பண்டைய பாரசீகத்தில் கோலோச்சிய பாரத மதம்!

ஹிந்த்” என்ற சொல்லை அராபியர் பொதுவாக இந்தியா / ஹிந்து மதம் தொடர்பான எல்லாவற்றையும் குறிக்க பயன்படுத்தினர். கணிதத்தை பழைய அராபிய மொழியில் ”ஹ்ந்தி சத்” (ஹிந்துக்களின் சாஸ்திரம்) என்றே அழைத்தனர்.

முகம்மது நபி தோன்றுவதற்கு முன்னால் அரபு நாடுகளில் சிவ வழிபாடே நடைமுறையில் இருந்தது.

முகமது நபியின் பெரியப்பா ஓமர் பின் ஹாஸம் ஒரு கவிஞர் ஆவார். அவரது கவிதைகளில் ஹிந்த் மற்றும் ஹிந்துக்களைப் பற்றிய பல குறிப்புகள் இருக்கின்றன. மக்கள் அவரை ”அபுல் ஹகீம்” என்று மரியாதையோடு அழைத்தனர். இதற்குப் பொருள் “அறிவின் தந்தை” என்பதாகும். சில வக்கிரக புத்தி கொண்ட முஸ்லீம்கள் அவரை ”அபுல் ஜிஹல்” என்று அழைத்தனர். இதன் பொருள்

”அறியாமையின் தந்தை” என்பதாகும். அவர் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற காரணத்தால் அவரை முஸ்லீம்கள் வெறுத்தனர்.

இஸ்லாமிய ஜிஹாத் போர் ஒன்றில் இந்த சிவ பக்தர் கொல்லப்பட்டார் !
”ஸை அருல் அகுல்” என்ற கவிதைத் தொகுப்பில் காணப்படும் இவரது கவிதை ஒன்று
கஃபாவிக் ஜிகராமின் அலூமின் தப் அஸேரூ
கலூபன் அமத்தூல் ஹவா வ தஜக்கரூ (1)
வமத் ஜகேரிஹா ஊதன் எல்லா வத ஏ தில்வரா
வலுகயானே ஜாத் அல்லாஹ் ஹே யௌம தப் அஸேரூ (2)
வ அஹலோல்லாஹ் ஜெஹ் அரம்மன் மஹாதேவ
மனாஜில் இலமுத்தினே மினஹம வஸயதுரூ (3)
வ ஸஹவீ கேயாம் ஃபீ மகாமில் ஹிந்தே யௌமன்
வயகூலன் லாதஹஜன் ஃப இத்ரக் தவஜ்ஜரூ (4)
மஅஸ்ஸயரே அகலாகுன் ஹஸனன் குல்லஹும் (5)
நஜமுன் அஜாஅத் ஹும்ம காபூல் ஹிந்து (6)

இதன் பொருள் வருமாறு –

எந்த மனிதன் தனது வாழ்க்கை முழுவதையும் பாபச் செயல்களிலும் அதர்மத்திலும் கழித்துவிட்டானோ காம குரோதச் செயல்களால் வாழ்க்கையை நாசப்படுத்திக் கொண்டு விட்டானோ அவன் பச்சாதாபத்தோடு வாழ்வின் இறுதியில் நல்ல வழியில வர விரம்பினால் அவனுக்கு அது சாத்தியமாகுமா?
சாத்தியமாகும் !
அத்தகையவன் வாழ்வில் ஒருமுறை மனப்பூர்வமாக ஹ்ருதய சுத்தியோடு சிவனை தியானித்தால் உயர்ந்த ஆன்மிக நிலையை அடைவது உறுதி.

ஓ இறைவா ! என் வாழ்நாள் முழுவதையும் நீ எடுத்துக்கொண்டு – எனக்கு ஹிந்து தேசத்தில் ஒரே ஒரு நாள் ஜீவிக்க அருள் புரிவாய். ஏன்னெல் அந்த மண்ணை அடைந்தவுடன் மனிதன் ஜீவன் முக்தனாவது நிச்சயம்.

அந்த நாட்டில் (பாரத நாட்டில்) யாத்திரை மேற்கொள்வதால் அனைத்துப் புண்ணிய கர்மாக்களின் பலனையும் ஒருவன் அடைவதோடு பாரதீய மஹாபுருஷர்களின் சத்ஸங்கமும் கிடைத்து விடுகிறது.

தில்லி ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர் ஆலயத்தில் (பிர்லா மந்திர) கீதா வாடிகாவில் மேலே கண்ட இரண்டு அரபுக் கவிதைகளும் அவற்றின் அர்த்தத்தோடு பொறிக்கப்பட்டுள்ளன.

அரபு தேசத்தில் முகமது நபி தோன்றுவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அங்கு வாழ்ந்தவர்கள் பாரதீயர்களை மிகவும் மரியாதையுடன் கௌரவத்துடன் போற்றி வந்துள்ளனர். அரபு நாட்டில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அகில அரபியக் கவிஞர்கள் மாநாடு நடைபெறும். மிக சிறந்த கவிதை தங்க தட்டில் பொறிக்கப்பட்டு இந்த மாநாட்டில் வைக்கப்படும். பின்பு இது மெக்காவில் உள்ள காபாவிற்கு பார்வைக்காகவும் பாதுகாப்பிற்காகவும் வைக்கப்படும். இந்த ஆலயம் மக்கேசுவரம் என்று வரலாற்றில் அறியப்பட்டது. மஹேஸ்வரன் என்பது சிவநாமங்களில் ஒன்று என்பது நமக்கு தெரியும்.

