October 24, 2021, 1:37 am
More

  ARTICLE - SECTIONS

  பிரிட்டிஷ் கால ஆண்டான் – அடிமை சட்டங்கள் குப்பையில்… வெகு விரைவில்..?!

  முன்னதாக… இரு வருடங்களுக்கு முன்னர் (2019 அக்டோபரில்) உள்துறை அமைச்சர் அமித் ஷா இது குறித்து பேசியவை…

  amitshah
  amitshah

  இரண்டு ஆண்டு காலமாக பலரது கருத்துகளையும் கேட்ட மத்திய அரசு, இப்போது குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC), இந்திய தண்டனைச் சட்டம் (IPC) மற்றும் ஆதாரச் சட்டம் ஆகியவற்றில் மாற்றங்களை கொண்டு வர தயாராகிவருவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருக்கிறார்.

  மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று பல மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் காவல்படை அமைப்புகளும் என்.ஜி.ஓக்களும் நீதிமன்றங்களும் பார் அசோசியேஷன்களும் தங்கள் பரிந்துரைகளை மத்திய அரசுக்கு தந்ததை அடுத்து இந்த முடிவு.

  குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC), இந்திய தண்டனைச் சட்டம் (IPC) மற்றும் ஆதாரச் சட்டம் ஆகியவற்றோடு, தேசதுரோக சட்டம் (sedition), வெறுப்பு பிரச்சாரங்கள் / குற்றங்கள் (hate crimes), கருணை மனு (mercy petition) தவறாக பயன்படுத்துவதை தடுப்பது என பல விவகாரங்களுக்கும் தீர்வு தரும் வகையில் திருத்தங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன!

  -> இந்த CrPC / IPC சட்ட திருத்தங்களையடுத்து நீதித்துறை சீர்திருத்தம் (கொலீஜியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இண்டியன் ஜுடிஷியல் சர்வீஸ்), காவல்துறை சீர்திருத்தம் எல்லாம் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு. 2 ஆண்டுகளுக்கு மேலாக அவற்றிலும் கவனம் செலுத்தி வருகிறது அரசு.

  காவல்துறை சீர்திருத்தத்தில் ஒன்று: இப்போதிருக்கும் பட்டதாரிகளை தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து நியமிக்கும் (லஞ்ச) முறை மாறி, +2க்கு பிறகு மத்திய அரசு கொண்டுவரவிருக்கும் “போலீஸ் அகாடமி”யில் ‘பட்டப்படிப்புக்கு’ சேர்ந்து படித்து தேர்ந்தவர்கள் காவல்துறை பொறுப்புகளில் (யுபிஎஸ்சி போல ஆன்லைன் / வெளிப்படைத்தன்மையுடன்) அமர்த்தப்படுவார்கள் என்று செய்தி வந்தது.

  சீர்திருத்தங்கள் அத்தனையும் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கும். லஞ்சத்தை ஒழிக்கும். ஜனநாயகத்தை பலப்படுத்தும்.

  முன்னதாக… இரு வருடங்களுக்கு முன்னர் (2019 அக்டோபரில்) உள்துறை அமைச்சர் அமித் ஷா இது குறித்து பேசியவை…

  1) ஆண்டான் – அடிமை முறையில் இயங்க – 1860இல் வரையறுக்கப்பட்ட – பிரிட்டிஷ் கால இந்திய தண்டனைச் சட்டத்தில் (Indian Penal Code) திருத்தம் கொண்டுவர அமித் ஷா முடிவு. “பிரிட்டிஷ் கால சட்டம், அவர்களது நலன்களைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டது. இனி ‘மக்களை காக்கும்’ சட்டமாக அது திருத்தபப்ட வேண்டும்.” – அமித் ஷா!

  2) “ஜவான்கள் ஆண்டுக்கு 100 நாட்கள் தங்கள் குடும்பத்தினருடன் கழிக்க வேண்டும். அதற்கு தேவையான மென்பொருளை உருவாக்கி, ஜவான்களை பணியில் அமர்த்துங்கள் (100 நாள் விடுப்பு கொடுங்கள்)” : மத்திய ஆயுத போலீஸ் படைக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவு.

  3) கும்பலாக சேர்ந்து தனி மனிதரை தாக்கி கொல்லும் (lynching) கொடுமைகள் அதிக அளவில் நடைபெறும் மேற்கு வங்கம், பிஹார், ஒதிஷா, ஜார்க்கண்ட் மாநில முதல்வர்களுடன் lynching பற்றி அக்டோபர் 23 கூட்டத்தில் கலந்தாலோசிக்க அமித் ஷா முடிவு.

  Feb 2020: ‘வெறுப்பு பேச்சுக்கென’ தனி சட்டம் இல்லாவிட்டாலும், தற்போதிருக்கும் சட்டத்தின் வெவ்வேறு பிரிவுகள் மதம், இனம், கலாச்சாரம், இனம் ஆகியவற்றை ‘மட்டும்’ கவனத்தில் கொள்கிறது (Sections 153A, 153B, 295A, 298, 505 (1), 505 (2) of the Indian Penal Code).

  ஜூலை 2020: கிரிமினல் சட்டங்களில் திருத்தம் கொண்டுவர மத்திய உள்துறை அமைச்சகம் 4-5-2020இல் 5-நபர் கமிட்டி அமைக்க, அதன் வெளிப்படை தன்மையை அறியவும், அதில் தாங்களும் பங்கு பெறவும் பலர் விரும்பியதை அடுத்து, பொது மக்களிடமிருந்தும், சட்ட வல்லுநர்களிடமிருந்தும் கருத்து கேட்கிறது அந்த கமிட்டி.

  (புதிய சட்டம் வரலாம். மாடுகளை திருடுபவர்கள் மாட்டு உரிமையாளர்களால் பிடிக்கப்பட்டு உதைக்கப்படுவதும், பாய்மாரால் ஹிந்துக்கள் தாக்கப்படுவதும், பாஜக – ஆர்.எஸ்.எஸ் – ஹிந்து முன்னணி அமைப்பினர் கம்யூனிஸ்ட் – அமைதிமார்க்க – திரிணாமூல் குண்டர்களால் தாக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது).

  • செல்வநாயகம்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  368FollowersFollow
  39FollowersFollow
  74FollowersFollow
  1,585FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-