Homeஉரத்த சிந்தனைபாலுக்கான உச்சி மாநாடு; இந்தியாவில் வெண்மைப் புரட்சி வந்தது எப்படி?!

பாலுக்கான உச்சி மாநாடு; இந்தியாவில் வெண்மைப் புரட்சி வந்தது எப்படி?!

.திருபுவனதாஸ் கேஷுபாய் பட்டேல் என்பவரால் தொடங்கப்பட்ட….. வழிநடத்தப்பட்ட…… #அமுல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.

idf world daily summit - Dhinasari Tamil

உலகளவிலான மாட்டுப்பாலுக்கான உச்சி மாநாடு தற்போது இந்தியாவில் நான்கு நாட்களுக்கு நடைபெற்று வருகிறது. இதனை நேற்று நமது இந்திய பிரதமர் க்ரேட்டர் நொய்டாவில் அமைந்துள்ள இந்திய எக்ஸ்போ அரங்கில் தொடங்கி வைத்தார். இதில் IDF எனப்படும் இன்டர்நேஷனல் டெய்ரி ஃபிடரேஷனை சேர்ந்த பல உலக நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தியா, பால் உற்பத்தியில் உலக அளவில் முதல் இடத்தில் உள்ள நாடாக….. மொத்த உற்பத்தியில் சுமார் 23 % சதவிகிதம் உற்பத்தி செய்யும் நாடாக இன்று வளர்ந்து நிற்கிறது…..

இதற்கான விதை… திரு.திருபுவனதாஸ் கேஷுபாய் பட்டேல் என்பவரால் தொடங்கப்பட்ட….. வழிநடத்தப்பட்ட…… #அமுல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.

அமுல் என்பது பெயர் அல்ல.. விரிவாக்கத்தின் சுருக்கம்.
ஆனந்த் மில்க் யூனியன் லிமிடெட் என்பதன் சுருக்கம் தான் அமுல். இதில் ஆனந்த் என்பது குஜராத் மாநிலத்தில்… அந்நாளைய கைய்ரா மாவட்டத்தில் இருந்த ஊரின் பெயர் தான் இந்த ஆனந்த். இன்று அது தனி மாவட்டமாகவே உயர்ந்திருக்கிறது..‌‌ வளர்ந்திருக்கிறது.

ஆக வெற்றிகரமாக செயல்பட்ட ஒரு கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகள் தான் இன்று வளர்ந்து கிளைகள் பரப்பி… உலக அளவில் நம் இந்திய தேசத்தையே திரும்பி பார்க்கும்படி செய்திருக்கிறது.

சர்தார் வல்லபாய் பட்டேல் இந்த திருபுவனதாஸ் கேஷூபாய் பட்டேலின் கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகளை முன்னுதாரணமாக கொண்டே இந்திய அளவில் வெண்மை புரட்சியை மேற்கொண்டார் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத சமாச்சாரமாகவே இன்றளவும் இருக்கிறது.

amul trinity - Dhinasari Tamil

இதற்கு நாம் கேஷூபாய் என்ன செய்தார் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். அந்நாளில் அவர் குஜராத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர். குஜராத் மாநிலத்தின் கைய்ரா மாவட்டத்தில் இருந்து தான் பம்பாய் முழுக்கவே பால் சப்ளை நடந்தது அந்நாளில். இதனை செய்தவர்கள் பால்ஸன் என்கிற நிறுவனத்தார்…… கறந்த பாலை மிக குறைந்த விலையில், வாங்கி அதிகப் படியான லாபம் வைத்து அது பம்பாய் மக்களுக்கு விநியோகம் செய்து வந்ததை கண்டு கொதித்தெழுந்தார் பட்டேல். அவர் அங்கு இருந்த விவசாயிகளை ஒருங்கிணைத்து சர்தார் வல்லபாய் படேலின் யோசனையின் பேரில் தொடங்கியது தான் இந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

