- Ads -
Home உரத்த சிந்தனை என் வழி… தனி வழி!

என் வழி… தனி வழி!

என் வழி… தனி வழி… - இப்போது இந்தியா இப்படி சொல்கிறதாம்….. சுப்பிரமணியம் ஜெய்சங்கர் சொல்கிறார் தனது புத்தகத்தில்.

என் வழி… தனி வழி… – இப்போது இந்தியா இப்படி சொல்கிறதாம்….. சுப்பிரமணியம் ஜெய்சங்கர் சொல்கிறார் தனது புத்தகத்தில்.

விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே அதிகார மட்டத்தில் இந்திய அரசியலில் நாடு போற்றும் பெயர் பெற்றவர்களாக இருக்கிறார்கள். ஆனால் உலக அளவில் பெரும் செல்வாக்கு மற்றும் தனித்த அடையாளங்களுடன் காணப்படுபவர்கள் வெகு சிலரே. முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி திரு #டிஎன்சேஷன் போல.. தனது அதிகார வரம்புக்குள் அதன் எல்லை வரை சென்றவர். உலகின் மிக பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல் சமயத்தில் கட்டுப்படுத்தும் அதிகாரம் மற்றும் அதன் திறன் ஆகியவற்றை வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர். இன்றளவுமே இந்திய தேர்தல் ஆணையமே உலகின் மிக பெரிய ஜனநாயகத்தை தேர்ந்தெடுக்க உதவும் தலைசிறந்த அமைப்பாக கொண்டாடப்படுகிறது. அவர் தமிழராக உலக அளவில் கொண்டாடும் அதிகாரியாக வலம் வந்தார். இவருக்காக , இவரின் பணிக்காலத்தில் இவரின் அதிகாரங்களை குறைக்க அன்றைய காங்கிரஸ் அரசு பற்பல விதங்களில் எல்லாம் இம்சை செய்தது.

அதே போலத்தான் இவரும் திரு. #சுப்பரமண்யம்_ஜெய்சங்கர். தமிழர். 1970களில் இந்திய அரசு பணியில் சேர்ந்த இவர் தற்போதைய மத்திய அரசில் வெளியுறவு துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார். சுமார் 17 மொழிகளில் சரளமாக பேச மற்றும் எழுத தெரிந்த இவருக்கு சீன அரசியல் அமைப்புக்களின் உள்ள அதிகார மட்டத்தில் நெருங்கிய தொடர்பு உண்டு. கடந்த காலத்தில் வேறு யாருக்கும் தராத தனித்த அனுமதி கைலாஷ் மானசரோவர் பகுதியில் இவருக்கு சீனா தந்தது. அஃதே போல் தற்போதைய எல்லை பிரச்சினையில் இவரது தாக்கமும் பேச்சு வார்த்தையில் ஆதிக்கமும் மேலோங்கி நிற்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.

💞உலக அளவில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் இந்தியா வின் #வெளியுறவுகொள்கை மற்றும் அதன் போக்கில் மிக பெரிய மாற்றங்களை சந்திக்கின்றது என்பதை கண்கூடாக காணமுடிகிறது. அதன் காலங்காலமாக கடைபிடிக்கும் #அணிசேராக்கொள்கையில் இருந்து விலகி வருவது போல் தோன்றினாலும், உலக அளவில் ஜனநாயக நாடுகளான இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் என்கிறார் போல தனது கொள்கைகளை மாற்றிக் கொண்டு வருகிறது. இது தற்போது மிக முக்கியமான அம்சமாக உலக அளவில் உற்று பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் வரும் நாட்களில் உலக அளவில் அரசியல் போக்கையே மாற்றிட கூடிய சக்தி கொண்டது.

பலரும் கவனமும் இந்த புத்தகத்தின் மீது வீழ்ந்தது என்பதும் நிஜம். தற்போது தமிழிலேயே கிடைக்கின்றன. சொந்த புராணம் ஏதும் இல்லாமல் அதே சமயம் நாட்டின் வெளியுறவு கொள்கையில் உள்ள நுட்பங்கள் சில முக்கியமான நிகழ்வுகளை 6-7 தலைப்பு வாயிலாக இந்த புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. கூகுளில் முன்னுரையாக சில பகுதிகள் இடம் பெற்றுள்ளது.

ALSO READ:  ஆளுநர் ரவி செய்தது சரியா?

