16/08/2020 12:37 AM
29 C
Chennai

குமாரசாமி; குறுக்குப் புத்தி; குறுக்கு வழியில் நாற்காலி!

குமாரசாமியின் பதவியேற்புக்கு ஸ்டாலின் செல்ல போகிறாராம். அப்படிச் சென்றால் அது தமிழக விவசாயிகளுக்கு செய்யும் துரோகம். காவிரியில் கருணாநிதியின் துரோகக் கறையே இன்னும் கரையவில்லை. அதை இப்போதைய காவிரி மேலாண்மை ஆணையம் மூலமாக பாஜக போக்குகிறது. முடிந்தால் மோடியைப் பார்த்து நன்றி கூறி விட்டு வரவும்.

சற்றுமுன்...

மேலப்பாளையத்தில் தலைகீழாய் பறந்த தேசியக் கொடி! சதியா? விஎச்பி புகார்!

அதிகாரிகள் மீது உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்

பெண்கள் குறைந்த பட்ச திருமண வயதில் மாற்றம்: பிரதமர்!

பெண்களுக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவர்கள் இந்தியாவை வலிமையடை செய்கின்றனர்.

திருமணமாகி ஆறே மாதம்! கொரோனாவால் இளைஞர் உயிரிழந்த சோகம்!

28 வயதான மகன் ஒருவருக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது

டியூசன் படிக்க சென்ற சிறுமி! சில்மிஷம் செய்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்!

சிறுமிக்கு மொபைல் போனில் ஆபாச வீடியோவைக் காட்டி பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

வழிப்பாட்டு தலங்களுக்கான நெறிமுறைகள்! சென்னை மாநகராட்சி!

வழிபாட்டுத் தளம் அமைந்துள்ள, வார்டு, மண்டலம், முகவரி, நிர்வாகியின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்

05 May17 Kumarasaamy

குறுக்கு வழியில் கர்நாடக முதலமைச்சராக பதவி ஏற்க போகும் குமாரசாமி தன் குறுக்கு புத்தியை காட்ட ஆரம்பித்து விட்டார். அதுவும் தமிழ்நாட்டிற்கே வந்து அணைகள் நிரம்பினால் தான் தண்ணீர் திறந்து விடப்படும்.விகிதாசரப்படி எல்லாம் திறந்து விட முடியாது என்கிறார்.

விகிதாசாரம் என்றால் கர்நாடகாவில் மொத்த அணைகளும் நிரம்பினால் 740 TMC நீர் இருப்பு. அப்போது தமிழ் நாட்டிற்கு 177.50 TMC. அதே போல் அணைகளில் 74 TMC இருக்கிறது என்றால் தமிழ்நாட்டிற்கு 17.50 TMC உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை ஆணையத்தின் படி திறந்து விட்டே ஆக வேண்டும்.

இப்போதே கர்நாடக அணைகளில் 70 TMC க்கு மேல் நீர் உள்ளது. எனவே மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் ஜூன் மாதம் 10 TMC தண்ணீராவது திறந்து விடப்பட்டே ஆக வேண்டும். காரணம் இந்த வருடம் ஜனவரியில் இருந்து இது வரை ஒரு சொட்டு தண்ணீர் கூட திறந்து விடப்பட வில்லை. அந்த 70 TMCயையும் கர்நாடகா உபயோகத்திற்கே பயன்படுத்துகிறார்கள்.

நீதிமன்ற உத்தரவின்படி அதில் நம்முடைய பங்கை தர மறுத்தது முந்தைய காங்கிரஸ் அரசு. எனவே ஆணையம் மூலமாக இந்த விகிதாசார முறையை உச்ச நீதிமன்ற உத்தரவு மூலம் பாஜக  மத்திய அரசு வரைவு திட்டத்தில் சேர்த்து தமிழகத்துக்கு நன்மை செய்துள்ளது. ஆனால் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதிக்க முடியாது என்று திருவரங்கத்தில் – தமிழ்நாட்டில் தைரியமாக கூறி செல்கிறார் குமாரசாமி.

