November 27, 2021, 6:35 am
More

  ரியல் லைஃப்ல சூப்பர் ஸ்டார்னா… அது விஜயகாந்து! மத்தது வெத்து காந்து!

  தமிழக மக்கள், குறிப்பாக இந்து மத நம்பிக்கையாளர்களின் ஒட்டுமொத்த வெறுப்புக்கும் ஆளாகிவிட்டார் என்றும் குறிப்பிட்டு

  vijayakanth
  vijayakanth

  நிஜ வாழ்வில் தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் விஜயகாந்த் தான் என்று குறிப்பிட்டு, சமூகத் தளங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள். ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் வெளியாகவுள்ள நிலையில், தமிழக மக்களுக்கு அவர் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என்றும், தமிழக மக்கள், குறிப்பாக இந்து மத நம்பிக்கையாளர்களின் ஒட்டுமொத்த வெறுப்புக்கும் ஆளாகிவிட்டார் என்றும் குறிப்பிட்டு உலாவரும் வைரல் கருத்துகளில் சில…


  ரெட் ஜெயண்டுக்கும் சன் பிக்ஸர்ஸ்க்கும் உழைத்து கோடிகளை அவங்களுக்கு கொடுக்கவா உங்கள் ஒவ்வொரு வியர்வைக்கும் ஒரு பவுன் தங்க காசு கொடுத்தோம்?

  அரசியலில் வரேனு நீங்க சொன்னதை நம்பி எவ்வளவு குதூகலித்திருப்பேன்? எப்படியோ இம்மாநிலத்தின் அவலம் ஒரு குடும்ப கட்சியின் ஆதிக்கம் எல்லாம் மாறும் என எவ்வளவு கனவுகளை சுமந்தேன்.

  பலரும் உங்கள் அரசியல் அஸ்தமன அறிவிப்பை கேலி செய்தாலும் ஒரு ரசிகனாக உங்கள் உடல் நலம் முக்கியம் என்றல்லவா நினைத்தேன்!

  இன்றோ எந்த குடும்பத்தால் இந்த மாநிலம் மீளா பிரச்சனைகளில் சிக்கி தவிக்கிறதோ அதே குடும்பத்திற்கு உங்கள் உழைப்பையும் எங்கள் உழைப்பில் வந்த காசையும் கொடுக்க சொல்வது நியாயமா?

  கேவலம் உங்க தொழிலேயே அதுவும் உச்ச நடிகராக இருக்கும் நிலையிலேயே அவர்களை எதிர்க்க முடியாத உங்களால் இந்த மாநிலத்தில் அதிகாரபலத்தில் இருக்கும் அவர்களை எதிர்த்திட முடியுமா?

  இன்று நன்றி சொல்கிறேன் நல்லவேளை தமிழகம் தப்பித்தது. உங்களால் அது சாத்தியப்படாது என்று உறுதியாக உங்கள் ரசிகனுக்கு நீங்கள் உணர்த்தியமைக்கும் நன்றி!

  ஒரு நல்ல தலைவன் இம்மாநிலத்தின் தலையெழுத்தை மாற்றிட மாட்டானா என என்னை போல் ஏங்கும் பலருக்கு பிஜேபி திரு அண்ணாமலையை கொடுத்திருக்கிறது. எங்களுக்கும் ஒளிக்கீற்று தெரிகிறது. இனி அவர் போதும்.

  நீங்கள் ஒருவேளை வந்திருந்தால் இன்னும் நாசமாகிருக்க கூடும்.

  உங்களை கம்பேர் செய்தால் திரு விஜயகாந்த் உண்மையில் சூப்பர் ஸ்டார் என்றே எனக்கு தோன்றுகிறது.

  வந்தவர்களுக் கெல்லாம் பசியாறிய புனித மனிதர் அவர். இந்த மாநிலத்தின் தலையெழுத்து அவர் உடல் நலம் குன்றியது. உங்கள் நண்பரான அவருக்கு ஒரு தொகுதியிலாவது நீங்கள் குரல் கொடுத்திருந்தால் மக்கள் மீது உங்களுக்கு அக்கறை இருப்பதாக சொல்லலாம் …

  ஆனால் விலகி நின்று சம்பாதிப்பதை மட்டும் கடமையாக செய்து வந்ததை நான் அறியாதது என் தவறே அன்றி உங்கள் தவறல்ல…

  திருந்த வேண்டியது நானே!
  குட் பை தலைவா
  உங்களின் முன்னாள் ரசிகன்!


  அடடே அண்ணாத்த… ஊத்திக்குமா?! சங்குதானா..?!

  நடுநிலை தமிழக இந்துக்கள் எல்லாம் ஜெ மறைவுக்குப்பின் கொஞ்சம் கொஞ்சமாக முகநூல் காவிகள் மற்றும் களப்பணி காவிகள் மூலம் பிஜேபி பக்கம் சாயும் மனநிலையில் இருந்தனர்..

