― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைமறை நிலத்தில் மலர்ந்த தா மரை! நாங்க வந்துட்டோம்னு சொல்லு!

மறை நிலத்தில் மலர்ந்த தா மரை! நாங்க வந்துட்டோம்னு சொல்லு!

- Advertisement -
bjp victory

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாஜக.,வுக்கு கணிசமான வெற்றி கிடைத்துள்ளது. அதைக் கொண்டாடும் விதமாக டுவிட்டர் சமூக வலைத்தளத்தில், பாஜக.,வினர் #நாங்க_வந்துட்டோம்னு_சொல்லு என்ற ஹேஷ் டேக்கை டிரெண்டிங் செய்தனர். இது நேற்று முதலிடம் பிடித்தது.

திமுக., வெற்றி பெற்ற இடங்களில் அதிமுக.,வை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்ததும் பாஜக., தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். அதை வெளிப்படுத்தும் வகையில் இந்த ஹேஷ்டேக்கை பதிவு செய்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை ஆகியோரின் படங்களை வெளியிட்டு வாழ்த்துக் கூறியும் பாஜக.,வை விமர்சித்த திமுக., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு பதிலடி தரும் வகையிலும் கருத்துகள் தொடர்ந்து பதிவாகி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் பாஜக வெற்றிக்கு ஆதரவாக பதிவுகள் வைரலாகின அவற்றில் சில…


ஆளும் கட்சி + 12 கூட்டணி கட்சிகள் சேர்ந்து உள்ளாட்சி தேர்தலில் பெற்ற வாக்குகள் சதவீதம்

அதிமுக தனித்து + பாஜக தனித்து போட்டியிட்டு பெற்ற வாக்குகள்.

₹. 2000/-, ஹாட் பாக்ஸ், கொலுசு போன்ற இலவச கையூட்டுக்கும்,

எதுவும் தரமாட்டோம் எங்களது அரசின் சாதனைகள் இவை இவை என்று வோட்டு கேட்பதற்கும்,

கூட்டி கழிச்சு கணக்கு பாருங்க. உண்மையாக வெற்றி பெற்றவர் யார் என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

அடுத்த முறையிலிருந்து வாக்களிக்கும் போது இலவசங்களுக்கு விலை போகாமல், ஊழலுக்கு துணை போகாமல், நல்லாட்சி தந்து, நாட்டை முன்னேற்ற பாதையில் எடுத்து செல்லும் கட்சிக்கு வாக்களியுங்கள்.


தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக #பாஜக வாங்கியது 12.49 சதவிகித வாக்குகள்….

சென்னையில் பாஜக 198 வார்டுகளில் போட்டியிட்டு 2,14,245 ஓட்டுகள் பெற்று
8.04% வாங்கியுள்ளது.

திருப்பூரில் பதிவான மொத்த வாக்குகள் – 4,00,636. பாஜக பெற்ற வாக்குகள் – 33,532 –> 8.3%.

ஆக பாஜக போட்டியிட்ட 5,480 இடங்களில் மட்டுமான வாக்கு சதவீதம் 12.49..


சென்னை மாநகராட்சியில் பா.ஜ.க 8% வாக்குகளை பெற்றுள்ளது.

கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து விலகல், பிரச்சாரத்திற்கு வெறும் 15 நாட்கள், 55 ஆண்டுகள் ஆண்ட கட்சிகளே பல கட்சி கூட்டணி அமைக்க, பா.ஜ.க தனித்து களம் கண்டு இதை சாதித்துள்ளது.

Chennai | #LocalBodyElections2022 | #BJP


தமிழ்நாட்டின் கம்யூனிஸ்டு கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்தும் பாஜகவை விட ( சிபிஐ , சிபிஎம் இரண்டையும் சேர்த்தும்) அதிக இடங்களில் வெற்றி பெற முடியவில்லை ஏன்பதுதான் கசப்பான உண்மை. திமுகவின் ஊதுகுழலாக எந்த வெட்கமும் இன்றி செயல்பட்டால்தான் அவர்கள் போட்டுக் கொடுத்ததை வாங்கிக் கொள்ள முடியும் என்று கட்சிகளின் தலைவர்கள் நினைக்கிறார்கள்.
கம்யூனிஸ்டு கட்சிகளின் தொண்டர்கள்தான் கட்சித் தலைமையை எதிர்த்துக் கொதித்து எழ வேண்டும். அடிமைகளாக என்றென்றும் வாழுங்கள் என்றா லெனின் சொல்லிக் கொடுத்தார்? அப்படி இருப்பதை விடக் கட்சிகளைக் கலைத்து விட்டு திமுகவுடன் ஐக்கியம் ஆகி விடலாம்.

