Homeஉரத்த சிந்தனைமதமாற்றத் தொழில் எனும் அநீதி! அடிமைகளின் ராஜ்ஜியத்தில் செத்துப் போன நீதி!

மதமாற்றத் தொழில் எனும் அநீதி! அடிமைகளின் ராஜ்ஜியத்தில் செத்துப் போன நீதி!

மத மாற்றத் தொழில் அடிப்படையில் இரண்டு வகைகளில் அநீதியானது. முதலாவதாக அது சமூக அக்கறை

justice for lavanya - Dhinasari Tamil

-> பி.ஆர்.மகாதேவன்

மத மாற்றத் தொழில் அடிப்படையில் இரண்டு வகைகளில் அநீதியானது. முதலாவதாக அது சமூக அக்கறை என்ற போர்வையைப் போர்த்திக்கொண்டு வருகிறது.

இரண்டாவதாக, மதம் மாற்றத்தில் ஈடுபடும் இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய இரண்டு பெரு மதங்களுக்கு மட்டுமே சாதகமான சூழ்நிலை உருவாக்கித் தரப்படுகிறது. பூர்வகுடிகளின் கைகளும் கால்களும் கட்டப்பட்ட ஒரு களத்தில்தான் அவர்கள் இந்த வல்லாதிக்க மதங்களை எதிர்க்க வேண்டிவருகிறது.

ஒரு லாபமீட்டும் தொழிலாக உலகம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவந்த/முன்னெடுக்கப்பட்டுவரும் மத மாற்றத்துக்கு சமூக அக்கறை சாந்த மேல் பூச்சுகள் ஆதி நாட்களில் இருந்தே தடவப்பட்டுவந்திருக்கிறது.

ஒரு வியாபார நிறுவனம் சமூக அக்கறையின் போர்வையைப் போர்த்தி வந்தால் என்ன நடக்கும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் போபால்-யூனியன் கார்பைட் கம்பெனிதான்.

இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய அழிவுக்குக் காரணமான யூனியன் கார்பைட் கம்பெனி, தான் தயாரித்த வேதி உரங்களைச் சந்தைப்படுத்தும்போது என்ன சொன்னது தெரியுமா? உலக வறுமையை ஒழிக்கப் போகிறோம். பயிர்களை அழிக்கும் பூச்சிகளை ஒழிப்பதன் மூலம் விளைச்சலைப் பெருக்கி மக்களுக்கு சத்தான உணவு முழுமையாகக் கிடைக்கவைப்பதே அந்த நிறுவனத்தின் நோக்கம் என்று சொல்லப்பட்டது. அதாவது, கொள்ளை லாபம் ஈட்டவேண்டும் என்ற தனது பொருளாதார இலக்குக்கு சமூக அக்கறை சார்ந்த வேடம் புனையப்பட்டது.

இந்தியாவில் விவசாயத்துக்கான சந்தை பெரிதாக இருக்கிறது மிகப் பெரிய தொழிற்சாலையை அமைத்தது. அவ்வளவு பெரிய தொழிற்சாலையில் மிக அதிக வேதி உரங்களுக்கான மூலப் பொருட்களை சேமித்துவைப்பது அந்த ஊரின் கீழே மிகப் பெரிய அணுகுண்டைப் புதைத்துவைப்பதற்கு சமம் என்று தெரிந்த பின்னரும் அதைச் செய்தார்கள். அதனால் கொடிய விபத்து ஏற்பட்டு போபால் மாபெரும் அழிவைச் சந்தித்தது.

யூனியன் கார்பைடின் வெளியில் இருந்து செயல்படும் இந்திய தலைமை நிர்வாகியான காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி யூனியன் கார்பைட் ஆண்டர்சன் மீது துளி கீறல் கூடப் படாமல் திரும்பி அனுப்பினார். பாகிஸ்தானி சிதம்பரம், இந்த விபத்துக்கான நஷ்ட ஈடுகள், ஆலையைச் சுத்தம் செய்வது எல்லாம் நம்முடைய பொறுப்புதான் என்று சொல்லி எஜமானர்களைக் காப்பாற்றினார்.

கிறிஸ்தவ மத மாற்றத்தின் செயல்பாடும் இப்படியானதே.