ஆனால் இந்த சுப்ரீம் கோர்ட் உத்தரவினால்தான் 125 இடங்களில் டெபாசிட் இழந்தும், வெறும் 37 இடங்களில் ஜெயித்து மூன்றாம் இடத்தில் இருந்தும் குறுக்கு புத்தி குமாரசாமி முதலமைச்சராக போகிறார்.

காவிரி தீர்ப்பை ஏற்க முடியாது என்றால் சுப்ரீம் கோர்ட்டின் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்ப்பையும் ஏற்றுக் கொள்ளாமல் தன்னுடைய மூன்றாவது இடத்திலேயே அமர வேண்டியதுதானே.

ஆனால் திரு எடியூரப்பா சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மதித்து பாஜக தலைவர் திரு வாஜ்பாய் போலவே பதவியை ராஜினாமா செய்து தனிப்பெரும் முதல் கட்சியாக இருந்தும் ஜனநாயகத்தின் மேல் தன்னுடைய நம்பிக்கையை மேம்படுத்தியுள்ளார்.

குமாரசாமியின் இந்த ஆணவ பேச்சுக்கு எதிர்கட்சிகளிடமிருந்து எந்த எதிர்ப்பையும் காணவில்லை. கருப்பு கொடிகளையும் காணவில்லை.

குமாரசாமியின் பதவியேற்புக்கு ஸ்டாலின் செல்ல போகிறாராம். அப்படிச் சென்றால் அது தமிழக விவசாயிகளுக்கு செய்யும் துரோகம். காவிரியில் கருணாநிதியின் துரோகக் கறையே இன்னும் கரையவில்லை. அதை இப்போதைய காவிரி மேலாண்மை ஆணையம் மூலமாக பாஜக போக்குகிறது. முடிந்தால் மோடியைப் பார்த்து நன்றி கூறி விட்டு வரவும்.

இனி கர்நாடகாவில் கல்வியாக இருக்கட்டும், விளையாட்டாக இருக்கட்டும், எந்த துறையாக இருக்கட்டும். மூன்றாம் இடம் பெறுபவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

குமாரசாமி முதல்வரானவுடன் இதுவே அவர் கையெழுத்து இடும் முதல் உத்தரவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் குமாரசாமியை முதலமைச்சராக்குவதன் மூலம் தற்கொலை செய்து கொள்கிறது.

பின்குறிப்பு: – வலைத்தளப் பகிரல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

பெண்கள் குறைந்த பட்ச திருமண வயதில் மாற்றம்: பிரதமர்!

பெண்களுக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவர்கள் இந்தியாவை வலிமையடை செய்கின்றனர்.

சமையல் புதிது.. :

சினிமா...

சுஷாந்திற்கு சொந்தமான வீட்டில் வசிக்கும் முன்னாள் காதலி!

சில ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட இந்த பிளாட் எவ்வளவு தொகை முதலில் செலுத்தப்பட்டது என்பது தெரியவில்லை ஆனால் சில மாதமாக தவணை கட்டப் படாமலிருக்கிறது.

அஜித் படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த மெகா ஸ்டார்!

சிறுத்தை சிவா இயக்கிய 'வேதாளம்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது

சகுந்தலா தேவிக்கு பிறகு… மற்றுமொரு ‘சேலஞ்சிங் பயோபிக்’!

இதற்குமுன் என்டிஆர் பயோபிக் கில் அவர் மனைவி பசவதாரகம் பாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

சூர்யாவின் ‘தெரிஞ்ச’ சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா?!

அவரின் சொத்து மதிப்பு ஆகியவை பற்றி நமக்கு பெரிதும் தெரியாது.

அதிர்ச்சி… சஞ்சய் தத்துக்கு நுரையீரல் கேன்சர்!

ரசிகர்களின் அன்பாலும் ஆசிகளோடும் தான் விரைவிலேயே ஆரோக்கியமாக திரும்பி வருவேன் என்று தெரிவித்தார்.