சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையில்… படிக்கப் படிக்க … திகட்டாத பக்கங்கள்!

3

சுவாமி விவேகானந்தா (12 January 1863 – 4 July 1902) பிறந்த தினம் இன்று ..

இந்தியாவில் நிறைய மகான்கள் தோன்றி இருப்பினும் , உலக அளவில் நமது சனாதன தர்மத்தை பற்றி விரிவாக எடுத்து கூறியவர் இவரே ..

எல்லாருக்கும் தெரிந்த ஒரே விஷயம் அவர் “சகோதர சகோதரிகளே ” என்று சொன்னது மட்டுமே !!

இவர் ஹிந்து மதத்தை பற்றி பேசிய விவரமான விசயங்களை பற்றி செய்தி முதல் முதலாக 11 September 1893 ஆண்டுமாநாட்டின் ஒன்பதாம் நாள் “Religion connected with art and science ” என்கிற தலைப்பில் உரையாற்றும் வாய்ப்பு விவேகானந்தருகு வழங்கப்பட்டது ..

அதை மிக சரியாக எடுத்து கையாண்டார் , இந்திய சனாதன மதம் வேதங்களை ஆதாரங்களாக கொண்டது என்றும் , வேதங்கள் அநாதி .. ஆரம்பமும் முடிவும் இல்லாதவை என்று கூறி .. இது உங்களுக்கு கேட்க்க அபத்தமாக இருக்கும் என்று கூறி …

பூமிக்கு புவியீர்ப்பு விசை இருக்கிறது என்று கண்டிபிடிப்பதர்க்கு முன்பே அது இருந்தது என்பது போல வேதங்கள் அவை உணரப்படும் முன்பே இருந்தன என்றும் மனித குலத்தின் பின்பும் அது இருக்கும் என்று ஒப்பிட்டு பேசினார் ..

பொருள் காலம் மற்றும் மனிதனின் ஆத்மாவின் அழியா நிலை பற்றி மிக அழகாக பேசி இருக்கிறார் ..

இந்த புத்தகம் சுமார் 1000 பக்கங்கள் கொண்ட “Neely’s history of the parliament of religions and religious congresses” அதே ஆண்டில் 1893 இல் வெளிவந்து விட்டது ..

இதில் விவேகானந்தரின் இரண்டு படங்கள் வெளிவந்து இருக்கிறது .. ஒன்றில் இந்தியாவில் இருந்து சென்ற ஐந்து பெயர் படம் வந்து இருக்கிறது .. தனிப்படம் தெளிவில்லாதபடி இருக்கிறது !!!

அவரது பேச்சை படிக்க படிக்க மிக பெருமையாக இருக்கிறது … நீங்களும் சென்று படியுங்கள்

https://archive.org/details/cu31924029062664/page/n469

  • விஜயராகவன் கிருஷ்ணன்
Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...