மிகப் பெரிய அளவில் பொருளாதார, அரசியல், சமூக ஆதிக்கத்தைக் கைப்பற்றுவதே அதன் இலக்கு. அதற்கு சமூக அக்கறை, ஒடுக்கப்பட்டவர்கள் மேல் கருணை என்று பெருங்கதையாடல்களை உருவாக்கிக் கொள்வார்கள். உண்மையில், ஆஃப்ரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்க போன்ற தேசங்களின் பூர்வகுடிகளை நிர்மூலமாக்கியபோது இப்படியான பசப்பு வார்த்தைகள் பெருமளவுக்குத் தேவைப்பட்டிருக்கவே இல்லை.

இந்துஸ்தானுக்கு வந்தபோது இங்கு மிகப் பெரிய கலாசாரம், தர்மம் ஒன்று அழுத்தமாக நிலைபெற்றிருந்தது. இஸ்லாமியப் படையெடுப்பின் மூலம் பெரும் அழிவுகளைச் சந்தித்திருந்த போதிலும் இந்து சமூகம் தனது உள்ளார்ந்த வலிமையினாலும் வீரத்தாலும் தேசம் முழுவதிலும் பெருமளவுக்கு மீண்டெழத் தொடங்கியிருந்தது.

தர்ம சிந்தனை மிகுந்த இந்துஸ்தானுக்கு வந்த கிறிஸ்தவ மத மாற்ற சக்திகள் பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறுவதுபோல் சமூக சேவைப் பணிகளில் அக்கறை காட்டத் தொடங்கின. சமூக நலனையே தமது முகமூடியாக ஆக்கிக்கொண்டன. அதிலும் ஜாதி இந்துக்கள் எதிர் நிலை பட்டியல் ஜாதியினர் என்றும் பிராமணர் எதிர்நிலை பிராமணரல்லாதவர்கள் என்றும் இரு பிரிவாக இந்து சமூகத்தைப் பிரித்து தமது மத மாற்ற திருகுதாளங்களை ஆரம்பித்தனர்.

சீர்திருத்தம் என்ற நோக்கில் மேல் ஜாதியினரும் கலகம், சமத்துவப் போராட்டம் என்ற பெயரில் பிற ஜாதியினரும் பரஸ்பரம் மோதிக் கொள்வதோடு இந்து தர்மத்தை அழிக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதில் இஸ்லாமிய மதமாற்றம் என்பது பெரிதும் வாளால் முன்னெடுக்கப்பட்டதுதான். அரசப் பதவிகள், வணிக ஆதாயங்கள் போன்றவற்றினாலும் ஊரோடு ஒத்து வாழ்தல் என்ற மந்தை குணத்தினாலும் இஸ்லாமுக்கு மதம் மாற்றப்பட்டவர்களும் உண்டு என்றாலும் பெரிதும் அது வாளால் மட்டுமே முன்னேறிச் சென்றது. அதை அவர்கள் அல்லாவின் சமத்துவ உலகை உருவாக்கும் நோக்கில்தான் முன்னெடுப்பதாகச் சொல்லிக்கொள்ளவும் செய்தார்கள்.

இரண்டாவதாக, இந்த வல்லாதிக்க மதங்கள் தமது தொழிலை விரிவுபடுத்துவதற்காக அனைத்து அதிகார மையங்களையும் பயன்படுத்திக் கொண்டன. எதிர் தரப்பின் அனைத்து கலாசார, சமூக, பொருளாதார, கல்வி, மருத்துவ, தொழில் அமைப்புகள் அனைத்தையும் முதலில் முடக்கின. தமது வணிக, அரசியல் சக்திகளின் துணை கொண்டு மத மாற்ற சக்திகளுக்கு உகந்த களத்தை மூர்க்கத்தனமாக உருவாக்கின.

கிறிஸ்தவர்கள் இந்துஸ்தானில் கால் ஊன்றிய பின்னர் லெவல் ப்ளேயிங் ஃபீல்ட் என்பது முழுவதுமாக மறைந்து போனது. அது முழுக்க முழுக்க கிறிஸ்தவ அட்வாண்டேஜ் ஃபீல்டாகவே ஆக்கப்பட்டுவிட்டது.

சிறந்த உதாரணம். இந்தியாவின் வட கிழக்குப் பகுதிகளுக்கு இந்தியாவில் இருந்து யாரும் எளிதில் போய்வரக்கூடாது என்று தடுத்தார்கள். கிறிஸ்தவ மிஷனரிகள் மட்டுமே அங்கு சுதந்தரமாகச் செயல்பட அனுமதிக்கப்பட்டனர். வட கிழக்குப் பகுதி மக்களின் தனிப்பட்ட வனவாசி கலாசாரம், வாழ்க்கை முறையைப் பாதுகாக்கும் போர்வையில் இந்த மத மாற்றப் பணிகளுக்கு அங்கு களம் அமைத்துக் கொடுத்தனர்.