  அப்போது தான் யாருமே எதிர்பாராத வண்ணம் 2017 டிசம்பரில் திராவிடத்தை கருவறுக்க வந்த விடிவெள்ளியாய் களமிறங்கினார் ஒருவர்..

  பிஜேபி பக்கம் போகலாமா என குழப்பத்தில் இருந்த அத்தனை நடுநிலை இந்துக்களிடமும் “பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்- நீயெனக்கு ஓட்டு மட்டும் தா” என்றார்..

  அவர் சொன்ன ஆன்மீக அரசியல் தான் இத்தனை ஆண்டுகளும் நாம் தேடித்தீர்த்த மாற்று வழி என்று ஒவ்வொரு தமிழக இந்துவும் ஆடித்தீர்த்தான்.. ரசிகனோ 25 வருட தவத்தின் வரத்தைக் கொண்டாடித்தீரத்தான்..

  இனி பிஜேபி தமிழ்நாட்டுக்கு தேவையில்லை.. ரஜினி இருக்க இனி நக்சல் திராவிட கூட்டங்களுக்கு வேலையில்லை என்று மொத்த தமிழ்நாடும் மகிழ்ந்து துடித்தது..

  பிஜேபி பக்கம் சாய இருந்த இந்துக்கள் எல்லாம் போர் வரும் போது ரஜினியோடு களம் காண காத்திருந்தனர்..

  பிஜேபி இந்த இடத்தில் குழம்பித்தான் போனது..

  ஏற்கனவே கட்சியை வளர்க்க கிடைத்தவாய்ப்பை எல்லாம் வீணடித்து விட்டதாலும் ரஜினி ஆதரவளிப்பார் சில பல எம்எல்ஏக்களை சட்ட சபைக்கு அனுப்பி விடலாம் என இலவு காத்தகிளியாக காத்திருந்ததாலும் தேர்தலை எப்படி சந்திக்கலாம் என திருதிரு வென விழித்தது..

  அதற்குள் சமூக பிரச்சனைகளுக்கெல்லாம் அறிக்கை விட்டு தன் அரசியல் வண்டியை டாப் கியருக்கு மாற்றியிருந்தார் ரஜினி..

  போர்வரும் காலம் நெருங்கிகொண்டே வந்தது
  அந்த நாளும் வந்தது..

  2020 டிசம்பர் மாதம் 31 ம் தேதி கட்சி தொடங்கும் தேதியை அறிவிக்கப்போகிறேன் என்றதும் மொத்த தமிழ்நாடும் பரபரப்பானது..

  சொல்லிவிட்டு அண்ணாத்த ஷுட்டிங் போனார்

  அய்யோ கொரோனா காலத்தில் ஷுட்டிங் போகிறாரே எந்த தொற்றுக்கும் ஆளாகிவிடக்கூடாதே என நான் உட்பட எல்லோரும் பதறினோம்..

  இவர் பிஜேபியோடு சேர வாய்ப்பில்லை அதே சமயம் கட்சி ஆரம்பிப்பதும் உறுதியானதும் பாஜ அதிமுக தோளை இறுகப்பற்றிக்கொண்டது..

  திமுக தரப்பிலோ மயான அமைதி..

  ஸ்டாலின் முதல்வர் கனவு வெறும் கனவாகவே போனது என இந்துக்கள் பேரானந்தம் கொண்டனர்..

  நாடகத்தின் உச்ச காட்சியில் தான் அத்தனையும் மாறியது

  யாருமே எதிர்பார்க்காத வகையில் கொரோனா மற்றும் உடல்நிலை காரணம்காட்டி அரசியலில் இருந்து முற்றிலும் விலகுவதாக அறிவித்தார் ரஜினி..

  ரசிகர்களும் ஆன்மீக அரசியலால் திராவிடம் ஒழியும் என்று நம்பிய மொத்த இந்துக்களும் ஒரு கணம் அதிர்ந்து போனார்கள்..

  அவர் வந்தால் அவருக்குத்தான் ஓட்டு என்று காத்திருந்த அத்தனை நடுநிலை இந்துக்களும் மீண்டும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்..

  அதுவரை மடத்தனமாக அரசியல் செய்த தமிழக பிஜேபியும் அந்த நடுநிலைகளை தங்களை நோக்கி மடைமாற்றம்செய்யும் காலம் முடிந்து போனதை உணர்ந்தனர்..

  நடுநிலைகளும் சரி இனி பிஜேபி பக்கம் போகலாம் என்று நினக்கையில் ரஜினிக்காக காத்திருந்த 2017-2020 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் மோடியை மிக மோசமாக சித்தரித்து வைத்திருந்ததை நம்பி விட்டதால் பிஜேபி பக்கம்போகும் முடிவையும் சுத்தமாக கைவிட்டனர்..

