பொங்கல்… ஹிந்துக்கள் கொண்டாடும் பண்டிகையே!

பொங்கல் பண்டிகை, வயிற்றுக்குச் சோறு தரும், வாழ்க்கைக்கு வளம் பெருக்கும் பயிர்கள் செழிக்க வெய்யோன் சூரியன் பகவானாய் வணங்கப் படும் திருநாள். சூரியனுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாள். இயற்கையை தெய்வமாக வணங்கி வழிபடும் இந்து மத தத்துவங்களில், இயற்கைக் கடவுளாய் கொண்டாடப் படும் சூரியனுக்கு மதிப்பளித்து வணங்கி வழிபடும் திருநாள்.

இந்தத் திருநாள் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஹிந்துக்கள் அனைவராலும் கொண்டாடப் படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பெயர்!

ஆனால், தமிழகத்தில் மட்டும் இது தமிழர் திருநாள் என்ற பெயரில், கிறிஸ்துவர்களாலும் கொண்டாடப்படும் விழா என்று புதியதோர் குயுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துவ மதம் ஹிந்து மதத்தின் ஒவ்வோர் அம்சங்களையும் திருடி தன்னகத்தே புகுத்திக் கொண்டிருக்கிறது. வாடிகனில் இல்லாத விஷயத்தை வாடிப்பட்டியில் புகுத்தி, இந்திய பாரம்பரிய கலாசார வேர்களை அழித்துக் கொண்டிருக்கிறது.

இப்படி கிறிஸ்துவம் இந்த மகர சங்கராந்தி பொங்கல் பண்டிகையைத் திருடுவதற்கு முன், திராவிட இயக்க கிறிஸ்துவ சர்ச்சுகளின் அடிமைகள், கிறிஸ்துவர்கள் திருடுவதற்கு வசதியாக நம் பண்பாட்டுப் பூட்டை உடைத்துக் கொடுத்துள்ளனர்.

இந்த திராவிட- கிறிஸ்துவ கூட்டு, பல இடங்களில் கிறித்துவர்களுக்கு வெற்றியைத் தந்துள்ளது. அவற்றுள் ஒன்று இந்த கிறித்துவப் போக்கிரிப் பொங்கல்!

பொங்கல் தமிழர் திருநாள் என்ற பிரசாரத்தைச் செய்து கிறித்துவர்களுக்கு இடம் கொடுத்துள்ளனர் இந்த திராவிட இயக்கவாதிகள்.

பொங்கல் தமிழர் திருநாளா? தெலுங்கர்களும் பீஹாரிகளும் இதனைக் கொண்டாடுவதில்லையா?

ஹிந்து மதத்தின் பெரிய பண்டிகைகள் அனைத்தும், காஷ்மீரத்திலிருந்து கன்னியாகுமாரி வரையிலும் ஒரே விதமாக, ஆனால் வெவ்வேறு பெயர்களில் வடிவங்களில் மாற்றம் பெற்று கொண்டாடப்படுபவை. இப்பண்டிகைகளின் பெயர் மாறினாலும், இதனூடே இழையூடும் உணர்வு ஒன்றுதான்! பண்டிகையின் தாத்பரியம் ஒன்றேதான்.

பொங்கலுக்கு முன் தினம் நடக்கும் போகியை வட இந்தியாவில் ‘லோரி’ என்றும் ‘லோடி’ என்றும் கொண்டாடுகிறார்கள். இத்தினத்தில் அவர்களும் நம்மைப் போல மாலை நேரம், வீட்டின் முன்னர் நெருப்பேற்றி அதில் சில பொருட்களிட்டு பழையன போவதையும், புதியன பிறப்பதையும் வரவேற்கிறார்கள்.

வட நாட்டில் பொங்கல் கொண்டாடுவது இல்லை. அவர்கள் மகர சங்கராந்தி தான் கொண்டாடுகிறார்கள் என்று ஓர் எண்ணம் தமிழ் நாட்டில் பரவலாக உள்ளது. பல வட மாநிலங்களில் பொங்கலுக்குப் பொங்கல் என்றே பெயரிட்டு பொங்கப்பானை வைத்து, நாம் செய்வது போல், அன்ன பூஜை, மற்றும் சூரிய பூஜை செய்கிறார்கள்! ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால் அதுதான் உண்மை!

பொங்கல் என்ற பெயர் மட்டும் தமிழ்ப் பெயர், அதனால் அதற்கு இணையான வடநாட்டவரின் மொழியில் இதன் பெயர், “கிச்சடி”. இப்பெயரிலே தான் பெரும்பான்மையான மக்கள் பொங்கலைக் கொண்டாடுகின்றனர்.

நம்மைப் போல அவர்களும், மகர சங்கராந்தி எனும் பெயரில் இப்பண்டிகையைக் கொண்டாடுவதில்லை. “மகர சங்கராந்தி” என்பது வானியல் சாஸ்திரத்தில் உள்ள சாஸ்திரச் சொல் (Technical term). நாளடைவில் சில மாநிலங்களில் சாத்திரம் அறிந்தவர்கள், இச்சொல்லைக் கையாண்டதால், அவர்களைப் பின்பற்றிய மக்களும், அவரவர் மொழியில் பொங்கலுக்கு இணையான சொல்லைக் கைவிட்டு, மகர சங்கராந்தி என்னும் சொல்லக் கையாண்டனர்.

இவ்வாறு சிலர் செய்தாலும், வடநாட்டில், பெரும்பான்மை மக்கள் பொங்கலை “பொங்கல்” (கிச்சடி) என்றே கொண்டாடுகிறார்கள்!

இந்தியாவில் அனைத்து ஹிந்துக்களும் கொண்டாடும் இந்தப் பொங்கலும் போகியும் மாட்டுப் பொங்கலும் எப்படி தமிழர் திருநாள் என்று ஆயின? நமக்கு பிற மாநிலங்களின் மொழிகளைப் பற்றியோ, அவர்களின் பழக்கவழக்கங்களைப் பற்றியோ, இலக்கியங்கள் பற்றியோ ஒன்றுமே தெரியாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டதே இதன் அடிப்படைக் காரணம்.

இதைச் செய்த பெருமை கொஞ்சம் நேருவின் பாடத் திட்டத்திற்கும், அதிகமாக திராவிட மாயைக்கும் உரியது. இந்த முட்டாள்தனத்தை ஏற்றுக்கொண்ட தமிழ் ஹிந்து சகோதரர்கள் இன்றும் தொலைக் காட்சியிலும் நாளிதழ்களிலும் இணைய தளங்களிலும், எங்கு பார்த்தாலும் “தமிழர் திருநாள்” என்று பெருமை பேசிக்கொண்டு திராவிட மூடத்தனத்தைப் பரப்புகிறார்கள்!

இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைத்திட, பொங்கல் திருநாளை ‘இந்துக்களின் திருநாள்’ என்று நாம் ஊரறிய ஒரு புதிய கோஷம் போடவேண்டியிருக்கிறது. தூங்கிக்கொண்டிருக்கும் தமிழர்களை எழுப்பவேண்டும். இல்லையேல், வெகு விரைவில், பொங்கலைக் கொண்டாட உங்கள் வீட்டருகே உள்ள சர்ச்சுக்குப் போகும் நிலை ஏற்படும்!

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.