ஓரிரு தலைமுறைகள் கழித்து இந்திய இந்து சமூக சக்திகள் உங்களைப் புறக்கணித்துவிட்டார்கள். கிறிஸ்தவர்கள் மட்டுமே உங்களுக்கான ஒரே மீட்பர்கள் என்று ஒரு வரலாற்றை உருவாக்கியும் விட்டனர்.

இதே பெருங்கதையாடலையே இந்தியாவின் பிற மாநிலங்களிலும் முன்னெடுத்தார்கள். இதற்கான சிறந்த உதாரணம் கல்வித் துறையில் செய்த சீர்கேடுகள்.

மெக்காலே மூலம் முன்னெடுக்கப்பட்ட கல்வி முறையானது கிறிஸ்தவ கான்வெண்ட் கல்விக்கு முக்கியத்துவம் தந்தது. அதுவரையில் இந்து சமூகத்தில் ஒவ்வொரு குலமும் தத்தமது தொழில் கல்வியைக் கற்றுத் தந்துவந்தன. ஒட்டு மொத்த சமூகத்துக்குமான அறம் சார்ந்த அடிப்படைக் கல்வியானது திண்ணைப் பள்ளிகளில் தரப்பட்டன.

பிரிட்டிஷ் கிறிஸ்தவர்கள் இந்தியாவில் இந்த கான்வெண்ட்களை ஆரம்பித்த அதே நேரத்தில் பிரிட்டனில் ஞாயிற்றுக் கிழமைகளில் பைபிள் வகுப்புகளில் கோரஸாகப் பாட அனைவருக்கும் தெரிந்திருக்கவேண்டும் என்ற நோக்கில்தான் பள்ளிகள் நடத்தப்பட்டுவந்தன.

ஒரு சராசரி ஆங்கிலேயருக்கு கிடைத்த மொத்த கல்வி என்று வெறும் இரண்டு வருடங்கள் மட்டுமே. வகுப்புக்கு வரும் ஆசிரியர்கள் பெரும்பாலும் குடிகாரர்களாகவே இருப்பார்கள். பெரிய பல்கலைக் கழகங்கள் அங்கு இருந்த்து உண்மையே. என்றாலும் அவையெல்லாம் மன்னர் பரம்பரைகளுக்கும் நிலப்புரப்புப் பரம்பரைகளுக்குமானதாக மட்டுமே இருந்தன. எளிய மக்களுக்கு அங்கும் கல்வி என்பது இந்தியாவில் கான்வெண்ட் ஆரம்பிக்கப்படும்வரை தரப்பட்டிருக்கவில்லை.

இப்படியான கல்வி வரலாறைக் கொண்டிருந்த பிரிடிஷ் கிறிஸ்தவர்கள் நமது கல்வி முறையை முதலில் முடக்கினர். முன்பெல்லாம் ஒவ்வொரு கிராமத்திலும் பெருமளவிலான நிலம் வைத்திருந்த வைஸ்ய, சூத்திர ஜாதியினர் கோவில்கள், கல்வி மையங்கள், குளங்கள், அன்ன சத்திரங்கள் என பல தர்ம செயல்களில் ஈடுபட்டுவந்தனர்.

விளை நிலங்களுக்கும் பயிர் விளைச்சலுக்கும் வரியானது இந்து மன்னர்களின் ஆட்சி காலத்தில் மரத்திலிருந்து கனியைப் பறிப்பதுபோல் இருந்தது. பிரிட்டிஷ் கிறிஸ்தவ ஆட்சியில் வரி விதிப்பானது கோழியை வெட்டி அதன் சதையை எடுத்துக்கொள்வதுபோல் ஆனது. இதனால் கிராம பஞ்சாயத்து அமைப்பு முற்றாக நிலை குலைந்தது.

திண்ணைப் பள்ளிகளுக்கான தான தர்மங்கள் குறைந்தது. கான்வெண்ட் பள்ளிக்கு அரசு நிதி உதவிகளை அதிகரித்தது. அந்தப் பள்ளிகளில் படிப்பவர்களுக்குத்தான் உயர் கல்விக்கான வாய்ப்பும் வேலை வாய்ப்பும் கிடைக்கும் என்று செய்ததால் அப்படியான கல்வி மையங்கள் பெருகின.