இவரின் பணி காலத்தைய சாகசங்கள் அசாத்தியமானது. இன்றளவும் சீன அதிகார அமைப்புகளில் இவரை குறை சொன்னதே இல்லை எல்லை பிரச்சினையில். அது போலவே இந்திய ராணுவத்தினர் அத்து மீறாமல் தலைமைக்கு கட்டுப்பட்டு மிக சிறந்த அணியாக எல்லையில் நிற்கிறார்கள். மத்திய அரசு இவரது துறைக்கும் நிர்வாகத்துக்கு கொடுத்த சுதந்திரத்தை சரியான விதத்தில் பயன் படுத்தி வித்தை காட்டி வருவது நன்றாகவே தெரிகிறது.

உலக அளவில் சீனா எதை நோக்கி நகருகிறது என்று சரியாக கணித்த மிக சிலருள் இவரும் ஒருவர். அதனால் தான் தற்காப்பு மற்றும் எதிர்த்தாக்குதல் நடவடிக்கைகளை முன்கூட்டியே கணித்து முன்னேற்பாடாக பலவற்றை செய்து வைத்திருக்க நம்மவர்களால் முடிந்தது.

ஒரு சுவாரசியம் சொல்வர்.
இந்திய ராணுவத்தினர் பயன்பாட்டிற்கு என விலை உயர்ந்த #அப்பாச்சி மற்றும் #சினூக் ரக ஹெலிகாப்டர்களை வாங்க பட்டபோது அவற்றை அவர்கள் இந்திய பாகிஸ்தான் எல்லையில் பயன் படுத்த போவது போல பாவ்லா பண்ணிக் கொண்டு இருந்தனர். ஆனால் நிஜத்தில் அவற்றை 2016-17 காலகட்டத்திலேயே இந்திய சீன எல்லையில் பயன் படுத்த திட்டமிட்டே இதனை வாங்கி உள்ளது தற்போது தெரிய வந்திருக்கிறது.

இது போக நமது சொந்த தயாரிப்பான HAL தயாரிப்பான LCH ரக ஹெலிகாப்டரை தரம் உயர்த்தி தொழில்நுட்ப மேம்பாடுகளை செய்ய திட்டமிட்டு அதற்கான வேலைகளையும் 2017 ஆண்டே முடுக்கி விட்டு உள்ளது மத்திய அரசு. உலகின் பார்வைக்கு வராமல் அதே சமயம் உலக தரத்தில் தற்போது இவைகள் தயாரிக்கப்பட்டு சோதனை பறத்தல்களையும் இமயமலையில் வைத்தே தற்போது வெற்றிகரமாக முடித்து விட்டது . சீன ராணுவம் மட்டும் அல்லாமல் உலக ராணுவ அதிகார அமைப்புகளில் உள்ளவர்கள் ஆடி போய் நின்றது இந்த இடத்தில் தான்.

ALSO READ:  த்தூ... கோலிவுட்! த்தூ... டைரக்டர்ஸ்! த்தூ... நடிகர்கள்! சாபம் விடும் சமூகத்தள வாசிகள்!

குறுகிய கால இடைவெளி எப்படி இவர்களால் இவ்வளவு வேகமாக முன்னேறி நிற்க முடிந்தது என்று தலையை பிடித்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இதன் விதை 2016-17 ஆண்டுகளிளேயே போடப்பட்டது என்பதும் அதன் பின்னணியில் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் போல்வாரின் உழைப்பு மற்றும் நாட்டின் நலனுக்காக தன்னலம் பாராது உத்தமர்கள் பலரும் இணைந்து செயல்பட்டு வருவது தற்போது தான் வெளி உலகிற்கு கசிய ஆரம்பித்து இருக்கிறது.

🌺இன்றைய தேதியில் எல்லையில் இந்திய ராணுவத்தினர் பலத்திற்கு சமமாக சீன ராணுவம் வர குறைந்த பட்சம் 24 முதல் 28 மாதங்கள் ஆகும் என்பதே நமது தரப்பினரின் அசாத்திய சாதனை.

பார்த்து பார்த்து கட்டமைப்பு செய்யப்பட்ட நிலையில் உள்ளது நமது இந்திய தரப்பினர். இவர்கள் வசம் அதி நவீன ஆயுத தளவாட வழங்கல் மற்றும் அதனை கொண்டு சேர்க்க திறன் வாய்ந்த ஹெலிகாப்டர் மற்றும் தாக்குதல் விமானங்கள் என சகல விதத்திலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன…..

உதாரணமாக இன்றுள்ள நிலையில் இந்தியா முன்னேறி தாக்க உத்தரவு பிறப்பிக்க பட்டால் சுமார் 70 மணி நேரத்தில் 1962 ஆம் ஆண்டில் நாம் இழந்த பகுதிகளில் 50% வரையும் 10 நாளில் 80% சதவிகிதமும் 20 நாட்களில் கிட்டத்தட்ட முழுமையாக கைப்பற்றி விட முடியும். இது தான் இன்றைய இந்திய ராணுவத்தினர் நிலை மற்றும் அவர்களின் பலம்.

