காலா இயக்குனர் ரஞ்சித் கவனத்திற்கு!

காலா இயக்குனர் ரஞ்சித் கவனத்திற்கு!

இந்துத்வத்தை எதிர்க்க அம்பேத்கர் அடையாளத்தை முன்னிறுத்தும் ரஞ்சித் அவர்களே…

இந்துத்வம் தான் அம்பேத்கர் அவர்களின் புகழுக்கு அன்றும் இன்றும் பெருமை சேர்த்து வருகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

காங்கிரஸீம் கம்யூனிஸ்டும் முஸ்லிம் லீக்கும் இணைந்து அம்பேத்கர் அவர்களை 1954 ல் தோற்கடித்த போது பாரதீய ஜனசங்கமும் இந்து மகா சபாவும் இணைந்து அம்பேத்கர் அவர்களை மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்து அவருக்குப் பெருமை சேர்த்தது தங்களுக்குத் தெரியாமல் போனது ஏன்?

எந்தப் பெரியாரிஸத்தை நீங்கள் தீவிரமாக ஆதரிக்கிறீர்களோ அந்த ஈ.வெ.ராமசாமி என்பவர் தான் தாழ்த்தப்பட்ட பெண்கள் மேலாடை அணிவதால் தான் துணி விலை உயர்ந்துவிட்டது என ஹரிஜன சமுதாயத் தாய்மார்களைத் தரம் தாழ்ந்து விமர்சித்தார் என்பதை நீங்கள் மறந்து போனது ஏன்?

எந்த கம்யூனிஸத்தை நீங்கள் தீவிரமாக ஆதரிக்கிறீர்களோ அந்த கம்யூனிஸம் ஆட்சி செய்த மேற்கு வங்கம்! திரிபுரா! கேரளா! மாநிலங்களில் இன்றுவரை பட்டியல் இன மக்களின் வாழ்வாதாரமும் ஜீவாதாரமும் அதள பாதாளத்திலேயே இருக்கிறது என்பதை நீங்கள் மறந்து போனது ஏன்?

நீங்கள் எந்த இந்துத்வ பாஜகவைத் தீவிரமாக எதிர்க்கிறீர்களோ! அந்த இந்துத்வ பாஜக தான் இன்று அம்பேத்கர் அவர்களுக்கு மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் அவருக்குப் பிரம்மாண்டமான நினைவிடம் அமைத்து அவருடைய புகழுக்குப் பெருமை சேர்த்தது என்பதை நீங்கள் மறந்து போனது ஏன்?

நீங்கள் எந்த இந்துத்வ பாஜகவை தீவிரமாக எதிர்க்கிறீர்களோ! அந்த இந்துத்வ பாஜக தான் இலண்டனில் அம்பேத்கர் அவர்கள் வசித்த வீட்டை விலைக்கு வாங்கி அந்த இடத்தை அம்பேத்கர் நினைவு இல்லமாக அறிவித்து அவருடைய பெருமையை உலகறியச் செய்தது என்பதை நீங்கள் மறந்து போனது ஏன்?

காலா படத்தில் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தைக் கேலி செய்கிறீர்களே? அந்த தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் தான் பட்டியல் இன மக்கள் அனைவருக்கும் பாஜக அரசு வீடுகள் தோறும் இலவசமாக கழிப்பறைகளை அமைத்துத் தந்து அவர்களுடைய சுகாதாரமான வாழ்விற்கு வழிவகை செய்துள்ளது என்பதை நீங்கள் ஏற்க மறுப்பதும் சொல்லத் தயங்குவதும் ஏன்?

காலா படத்தில் மத்திய அரசின் அவாஸ் யோஜனா திட்டத்தை ஏளனம் செய்கிறீர்களே? அந்த திட்டத்தின் மூலம் தான் பட்டியல் இன மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வாழ அவர்கள் அனைவருக்கும் பாஜக அரசு இலவச வீடுகளை கட்டிக் கொடுத்து வருகிறது என்பதை உங்களால் மறுக்கவோ மறைக்கவோ முடியுமா?

டிஜிட்டல் இந்தியா திட்டத்தைக் கடுமையாக விமர்சிக்கிறீர்களே? ஊழலையும் கறுப்புப் பணத்தையும் ஒழிக்க ரொக்கமற்ற பணபரிவர்த்தனை முறையை அறிவித்து டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் பாஜக உருவாக்கிய இணைய தள செயலிக்கு பீம் ஆப் என பெயரிட்டு ஊழலற்ற இந்தியாவை உருவாக்கும் உயர்ந்த இலட்சியத் திட்டத்திற்கு அம்பேத்கர் பெயரில் தான் இணைய தள செயலியை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது என்பது உங்களுக்கு தெரியாமல் போனது ஏன்?

