October 17, 2021, 8:53 pm
More

  ARTICLE - SECTIONS

  சூடு பிடித்த ரஃபேல் மேட்டர்! ராகுல் அடித்த செல்ஃப் கோல்…!

  இந்திய ராணுவ அமைச்சராக பொறுப்பில் இருந்து திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களின் சாதனைகள்…… என்றே தாராளமாக சொல்லலாம்

  rafale2 - 1

  ரஃபேல்… : பிரெஞ்சு நாட்டின் டாஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் தயாரித்த ரஃபேல் விமானம் இந்தியாவில் ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சியினர் வாங்க உத்தேசித்து இருந்ததில் இருந்தே….. #ஊழல் என்கிற வார்த்தை தொடர் கதையாகி வந்திருக்கிறது.

  தங்களுக்கு வந்த சேரவேண்டியது வரவில்லை என்கிற காரணத்தால் ஏழரை ஆண்டுகள் இந்த திட்டத்தை கிடப்பில் போட்டு வைத்திருந்தனர் அவர்கள்.

  2014 ஆம் ஆண்டு இந்தியாவில் ஆட்சி மாற்றம் நடைபெற்ற இன்று அது பல துறைகளில் வெற்றி நடைப் போட்டுக் கொண்டு இருக்கிறது. இந்திய நலன்களை சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தினர்.

  அப்படி செயல் படுத்தியதில் இந்திய விமானப் படையினருக்கான ரஃபேல் விமானங்களும் அடங்கும். சரியாக சொன்னால் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி காலத்தில் இருந்ததை விட சற்று அதிக விலை கொடுத்து வாங்கும் முடிவு செய்யப்பட்டது….. ஆனால் முழுமையாக வாங்க திட்டம் வகுக்கப்பட்டது…… அதாவது முழுமையான தாக்குதல் ஆயுதங்களையும்…… அதன் அதிநவீன தொழில்நுட்ப ரேடார் உபகரணங்களையும்…. தொழில்நுட்ப மேம்பாடுகளை இந்தியாவிலேயே வைத்து மேற்கொள்ள என பல வழிகளில் முன்னெடுக்கப்பட்ட திட்டம் இது.

  காங்கிரஸ் கட்சியின் கண்களை உறுத்தியது….. ஏனெனில் அது கேட்டிருந்த கமிஷன் தொகை அதற்கு நன்கு தெரியும்…… ஆதலால்…. அதனை காட்டிலும் அதிக விலை கொடுத்து வாங்கி இருக்கும் நிலையில்….. கையூட்டு பெற்றிருப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அது.

  இது தற்போது உள்ள ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தந்திரமான நடவடிக்கை. காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.

  இந்திய உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில்…… இந்தியா வாங்கிய ரஃபேல் விமானங்களில் எந்த ஒரு நிலையிலும் எந்த ஒரு இடத்திலும் யாரும் ஊழலில் ஈடுபட்டத்தற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள்.

  அதாவது ஊழல் செய்ததாக நிரூபிக்க படவில்லை என்று சொல்லவில்லை…… அதற்கான சாத்தியங்களே இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள் உச்ச நீதிமன்றத்தில்.

  தற்போது மீண்டும் ஏன் இந்த விவகாரம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது என்று பார்த்தால்….. அது இந்தியாவில் நடைபெற்ற சமாச்சாரங்களால் இல்லை. இந்த முறை பிரான்ஸின் வாடகை புலனாய்வு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது அவ்வளவே சங்கதி.

  rafale deal modi rahul
  rafale deal modi rahul

  மேற்சொன்ன இந்த பதத்திலேயே கிட்டத்தட்ட அனைத்துமே புரிந்து கொண்டு இருப்பீர்கள்…. இருந்தாலும்கூட இதனை விளக்கமாகவே பார்த்து விடுவோம்.

  தற்போது குற்றச்சாட்டை முன்வைத்தவர்கள் யார்…… அவர்களின் பின்னணி என்ன என்று பார்ப்போம். அமலாபால் மாதிரி இந்த புலனாய்வு பத்திரிகை செய்தி நிறுவனத்திற்கு மீடியா பால் என்று பெயர். குறிப்பாக சொன்னால் நம்மூர் நக்கீரன். இவர்கள் தங்கள் புல-நாய்-வில் இந்திய இடைத்தரகர் ஒருவருக்கு இந்த டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் 8.8 கோடி ரூபாயை #கையூட்டாக கொடுத்தது என்று சொல்லி…. பிரான்ஸ் தேசத்தில் நம்மூர் முனிசிபல் கோர்ட் போன்ற ஒரு சாதாரண நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள். வழக்கை விசாரிக்க ஒரு நீதிபதி நியமிக்கப்பட்டு அவரும் கடந்த ஜுன் மாதம் 26 ஆம் தேதி விசாரணை தொடங்கி இருக்கிறார்.

