To Read it in other Indian languages…

Home உரத்த சிந்தனை சேது சமுத்திர கால்வாய் ஒரு சாத்தியமில்லாத திட்டம்!

சேது சமுத்திர கால்வாய் ஒரு சாத்தியமில்லாத திட்டம்!

இந்த திட்டம் வந்தால் தமிழகம் ஜப்பான் ஆகும் என்றால், துறைமுகம் உள்ள நாகப்ட்டினம், கடலூர் எல்லாம் 50 ஆண்டு திராவிட ஆட்சியில் ஏன் வளரவில்லை?

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் உள்ள பாக்-ஜலசந்தியில் கால்வாய் அமைத்தால் அதன் மூலம் கப்பல்களின் நேரம், பணம் சேமிக்கப்படும். அந்த திட்டத்தின் மூலம் தூத்துக்குடி சார்ந்த இடங்களில் தொழில் பெருகும் என்பது தத்திகளின் கணக்கு. ஆனால் அது நடக்க வாய்ப்பு இல்லை என்பது மட்டுமல்ல, அதனால் குறைந்தது 10 விஷயங்கள் மூலம் கெடுதல்களை இந்தியா சந்திக்க நேரிடும்.

சாதகமற்ற விஷயங்கள் என்ன?

1) பெரிய கப்பல் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாது?

கப்பல்களில் 37000 டன் வரை எடையுள்ள கப்பல்களை இந்த கால்வாயில் பயன்படுத்த முடியும். அதற்கு 12 மீட்டர் ஆழத்தில் தூர்வார வேண்டும். ஆனால் இன்று சரக்கு போக்குவரத்தில் பயன்படுத்தும் பெரும்பாலான கப்பல்களின் எடை 60,000 முதல் 2,20,000 டன்கள். அதில் அதிக பட்சம் 37,000 எடை கொண்ட Handysize, Handymax கப்பல்கள் மட்டுமே இதில் பயணிக்க வைக்க முடியும். அப்படிப்பட்ட சிறிய கப்பல்களால் இன்று செலவுகள் அதிகரிப்பதால் அவை பயன்பாட்டில் இருந்து குறைந்து கொண்டே வருகிறது. எனவே இந்த கால்வாய் வருங்காலத்தில் பயனற்று போகும்.

2) இதன் மூலம் 1:45 மணி நேரம் மட்டுமே சேமிக்க முடியும், ஆனால் முடியாது?

இந்த கால்வாய் இல்லாததால் இலங்கையை சுற்றிவர 1227 நாட்டிகல் மைல் தொலைவாக இருக்கும் பயணம், இது வந்தால் 1098 நாட்டிகல் மைலாக குறையும். அதாவது வெறும் 129 நாட்டிகல் மைல் மட்டுமே சேமிக்க முடியும். ஆனால் அதனை மூலம் நேரம் அல்லது பணமோ சேமிக்க முடியாது.

ஏனென்றால் பொதுவாக 12 நாட்டிகல் மைல் வேகத்தில் திறந்த கடலில் செல்லும் கப்பல்கள், இந்த குறுகிய கால்வாயில் 6 நாட்டிகல் மைல் வேகத்தில்தான் போக முடியும். அது மட்டுமல்ல இந்த கால்வாயை கடந்து செல்ல பைலட்டுகள் மாற வேண்டும் என்பதால் அதில் ஏற்படும் கால தாமதம் அதனால் வரும் பயண நேரத்தை சேமிக்க முடியாது என்பதை விட கூடுதல் நேரம் ஏற்படும்.

3) இந்த கால்வாய் பயன்படுத்தினால் 19 லட்ச ரூபாய் அதிகமாக ஒரு கப்பல் செலவிட வேண்டும்

இந்த கப்பலின் வேகம் குறைவதால் அதிக எரிபொருள் தேவைப்படும். பைலட்டுகளுக்கும், கால்வாய்க்கும் பணம் கட்ட வேண்டும். அதனால் ஒரு சிறு கப்பல் பயணம் செய்ய குறைந்தது 19 லட்ச ரூபாய் அதிகம் செலவு செய்ய வேண்டும்.

4) இந்த புராஜக்ட்டுக்கு செய்த முதலீட்டை 25 வருடங்கள் ஆனாலும் எடுக்க முடியாது

இந்த திட்டதை முடிக்க 2400 கோடி செலவு செய்ய வேண்டும். அதை இந்த முதலீட்டை வருமானத்தின் மூலம் திரும்ப எடுக்க குறைந்தது 25 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இதற்கான பராமரிப்பு செல்வுகள் ஒரு தொடர்கதை என்பதால் அதுகூட சாத்தியா என்பது கேள்விக்குறியே!?

5) இந்த பகுதியில் ஷேலோ வாட்டரும், நீரோட்டமும் இருப்பதால் தொடர்ந்து தூர் வாரிக்கொண்டே இருக்க வேண்டும்

இங்கு மணல் மேடுகள் இருப்பதால், வாட்டர் கரண்ட் மூலம் ஆழப்படுத்தினாலும் மணல் மீண்டும் நிரம்பிவிடும். எனவே தொடர்ந்து அதை தூர்வாரிக்கொண்டே இருக்க செலவு செய்து கொண்டே இருக்க வேண்டும்.

