Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img
spot_img

― Advertisement ―

Homeஅடடே... அப்படியா?ஒரு 'காந்தி' என்றுமே சாவர்க்கர் ஆக முடியாது!

ஒரு ‘காந்தி’ என்றுமே சாவர்க்கர் ஆக முடியாது!

To Read in Indian languages…

A Gandhi can never become a Savarkar

“My name is not Savarkar, it is Gandhi and Gandhi never offers apology” என்கிறார் ராஹுல் காந்தி.

முதலில் clemency, apology இரண்டுக்கும் உள்ள வேற்றுமையை தங்கபாலுவிடமோ, சசி தரூரிடமோ கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் காந்தியாரே.

வரலாறு: 1874ல் remission system ஒன்றைக் கொண்டு வருகிறது பிரிட்டிஷ் அரசு. அதன் படி ஆயுள் கைதிகளின் தண்டனை, நன்னடத்தையின் பேரில் 20 வருடமோ 25 வருடமாகவோ குறைக்கப்படலாம். 1910ல் கைது செய்யப்பட்ட சாவர்க்கர் இதன்பேரில் தான் clemency விண்ணப்பம் செய்து விடுதலைக்கு வழி தேடினார். பிரிட்டிஷ் அரசு செவி சாய்க்கவில்லை.

“தாய்திருநாட்டை தகர்த்திடு மிலேச்சரை
மாய்த்திட விரும்பார் வாழ்வுமோர் வாழ்வுகொல்?” என்று வெகுண்டெழுந்தவர்களில் முதன்மையானவர்களில் ஒருவர் சாவர்க்கர். பிரிட்டிஷாரிடம் இருந்து தப்பிக்க கடலில் குதித்து, அருகாமையில் இருந்த, பிரான்ஸ் எல்லைக்கு சென்றவர் சாவர்க்கர். விடுமுறைக்கு பாட்டி வீட்டுக்கு சென்று உல்லாசம் அனுபவித்தவர் அல்ல சாவர்க்கர். So, A Gandhi can never become a Savarkar.

உலகில் உள்ள கொடூரமான சித்திரவதை அனுபவித்தும், தன்னுடைய எழுத்துக்களில் “சாவர்க்கரைபோல துயரத்தை அனுபவிக்க வேண்டாம்” என்ற எண்ணத்தை இந்தியர்களிடம் விதைக்கவில்லை. மாறாக “சாவர்க்கரைப் போல நாட்டுக்கு உழைக்க வேண்டும்” என்ற எண்ணத்தை விதைத்தவர் சாவர்க்கர். A Gandhi can never become a Savarkar.

தினமும் சாளரம் வழியே சூரியோதயம் கண்டு மகிழும் காந்திகளுக்கு, தன் சாளரம் வழியே காணக்கிடைக்கும் ஒரே காட்சி, சக இந்தியன் தூக்கில் தொங்கி சாகும் காட்சி தான். அதுதான் சாவர்க்கருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை. டில்லி பங்களாவில் இருக்கும் சுகம் காலாபானியில் இல்லை காந்தியாரே. உன் பெயர் காந்தி என்பதில் நீ பெருமை கொள்ளலாம். ஆனால் இந்திய சுதந்திர வரலாற்றின் முதல் பக்கத்தில், 10 வருஷம், அந்தமான் சிறையில் இருந்த, சாவர்க்கர் பெயர் இடம் பெறுகிறது.

தின்னும் சோற்றில் பல்லி இருக்குமா பூரான் இருக்குமா என்று தெரியாமல் பயத்தோடு என்றாவது உணவு உட்கொண்டதுண்டா காந்தியே? சாவர்க்கருக்கு வழங்கப்பட்ட உணவில் தினமும் பல்லியும் பூரானும் இல்லையென்றால் அது அதிசயமே. You were Born with an Italian silver spoon. பாவம் சாவர்க்கர்! இந்த தேசத்துக்காக ஒருவேளை உணவு கூட நிம்மதியாக உண்ணவில்லை 15 வருடங்களாக. So, a Gandhi can never become a Savarkar.

தானும் தன் சகோதரனும் அந்தமான் சிறையில் 10வருடங்கள் தனித்தனியே தண்டனை அனுபவித்தனர். ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளக் கூட முடியாது. ஆனால் எந்த பதவியிலும் இல்லாத சகோதரியின் மாமியாருக்கே அரசாங்க செக்யூரிட்டி கொடுத்து சுகபோகத்தில் திளைத்த காந்திக்கு சாவர்க்கர் சகோதரர்களின் தியாகம் புரியுமா? You can never come closer to Savarkar.