  இதனை தான் இந்த செய்தியை தான் இங்கு தலைப்பு செய்தியாக்க முடியுமா என்று ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள். காரணம் இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் தான் அங்கு தொடரப்பட்டது. இதற்கு சரியாக ஒரு வாரம் முன்பு இங்கு உள்ள #கைப்புள்ள ராவுல் வின்சி ரஃபேல் குறித்த மிகப் பெரிய செய்தி வரப் போகிறது காத்திருங்கள் என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பிதற்றியது‌. அப்போது அது ஐந்து மாநில தேர்தல் சமயம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

  இது அத்தனையும் பிரான்ஸில் உள்ள ஒரு தனியார் பொருளாதார குற்றப்பிரிவு அமைப்பான ஷேர்பா‌ எனும் பெயரில் இயங்கும் ஒரு தன்னார்வ நிறுவனத்தின் நிதி ஆதாரங்களை கொண்டு இயங்குகிறது. பெயரை நன்கு கவனியுங்கள்….. ஷேர் – பா என்பது பெயராம். நம்மூர் NGO போன்ற அமைப்பு இது.

  rahul self goal - 2

  ஆச்சா…..

  இப்போதே உங்களுக்கு இதன் நோக்கமும்…. இதன் பின்னணியில் உள்ள #கைத்தேர்ந்தவர்கள் யார் என்பது வரை நன்றாகவே புரிந்து இருக்கும்.

  இங்கு மற்றோர் விஷயமும் உண்டு.

  காங்கிரஸ் கட்சி சார்பிலான அரசு தான் இன்று இந்தியாவில் கொண்டாடும் ரஃபேல் விமானங்கள் வாங்க தீர்மானித்தது என்று ஒரு சாரார் சொல்லி கொண்டு திரிகிறார்கள்.

  அது முற்றிலும் தவறு.

  இந்திய ராணுவத்தினருக்கான ஆயுதங்களை… உபகரணங்களை…. தன்னிச்சையாக வாங்க எந்த ஒரு கட்சி ஆளும் இந்திய அரசுக்கும் அதிகாரம் இல்லை. இதனை தீர்மானிப்பது இந்திய ராணுவ தொழில்நுட்ப பிரிவில் உள்ள ஐந்து நபர்கள் கொண்ட கமிட்டி தான். இவர்கள் முழுக்க முழுக்க இந்திய ராணுவத்தை சேர்ந்தவர்கள்.

  இப்படி இவர்களின் தேவைகளை…. களத்தில் செயல்படும் விதத்தில் உள்ளனவற்றை ….. உலக அளவில் தரம் வாரியாக ஆராய்ந்து பார்த்து அதனை இயக்கிப் பார்த்து பின்னரே இவ்வளவு எண்ணிக்கையில் தேவை என்கிற குறிப்பை இந்திய அரசுக்கு அறிக்கையாக சமர்பிப்பர். அதன் மீது நடவடிக்கை மாத்திரமே எடுக்க இந்திய அரசு நிர்வாகத்தினருக்கு அதிகாரம் உண்டு.

  இந்திய ராணுவத்தினர் குறிப்பிடாத எந்த ஒரு பொருளையும்….. அவ்வளவு ஏன் ஒரு குண்டூசி கூட வாங்கிவிட முடியாது என்பது தான் இதில் உள்ள நிதர்சனமான உண்மை.

  இது உலக அளவில் மிக நேர்த்தியாக செயல் வடிவம் கொடுக்கப்பட்டது இங்கு நம் தேசத்தில் தான். அதனால் தான் இந்திய ராணுவத்தினர் வசம் உள்ள உபகரணங்கள் உலக தரத்திலானவை.

  இதன் பொருட்டே அவர்கள் இங்கு இந்தியாவில் தயாராகும் உபகரணங்கள்… ஆயுதங்களை… நிராகரித்தும் இருக்கிறார்கள். உதாரணமாக நம் இந்திய அளவில் மிகப் பிரபலமான நம் சென்னை ஆவடியில் தயாராகும் பீரங்கிகளை இந்திய ராணுவத்தினர் வேண்டாம் என்று சொல்லி விட்டு ரஷ்ய தயாரிப்பு T90 ரக பீரங்கிகள் தான் வேண்டும் என்று அடம் பிடித்த சம்பவங்களும் நடந்துள்ளன.

  இது நடந்தது கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு……. உலக தரத்திலான நமது சொந்த தயாரிப்பு பீரங்கிகளை ஏன் இந்திய ராணுவத்தினர் பயன்படுத்துவதில்லை….. என்கிற கேள்வி இந்திய ராணுவ அமைச்சராக பொறுப்பு வகித்த திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் இந்திய தரைப்படை பிரிவினருக்கு கேள்வி கேட்டு குறிப்பு அனுப்பினார்.

  பிறகு தான் நிறைய விஷயங்கள் புரிய ஆரம்பித்தது.