பாரம்பரிய மருத்துவமுறைகள் ஓரங்கட்டப்பட்டு கிறிஸ்தவ தேசத்து மருத்துவமுறைக்கே முன்னுரிமை தரப்பட்டது.

நவீன கால மாற்றங்களுக்கு ஏற்ப இந்து சமூகக் கல்வி மையங்களும் கல்வி முறையும் மருத்துவ முறையும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ள இடம் தராமல் பார்த்துக்கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து இந்துக்களுக்கு கல்வி கற்றுத் தந்ததே பிரிட்டிஷார்தான் என்ற மிகைக் கூற்று இந்துக்களின் மன்ங்களிலேயே ஊன்றப்பட்டன.

இப்படியாக, பிரிட்டிஷ் கிறிஸ்தவர்கள் இந்தியால் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து ஆட்சியாளர்கள், சிந்தனையாளர்கள், கல்வி மையங்கள், மருத்துவ அமைப்புகள், வணிக நிறுவனங்கள், தொழில் துறைகள், அச்சு – காட்சி ஊடகங்கள் என அனைத்துமே கிறிஸ்தவ நலனை நேரடியாகவும் மறைமுகமாகவும் முன்னெடுப்பதையே இலக்காகக் கொண்டு செயல்படுகின்றன.

சி.பி.எஸ்.இ. பள்ளிக் கல்வி அமைப்பு தொடங்கி டி.வியில் வரும் கார்ட்டூன்கள் வரையிலும் கிறிஸ்தவ மதப் பிரசாரம் நுட்பமாக முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

இன்றைக்கும் கிறிஸ்தவ கல்வி மையங்களுக்கு சிறுபான்மை என்ற பெயரில் தரப்படும் சலுகைகள் என்பவை கல்வித் துறையில் துளியும் சம்மற்ற போட்டிக் களத்தைத்தான் உருவாக்கியிருக்கிறது. விவேகானந்தர் மூலம் ஒரு மிகப் பெரிய அளவிலான இந்து சமூக சேவை மறுமலர்ச்சி உருவாகியிருக்கவில்லையென்றால் இந்தியா என்றைக்கோ இயேசு என்ற சாத்தானால் கபளீகரம் செய்யப்பட்டிருக்கும்.

இது முழுக்க முழுக்க அநீதியான அராஜகமான தொழில் அதர்மம். முடிந்தால் நீயும் மதம் மாற்றிக் கொள் என்று ஒரு கார்ப்பரேட், உள்ளூர் வியாபாரியைப் பார்த்துச் சொல்வதுபோல் இதற்கும் பதில் சொல்வார்கள்.

தமக்கான சலுகைகள், கட்டமைப்பு உதவிகள், கச்சாப் பொருள் கையகப்படுத்துதல் என அனைத்துக்கும் சட்டரீதியான அங்கீகாரத்தைத் தமது கைப்பாவைகளான அரசியல்வாதிகளால் உருவாக்கிவிட்டு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் நடக்கிறோம் என்று அவர்கள் சொல்வதுபோலவே மத மாற்றத்துக்கான அனைத்து சலுகைகள், சட்டங்கள் அனைத்தையும் உருவாக்கவைத்துவிட்டு நாங்கள் அரசியல் சாசனம் தந்த உரிமையைத்தான் பயன்படுத்துகிறோம் என்று சொல்லிவருகிறார்கள்.

அதிலுமே கூட அரசியல் சாசனம் மதப் பிரசாரத்துக்குத்தான் உரிமை தந்திருக்கிறது; அதன் மூலம் யாரையும் மதம் மாற்ற அனுமதி தரவில்லை.

பிரசாரம் செய்து கொள். அதை நம்பி யாரேனும் மதம் மாற விரும்பினால், அவர்கள் முதலில் எந்த மதத்தை/ஜாதியைச் சேர்ந்தவர்களோ அந்தப் பிரிவின் தலைவர்களைச் சென்று சந்தித்துப் பேசி அவர்கள் சம்மதத்துடன் அந்த முடிவை எடுக்கவேண்டும் என்று சட்டம் கொண்டுவரப்படவேண்டும்.

விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும்போது எப்படி கவுன்சலிங் போன்ற வழிமுறைகள் நடைமுறையில் இருக்கின்றனவோ அது போன்ற ஒன்றை அல்லது அதைவிட வீரியமான வழிமுறை ஒன்றை மத மாற்றம் சார்ந்தும் சட்டபூர்வமாகக் கொண்டுவரவேண்டும்.

