கையைக் கடிக்கப் போகும் கேபிள் டிவி கட்டணம்!

புதிய கேபிள் முறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி ஆகிவிட்டது. எனவே நாளை மறுநாள் முதல் புதிய முறை அமலுக்கு வருகிறது.

மக்கள் பெரிதும் துன்பம் கொள்ளப் போகிறார்கள். கூடுதல் செலவு மட்டுமல்ல..கூடுதல் குழப்பம் கூட. சேனல்களை தேர்ந்தெடுப்பது கிராம கேபிள்களில் இடியாப்பச் சிக்கல். புதிய முறைப்படி 100 இலவச சேனல்கள் 153 ரூபாய் 40 பைசா. (NCF) அவற்றில் 25 தூர்தர்ஷன் மீதி 75 பொதுவான இலவச சேனல். அதை நுகர்வோர் தேர்ந்தெடுக்கலாம் என்று கூறப்பட்டாலும் கேபிள் ஆபரேட்டர்களால் ஒவ்வொருவருக்கும் அந்த வசதியைச் செய்து தர முடியாது

75க்கு மேல் தேர்ந்தெடுக்க ஒவ்வொரு 25க்கும் 20 ரூபாய் எக்ஸ்ட்ரா. இப்போது கிட்டத்தட்ட இதே கட்டணத்தில் குறைந்தது 200 சேனல் பார்க்கும் வாய்ப்பு உள்ளது. அவற்றில் 100 இலவசம். 25 தூர்தர்ஷன். ஆக 75க்கு 153 ரூபாய் 40 பைசா. (NCF) மீதி 125 சேனல்களுக்கு ஒவ்வொரு 25-க்கும் 20 ரூபாய் வீதம் மேலும் நூறு ரூபாய். ஆக கூடுதல் செலவு மாதம் 150 முதல் 160 ரூபாய் வரும். இந்த பட்ஜெட் இலவச சேனல்கள் மட்டும் தான்

சன்,கே, விஜய், ராஜ், ஜெயா, ஜி, மெகா மற்றும் பெரும்பாலான மியுசிக் சேனல்கள் கட்டண சேனல்கள். இன்று நீங்கள் என்ன பார்த்துக் கொண்டு இருக்கிறீர்களோ அவற்றை பிப்ரவரி முதல் தேதி முதல் பார்க்க 100 முதல் 150 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியது வரும். அரசு கேபிள் தமிழ்நாட்டில் மட்டும் தான் இருக்கிறது. குறைந்த கட்டணத்தில் அதிகப்படியான சேனல் பார்க்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார் ஜெயலலிதா.

மக்களுக்கு விருப்பப்படி தேர்வு செய்யும் வசதி இருந்தது. கேபிள் ஹவுஸ்ஹோல்ட் எனப்படும் கேபிள் வீடுகள் 2 டிவி கூட வைத்து உள்ளன. அத்தகைய வீடுகளில் மாதம் ஆயிரம் ரூபாய் கட்டணம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. புதிதாக கேபிள் சந்தைக்கு வந்துள்ள பா ஜ ஆதரவு நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுப்பதற்காக செய்யப்படுகின்ற ஏற்பாடு.

குறைந்த கட்டணத்தில் கேபிள் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதில் முன்னிலையில் இருந்த தமிழ்நாடு அரசு கையது கொண்டு மெய்யது பொத்திக் கிடைக்கிறது. நாடும் நாட்டு மக்களும் எப்படியோ நாசமாகப் போகட்டும். நமக்கு வேண்டியவர்கள் நன்றாக இருந்தால் சரி!

  • பத்திரிகையாளர் ‘தராசு’ ஷ்யாம்

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...