறப்பட்ட அரசியல் #சாசனத்தில் இடம்பெற்ற ஒரு சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அனுமதிக்க முடியாது என்று ஒரு மாநில #முதலமைச்சரால் கூற முடியகிறது என்றால்…. இந்தியாவின் சட்டம் எவ்வளவு #கேவலமாக உள்ளது.

  வங்காளத்தில் மம்தாவின் வெற்றிக்கு முக்கிய காரணம் #வங்காளதேச எல்லையோரம் அமைந்துள்ள 48 தொகுதிகளில் #நாற்பத்தி ஐந்து தொகுதிகளில் மம்தா #வெற்றி பெற்றுள்ளார்.

  இதற்கு முக்கிய காரணம் அங்கு பெரும்பான்மையாக வாழும் #முஸ்லிம்களால். ஏன் எப்படி அவர்கள் அனைவரும் வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவில் ஊடுருவி யவர்கள்… இந்தியாவின் ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெற்றார்கள்.. எப்படி முடிகிறது சர்வதேச சட்டத்தின் படி இவர்கள் அனைவரும் இந்தியாவில் குற்றவாளிகள்….

  இவர்கள் அனைவருக்கும் பின்புறமாக இருந்து செயல்படுபவர் தேசவிரோத மமதை பிடித்த #மம்தா…

  இஸ்லாமியர்களின் ஊடுருவலும் வளர்ச்சியும் இதே வேகத்தில் சென்றால் கண்டிப்பாக கூடிய விரைவில் வங்காளத்தை #தனிநாடாக பிரித்து கொடுக்கச் சொல்லி மிகப்பெரிய அளவில் #போராடுவார்கள்…

  இந்தியாவின் மிகப்பெரிய தலைவலி #காஷ்மீர் பிரச்சினை தீர்ந்தது. அடுத்த பிரச்சினை #வங்காள வடிவில் உருவாகி கொண்டிருக்கிறது.

  இந்த பிரச்சனையை ஒரு நாளில் முடிவுக்குக் கொண்டு வர முடியாது. ஏனென்றால் இன்று மேற்கு வங்காள அரசியலில் மிகப்பெரிய அளவில் தேசவிரோத சக்திகள் இடம்பெற்றுள்ளன.

  மேற்கு #வங்காள அரசு பதவிகளில் முன்பு முழுவதும் #கம்யூனிஸ்ட் தொண்டர்கள் இருந்தனர். தற்சமயம் அரசு வேலைகளில் #திரிணாமுலை சேர்ந்த மம்தாவின் குண்டர்கள் இருக்கின்றனர்.

  இவர்களே வேரோடு வேராக மண்ணோடு மண்ணாக அழிப்பதற்கு மிகப்பெரிய அளவில் தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

  மம்தாவின் கொட்டத்தை அடக்க அவருக்கு எதிரான அனைத்து தகவலையும் திரட்ட வேண்டும். அடிக்கிற அடியில் அவர் #ஏழேழு #ஜென்மத்திற்கும் எழுந்திருக்க முடியாத வண்ணம் இருக்க வேண்டும்.

  மத்திய அரசு #மம்தாவுக்கு எதிராக அரசியல் சட்டம் 356 பயன்படுத்தினால் இன்று நாட்டுக்கு எதிராக திரண்டிருக்கும் நீதி தவறாமல் நீதி வழங்கும் #நீதியரசர்கள் உடனடியாக #தடையாணை பிரப்பிப்பார்கள்…

  ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் #பைசா பெறாத விஷயத்திற்கெல்லாம் தானாக வந்து வழக்கு தொடுக்கும் #நீதிமன்றம்….

  கல்கத்தாவில் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற #மனிதத்தன்மையற்ற படுபாதக கொலைகளை கண்டும் காணாமல் வேற்று கிரகத்தில் நடந்த மாதிரி இருந்தனர். இதிலிருந்து தெரிய வேண்டாமா? அவர்களுடைய நீதியும் நீதி தவறாமலும் நேர்மையும்….

  எனவே மத்திய அரசு ஒரு நடவடிக்கையில் இறங்கும் போது இவர்களின் #தலையீடு வராத வகையில் அனைத்து விபரங்களையும் தகவல்களையும் தேச விரோத செயல் பாடுகளையும் திரட்டி சிறப்பான சம்பவம் செய்ய வேண்டும். அதற்கான காலம் நேரம் நெருங்க வேண்டும்.

  இன்றோ நேற்றோ முன்தினமோ பாஜகவில் இணைந்தவர்கள் இல்லை பாஜகவை ஆதரிப்பவர்கள் இன்று போ வா….என்று கதறுகிறார்கள் கத்துகிறார்கள் பாஜக தலைவர்களை தரக்குறைவாக #விமர்சனம் செய்கின்றார்கள்….

  உங்களுக்கே இந்த தேசத்தின் மீது இவ்வளவு பாசமும் அக்கறையும் விசுவாசமும் இருக்கும்பொழுது இந்த நாட்டிற்காக தங்கள் வாழ்க்கையையே #தியாகம் செய்தவர்கள் இந்த நாடே தங்கள் #சுவாசம் என வாழ்பவர்களின் மனநிலை எப்படி இருக்கும்….