இதன் மூலம் அந்த பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் காண ஆரம்பித்தது. இந்த சமயத்தில் இந்த கூட்டுறவு சங்கத்தை வழிநடத்த ஒருவரை கொண்டு வந்து சேர்ந்தார். அவர் தாம் வர்கீஸ் குரியன். கேரள மாநிலத்தை சேர்ந்த இவர், பிரிட்டிஷ்காரர்கள் நடத்தி வந்த பால்கன் நிறுவனத்தின் பணியில் இருந்த மெத்தப் படித்த இளைஞர். நிறுவனத்தின் செயல்பாடுகள் காரணமாக வேலையை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் கேரள மாநிலத்திற்கு சென்ற நிலையில்……. இவரை தேடிப் பிடித்து கொண்டு வந்து தன் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த கூட்டுறவு சங்கத்தை வழிநடத்த கேட்டுக் கொண்டார் கேஷூபாய் பட்டேல். அன்று விரக்தியில் இருந்த இளைஞர்…. இந்த குரியன் வரமாட்டேன் என சொல்லி இருந்தால் இன்று அமுல் என்பது இல்லை.

கைய்ரா மாவட்டத்தில் இருந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை
ஓர் நிறுவனம் நடத்தினால் இன்னமும் நிறைய பேருக்கு அதனால் பலன் கிடைக்கும்…. வருவாய் கிட்டும் என எடுத்து சொல்லி நிறுவனமாக மாற்றீடு செய்தார் குரியன். அது தான் #ஆனந்த்மில்க்யூனியன்_லிமிடெட். அமுல்.

பல நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொண்டார்…. குஜராத் முழுவதும் பலருக்கும் தெரிந்த நிறுவனமாக தலையெடுக்க ஆரம்பித்தது அமுல். இந்த சமயத்தில் தான் அவர் வெளிநாடுகளில் படிக்க சென்றிருந்த போது அங்கு அவருக்கு அறிமுகமான கராச்சியில் பிறந்தவரான ஹரிசந்த் மேஹா டாலியா என்பவரை தன்னோடு இணைத்துக்கொண்டு பணியாற்ற விரும்பினார் குரியன்.

அவர் ……
மேதா டாலியா.. மேற்படிப்பிற்காக சென்ற சமயத்தில் இருந்த இந்தியா…. அவர் திரும்பி வந்த சமயத்தில் இந்தியா பாகிஸ்தானாக பிரிந்து நின்றது. நொந்து போனார் டாலியா…… முன்னூறு உயர் ரக நாட்டு மாடுகளை வைத்து… வளர்த்து… பராமரித்து வந்த அவர்…… இந்திய நாட்டின் நிலையை கண்டு மீண்டும் வெளிநாட்டிற்கே சென்று விட தீர்மானம் செய்து இருந்த சமயத்தில் தான் அவரை குரியன் தன்னோடு இருத்திக் கொள்ள விரும்பினார்…… மாட்டவே மாட்டேன் என பிடிவாதம் பிடித்த அவரை …… ஒரு வழியாக சமாதானம் செய்து குறைந்த பட்சம் தன்னோடு தன் நிர்வாகத்தின் கீழ் உள்ள நிறுவனத்தில் மூன்று நாட்களுக்கு தங்கி விட்டு செல்ல அழைத்ததின் பேரில் வந்தார் டாலியா.

அன்று …, தன் கனவு மெய்ப்பட இது தான் சரியான இடம் என முடிவு செய்தார் டாலியா.

அந்நாளில் அமுல் நிறுவனம் கையாண்டதெல்லாம் எருமை மாட்டு பால் தான் அதிக அளவில் இருந்தது. விற்பனை போக மீதமானதை கையாள்வதிலும் நிறைய சிரமங்களை சந்தித்தது அமுல். இந்த இடத்தில் தான் டாலியா ஒரு யோசனையை முன்வைத்தார். செயல்படுத்தினார், அது தான் பால் பவுடர். சக்கை போடு போட்டது அமுல் நிறுவன தயாரிப்பு பால் பவுடர். மிக குறைந்த காலத்தில் புகழ் பெற்ற நெஸ்ட்லே போன்ற பிராண்டுகளை ஓரம் கட்டியது.
அமுல் நிறுவனம் நான்கு கால் பாய்ச்சலில் முன்னேற்றம் கண்டது இவர்களுடைய கூட்டு நிர்வாகத்தில் தான்.