இஃது மிகப்பெரிய விஷயம். தற்போது உள்ள சூழ்நிலையில் சீனாவால் நம்மை தடுத்து நிறுத்த முடியாது.

ஆனால் இந்தியா இதனை முன்னெடுத்துச் செல்ல வில்லை. இது தான் ஏன் என்கிற குழப்பம். இதற்கு பதில் சொல்லியுள்ளார் நமது பாரத பிரதமர் ஐநாவில் வைத்தே.

நாங்கள் பலம் குறைந்த காலத்திலும் கூட போரில் தோற்க வில்லை அதே சமயம் பலம் வாய்ந்த வலிமையான நிலையிலும் வலு சண்டைக்கு போகவில்லை என்று சொன்னார்.

அன்று இது பலருக்கும் புரிய வில்லை, நம்மவர்கள் உட்பட. ஆனால் இன்று இதன் அர்த்தம் மூடுபனி விலகிய காட்சியாக புரிய வர ஆரம்பித்தது இருக்கிறது. இதனை நம் கம்பன் சொன்ன கவியாக சொன்னால் எல்லையில் இன்றுபோய்நாளை_வா என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள் நம் மத்திய அரசாங்கத்தினர்.

ALSO READ:  டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்... யாருக்கு வெற்றி?!

சீனா இன்று பல விதங்களில் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கியுள்ளது, போதாக்குறைக்கு இயற்கை வேறு அங்கு கதக்களி ஆடிக் கொண்டு இருக்கிறது. இந்த சமயத்தில் அவர்களை தாக்காமல் இந்திய அரசு மௌனம் காக்கிறது. அதேசமயம் அவர்களின் சண்டி தனத்திற்கு முடிவு கட்ட அவர்களின் பல வழிகளில் பொருளாதார அமைப்பை முடக்க சொல்லி சொல்லி அடித்து ஆட ஆரம்பித்தது விட்டனர். இதே நிலை தொடர்ந்தால் சீனா தன் பொருளாதார பலத்தை இன்னும் மூன்று ஆண்டுகளில் இழந்து விடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் பலமற்ற பாகிஸ்தானிய பகுதிகளில் இரவோடு இரவாக சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தியதாக சொன்னவர்கள் இன்று ஆனானப்பட்ட சீனாவையே மடக்கி பிடித்து விட்டது இந்தியா என்று ஆச்சிரியமாக பார்க்க ஆரம்பித்து விட்டனர். இப்போது தான் இதனை தாமதமாக உணர்ந்த பாகிஸ்தான் நல்ல காலம் நாம் அன்று தப்பித்தோம் அபிநந்தன் விஷயத்தில், இல்லை என்றால் இரவோடு இரவாக நம்மை இந்திய ராணுவத்தினர் வாரி சுருட்டி கடாசியிருப்பார்கள் என்று அவர்கள் பாராளுமன்றத்தில் வைத்து தற்போது விவாதித்து கொண்டு இருக்கிறார்கள் .சீனாவோ தலையால் அடுத்து கொண்டு இருக்கிறது அன்றே இந்திய நகர்வுகளை கவனிக்க தவறிவிட்டோமே என்று….

இதனை எல்லாம் சொல்ல வேண்டிய நமது ஊடகங்கள் சில அதனை சொல்லாமல் இன்றளவும் சீன அடிவருடி வேலையில் கண்ணும் கருத்துமாக இப்போதும்கூட இருக்கிறது. என்ன செய்வது இவர்களை எல்லாம்……

ஆக மொத்தத்தில் ஒன்று மாத்திரம் நிச்சயம். இந்திய அரசியல் வரலாறு தற்போது உள்ள மத்திய அரசுக்கு முன், அரசுக்கு பின் என்று மாற்றி எழுதும் காலம் வரும் போல் தெரிகிறது. இல்லையென்றாலும் உலக அரசியல் வெகு நிச்சயமாக கொரானா காலத்திற்கு பின்னான அரசியல் களம் என்பதில் நம் பாரதத்தின் பெயர் பொன் எழுத்துக்களால் குறிக்கப்படும் காலம் ஒன்று வரும்.

இன்று திருவாளர் திரு சுப்பிரமணியம் ஜெய்சங்கர் அவர்களுக்கு பிறந்த நாள். அன்னவருக்கு வாழ்த்தினை சொல்லும் வண்ணம்…. இப் பதிவு. அவர் தம் குடும்பத்துடன் வாழ்வாங்கு வாழ நாமும் தாராளமாக வாழ்த்துவோம்.

வாழ்க பல்லாண்டு.
ஓங்குக பாரதத்தின் புகழ்.

💓 ஜெய் ஹிந்த் ஸ்ரீராம்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version