பதவிக்காலம் முடிந்த பின்னும் அரசாங்கம் வழங்கிய சொகுசு பங்களாவில், வெட்கமேயில்லாமல், வசித்து வந்த ஒரு காந்திக்கு, சாவர்க்கர், அந்தமான் சிறையில் 13×7அறையில் 10 வருடம் சிறைத்தண்டனை அனுபவித்த வேதனை புரியுமா?

சிறையில் செக்கிழுக்க வைத்தனர் சாவர்க்கரை. தினமும் 15 கிலோ எண்ணெய் ஆட்டி எடுக்கவேண்டும். மாடுகள் செய்யும் வேலையை ஒரு தேசாபிமானியை செய்ய வைத்தனர். எதற்காக? இந்த தேசத்தை காக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டதற்காக. தாய்லாந்தில் விடுமுறைக்கு சென்று எண்ணெய் மசாஜ் செய்து கொள்ளும் கேடு கேட்ட ஜென்மங்களுக்கு இந்த கொடுமை புரியுமா, இல்லை இந்த தியாகம் தெரியுமா?

சாவர்க்கருக்கு கொடுத்ததே போல சக சிறைக்கைதிகளுக்கு கொடூரமான வேலை கொடுத்தபொழுது சிலர் அந்த கொடுமையை தாங்க முடியாமல் சிறையிலேயே தூக்கில் தொங்கிய கதை தெரியுமா காந்தியாரே. இந்து பூஷன் ராய் என்ற சிறைக் கைதி, அந்தமான் சிறையில், எப்படி மாண்டு போனான் என்று யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கண் முன்னால் சக இந்தியர்கள் சாவதைக் கண்டும், அந்தக் கொடிய துயரங்களை அனுபவித்தும், தற்கொலை எண்ணம் தவிர்த்து நெஞ்சில் உரத்தோடு வாழ்ந்து காட்டியவர் சாவர்க்கர். ஆம், A Gandhi can never become a Savarkar.

டெல்லி தர்பாரை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் “சிறைக்கைதிகள் அனைவரும் விடுதலை கோரி விண்ணப்பிக்கலாம்” என்ற அறிவிப்பு வருகிறது. உங்கள் தேசத்துரோக பாஷையில் “மன்னிப்பு”. விநாயக் தாமோதர் சாவர்க்கரும் விண்ணப்பிக்கிறார். ஆனால் அவரது விண்ணப்பத்துக்கு ஒற்றை வரியில் “நிராகரிக்கப்பட்டது” என்று பதில் வருகிறது பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து. இது 1911ல். சிலரின் தண்டனைக்காலம் குறைக்கப்படுகிறது, ஆனால் சாவர்க்கரின் தண்டனையில், சிறைவாசத்தில், எந்த மாற்றமும் செய்யவில்லை பிரிட்டிஷ் அரசு. இறுதியில் 1924ல், கட்டுப்பாடுடன் கூடிய, விடுதலை பெறுகிறார். 1910 – 1937 அவர் பிரிட்டிஷ் அரசின் பிடியில் இருந்தார்.

மனித வரலாற்றின் கொடூரமான சிறைத்தண்டனை அனுபவித்தவர்கள் அந்தமான் செல்லுலர் சிறைக் கைதிகள். அனைவரும் clemency விண்ணப்பம் செய்தவர்கள் தான், அதில் சாவர்க்கரும் ஒருவர். நீங்கள் “மன்னிப்பு கேட்டார் சாவர்க்கர்” என்று எள்ளி நகையாடுவது சாவர்க்கரை மட்டும் அல்ல, அவருடன் செல்லுலர் சிறையில் இருந்த அனைத்து தேசபக்தர்களையும் தான். உணர்வில், உதிரத்தில் இந்திய ரத்தம் இருக்கும் எவனும் அந்த செல்லுலர் சிறைக்கைதிகளை இப்படி கேவலப்படுத்தமாட்டான்.

புழுக்களுக்கு புலியின் வலிமை தெரியாது. புழுக்களின் உலகமே வேறு.

அடுத்தமுறை விடுமுறைக்கு தாய்லாந்து, இத்தாலிக்கு செல்லும்பொழுது கொஞ்சம் சாவர்க்கரைப் பற்றி படித்துப் பாருங்கள். இந்தியக்காற்றில் இருக்கும் தேசப்பற்று உங்களுக்கு அவரைப்பற்றி ஏதாவது புரியவைக்கும்.

  • ச. சண்முகநாதன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen + one =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Follow us on Social Media

19,023FansLike
389FollowersFollow
84FollowersFollow
0FollowersFollow
4,768FollowersFollow
17,300SubscribersSubscribe
Exit mobile version