இதனையே தேசிய அளவில் செயல்படுத்த முனைந்தது நம் இந்திய அரசு….. அப்போது அப்படி உருவானது தான் தமிழகத்தில் ஆவின்.,
கர்நாடகத்தில் நந்தினி‌., ஆந்திராவில் விஜயா., கேரளத்தில் மில்மா., புதுச்சேரியில் பான்லே என குஜராத் மாடலில் உருவான கூட்டுறவு சங்கங்கள் தொடங்கிடப்பட்டு வெற்றிகரமாக செயல்பட ஆரம்பித்தது.

இதற்காகவே இவரையே…. அதாவது வர்கீஸ் குரியனையே தலைவராக நியமனம் செய்து நேஷனல் டெய்ரி டெவலப்மெண்ட் போர்ட் எனும் அமைப்பை நிறுவினார் அந்நாளைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி. இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு வந்த திட்டம் தான் ஆஃப்ரேஷன் ஃபிலெட், (operation flood) வெண்மை புரட்சி.

இன்று அது ஆலமர விருட்சம் போல் வளர்ச்சி கண்டு இருக்கிறது. அதனோடு சேர்த்து பல விதங்களில் சர்ச்சைகளும்…… உணவை பிரதானமாக கொண்ட உலக அரசியலும் சுழல ஆரம்பித்தது…….

இன்று பால் என்பது புரதம் நிறைந்த தூய்மையான உணவு என்பது போய் வர்த்தக சமன்பாடுகளுக்கு உட்பட ஒரு வியாபார பொருளாக …… உலக அளவில் அதிகப்படியான கலப்படம் நிறைந்த ஒன்றாக மாறி நிற்கிறது….. இதில் கொடுமை என்னவென்றால் பால் உற்பத்தியில் எப்படி நம் இந்திய தேசம் முதல் இடத்தில் இருக்கின்றதோ..‌…. அதுபோலவே கலப்படத்திலும் முதல் இடம் என்று சொல்லி அதிர வைக்கிறது ஒரு சர்வதேச ஆய்வு கட்டுரை ஒன்று!

  • கட்டுரை: ஜெய் ஹிந்த் ஸ்ரீராம்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

Follow Dhinasari on Social Media

19,078FansLike
380FollowersFollow
77FollowersFollow
74FollowersFollow
4,112FollowersFollow
17,300SubscribersSubscribe

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × four =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

காலங்களில் அவள் வசந்தம் -திரைப்படம் ஒரு பார்வை..

அறிமுக இயக்குனர் ராகவ் மிர்தத் இயக்கியுள்ள படம்காலங்களில் அவள் வசந்தம். படக்குழுவினரை சரியாக பயன்படுத்தியுள்ளார்....

சர்தார் -விமர்சனம்..

‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ படங்களை இயக்கியவர் பி.எஸ். மித்ரன். முதல் படத்தில் வங்கி மற்றும்...

பிரின்ஸ் –தீபாவளி ரேஸ் சில் வெற்றி பெருமா.. திரைவிமர்சனம்..

பிரின்ஸ் தீபாவளியை முன்னிட்டு இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் பிரபலமாகி வரும்...

தமிழகத்தில் ரூ.200 கோடி வசூலித்த முதல் தமிழ்த் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’..

தமிழகத்தில் ரூ.200 கோடியை வசூலித்த முதல் தமிழ்த் திரைப்படம் என்னும் சாதனையை 'பொன்னியின் செல்வன்'...

Latest News : Read Now...

Translate »
Exit mobile version