தமிழர்க்கும் தமிழகத்துக்கும் மோடி அரசு செய்த தீமைகள்!

நரேந்திர மோடியின் மத்திய பா.ஜ.க. ஆட்சி தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் செய்தவைகள் – தமிழ்ப் போராளிகளின் பார்வையில் பார்க்கப் போனால் கொடூரமான தீமைகளின் பட்டியல் இது.

மத்திய அரசாக பா.ஜ.க தமிழகத்துக்கு இவ்வளவு தீமையைச் செய்திருக்கிறது என்றால், தப்பித் தவறி, எக்குத்தப்பாக  பா.ஜ.க. மட்டும் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்துவிட்டது என்றால், இன்னும் எவ்வளவு தீமைகள் தமிழர்களுக்கு வந்து சேரும்.! படிக்கவே அதிர்ச்சியாக இருக்கிறதே!

1. UDAY உதய் மின் திட்டத்தில் தமிழக மின்வாரியத்தை இணைத்து TANGEDCO வின் 22000 கோடி ரூபாய் கடனை அரசு ஏற்றது (இதன் மூலம் புதிய மின் திட்டங்களிப் வழிக்காக முதலீடு செய்ய முடிந்தது)

2. Swach Baarath  தூய்மை இந்தியா திட்டம் மூலம் (தமிழகத்தில் அதிகம் கிண்டலடிக்கப்படும் திட்டம்) கிராமப்புறங்களில் 25 லட்சம் கழிப்பறைகளை, நகர்ப்புறங்களில் 2.5 லட்சம் கழிப்பறைகளை கட்டிக்கொடுத்து, கிட்டத்தட்ட 80 % தமிழகத்தை வெட்ட வெளியில் மலம் கழிக்க அவசியமில்லாத பகுதி என அறிவித்தது.. இது 2014இல் 49 % ஆக இருந்தது இப்போது 80% !

3. முத்ரா திட்டத்தின் மூலம், சிறு குறு தொழில் துவங்க, விரிவாக்க இந்தியாவிலேயே அதிகப்படியாக, சுமார் 52000 கோடி கடன் வழங்கியது

4. காலம் காலமாக இருந்து வந்த தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, தமிழக மீனவர்களின் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு முதற்கட்டமாக 200 கோடி ரூபாய் ஒதுக்கி, மீனவர்களுக்கு பயிற்சி அளித்து வருவது (நம் போராளிகள் மீனவனுக்கு மீன் பிடிக்க எதுக்கு பயிற்சி என  அறிவார்ந்த கேள்வியைக் கேட்பார்கள். ஆனால் கேட்டால் எல்லா மீனவர்களுக்கும் இன்று உள்ள புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மீன் பிடிக்க தெரியாது என்று சொன்னால் கோபம் வரும்)

5.  ஆதாரை ரேஷன் கார்டோடு இணைத்து கிட்டத்தட்ட 60 லட்சம் போலி ரேஷன் கார்டுகளை (தமிழ்நாட்டில் மட்டும்) கண்டுபிடித்து பல்லாயிரம் கோடி மக்கள் வரிப் பணத்தை தவறானவர்கள் கைகளுக்கு செல்லாமல் பாதுகாத்தது

6. Smart City திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 12 நகரங்களை தேர்ந்தெடுத்து முதற்கட்டமாக ரூ.2400 கோடி ஒதுக்கியது (இதில் மாநில அரசு வெறும் 1% ஐ தான் இதுவரை செலவழித்திருக்கிறது என்பது வேறு கதை, ஆனால் இந்த ஆண்டு முதல் இது மேலும் வேகம்பிடிக்கும் என்று மாநில அரசு சொல்லி இருக்கிறது)

7. ரூபாய் 4000 கோடி ரூபாய் செலவில் சென்னையில் மிகப்பெரிய (தினம் 40 கோடி லிட்டர்) கடல் நீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்க நிதி ஒதுக்கி ஒப்புதல் அளித்தது