ஒருவர் மதம் மாறுகிறாரென்றால், அவர் சார்ந்த ஜாதிக்கும் கலாசாரத்துக்கும் அதனால் ஏற்படும் இழப்புக்கு ஈடுசெய்துவிட்டுச் செல்லவேண்டும். எந்தக் குல தெய்வத்தை விட்டுவிட்டு ஒருவர் செல்கிறாரோ அந்தக் குல தெய்வக் கோவிலுக்கு அவர் தான தர்மங்கள் செய்யவேண்டும்.

இனிமேல் சர்ச்சுக்குத்தான் தசம பாகம் கொடுக்கப்போகிறார். அதே நேரம் தனது பூர்விக ஜாதிக்கும் அதன் கலாசாரத்துக்கும் அவர் தனது பங்கைத் தரவேண்டும். மேல் ஜாதியின் கொடுமையினால்தான் மதம் மாறுகிறார் என்றால் சொந்த ஜாதியின் நலனுக்கு உதவுவதில் என்ன தவறு இருக்கமுடியும்?

தான் கஷ்டப்படபோது உதவாத குல தெய்வத்துக்கு எதற்காக செலவிடவேண்டும் என்ற கேள்வி நிச்சயம் வரும். இந்த இடத்தில், கிறிஸ்தவ இஸ்லாமிய ஆதிக்க சக்திகள் உலக அளவில் செய்திருக்கும் அராஜகங்களை ஒரு நிமிடம் யோசித்துப் பார்க்கவேண்டும். மதம் மாறும் ஒருவர் தமக்கு நீட்டப்படும் நேசக் கரங்களில் அழிக்கவே முடியாமல் படிந்திருக்கும் ரத்தக் கறை குறித்துக் கொஞ்சமேனும் சிந்திக்கவேண்டும். கேள்வி கேட்கவேண்டும்.

அதோடு இன்றைய நவீன உலகில் ஜாதி சார்ந்து இட்டுக்கட்டப்பட்ட கொடுமைகள் பெருமளவுக்கு மறைந்துவிட்டன. இந்து தர்மமானது இன்றைக்கு வல்லாதிக்க மதங்களுடனான போரில் பாதிக்கப்படுபவர்களின் இடத்தில் இருக்கிறது. இது சமூகத்தால் பட்டியலினத்தினருக்கு நேர்ந்த கொடுமைகளைப் போல் 100 மடங்கு கொடுமைகளை இஸ்லாமினாலும் கிறிஸ்தவத்தினாலும் அனுபவிக்க நேர்ந்திருக்கிறது.

இந்தக் கொடுமையில் இருந்து பட்டியலினத்தினரும் தப்பியிருக்கவில்லை. இந்து சமூக நில உடமை அமைப்பில் பட்ட கஷ்ட்த்தைவிட தேயிலைத்தோட்டங்களுக்கும் காபி தோட்டங்களுக்கும் பட்டியல் ஜாதியினர் அடிமைகளாக்க் கொண்டு செல்லப்பட்டபோது அனுபவித்த வேதனைகள் அதிகம்.

அந்த பிரிட்டிஷ் கிறிஸ்தவர்களை தமது மீட்பர் என்று சொல்ல தமது முன்னோரின் வரலாறு இடம் கொடுக்கவில்லை என்பதை மட்டுமாவது புரிந்துகொள்ளவேண்டும். எனவே இன்று இந்து அமைப்புகள், அரசியல் கட்சிகள் நலிவடைந்த பிரிவினரிடம் நேசக்கரம் நீட்டும்போது அதைப் பற்றிக் கொள்வதில் எந்தப் பிழையும் இல்லை.

மேலும் அம்பேத்கர் வகுத்திருக்கும் அரசியல் சாசனம் அனைவருக்கும் சம வசதி வாய்ப்புகளை உருவாக்கித் தந்திருக்கிறது. நலிவடைந்த பிரிவினருக்குக் கூடுதல் சலுகைகள் தரப்பட்டுள்ளன. ஒரு பாதிரியார், அரசாங்கப் பதவியில் இருக்கும் க்ரிப்டோவின் மூலம் ஒரு கடனுதவியை வாங்கித் தருகிறார் என்றால் அதற்கு ஒருவர் இந்திய தேசத்துக்குத்தான் விசுவாசமாக இருக்கவேண்டும். பாதிரிக்கு அல்ல.

