இப்போது திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ளது. பலரும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப போட்டியிடும் நபரை தேர்வு செய்ய போட்டி போட்டு வருகின்றனர். அதே நேரம், திமுக.,வினரோ, ஒரு படி மேலே போய், ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் அங்கே போட்டியிட வேண்டும் என்று விருப்ப மனு கொடுத்து வருகின்றனர். இதற்காக அவர்கள் நிரப்பியுள்ள வேட்பாளர் விண்ணப்பத்தாள் படிவம் இப்போது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் இது குறித்து கலாய்த்து வருகின்றனர். எந்த வருடம் பிறந்தாரோ அதே வருடத்தில் அவர் உறுப்பினர் ஆகிவிட்டார். தற்போதைய தொழில், முரசொலி நிர்வாக இயக்குனர். கழக உறுப்பினராக இணைந்த வருடம் அவர் பிறந்த அதே 1977 தான்! கழகத்தில் வகிக்கும் பொறுப்பு கழக உறுப்பினர். சமூக ஆர்வலர். குறிப்பாக.. ஒரு விஷயம்தான் பலரையும் நகைப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது… அது – கழகம் நடத்திய போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றதுண்டா? என்ற கேள்விக்கு ஆம் என்றும், விவரம் என்பதில், கழகம் அறிவித்த அனைத்து போராட்டங்களிலும்… என்று இருப்பதும்தான்!

பிறந்தபோதே கட்சி உறுப்பினர் தான்.. என்று கூறி, பிறந்தபோதே இந்தியன் என்றும் தமிழன் என்றும் முத்திரை குத்துவது போல் திமுக உறுப்பினர் என்றும் கூறியிருப்பதாக திமுகவினர் புளகாங்கிதம் அடைந்து உள்ளனர்

பிறவி உறுப்பினர் உதயநிதி… பரம்பரை கொத்தடிமைகள் ராக்ஸ்… என்று கூறி கலாய்த்து வருகின்றனர் டிவிட்டர் பதிவுகளில்!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...