6) மீன் மற்றும் உயிரினங்கள் அழிவு ஏற்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்.

இந்த திட்டத்திற்காக தூர்வாரப்படுவதால் அங்கே இருக்கும் மீன், கடல்பாசி, முத்து போன்ற உயிரினஙகள் பாதிக்கப்படுவதால் சுற்று சூழல் பெரிய அளவில் பாதிக்கப்படும்.

7) மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

மீனவளம் குறைவதாலும், கப்பல் போக்குவரத்தினாலும் இந்திய ஸ்ரீலங்கா தமிழ் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

8) நாட்டின் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படும்.

இது பொது சரக்கு வழி பாதையாக மாறும்போது அமெரிக்க, பாகிஸ்தான், சீன, உலக நாடுகளின் உளவு கப்பல்கள் கூட வர வாய்ப்பு இருப்பதால் இதுவரை பாதுகாப்பாக இருந்த அந்த பகுதி திறந்தவெளியாக மாறி பாதுகாப்பு குறையும் என்பதால் நாம் பாதுகாப்பு கருதி அதிக ரோந்து செய்ய வேண்டி வரும். அதனால் கப்பற்படைக்கு கூடுதல் செலவு மட்டுமல்ல பாதுகாப்பு குறைவும் ஏற்படும்.

9) ராமர் சேது பாலத்தில் அறிய வகை உயிரினங்கள் அழிய நேரிடும்.

அங்கே இருக்கும் ராமர் பாலத்தில் பல அறிய வகை உயிரினங்கள் இருக்கிறது. அவை அழிந்து விடும். அதன் விளைவு என்ன என்பது இப்போது தெரியாது.

10) இது திறந்த கடல்வெளியில் பயணம் செய்வது போல பாதுகாப்பாக பயணம் செய்ய முடியாது. மேலும் புயல் காலங்களில் ஆபத்தை விளைவிக்கவும், கப்பல் கரை தட்டவும் வாய்ப்புகள் அதிகம். அப்படி நடந்தால் கப்பலை மீட்பது இயலாது போய்விடும் என்பது பெரிய ரிஸ்க்.

இது தவிர ராமர் சேது பாலம் அழிந்தால் தேசிய நினைவு சின்னம் அழியும். நம் மூதாதையர்களின் அடையாளங்கள் மறையும். அதை மறைக்கத்தான் தத்தி ராமர் பாலம் என்று சொல்லாமல் ஆதாம் பாலம் என்று சொன்னான். இது அழிந்தால் நாளை தொல்பொருள் ஆராய்ச்சி செய்ய முடியாது.

இதனால் திமுகவிற்கு என்ன லாபம்?

ராமரின் நினைவு சின்னம் அழிக்கப்படும், ஆப்ராகாமிய மதங்களை குஷிபடுத்தலாம். அது சீனாவிற்கு உள்ளே நுழைய வழி ஏற்படடுத்தினால் அது எதிர்காலத்தில் இந்தியாவை தாக்க உதவியாக இருக்கும் என்பதால் அது கொடுக்கும் துட்டுக்காக 21 பக்க விதியையே செய்கிறவர்கள் இதை செய்ய மாட்டார்களா? இன்னொரு முக்கிய விஷயம் போதை பொருட்கள் கடத்துவது எளிதாகும்.

இந்த திட்டம் வந்தால் தமிழகம் ஜப்பான் ஆகும் என்றால், துறைமுகம் உள்ள நாகப்ட்டினம், கடலூர் எல்லாம் 50 ஆண்டு திராவிட ஆட்சியில் ஏன் வளரவில்லை?

இந்த திட்டத்திற்கு பதிலாக கவனிப்பபார் அற்று கிடக்கும் தூத்துக்குடி, நாகபட்டினம் துறைமுகத்தை மேம்படுத்தினால் தொழில்வளம் பெருகும். குளச்சல் துறைமுகத்தை கண்டெய்னர் ஹப் ஆக மாற்றினால், அது இதைவிட பல மடங்கு தொழில் அபிவிருத்தியை தென்தமிழகம் மட்டுமல்ல கேரளவிலும் ஏற்படுத்த முடியும். ஆனால் அது சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹம்பந்தோட்டா துறைமுகத்தின் தேவையை நீர்த்துப்போக செய்துவிடும் என்பதால், சீனா சர்ச்சுகளுக்கும், கட்சிகளுக்கும் பணம் கொடுத்து பேராட்டம் செய்து அதை சீனா தடுத்து வருகிறது என்பதை இன்றுவரை அறியாமல் இருப்பது காலக்கொடுமை!

ஆனால் இந்த ப்ராஜக்ட் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் ஒருபோதும் நடக்க முடியாது. இதன் மூலம் பாஜகவிற்கு எதிராக வரும் தேர்தலில் ஒரு மைலேஜ் செய்ய மட்டுமே முடியும் என்பது திமுகவின் கணக்கு.

Gottumukkala Vinod Kumar Sharma

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

four × five =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version