8. கோதாவரி காவிரி இணைப்பிற்கான வேலைகளை துவங்கி இருப்பது

9. சொட்டு நீர் விவசாயத்திற்கு 40 % மானியம் அளித்து 75000 ஹெக்டேர் நிலத்தை பாசனத்திற்கு கொண்டு வந்தது (மாநில அரசும் ஊக்கம் கொடுத்து வருகிறது)

10. பிஸ்கல் பீமா யோஜனா-  பயிர் காப்பீட்டு திட்டம் மூலம் தமிழக விவசாயிகளுக்கு ரூ. 2000 கோடிகளுக்கு மேல் நஷ்டஈடு வழங்கியது

11. மதுரை – வாஞ்சி மணியாச்சி – தூத்துக்குடி, வாஞ்சி மணியாச்சி – திருநெல்வேலி – நாகர்கோயில் மற்றும் கன்னியாகுமரி – நாகர்கோயில் – திருவனந்தபுரம் என்று மூன்று பாதைகளை இரட்டை வழித்தடமாக மாற்றுதல் மற்றும் மின்சார தண்டவாளங்களாக மற்ற ரூ.3600 கோடி ஒதுக்கி பணிகளை மேற்கொண்டிருப்பது (இது பல ஆண்டுகளாக  தென் மாவட்ட மக்களின் கோரிக்கை)

12. மேற்கொண்டு வரும் சாலை திட்டங்கள் – ரூ.2250 கோடி செலவில் தாம்பரம் செங்கல்பட்டு பறக்கும் மேல்வட்ட சாலை அமைத்தல்.

– ரூ.1500 கோடி செலவில் பூந்தமல்லி மதுரவாயல் விரைவு சாலை அமைத்தல்.

– ரூ.1000 கோடி செலவில் சென்னை நெல்லூர் விரைவு சாலை அமைத்தல்.

– சென்னை – தடா , திருச்சி சிதம்பரம், பூந்தமல்லி வாலாஜாபாத் , விழுப்புரம் – நாகப்பட்டினம் ஆகிய பாதைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றுதல்.

– மதுரை – சேலம் – கோவை பேரூந்து நிலையங்களை நவீன மயப்படுத்தல்.

– ரூ. 10000 கோடி செலவில் சென்னை – சேலம், ரூ.20,000 கோடி செலவில் சென்னை – பெங்களூரு அதி விரைவு சாலை அமைக்கும் திட்டம் (இன்னும் துவங்கவில்லை, ஆனால் விரைவில் இரண்டும் தொடங்கப்படவுள்ளன)

13. ரூ1900 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைத்தல்.

14.  பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா –  திட்டம் மூலம் இந்த நிதியாண்டுக்கு மட்டும் 25000 க்கும் மேற்பட்ட வீடுகள் (இந்தியாவிலேயே மத்திய பிரதேசத்திற்கு அடுத்த படியாக தமிழகத்தில்) ஏழைகளுக்கு கட்டிக்கொடுத்தல்.

இதையெல்லாம் தவிர்த்து பல ஆண்டுகளாக நிலவி வந்த காவிரி பிரச்னைக்கு நிரந்தர தீர்வை எண்ணி மேலாண்மை ஆணையம் அமைத்தல், ஜல்லிக்கட்டிற்கு காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட தடையை நீக்குதல், இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டு வந்த தமிழக மீனவர்களை காத்தல் (காங்கிரஸ் ஆட்சியில் 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டார்கள்) , ராஜபக்சேவை இந்தியாவின் ரா அமைப்பின் மூலம் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்புதல் (இதை ராஜபட்சவே ஒப்புக்கொண்டுள்ளார்)

இப்படி இன்னும் பல .. இந்தப் பட்டியல் இந்த 4 ஆண்டுகளுக்குள் நடந்தவை…நடந்து கொண்டிருப்பவை.

கடந்த 60 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியுடனும், இதற்கு முன் இருந்த காங்கிரஸ் திமுக ஆட்சியுடனும் ஒப்பிட்டுக் கொண்டால், தமிழகத்துக்கு பாஜக., செய்துவரும் தீமைகள், துரோகங்கள் எல்லாம் நன்றாகப் புரியும்!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.