  அந்த ரக பீரங்கிகளில் எந்த ஒரு குறையும் இல்லை….. சொல்லப்போனால் உலகின் அதி நவீன அதிக எடை கொண்ட பீரங்கி என்பதும்……. அதனை பயன்படுத்தும் அளவுக்கு எல்லையில் உள்ள நமது சாலையோ……. அல்லது அங்கு உள்ள குறுகிய பாலங்களோ இடம் தரவில்லை என்பது பின்னர் தான் புரிந்தது.

  இது போன்ற இடர்பாடுகள் பற்பல விதங்களில் இந்திய ராணுவத்தினர் தேவைக்கும்…. உற்பத்தியாகும் பொருட்களுக்கு பெருத்த இடைவெளியினை உண்டாக்கி விட்டிருந்தது…… உடனடியாக இதற்கு தீர்வு காணும் வகையில் முயற்சிகளை மேற்கொண்டது. பலன்……. இன்று நாம் காணும் BRO பாடர் ரோடு ஆர்கனைஷேசன் …. அதுபோலவே இந்திய ராணுவத்தினர் தேவையறிந்து தயாரித்து கொடுக்கும் இந்திய அரசு துறை நிறுவனங்களாகவும்….. இதற்கு உதவியாக தனியார் துறை நிறுவனங்கள் என ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

  உலக அளவில் பல முன்னணி நாடுகள் பங்கேற்ற பீரங்கி கண்காட்சியில்…. இந்திய தயாரிப்பு அர்ஜுன் மார்க் 1 ரகத்திலினா பீரங்கி முதல் இடத்தை பிடித்ததே இதற்கு சான்று. அதுபோலவே பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பல்பீர்சிங் இயக்கி பீஷ்மா ரக பீரங்கியை அங்கு குழுமியிருந்தவர்கள் அசந்தே போனார்கள்… மூன்று உயரத்தில் வானில் பறக்கும் வகையில்…. சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கி காட்டினார் அவர்.

  இந்திய தனியார் துறை நிறுவனங்களை அதிக அளவில் ஆயுதங்கள் தயாரிப்பு மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பு என ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன……. இது லடாக் எல்லையில் பிரச்சினைகளின் போது நன்கு வெளிப்பட்டது…

  அங்கு ராணுவத்தினருக்கு தேவையான…… தங்கும் விடுதிகள்… அடுப்புகள்….. குளிர் தாங்கும் உடைகள்….. மருத்துவ உபகரணங்கள் கொண்ட தனித்த பைகள்….. தலைகவசம்… இரவிலும் பகலிலும் பார்க்க உதவும் விதத்திலான தலை கவசம் என்பது போன்ற பலவற்றை தனியார் துறை நிறுவனங்கள் பங்களிப்புடன் வெற்றி கரமாக செயல் படுத்தி காட்டியிருக்கிறார்கள்…..

  அடுத்ததாக….. கவச வாகனங்கள்… கல்யாணி.. உலக தரத்திலான டாட்டா தயாரிப்பு….. எட்டு பேர் வரை பாதுகாப்பாக பயணிக்கும் வகையில்… தானியங்கி துப்பாக்கி.. மின் உற்பத்தி செய்யும் வகையில் டைணமோ..கன்னி வெடி தாக்குதலை சமாளிக்கும் திறன்… குண்டு துளைக்காத உடற் பாகங்கள்.. சுமார் 48° கோணத்திலும் ஏறும் திறன் என பார்த்து பார்த்து கட்டமைப்பு செய்திருக்கிறார்கள்…… இந்த கல்யாணி வாகனத்தில்.

  அதுபோலவே…. HAL நிறுவன இலகுரக ஹெலிகாப்டர் LCH இந்திய ராணுவத்தில் சேர்ப்பதற்கு முன்பு களத்தில்…. இந்திய ராணுவ தொழில்நுட்ப பிரிவினர் நேரிடையாக லடாக்கில் வைத்து இயக்கி சோதித்து சிற்பல மாற்றங்கள் மேற்கொள்ள அறிவூருத்தி …. இன்று அது உலக தரம் வாய்ந்த இலகு ரக தாக்குதல் ஹெலிகாப்டராக பறிமாணித்து இருக்கிறது.

  இந்திய ராணுவ தேவைகளுக்காக பிரத்தியேக அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் என்பதாக மாற்றம் செய்து மிகக் குறுகிய காலத்தில் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

  இவையெல்லாம் இந்திய ராணுவ அமைச்சராக பொறுப்பில் இருந்து திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களின் சாதனைகள்…… என்றே தாராளமாக சொல்லலாம். இதனை எல்லாம் கருத்தில் கொண்டே இம்முறை அவர் மத்திய நிதி அமைச்சராக பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

  💓 ஜெய் ஹிந்த்.

  • ஸ்ரீ ராம்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,561FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-