September 19, 2021, 10:22 pm
More

  ARTICLE - SECTIONS

  உள்நாட்டு துரோகிகளுக்கு எதிரான போராட்டம்!

  பாரத பாதுகாப்பிற்காக போராட வேண்டியது எல்லையில் இருக்கும் ராணுவம் மட்டுமல்ல .. உள்நாட்டில் இருக்கும் தேசப்பற்று கொண்ட

  chanakya - 1

  சிந்தித்தால் பாரதம் வல்லரசாகும்

  – ஜி. சூரியநாராயணன், விழுப்புரம்

  திராவிடத்தின் பெயராலும், தமிழ் தேசியத்தின் பெயராலும் இந்தியாவின் அதி சிறந்த விழுமியங்கள் எதிர்க்கப் படுவதற்கு காரணம் .. கிறிஸ்தவமே!

  சாதாரண உதாரணம் Rangaraj Pandey பாதிரியார் ஜகத் கஸ்பர் ராஜ் இடையிலான உரையாடல் .

  இந்தியாவில் தமிழ் தான் ஒன்று பட்டு இருந்தது .. பாரதம் அப்படி இல்லை ஆகையால் பாரதம் என்பது ஒரு ஒன்றியம்… பாதுகாப்பு, மாநிலங்களுக்கு இடையேயான உறவு தவிர எதிலும் ஒன்றிய அரசு தலையிடக் கூடாது என்கிறார் அந்த பாதிரியார் . அம்பேத்கார் அப்படி சொல்லவில்லை மத்திய அரசுதான், தன் வசதிக்கு ஏற்ப மாநிலங்களை பிரிக்கிறது பிரிக்கும், பிரித்தது என்பதை ஆணித்தரமாக சொல்லும் வரை ஒன்றியம் என்று துண்டாடும் சொல்லாடலையே செய்து வந்தார் கஸ்பர் .

  ஆக இந்தியா என்பது வலிமையான பாரதம் ஆக இருப்பது கிருத்துவத்திற்கு பிடிக்கவில்லை ..

  ஹிந்து மதத்தில் சாதி , சாக்கடை போல் இருந்தது.. அவர்களுக்கு கிருத்துவம் பாதுகாப்பு அளித்தது ஆகையால் கிருத்துவம் சேவை செய்கிறது என்றார் ஜகத். ஜாதி ஒழிந்ததா ? என்று கேட்டதற்கு அது எப்படி? மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்கள் பல சாதியை வைத்து தான் அதை எப்படி மாற்ற முடியும்? என்கிறார்.

  அடுத்து சமஸ்கிருதத்தின் பொக்கிஷங்கள் இருக்கும் வரை சனாதன தர்மத்தை அழிக்க முடியாது என்று தெரிந்த இந்த பாதிரியார்கள் தமிழை ஆழ்ந்து படித்து தமிழ் ஆர்வலர்கள் போல் மேல் எழும்பி வார்த்தைக்கு வார்த்தை சமஸ்கிருதம் அழிய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.. எங்கிருந்தோ வந்த ஹீப்ரூ , ஆங்கிலம் இங்கு வளரலாமாம் .. இந்த தேசத்தின் மொழி அம்பேத்கர் போன்ற அறிஞர்கள் விரும்பிய மொழியான சமஸ்கிருதம் அழிய வேண்டுமாம். …பள்ளிக்கூடம் வைத்து ஆங்கிலத்தையும், சர்ச்களுக்கு அழைத்து ஹீப்ரூ வாசகங்களையும் திணிக்கிறார்கள் . ஆனால் சமஸ்கிருதம் செத்த மொழியாம். பாதிரிகளே சமஸ்கிருதம் தவிர்க்காமல் உங்களால் பாமர மக்களிடம் பூசை பலி எதுவும் செய்ய முடியாது.

  ஆம் …சுவிசேஷம், சொரூபம், விஸ்வாசம், ஆராதனை, ஞான ஒளி, தீபம், பூஜை, இப்படி உங்கள் அன்றாட விவகாரங்கள் பாரதத்தின் மூத்த மொழிகளில் ஒன்றாம், தமிழின் சகோதரியாம் சமஸ்கிருதம் நிறைந்தவை.

  ஆனால் இவர்கள் ஹிந்துக்களை திராவிடர்கள் என்றும் ஆரியர்கள் என்றும் பிரித்து.. இல்லாத இனம் திராவிடர்களை வைத்து அதாவது ஹிந்துக்களை வைத்து ஹிந்துக்களை அழிக்க நினைக்கிறார்கள்.

  ஹிந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும் …. கம்பன் சமஸ்கிருதம் அறியவில்லை எனில் நமக்கு ஈராயிரம் தமிழ் சொற்கள் இல்லை. அருணகிரிநாதர், பாரதி, ராஜாஜி இப்படி பலர் சமஸ்கிருதம் அறிந்து இருந்ததால் நமக்கு பல தமிழ் படைப்புகள் கிடைத்தன.. தமிழ் வளர்ந்தது.

  தமிழின் எதிரி ஆங்கிலம்… மட்டுமல்ல மாற்று மதங்களும் தான் .. மதம் மாறிய தமிழன் ராதை என்ற பெயரை மாற்றி மேக்தலின் என்றோ எல்ஷடாய் என்றோ பெயர் வைப்பான்.. மதிமாறன், திருமுருகன் ஆகியவை டேனியல், தாமஸ் என்றாகும், விஜய்… ஜோசப் ஆகும்.. தமிழ் எப்படி வளரும்.

  சிந்தித்தால் பாரதம் வல்லரசாகும்.. தவறினால் . ஜார்ஜ் பொன்னையா, ஸ்டீபன், ஜகத் கஸ்பர் மற்றும் தேச விரோத வழக்கில் NIA வால் கைது செய்யப்பட்டு நோய்வாய்ப்பட்டு இறந்த தேசத்துரோகி ஸ்டேன் சாமி என்ற ஸ்டேன் லூர்துசாமி க்கள் உருவாகி நம்மை பிச்சைக்காரர்கள் ஆக்குவார்கள் . நாங்கள் இருப்பதால் நீங்கள் சபாநாயகர் இல்லை என்றால் மணி ஆட்டி என்றெல்லாம் சேற்றை வாரி இறைப்பார்கள் .. கவனமுடன் இருப்போம் அந்நிய சக்தி ஒழிப்போம்.

  பாரத பாதுகாப்பிற்காக போராட வேண்டியது எல்லையில் இருக்கும் ராணுவம் மட்டுமல்ல .. உள்நாட்டில் இருக்கும் தேசப்பற்று கொண்ட ஒவ்வொரு ஹிந்துவும் தான்

  ஜெய்ஹிந்த்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,430FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-