  தன் நாட்டின் வீரர்களை கொன்ற எதிரியை அவன் வீட்டிற்குள்ளேயே சென்று #துவம்சம் செய்தவருக்கு தன் நாட்டிற்குள்ளேயே வாழும் எதிரியே துவம்சம் செய்ய முடியாதா…..

  நேருக்கு நேராக நின்று மோதி எதிரியை அழித்து விடலாம். ஆனால் கூடவே வாழும் #துரோகியை அழிப்பதற்கு அடையாளம் காண்பதற்கு அடையாளப்படுத்துவதற்கு நேரம் காலம் கண்டிப்பாக அவசியம்….

  இன்று இந்தியாவை மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தி வரும் கொரனா பரவலை கட்டுப்படுத்துவது மிக தலையாய பணி…

  மேற்கு வங்காள கலவரத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரவே உடனடியாக மம்தாவுக்கு பதவி #பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. ஏனெனில் இனி அங்கு நடைபெறும் கொலைக்கும் கலவரத்திற்கும் அவரே முக்கிய பொறுப்பாக இருப்பார்…. #சட்டப்படி

  இதற்காக மத்திய அரசு மம்தாவை கண்டு பயந்து விட்டது என்று அர்த்தம் அல்ல. மத்திய அரசின் இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சினை #கொரானா முதலில் அதனை சரிசெய்ய வேண்டும். பல கோடி மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதே மத்திய அரசின் முக்கிய கடமை கொள்கை…

  அதன் பின்னரே மத்திய அரசு மம்தாவின் #கொலைகாரர்களுக்கு முடிவு கட்ட தொடங்கும்….

  இந்திய தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் திரு #அஜித்தோவல் அவர்கள் மேற்கு வங்காளம் சென்றுள்ளார். அங்கு நடைபெறும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறார்….

  தற்பொழுது மத்திய அரசு எந்த முடிவு எடுத்தாலும் இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் #மம்தாவின் வெற்றியை சகித்துக் கொள்ளாமல் பாஜக சதி செய்கிறது என்று தேசத்தின் மீது கொஞ்சம் கூட விசுவாசம் இல்லாமல் நா கூசும் அளவிற்கு #பொய் பேசுவார்கள்….

  அதுமட்டுமல்லாது குஜராத்தை போன்று மேற்கு வங்காளத்திலும் அப்பாவி இஸ்லாமிய மக்கள் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் என்று பொய்யான செய்திகளை பரவச் செய்வார்கள்.

  இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் அந்நிய நாட்டு கைக்கூலிகளும் சர்வதேச சக்திகளும் எப்படியாவது #பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்று வரிந்து கட்டிக்கொண்டு வரிசையில் நிற்கின்றார்கள்.

  தேசம் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்பொழுது தேசத்தின் அபிமானிகள் இந்த தேசத்தின் பாதுகாவலர்கள் இந்து மதத்தின் காவலர்கள் தங்களின் சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி பாரதப்பிரதமர் திரு #மோடி அவர்களின் பின் அணிவகுத்து நிற்க வேண்டும்.

  இந்தியாவின் எதிர்க்கட்சிகளும் இங்கு உள்ள ஊடகங்களும் #மோடி என்ற தனிமனிதனை எதிர்க்கவில்லை.

  அவர்கள் எதிர்ப்பு அனைத்தும் #இந்தியாவை ஒழிக்க வேண்டும். #இந்து மதத்தை அழிக்க வேண்டும் சனதான தர்மத்தை உடைத்தெறிய வேண்டும் இதுவே அவர்களின் மிகப்பெரிய #அஜெண்டா….

  உப்பு தின்ற நாட்டிற்கு எதிரியாக கூட இரு ஆனால் ஒருபோதும் துரோகியாக இருக்காதே அப்படி இருந்தால் அது உன் பிறப்பையே ????

  இப்படித்தான் இருக்கின்றன இன்றைய இந்தியாவின் #எதிர்க்கட்சிகள்

  எத்தனை எதிரிகள் ஒன்று சேர்ந்தாலும் ஒரு உண்மையான 🇮🇳தேசியவாதி க்கு முன் நிற்க முடியுமா…

  இப்படை தோற்கின் எப்படை #வெல்லும்….

  உண்மை நின்றிட வேண்டும்

  தேடி சோறு நிதம் தின்று
  பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
  மனம்வாடி துன்பம் மிக உழன்று
  பிறர்வாட பல செயல்கள் செய்து
  நரைகூடி கிழப் பருவம் எய்தி –
  கொடும்கூற்றுக்கு இரையென மாயும்

  பலவேடிக்கை மனிதரை போலே

  நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?

  எத்தனை இடர்பாடுகள் வந்தபோதும் நாட்டின் கொரனா நிலைமை சரியானதும் ராணுவ பாதுகாப்பில் மேற்கு வங்காளம் சரிசெய்யப்படும் கண்டிப்பாக.

  என் இந்திய இந்து மக்கள் விழிப்படைய வேண்டும் என் தேசம் வலம் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன்

  தேச நலன் கருதி….

  Selvaraj Perumal.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  22FollowersFollow
  74FollowersFollow
  1,261FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-