
மக்கள் தொகையின் அடிப்படையில் மத்திய அரசு தமிழகத்துக்கான நாடாளுமன்றத் தொகுதிகளைக் குறைக்கவுள்ளது என்று கூறி திமுக., ஓர் அரசியலை முன்னெடுத்தது. ஆனால் இது முழுக்க முழுக்க திசைதிருப்பும் அரசியல் என்றும், இல்லாத ஒன்றைக் கற்பனையில் யோசித்து, தமிழகத்தின் பிரச்னைகளை கையாலாகாத திமுக., அரசு திசை திருப்பப் பார்க்கிறது என்றும் பாஜக., தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்து வந்தார். அவரத் கருத்தை ஒட்டி, சமூகத் தளங்களில் பலர் தங்களது குரலை பதிவு செய்தனர். அவற்றில் சில…
நமது பாரதப் பிரதமர் திரு. Narendra Modi அவர்களும், உள்துறை அமைச்சர் திரு. Amit Shah அவர்களும், “மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை நடக்காது, அதனால் எந்த மாநிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படாது” என உறுதியளித்த பிறகும் கூட, தொகுதிகள் குறைகிறது என்ற பொய்யைப் பரப்ப அனைத்துக் கட்சிகளையும் இணைத்து ஒரு கூட்டம் நடத்திய திரு. M. K. Stalin அவர்களே,
அப்படியே அந்தக் கூட்டத்தில் கேரளக் கழிவுகளை தமிழகத்தில் கொட்டக் கூடாது என அம்மாநில முதல்வரிடமும், மேகதாது அணையை கட்டும் திட்டத்தை கைவிட்டு தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை வழங்கவேண்டும் என கர்நாடக முதல்வரிடமும் நீங்கள் வலியுறுத்தியிருக்கலாமே?
“தொகுதிகள் குறைப்பு” என்ற ஒரு பொய் குற்றச்சாட்டை நிரூபிக்க இத்தனை பாடுபடும் நீங்கள், நமது அண்டை மாநிலங்களால் புதைந்து போன தமிழக உரிமைகளை மீட்டெடுக்க ஒரு துரும்பையாவது கிள்ளிப்போட்டீர்களா?
சீர்குலைந்துள்ள சட்டம் ஒழுங்கை மறைக்க ஹிந்தி திணிப்பு என்றும், டாஸ்மாக் ஊழலை மறைக்க தொகுதி மறுசீரமைப்பு என்றும் விதவிதமான நாடகங்களை அரங்கேற்றுவதிலும், அடிக்கடி காணொளி நடித்து வெளியிடுவதிலுமே முழு கவனம் செலுத்தும் நீங்கள், நடைமுறையில் உள்ள மக்கள் பிரச்சினைகளுக்கு எப்பொழுது தான் தீர்வு காண்பீர்கள்?#DMKagainstTN
— வானதி சீனிவாசன்
குறைக்கவில்லை. அதிகமாகிறது. புதிய நாடாளுமன்ற இருக்கைகளின்
எண்ணிக்கை அதிகரித்த போதே, இது தெரிந்தது. அடுத்த பத்தாண்டுகளில்
நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை தமிழகத்திலும் அதிகரிக்கும். தெரிந்ததையும் தெரிந்துகொள்ளாத தத்திகள்!
தொகுதி மறுசீரமைப்பு 1971 முதல் தற்சமயம் வரை பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 543.
1971 இல் இந்தியாவின் மக்கள் தொகை 55 கோடி 2025-ல் இந்தியாவின் மக்கள் தொகை 146 கோடி. 1971 இல் தமிழ்நாட்டில் மாவட்டங்களின் எண்ணிக்கை – 15. 2025-ல் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் 36. 21 மாவட்டங்கள் புதிதாக உருவாக காரணம் என்ன?
மக்கள்தொகை அதிகரிப்பால் மாநிலங்களில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தினால் இது தவறா? இப்பொழுது தமிழக மக்கள் சுமார் 7.70 கோடி. 2025 முடிவில் சுமார் 8 கோடியை தாண்டும்.
பீகார் மக்கள் தொகை 2025 முடிவில் சுமார் 14 கோடி. தமிழகத்திற்கு 39
லோக்சபா தொகுதிகள். தமிழகத்தை விட இரண்டு மடங்கு மக்கள் தொகையை கொண்ட பீகாருக்கு 40 தொகுதிகள். இதுவா உண்மையான அரசியல் அமைப்பின் அடையாளம்?
மத்திய பிரதேசத்தின் மக்கள் தொகை சுமார்9 கோடி. மத்திய பிரதேசம் தொகுதிகள் 29. இப்பொழுதே மத்திய பிரதேசத்தின் மக்கள்தொகை தமிழ் நாட்டை விட சுமார் 1 கோடி அதிகமாக இருக்கிறது. ராஜஸ்தான்
மாநிலத்தின் மக்கள் தொகை 8.5 கோடி லோக்சபா உறுப்பினர்களின் எண்ணிக்கை 25. தமிழகத்தை விட குறைவு 14. குஜராத் மக்கள்
தொகை சுமார் 7.5 கோடிஅங்கு லோக்சபா தொகுதிகள் 26 தமிழகத்தை விட குறைவு 13.