காபா சிவாலயத்தைக் கைப்பற்றிய பின்னால் அந்த ஆலயத்தில் இருந்த விக்ரஹங்களை உடைக்கவும் அங்கிருந்த விலை மதிப்பற்ற பல நல்ல நூல்களையும் எரிக்கவும் செய்தார்கள். ஆனால் சில அரபு கவிஞர்கள் அவர்களிடம் மன்றாடி கேட்டுக் கொண்டதால் ஒரு சில பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்ட கவிதைகள் எரிக்கப் படாமல் விடப்பட்டன.

பின்னர் வந்த கலஃபா ஹருன் அல் ரஷீத்” எரிக்கப்படாமல் விடப்பட்டக் கவிதைகளை தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டார். இந்த நூல் ”ஸைஅகுல்” எனப் பெயரிடப் பட்டது. இந்த நூலில் பகவான் மஹாதேவர் (சுவன்) ஹிந்து விக்ரமாதித்யா போன்ற சொற்கள் மிகவும் மரியாதையுடன் பக்தியுடன் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த நூல் இஸ்தான்புல் (டர்கி) அரசு நூலகத்தில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த நூலில் மிகவும் குறிப்பிடதக்க ஒரு கவிதை உள்ளது. இதை இயற்றியவர் முகமத நபிக்கு பல நூற்றாண்டுகள் முன் வாழ்ந்த ”லபிபின் அகதப் பின் துர்பா” என்ற கவிஞர் ஆவார்.

அந்தக் கவிதை –
அயா முபார கேல் அரஜ் யூ ரௌயே நோஹா மிலன் ஹிந்தேவ
அராத கல்லாஹ் மஜ்யோனஜ்ஜேல் ஜிகரதுன் (1)
வஹல் தஜல்லீயதுன் எனானே ஸஹபீ அக அதுன் ஜிகரா
வஹாஜே ஹீ யோனஜ்ஜேலுரஸுல் மிலன் ஹிந்த்துன் (2)
யே குலுநல்லஹா ய அஹஜல் அரஜ அல்லமின் குல்லஹம்
ஃபட்டப்யூ ஜிகரதுல் வத ஹக்குனா மஜம் யோபஜ்ஜேலதுன் (3)
வா ஹோவ அல முஜ்ஜம் வாலயஜுரா மெஹல்லஹே தன ஜிலானா
ஃபாய்நோமா யா அரவ்வய்யோ முத்தபீன் யோபஸ்ஸேரியோ நஜதுன் (4)
வா இஸனேன் ஹுமாரிக் அதர் நாயிஹின்கா அகாவதுன் !
வா அஸ்நத ஆல ருதன்வோஹோவா மஸா எர்அதுன் (5)
(ஸை அருல் அகில் பக் – 157)

இதன் பொருள்:

புனித ஹிந்து பூமியே ! நீ பாக்யசாலி ! ஏனெனில் இறைவன் தன் பேரறிவை உனக்கன்றோ வழங்கியுள்ளான்.
ஹிந்து ரிஷிகளின் மூலம் நான்கு வேதங்களாக வெளிப்பட்ட அவனது பேரறிவு உலகின் நான்கு திசைகளிலும் நான்கு தீபஸ்தம்பங்களாக சுடர்விட்டுப் பிராகாசிக்கின்றன.
தனது பேரறிவு வெளிப்பட்டு விளங்கும் இந்த வேதங்களைப் பின்பற்றி வாழுமாறு மனித குலத்திற்கு இறைவன் ஆணையிட்டுள்ளான்.
அறிவு களஞ்சியமான யஜுர் சாமம் ஆகியவை இறைவனின் வரப்பிரசாதம். ஆகையால் சகோதரர்களே அவற்றை பக்தியுடன் பாராயனம் செய்வீர். அவை மோக்ஷத்திற்கு வழிகாட்டுபவை.
ரிக் அதர்வணம் ஆகிய இருவேதங்களும் சகோதரத்துவத்தை போதிக்கின்றன. இந்த வேதங்களால் தெளிவடைந்த யாரும் இருளை நோக்கித் திரும்பிச் செல்ல மாட்டார்கள்.
முகம்மது நபி தோன்றுவதற்கு முன்னால் அரபு நாடுகளில் சிவ வழிபாடே நடைமுறையில் இருந்தது.

(ஆதாரம் – ஹிந்து ஹிந்துவத்துவம் ஹிந்துராஷ்ட்ரம்-ஆர்.பி.வி.எஸ்.மணியன்)

ஹிந்த்” என்ற சொல்லை அராபியர் பொதுவாக இந்தியா / ஹிந்து மதம் தொடர்பான எல்லாவற்றையும் குறிக்க பயன்படுத்தினர். கணிதத்தை பழைய அராபிய மொழியில் ”ஹ்ந்தி சத்” (ஹிந்துக்களின் சாஸ்திரம்) என்றே அழைத்தனர்.

புளி என்ற உணவுப் பொருளை பாரசீக மொழியில் ”தாமர் ஏ ஹிந்தி” (இந்தியாவின் செடி) என்று அழைத்தனர். அது தான் மருவி ஆங்கிலத்தில் Tamarind ஆயிற்று. இப்படி ஏராளமான சான்றுகள் உள்ளன.

  • வாட்ஸ்அப் வழி தகவல்