AnanthaKrishnan Pakshirajan


உண்மையில் பாஜக செய்திருப்பது பெரும் அதிசயம் இது நம்பமுடியா அதிசயம்

சினிமா, சாதி, பிரிவினைவாதம், தமிழ்வெறி, தமிழன்வெறி, மத நல்லிணக்கம் என இந்துவெறுப்பு இதை தாண்டி தமிழகத்தில் அரசியல் செய்யமுடியாது செய்யவே முடியாது என இருந்த அவலநிலையினை துடைத்தொழித்திருக்கின்றது பாஜக‌

அங்கு சாதி அரசியல் இல்லை, சினிமா முகங்களை முன்னிறுத்தவில்லை, தமிழன் தமிழ் என நெஞ்சிலும் வயிற்றிலும் அடிக்கும் கலாச்சாரமில்லை, மதமற்றவர் என நடிக்கும் நாடகமில்லை, பிரிவினைவாதமோ இதர கலாட்டாக்களுமில்லை

ஆம் தமிழகம் என்றுமே தேசியத்திலும் இந்துத்துவத்திலும் நம்பிக்கை கொண்ட மாநிலம், அதனால்தான் திராவிட நாடு ஈழநாடு கோஷமெல்லாம் எடுபடாது, கோவில்களும் பண்டிகைகளும் நிரம்பி நிரம்பி வழியும்

இங்கே சினிமா அரசியல் கொஞ்சம் சாதி அரசியல் எனும் விஷம் இருந்தது அது இரண்டும் இப்பொழுது காலாவதியாகிவிட்டன‌

இப்பொழுது பண அரசியல் மட்டும் விளையாடுகின்றது அதுவும் முறிக்கபட்டால் இங்கு திராவிட நாடக கம்பெனி இழுத்து மூடபடும்

சினிமாவும் ஜாதியும் இனி தமிழகத்தில் எடுபடாது, பிரிவினைவாதமும் இதர தேசவிரோத சதிகளும் எடுபடாது என உரக்க சொல்ல ஆரம்பித்திருக்கின்றது தமிழகம், அதை சொல்ல வைத்திருப்பது சத்தியமாக பிஜேபி

நல்ல தேசாபிமானிகளுக்கு இதைவிட உற்சாகமும் ஆறுதலும் விஷயம் வேறு என்ன இருக்க முடியும்?

Stanley Rajan


பல்லைக்காட்டிக்கொண்டு வாங்கும் இலவசத்திற்கும் எந்த உறுத்தலும் இல்லாமல் கொடுக்கும் லஞ்சத்திற்கும் போடும் ஓவ்வொரு ஓட்டும் கள்ள வோட்டே ! ஒருவர் வோட்டை இன்னொருவர் போடுவது கள்ள வோட்டு என்றால் தன் வோட்டையே மனசாட்சியை மறந்து வாங்கிய கையூட்டுக்கு போடும் ஓட்டும் கள்ள வோட்டே !

அதிமுக கவுன்சிலர்கள் இருவர் ஜெயித்த கையோடு திமுகவுக்கு பால் மாறிவிட்டார்கள் ! இது இரண்டு கட்சிகளுக்குள் சகஜம்தான் ! அங்கு தலைவர்கள் தான் வெவ்வேறு ! கொள்கை (அதாவது கொள்ளை ) பிடிப்பெல்லாம் ஒன்றுதான் ! இங்கு செல்வாக்கிருந்தால் அங்கு சாய்வார்கள் ! அங்கு செல்வாக்கு மீண்டும் அதிகமானால் இங்கு சாய்வார்கள் ! ஒரே கோமாளி கூத்துதான் ! காரணம் வேறு சொல்வார்கள் மாறியதற்கு வெட்கக்கேடு ! எல்லாம் காசேதான் கடவுளடா தான் ! இதற்குத்தான் இங்கு தேசிய கட்சிகள் எழுச்சி பெற வேண்டுமென்பது ! மூன்றே தேசிய கட்சிகள் இங்கு ! காங்கிரஸ் கம்யூனிஸ்ட் பி ஜே பி இவைதான் ! இதில் காங்கிரஸும் கம்யூனிஸ்டும் முறையே தேசியத்தையும் கம்யூனிசத்தையும் விட்டுவிட்டு பெரியாரிஸத்தை பிடித்து
கொண்டு தொங்கி இந்து துவேசத்தையும் ப்ராஹ்மண வெறுப்பையும் கட்டிக்கொண்டு அழுகிறார்கள் ! மிஞ்சி இருப்பது பி ஜே பி ஒன்றுதான் ! எனவே இங்கு பி ஜே பி செல்வாக்கு பெற்றால் மேற்சொன்ன எல்லாக் கோளாறுகளையும் சரிசெய்து விடலாம் ! எல்லாம் இறைவன் சித்தம் !


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version