இந்தியாவில் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 2025முடிவில் மக்கள் தொகை சுமார் 25 கோடி. தற்சமயம் உள்ள லோக்சபா
தொகுதிகள் 80. தமிழக கணக்குபடி உ.பி லோக்சபா தொகுதிகள் இருக்க வேண்டியது 120.
ஜார்க்கண்ட் மாநில மக்கள் தொகை சுமார் 4.2 கோடி. ஆனால் ஜார்கண்டில் 14 தொகுதிகள் தான் உள்ளது. ஹரியானா மக்கள் தொகை சுமார்3.2 கோடி . லோக்சபா தொகுதிகள் – 10. இருக்க வேண்டியது – 20.
மகாராஷ்டிராவின் மக்கள் தொகை சுமார் 13.5 கோடி. லோக்சபா தொகுதிகள்
48. மேற்கு வங்கம் மக்கள் தொகை சுமார் 10-6 கோடி. தற்சமயம் உள்ள லோக்சபா தொகுதிகள் 42. இருக்க வேண்டியது குறைந்தபட்சம் 50.
அஸ்ஸாம் மாநிலத்தின் மக்கள் தொகை சுமார் 4 கோடி. அங்கு உள்ள லோக்சபா தொகுதிகள் 14. தேவையான தொகுதிகள் 19. ஒடிசா மாநிலத்தின் மக்கள் தொகை சுமார் 5 கோடி. ஒடிசாவில் இப்பொழுது 21 தொகுதிகள்தான்
இருக்கிறது.
தமிழகத்தின் மக்கள் தொகையைவிட அதிகமாக உள்ள மாநிலங்களில் எங்களுக்கு ஏன் இந்த குறைபாடு என்று கேட்பது தவறா? அந்த மாநிலங்கள் தொகுதி மறு சீரமைப்பு வரும் பொழுது தங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று காத்திருக்கின்றன.
மக்கள் தொகையின் உயர்விற்கு ஏற்ப ஒரு மாநிலத்தின் லோக்சபா தொகுதிகள் உயர்த்தப்பட வேண்டும். அதன் எல்லைகள் மாற்றப்பட வேண்டும். இதற்கு தான் தொகுதி மறு சீரமைப்பு ஆணையம் என்று இந்தியாவில் ஒரு தனி அமைப்பு இருக்கிறது.
இந்த அமைப்பின் பரிந்துரையின் படி 2026 ல் இந்தியாவில் உள்ள மக்கள் தொகையின் அடிப்ப டையில் லோக்சபா தொகுதிகள் உயர இருக்கிறது. இது வரை உள்ள 543 லோக்சபா தொகுதிகள் இனி இருக்காது. அது நிச்சயமாக 800 ஐ தாண்டி இருக்கும்.
பீகாரில் குறைந்தது 70 லோக்சபா தொகுதிகள் இருக்கும். இதே மாதிரி வட இந்திய மாநிலங்கள் அனைத்தும் அதிகமான லோக்சபா தொகுதிகளை பெற இருக்கிறது. 2026 ல் தொகுதி மறு சீரமைப்பு ஆணையத்தின் அறிவுரைப்படி லோக்சபா தொகுதிக ளின் எண்ணிக்கை உயர்த்தப்படும். எந்த ஒரு மாநிலத்திலும் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது. தமிழகத்திலும் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை நிச்சயம் குறையாது.
தமிழகத்தில் 7-10 தொகுதிகள் வரை அதிகரிக்க இருக்கிறது. ஆனால் மற்ற
வடமாநிலங்களில் லோக்சபாதொகுதிகளின் எண்ணிக்கை மிக அதிகமாகி விடும். 1971 ல் இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 55 கோடி அதன் படி 543 லோக்சபா தொகுதிகள் உருவானது. இப்பொழுது மக்கள் தொகை சுமார் 146 கோடி. ஆகவே மக்கள் தொகை அடிப்படையில் லோக்சபா உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதில் எந்த தவறும் காண முடியாது.
சட்டசபை தொகுதி மறுசீரமைப்பில் தென் மாவட்டங்களுக்கு துரோகம் இழைத்த திமுக
2008 ல் கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி நடந்த போது தமிழக சட்டமன்ற தொகுதி மறுசீரமைப்பு நடந்தது. அப்போது 14 சட்டமன்ற தொகுதிகள் இருந்த சென்னை 16 சட்டமன்ற தொகுதியாக உயர்த்தப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி சட்டமன்ற தொகுதி நீக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் சட்டமன்ற தொகுதி நீக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டார் சட்டமன்ற தொகுதி நீக்கப்பட்டது.
சென்னை மாவட்டத்தில் 3Mp க்கள். 16 MLAக்கள் 200 மாநகராட்சி கவுன்சிலர்கள். நெல்லை மாவட்டத்தில் 1 MP மட்டுமே. 5 MLAக்கள் மட்டுமே
55 மாநகராட்சி கவுன்சிலர்கள் மட்டுமே. சென்னை 46,46,732 மக்கள் தொகைக்கு 16 MLA எனில் நெல்லையில் 33,22,644 மக்கள் தொகைக்கு குறைந்தது 11MLAக்கள் இருக்கனும்.
2008ல் மாநில அரசு திமுக தானே ஸ்டாலின் அண்ணாச்சி ! நாங்களும் சொல்லுவோம் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது Fair delimitation for south Tamilnadu
— கா.குற்றாலநாதன், வழக்கறிஞர், நெல்லை