Home இந்தியா தண்டனைகள் நிறைவேற்றப் பட்டால்… குற்றவாளிகள் உருவாவது தடுக்கப் படலாம்!

தண்டனைகள் நிறைவேற்றப் பட்டால்… குற்றவாளிகள் உருவாவது தடுக்கப் படலாம்!

munna
munna

2008, 2009 ஆம் ஆண்டுகளில் சென்னையில் இருந்து இரும்பு லோடுகள் ஏற்றி கொல்கத்தா சென்ற பல லாரி டிரைவர்களும் க்ளீனர்களும் காரணங்கள் எதுவுமின்றி லாரியுடன் காணாமல் போனார்கள் லாரி உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தார்கள் நாடுமுழுவதும் தேடியலைந்தார்கள்

2009 அக்டோபர் மாதத்தில் துர்காபூரில் இருந்து கல்பாக்கத்திற்கு இரும்பு ஏற்றிக் கொண்டுவந்த லாரியும் அதேபோல காணாமல் போகிறது. பிறகு லாரி புறப்பட்ட நேரம் டோல்கேட்டுகளை கடந்த நேரம் போன்றவற்றை கணக்கிட்டு லாரிகள் காணாமல் போனது ஆந்திராவின் நெல்லூருக்கும் விஜயவாடாவிற்கும் இடைப்பட்ட ஓங்கோல் பகுதியாக இருக்கலாம் என கணித்து லாரி உரிமையாளர் வீரப்பன் குப்புசாமி ஓங்கோல் நகர காவல் நிலையத்தில் எஸ்.ஐ M.லட்சுமணன் என்பவரிடம் புகார் சொல்ல அவரும் வழங்குபதிவு செய்கிறார்

பிறகு பிரகாசம் மாவட்ட SP P.வினையசந் அதுவரை காணாமல் போயிருந்த நான்கு லாரிகளுக்கு என்னவாயிற்று அதன் ஓட்டுனர்களும் உதவியாளர்களுக்கும் என்ன நேர்ந்தது என்பதை விசாரிக்க தனி குழு அமைத்து விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள். எந்தவித சாட்சிகளும் முகாந்திரமும் புரியாத இந்த வழக்கை விசாரித்து விசாரித்து தினறுகிறது காவல்துறை

என்றாலும் விடாபடியான தொடர் விசாரணைகள் மூலம் அதிரடியாக விசாரித்து காணாமல் போன லாரி ஒன்றின் உதிரி பாகத்தை பழய மார்க்கட்டில் கண்டுபிடிக்கிறார்கள்
நல்ல முன்னேற்றம்.

தொடர்ந்து இரும்பு வியாபாரிகளையும் கண்காணிக்க தொடங்குகிறது காவல்துறை முன்னா எனும் ஒரு பழைய இரும்பு வியாபாரி 20 சிம் காடுகளை பயன்படுத்துவதையும் அவசரமாக வெளிநாடு செல்ல ஆயத்தமாவதையும் கண்டுபிடிக்கிறார்கள்
வழக்கில் இது ஒரு திருப்பு முனையாக அமைகிறது ஏற்கனவே பல வழக்குகளில் தொடர்புடைய பெங்களூரில் பதுங்கி இருந்த அப்துல் சமீது எனும் முன்னா என்பவனை மடக்கி பிடிக்கிறது காவல்துறை உண்மைகள் வெளிவருகின்றன.

சின்னசின்ன குற்றவழக்குகளில் சிக்கி கஸ்டபட்டுவந்த முன்னா எனும் பழய இரும்பு வியாபாரி பெருசாக செட்டில் ஆக என்னசெய்யலாம் என தனது கேங்களுடன் ஓங்கோல் பஸ்டான்ட் அருகிலிருக்கும் டீகடையில் அமர்ந்து திட்டமிட்டு வந்திருக்கிறான் அப்போதுதான் ஹைவே லாரிகளை கொள்ளையடித்து செட்டிலாகும் யோசனை உருவாகி இருக்கிறது லாரியை உடைத்து க்ராப்புக்கு போடலாம் இரும்பை வெளிமானிலங்களுக்கு விற்கலாம் என திட்டமிடுகிறான்.

போலீஸ் வேடம்போட்டு ஹைவேயில் நின்று கொண்டு இரும்பு லோடு ஏற்றிவரும் லாரிகளை மறித்து டாக்குமண்ட் எடுத்துவர சொல்வது டிரைவரும் க்ளீனரும் பக்கத்தில் வந்ததும் கழுத்தில் கயிற்றை இறுக்கி துடிக்க துடிக்க கொன்று பக்கத்தில் இருக்கும் காட்டில் எரித்து விட்டு வண்டியை தன்னுடைய குடோனுக்கு ஓட்டி சென்று பிரித்து விற்று வந்திருக்கிறது முன்னா கும்பல் மொத்தம் நான்கு லாரிகள் 13 கொலைகள் செய்திருக்கிறது முன்னா கும்பல்.

13 ஆண்டுகள் நடந்த விசாரணையில் நேற்று அதிரடி தீர்ப்பை ஓங்கோல் மாவட்ட நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. 12 பேருக்கு தூக்கு. அதில் முன்னா உட்பட மூன்று பேருக்கு இரண்டுமுறை தூக்கு. ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை என வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

நாட்டிலேயே ஒரே வழக்கில் 12 பேருக்கு தூக்கு நண்டனை என்பது இது தான் முதல் முறை. இதுபோன்ற அதிரடி தண்டனைகள் பல முன்னாக்கள் உருவாகாமல் தடுக்கக் கூடும்.

தமிழக ஊடகங்கள் இது போன்ற செய்திகளை வாசிப்பதே இல்ல திமுக வென்றதால் ஸ்டாலின் அடிக்கும் லூட்டிகளை சிக்ஸர்கள் என வர்ணித்துக் கொண்டிருக்கிறார்கள். தோற்றிருந்தால் ஓட்டு மிஷினை இன்னேரம் பிரித்து மேய்ந்து கொண்டு இருந்திருப்பார்கள்!

பகிர்வு : சி.எச். அருண்பிரபு

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version