சமூக வலைத்தளங்கள் அதிகம் பிரபலம் அடைந்துள்ள நிலையில், மற்றவர் எழுதிய எழுத்துக்களை அப்படியே எடுத்து தங்கள் பக்கத்தில் பகிர்ந்து, அதற்கு ‘படித்ததில் பிடித்தது’ என்ற தலைப்பினை இடுவது பெரும்பாலோரில் பழக்கம். அதாவது தங்களைக் கவர்ந்த எழுத்தை, அப்படியே பகிர்ந்து கொள்வது படித்ததில் பிடித்தது என்ற தலைப்பில் வரும்,. இது ஒருவகையில் திருட்டு மாதிரிதான்!

ஒரு எழுத்தாளர் சிரமப்பட்டு எழுதிய எழுத்துக்கு அங்கீகாரம் கிடைக்கச் செய்ய விடாமல், அதனை காபி பேஸ்ட் செய்து தங்கள் எழுத்துப் போல் போடுவது சிலரது ஸ்டைல். சிலரோ மிகவும் ஜாக்கிரதைப் பேர்வழிகள் என்பதுடன், கொஞ்சம் நேர்மையாளர் என்பவராக இருந்தால், இப்படி காபி பேஸ்ட் மேட்டருக்கு ‘படித்தில் பிடித்தது’ என்று தலைப்பில் பகிர்ந்து மகிழ்வார்கள்.

இப்போது இதே படித்ததில் பிடித்தது என்ற சமாசாரம், பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜாவின் டிவிட்டால் வெளியுலகுக்குத் தெரியவந்துள்ளது.

படித்ததில் பிடித்தது. கதையை திருடுறதுன்னு முடிவு பண்ணிட்டா நல்ல கதையா திருடுங்கடா – என்று ஹெச்.ராஜா டிவிட்டர் பதிவிட, அதற்கு பலரும் கருத்துகள் என்ற போர்வையில் மோசமான வார்த்தைச் சீண்டல்களால் ஆன மோதலை நடத்தி வருகிறார்கள்.

ஹெச்.ராஜாவின் டிவிட்டருக்கு வந்த பதில் பதிவுகளில் இரண்டு கருத்துகள்… இதெல்லாம் ஒரு படமா என்று சொல்பவர் நெகட்டிவ்வானவர் மட்டுமல்ல, சமூக விரோதிகள் என்று பட்டப் பெயர் சூட்டியிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்! நீங்களும் சமூக விரோதிப் பட்டம் வாங்கணுமா? சர்காரை பிரிச்சு மேயுங்க போதும்… தானா வந்து சேரும்..!

பேசாம அமைதியா இருங்க சார்… அனேகமா இன்னும் ரெண்டு நாள்ல படம் மண்ணுக்குள்ள போயிடும்! பப்ளிசிட்டி கொடுத்து ஓடவச்சிடாதிங்க

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...