நல்ல தலைமைக்கு இறைவன் அளிக்கப் போகும் பரிசு..!


ஸ்ரீ வேளுக்குடி க்ருஷ்ணன் அவர்கள் திரு. மோடியை பற்றி நேராக குறிப்பிடாது.. நல்ல தலைமைக்கு இறைவன் அளிக்கப்போகும் பரிசு பற்றி….

பழங்கால நியாய சாஸ்த்ரத்தில் குட்டிக்கதை ஒன்று சொல்லப்படும்.

ஒரு மகான் தனது அன்னையிடம்,” நான் தேர்தலில் நிற்கப்போகிறேன்,நாட்டு மக்களுக்கு நல்லது செய்வதற்காக” என்று அழுத்தம் திருத்தமாக தனது முடிவாக–அபிப்ராயம் கேட்காமல்–கூறியபோது,அவன் அம்மா

அவனிடம்,”வேண்டாம்”என சொல்ல,”ஏன்”என்று மகன் வினவினான்.

அதற்கு அவள் கூறிய காரணங்கள் சிந்திக்க தக்கவை!

”எனக்கு நம்பிக்கை உள்ளது:நீ முனைப்புடையவன் அதனால்நீ தேர்தலில் ஜெயிப்பாய்;நேர்மையாக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றுநினைப்பாய்.

ஆனால் இவ்வுலகில் அப்படி நேர்மையாக பணி புரிபவர்களை மக்களுக்கே பிடிக்காது.

சரி வேண்டாம்”நல்லது செய்ய வேண்டாம் தீமையே செய்வோம்”..அப்படின்னு நீ நினைத்தால் ஒரு சிலருக்கு உன் மேல் அதனாலேயே வெறுப்பு வரும்.
ஆதலால் நீ நல்லது பண்ணினாலும் தப்பு தீமை செய்தாலும் தப்பு..எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டும் அதனால் தேதலில் நிற்கவே வேண்டாம்”

என்று logic ஒற்றி அறிவுரை கூறினாள்.

மகனும் logic நியாய சாஸ்த்ரத்தை ஒட்டியே பதில் கூறுகிறான் இவ்வாறு!

“நான் நல்லது செய்தால் கடவுளுக்கு பிடிக்கும்.தீமை செய்தால் மக்களுக்கு பிடிக்கும்.ஆகையால் நன்மை செய்தாலோ தீமை செய்தாலோ யாருக்கோ பிடிக்கத்தானே செய்கிறது.அதனாலயே என் விருப்பப்படி தேர்தல்ல நிற்பது எனக்கு உகந்ததாக படுகிறது”

இப்போ இந்த logic நியாய சாஸ்த்ர வாதத்தை சற்று நீட்டி பார்ப்போம்.

உலகிலே பொறுப்பை ஏற்று கடமையை செய்யும் அரசர்கள் என்று ஒரு ரகமும்..எதையும் அலட்டிக்கொள்ளாமல் எந்த கர்ம வினைகளையும் செய்யாமலே இருந்த அரசர்கள் ஒரு ரகம் என தொன்று தொட்டு இருந்தே வந்திருக்கின்றனர்.

இருக்கட்டும்! முதலில் அந்த தாய்” நல்லது செய்தால் ஏன் மக்களுக்கு பிடிப்பதில்லை” என்று சொன்னதன் காரணத்தைஆராய்வோம்.

நல்லது என்பது உடனடி நல்லதா நீண்ட காலம் கழித்து நிலைத்து நிற்கும்நன்மையா என்பது மக்களின் புரிதலில் அடங்கியுள்ளது.மக்களுக்கு நிரந்தர நன்மை செய்ய வேண்டி முனைந்து நிற்கும் தலைவர்கள் களத்தில் இறங்கும்போது சில களைகளை எடுக்க நேரிடும்.

அப்போது சில சில சத்தங்கள் வரத்தான் செய்யும்.அதாவது இதென்ன இவர் பெரிய உத்தமரோ?என்ன புதுசா புரட்ட போகிறாரோ என்றெல்லாம் சமுதாயத்தில் வேடிக்கை பார்க்கும் நபர்கள் கூச்சல் போடத்தான் செய்வர்.அந்த சத்தத்தில் உடனடி நலன் எதிர்பார்த்துஅது உடனடியாக வராமல் ஏமாந்த மக்களுக்கு இந்த சத்தம் காதில் விழுந்து அவர்களை உபத்ரவம் செய்கிறது.