  அதற்கு பிறகு அதிமுகவின் தவறான எலக்சன் ஸ்ட்ராடஜியும் திமுகவுக்கு பலமான சாதகத்தை உருவாக்கவே
  அதன்பின் இறங்கி ஆடியது திமுக..

  முதல்வன் படத்தில் ரகுவரன் கேரக்டர் கருணாநிதியை ஒத்திருப்பதால் அதில் தான் நடித்தால் அவரை அது புண்படுத்தும் என்பதாலயே மறுத்த ரஜினி காலா படத்தில் நானாபடேகர் கேரக்டர் மோடியை ஒத்திருப்பது தெரிந்தே நடித்தார்..

  அப்போதும் யாரும் உணரவில்லை அவரது திட்டத்தை.. நான் உட்பட..

  இப்படி தான் ஆன்மீக அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக சொன்னதன் முலம் பாஜகவுக்கு போக இருந்த இந்துக்களை கடைசிவரை போகவிடாமல் தடுத்துக்கொண்டே வந்து கடைசி நேரத்தில் சட்டென ஒதுங்கியதன் மூலம் திமுகவுக்கு பெரிய ஓட்டு வங்கியை அப்படியே தூக்கி கொடுத்தார்..

  96 ஐ போல நேரடியாக திமுகவை ஆதரிக்க முடியாததால் வேறு வடிவத்தில் வந்து ஓட்டுக்களை திமுகவுக்கு அள்ளிக்கொடுத்தார் ரஜினி..

  இதெல்லாமே ஏற்கனவே திட்டமிட்ட ஒன்று தான்..

  ரஜினி கமல் அஜித் விஜய் சூர்யா கார்த்தி சித்தார்த் விஜய்சேதுபதி மற்றும் வெற்றிமாறன் ரஞ்சித் போன்ற நக்சல் டைரக்டர்கள் உட்பட திரைத்துறை அனைத்தும் திமுகவை ஆட்சிக்கட்டிலில் உட்கார வைக்க விதவிதமான வடிவங்களில் களமாடினர்..

  திமுக பக்காவாக திரைத்துறையை மறைமுகமாக களமிறக்கி ஜெயித்துக்காட்டியது..

  ஸ்டாலினை முந்திக்கொண்டு சினிமா குரூப் வாழ்த்திய விதங்களை பார்ததாலே இதை உணரலாம்..

  மிக கச்சிதமாக திமுகவை ஆட்சிக்கு வரவைத்த ரஜினியை பற்றி முகநூல் பிரபலம் அண்ணன் இந்தியதேவன் சில வருடங்களுக்கு முன்பே மிகச்சரியாக கணித்து ஒரு வார்த்தை சொன்னார்

  ரஜினி இன்னொரு கருணாநிதி இந்துக்கள் நம்பாதீர்கள் என்று..

  நான் உட்பட யாருமே அவரது கருத்தை நம்பவில்லை.. அத்தனை கச்சிதமாக இருந்தது ரஜினியின் நடிப்பு..

  இதோ மம்தா ஜெயித்ததும் வாழ்த்து சொன்ன ரஜினி அசாம் பிஜேபி முதல்வருக்கு வாழ்த்து சொல்லவில்லை

  இன்று மற்றொரு நவகாளி ஆகும் வங்கத்தை கண்டித்தும் அறிக்கை இல்லை

  அண்ணாத்தே முடிந்ததும் மீண்டும் சன்பிக்சர்ஸிஸ் அடுத்த படம் உறுதியாகலாம்..

  இனிமேலும் யாரும் நம்பி விடாதீர்கள் இந்த திமுக நாடக கம்பெனியின் நிரந்தர ஆர்டிஸ்ட்டை..

  அழகாக தன்னை நோக்கி கூட்டத்தை வரவைத்து நகராமல் இருக்க வைத்து அப்படியே வேறுபக்கம் மடை மாற்றி மொத்த அதிமுக பிஜேபியையும் சாய்த்ததை பார்க்கும்போது அவரது பாடலே தான் நினைவுக்கு வருகிறது

  “ங்கொப்பனுக்கும் பே பே உங்க பாட்டனுக்கும் பே பே”
  மொத்தமாக பெப்பே காட்டிவிட்டார்..

  இதோ கொரோனா தீவிரமாகி கொண்டு இருக்கிறது. ஷுட்டிங்கில் பிசியாக இருக்கிறார் சூப்பர்ஸ்டார்

  படம் ரிலீசாகி கோடிகளை குவிக்க வாழ்த்துகள்..

  ஒடம்ப பத்திரமா பாத்துகோங்க ரஜினி..

  பாசத்தலைவன் பாராட்டு விழாவில் நீங்கள் எப்படியெல்லாம் வாழ்த்தி பேசப்போகிறீர்கள் என்ற ஆவலுடன் காத்திருக்கும்

  தேசபக்தன்
  இளஞ்சேரலாதன்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,110FansLike
  369FollowersFollow
  45FollowersFollow
  74FollowersFollow
  1,736FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-