அதேநேரம் இந்து தேசியவாதிகளும் ஒரு அப்துல்கலாமை உருவாக்க நாம் கொடுக்கும் சிறுபான்மை நல உதவியானது அஜ்மல் கசாப்பை உருவாக்கவில்லை என்பதை உறுதிசெய்துகொள்ளவேண்டும். இத்தனை ஆண்டுகாலம் இஸ்லாமியர்களுக்கு சிறுபான்மை என்று சலுகைகள் தரப்பட்ட பின்னரும் சி.ஏ.ஏ. சட்டத்தினால் இந்திய முஸ்லீமுக்கு நெருக்கடி வரும் என்று சொல்லும் பிரிவினைவாதியின் குரலைத்தான் இஸ்லாமிய சமூகம் கேட்கும் என்றால் இந்து தேசியவாத ஆட்சியாளர்கள் சில விஷயங்களை மறுபரிசீலனை செய்தாகவேண்டியிருக்கும்.

இந்தியாவில் கிறிஸ்தவமும் இஸ்லாமும் சிறுபான்மை என்று சொல்வதுபோன்ற அபத்தமும் அநியாயமும் வேறு எதுவுமே இருக்கமுடியாது. அப்படியென்றால் இந்த மத அமைப்புகள் அவர்களுடைய பூர்வ ஆதிக்க பூமியில் இருந்து எந்தவித உதவியையும் பெறாமல் இருந்திருக்கவேண்டும்.

அந்த வல்லாதிக்க மதங்கள் ஆட்சி செய்யும் அமெரிக்க, ஐரோப்பிய, அராபியப் பகுதிகளில் இருந்து பொருளாதார உதவிகள், பிறவகைக் கட்டமைப்பு உதவிகள் என அனைத்தையும் பெற்றுவருகிறார்கள். அதோடு எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கும் இடங்களிலும் அவர்கள் அவர்களுடைய மூல மத போதகர்களின் வழிகாட்டுதலின்படியான அழித்தொழிப்பு வேலைகளியே ஈடுபட்டுவருகிறார்கள்.

ஆட்டு மந்தைக்குள் ஊடுருவிய ஒரு சில ஓநாய்கள் நாங்கள் சிறுபான்மை… எங்களுக்கு கருணை, சலுகை காட்டுங்கள் என்று கேட்பதைவிட மோசமானது கிறிஸ்தவ இஸ்லாமிய அமைப்புகள் தங்களைச் சிறுபான்மைகள் என்று சொல்லி சலுகைகளை அனுபவித்து வருவது.

இந்த உலகில் எந்தவொரு நாட்டிலும் பெரும்பான்மைக்கு எதிரான செயல்களைச் செய்வதை இலக்காகக் கொண்ட சிறுபான்மைக்கு இத்தனை சலுகைகள் தரப்பட்டிருக்கவில்லை. நமது சிதைக்கான விறகுகளை நாமே எடுத்துக்கொடுத்துவருகிறோம்.

லாவண்யா, நாம் சமீபத்தில் நம் சிதையில் எடுத்து அடுக்கியிருக்கும் பச்சை மடல்.

இந்தப் பச்சை மடலில்
பற்றிப் படரும் அக்கினிக் குஞ்சை
இங்கொரு காட்டிலோர் பொந்திடை யார் வைப்பார்?
வெந்து தணியுமா இந்தச் சுடுகாடு – தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

Follow Dhinasari on Social Media

19,153FansLike
374FollowersFollow
64FollowersFollow
74FollowersFollow
2,542FollowersFollow
17,300SubscribersSubscribe

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

சிவாஜி கணேசன் குடும்பத்தில் மற்றுமொரு நடிகர் உதயம்!

தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில் தெருக் கூத்து நாடகங்களில் பங்கேற்றுள்ளார்.

175 நாள்.. அகண்ட சாதனை படைத்த அகண்டா!

பாலகிருஷ்ணாவின் 'அகண்டா' படம் 175 நாட்கள் ஓடியிருப்பது திரையுலகினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

AK61: விமான ஓடு தளத்தில் இருக்கும் வீடியோ..!

அஜித் குமார் மற்றும் மஞ்சுவாரியர் இருக்கும் புதிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது

பிரதமரின் சரியான, தொலைநோக்கு அணுகுமுறையை சிலாகித்த நடிகர் மாதவன்!

பதவிக் காலத்தை தொடங்கியபோது, ​​மைக்ரோ எகானமி மற்றும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தினார்

Latest News : Read Now...

Exit mobile version