திரு.ராம்நாத் கோவிந்த் அவர்களை தேசத்தின் குடியரசுத் தலைவராக தேர்வு செய்து பட்டியல் இன மக்களுக்குப் பெருமை சேர்த்தது இந்துத்வ பாஜக தான் என்பது உங்கள் கண்களுக்குத் தெரியாமல் போனது ஏன்?

இன்று இந்தியாவில் அதிக பட்டியல் இன சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளை கொண்ட ஒரே தேசிய அரசியல் இயக்கம் பாஜக என்பது உங்களுக்குத் தெரியாமல் போனது ஏன்?

இந்துத்வத்தை எதிர்க்க கம்யூனிஸ்ட்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களே? அவர்கள் ஆட்சியில் இருந்த மேற்கு வங்கம்! திரிபுரா! மாநிலங்களில் லெனின்! ஸ்டாலின்! உள்ளிட்ட ரஷ்ய நாட்டை சேர்ந்த தலைவர்களுக்கு சிலை வைத்து மரியாதை செய்தார்களே எங்காவது ஒரு இடத்தில் அம்பேத்கர் அவர்களுக்கு சிலை வைத்து அவர்கள் மரியாதை செய்தார்களா? அதை உங்களால் சொல்ல முடியுமா?

பாஜகவை எதிர்க்க காங்கிரஸை மறைமுகமாக ஆதரிக்கிறீர்களே? காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் மோதிலால் நேரு! ஜவகர்லால் நேரு! இந்திரா காந்தி! ராஜீவ் காந்தி! உள்ளிட்ட நேரு குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை மட்டுமே சூட்டினார்களே! ஏதாவது ஒரு திட்டத்திற்கு அம்பேத்கர் அவர்களின் பெயரை சூட்டி அவருக்குப் பெருமை சேர்த்தார்களா? அதை நீங்கள் என்றாவது சிந்தித்ததுண்டா?

நீங்கள் இந்துத்வத்தைத் தீவிரமாக எதிர்க்க இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும்
ஆதரிக்கிறீர்களே! இந்துக்கள் அனைவரும் அம்பேத்கர் அவர்களை இந்த தேசத்தின் அரசியல் சாசனச் சிற்பியாகவும் விடுதலைப் போராட்ட வீரராகவும் வணங்குகிறோம்! அதேபோல் நீங்கள் தீவிரமாக ஆதரிக்கும் இஸ்லாமியர்களும்! கிறிஸ்தவர்களும்! அம்பேத்கர் அவர்களை என்றாவது வணங்கி இருக்கிறார்களா?

அவ்வளவு ஏன் நீங்கள் தீவிரமாக ஆதரிக்கும் ஈவெரா வழிவந்த திராவிட இயக்கத்தினர் தமிழகம் முழுவதும் ஈவெராவுக்கு மக்கள் வரிப்பணத்தில் சிலை வைத்தார்களே எங்காவது ஒரு இடத்தில் அம்பேத்கர் அவர்களுக்குச் சிலை வைத்து மரியாதை செய்திருக்கிறார்களா?

அன்றும் இன்றும் என்றும் அம்பேத்கர் அவர்களைப் போற்றி வருவது இந்துத்வம் தான் என்பதை மறந்துவிட வேண்டாம்.

அது மட்டுமல்ல 800 ஆண்டுகள் இஸ்லாமிய ஆக்கிரமிப்பு ஆட்சியிலும் 200 ஆண்டுகள் கிறிஸ்தவ ஆக்கிரப்பு ஆட்சியிலும் 60 ஆண்டுகள் மதச்சார்பற்ற ஆட்சியிலும் அழிந்து போகாத! அழிக்க முடியாத! இந்துத்வத்தை …
அம்பேத்கர் அடையாளம், ஈவெரா அடையாளம், கம்யூனிஸ அடையாளம் என எந்த அடையாளத்தை முன்னிறுத்தினாலும் எவற்றாலும் எக்காலத்திலும் அழித்து விட முடியாது.

இயற்கையால் உருவான இந்துத்வத்தை செயற்கையால் அழிக்க முயல்வது சிறுபிள்ளைத் தனம் தனம் என்பதை மறந்துவிட வேண்டாம் ரஞ்சித் .

– சமூக வலைதளத்தில் பரவலாக வரும் விமர்சனம்