தீயவர்கள் பாதிக்கப்படும்போது சத்தம் வருகிறது.ஏதும் செய்யாமல் இருந்தவர்களுக்கு எந்த தொந்தரவும் இல்லை.ஏனெனில் களை எடுப்பவர் முனைப்பாக இருக்கும்போது நல்லவர்களுக்கு எல்லாமே குழப்பமாக இருக்கும்.

இந்தஒண்ணுமே செய்ய முனையாமல் இருந்திருக்கிறாரே(தலைவராக) அவர் பாடு சுலபம்.

அவர் லஞ்ச ஊழல் செய்பவரோடோ,
தீவிரவாதியுடனோ தொடர்பு கொள்பவராகவோ,
ஊடகங்களோடு தோழனாக கூட இருக்கலாம்..நல்லவர் கெட்டவர் என்று அலட்டிக் கொள்ளாமல் யாரோடயும் தொடர்பு கொள்பவராய் இருப்பார்.

எல்லோருக்கும் நல்லவராக இருப்பார்.வல்லவராக இருக்க முயலவே மாட்டார்.எதுவும் செய்யாமல் இருப்பவர் இருக்கும்போது எல்லாமே நலமாக இருப்பது போல தெரியும்.

இப்போது களை எடுக்க முனைபவர்பால் உடனடி நன்மை எதிர்பார்க்காதவன்..நீண்ட கால தீர்வுதான் நிரந்தர தீர்வு என நம்பியவன் அந்த தலைவனிடம் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறான்?

”அவர் தன்னலம் இல்லாதவரா,நாணயம் மிக்கவரா,தேச நலன் உடையவரா,யாருடைய கைப்பாவை ஆக இல்லாமல் இருக்கிறாரா,எவ்வித குற்றச்சாட்டோ அவரிடம் இல்லையா, இறைவன் அருள் உள்ளவரா,அயராது தனது இலஷியத்தை நோக்கி உழைப்பவரா…”
என்று பல தரக்கட்டுப்பாட்டுடன் அவரை எடை போடுகிறான்.

அப்படி ஒரு தலைவனை இனம் கண்டு கொண்டு விட்டால் போதும்:அவனுக்கு வரும் கிளர்ச்சியினை சொல்லி மாளாது!

உடனடி பலன் வராவிட்டாமலும் பரவாயில்லை நாம் கொஞ்சம் அவருக்கு அவகாசம் கொடுக்கலாமே என்று அவரிடம் தனது எதிர்காலத்தை ஒப்படைத்து நம்பிக்கையுடன் காத்துக் கொள்ள தயாராகி விடுவான்.

ஏனெனில் அவனுக்கு கடந்த கால அனுவங்களில் கிடைத்த பாடம் இதுவே!

“ இத்தகைய குண நலன்கள் இல்லாதவரை நம்பினால் நன்மை நமக்கும் தேசத்துக்கும் ஏற்பட போவதே இல்லை”என்பதை அவன் கசப்புடன் உணர்ந்தே வந்திருக்கிறான்.

இப்போ logic நியாய சாஸ்த்ரத்தின் இரு பக்கமும் நிறைவு பெற்றாயிற்று.

இனி இக்குட்டிக் கதையில்பொதிந்திருக்கும் நியாயத்தை பாருங்கள்.

.கடவுளுக்கு பிடித்து விட்டால்.எதுவும் நல்ல படியாக முடியும்.அம்மகன் சொன்னது”நல்லது செய்தால் கடவுளுக்கு பிடிக்கும்”என்பது மட்டுமே!
அதன் நீட்சி இதுவே!

கடவுள்,அப்படிப்பட்ட நன்மை செய்ய முனைந்த..செய்கிற, அத்தலைவனை மக்களுக்கு பிடிக்கும்படி செய்து விடுவார்!.

ஏனெனில் கடவுளுக்கு மக்களுக்கு நன்மைஏற்படணும் என்ற எண்ணம் மேலோங்கி உள்ளதல்லவா?எனவே அந்த களை எடுக்க வந்த அம்மகானை மக்களுக்கு பிடிக்க செய்ய இறைவனே அருள் புரிவார்.

ஸ்வாமி வேளுக்குடி க்ருஷ்ணன் என்பணி என்ற app மூலம் தெரிவித்த கருத்தை ஓரளவு சிதைக்காமல் எழுதியுள்ளேன் என நம்புகிறேன்.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...