இன்று… ரத்தக்கறை படிந்த திருகோணமலை குமாரபுரம் படுகொலை நினைவு நாள்!

இன்று இரத்தக்கறை படிந்த திருகோணமலை குமாரபுரம் படுகொலையின் நினைவு நாள்!.11.02.2017

தமிழரின் வாழ்வில் சோகம் படிந்த சம்பவங்களில் இன்றைய நாள் 23 வருடம் முன் திருகோணமலை குமாரபுரம் படுகொலையும் ஒன்று.

1996 மாசித்திங்கள் 11ஆம் நாள் கிழக்கு மாகாணத்தில் தன் வலிகளோடு கொடுமையான வலி ஒன்றையும் சுமந்த நாள்.

காலங்கள் எத்தனை கடந்து போனாலும் பிரதேசமக்கள் இப்படுகொலை நடந்த நாளை கரிநாளாக பிரகடனம் செய்து வருடாந்தம் துக்கதினமாக அனுஸ்டித்து வருகின்றனர்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒவ்வொரு தருணங்களும் சிங்கள கொடிய அரசின் கோர முகத்தை தமிழினம் சுமந்து வந்திருக்குறது தமிழீழ விடுதலைப்புலிகளுடன் நேரடியாக மோத திராணியற்ற சிங்களம் தனது கோரமுகத்தை தமிழீழ மக்கள் மீது திணிப்பது என்பது எமக்கு புதிதல்ல அதை நியப்படுத்திய கொடுமையான நாளாகவே இன்றைய நாள் அமைந்திருக்கின்றது.

தமிழரின் தலைநகரான திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பகுதியின் குமாரபுரம் கிராமம் தமிழினத்தின் படுகொலை வெறியர்களால் களையிழந்த நாள் தமது வாழ்வும் ஆதாரங்களும் தமது கிராமத்தின் வளங்கள் என்று வாழ்ந்து வந்த அந்த அப்பாவிக் கிராமத்தின் மீது சிங்களத்தின் கொடிய படை பாரிய இனவழிப்பை செய்த நாளாக இன்றைய நாள் வரலாறாகி கிடக்குறது.

அன்றைய நாள் அதிகாலை நேரம் தமது பணிகளில் சுறுசுறுப்பாக இருந்த கிராமத்தில், என்ன நடக்க போகுது என்று தெரியாது ஓடித்திரிந்த சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தம்மை பெரும் இன்னல் சூழ இருப்பது தெரியாமலே சந்தோசமாக இருந்தார்கள்

திடீர் என்று கிராமம் அல்லோல கல்லோலப்பட்டது. சிங்கள இராணுவமும் அதன் துணைப்படையும் கிராமத்தை முற்றுகைக்குள் கொண்டு வந்தனர். அங்கே இருந்தபெண்கள் குழந்தைகளை தம் பாலியல் வெறிக்கு உள்ளாக்கினர். வந்திருந்த சிங்களத்தின் படைகள் தமது இச்சைகளை கூட்டாக தீர்த்து கொண்டனர். உறவுகளின் கண் முன்னே தமது உயிரை இழந்து கொண்டிருந்தனர்குமாரபுரம் பெண்கள். தடுக்க வந்த உறவுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தமது இச்சையை நிறைவேற்றிய பின் ஒவ்வொருவராக சுட்டு கொன்றனர்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இரண்டாம் ஈழப்போர் ஆரம்பித்த காலத்தில் நடந்த மிக கொடூரமான துன்பியல்நிகழ்வு இது . இதன் மூலம் 9 பெண்கள், 12 வயதிற்குக் கீழ்ப்பட்ட 9 பிள்ளைகள் உட்பட 24 பேர் படுகொலைசெய்யப்பட்டனர். மேலும் 26 பேர் மிக மோசமாகப் படுகாயமடைந்தனர். கோர வெறியாடி சிங்களம் தனதுஇனவழிப்பை செய்து முடித்தது. அப்பாவி மக்கள் தமது இருப்பை இழந்து உறவுகளை இழந்து நின்றார்கள்.

சர்வதேசம் வேடிக்கை பார்த்தது. இன்று நல்லாட்சி என்று கூறும்சி சிங்கள அரசு தனது படைகள் செய்த போர் குற்றங்களை இல்லை என்று கூறி மறுத்துவரும் இந்த நிலையில் விசாரணை என்ற பெயரில் தனது இராணுவத்தை சேர்ந்தவர்களை இப்படுகொலைகள் தொடர்பாக ராணுவ வீரர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, 2004ஆம் ஆண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற வழக்கில், 8 இராணுவ வீரர்கள் சநதேகநபர்களாக இனங்காணப்பட்ட நிலையில், ஒருவர் பின்னர் நிரபராதியென விடுவிக்கப்பட்டார். மற்றொருவர் இறந்துவிட்டார். எஞ்சிய 6 இராணுவ வீரர்களுக்கு எதிராக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அவர்களும் குற்றமற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டு கடந்த 2016ஆம் ஆண்டு யூலை மாதம் அநுராதபுரம் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு பெரும் சாதகத்தை சிங்கள தேசத்துக்கு செய்துள்ளது. தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியை தர மறுக்கும் சிங்களத்தோடு கை கோர்த்து நிற்கும் இந்தியா இதை எல்லாம் கண்ணுக்குள் தெரியாத மறைபொருள் என்ற நினைப்பில் தூங்கி கொண்டிருக்கிறது. குறிப்பிடத்தக்கது.

நாங்கள் தினமும் அழிக்கப்பட்டு கொண்டிருந்தோம். சிங்களகொடிய இனவாதிகளால் செத்துக் கொண்டிருந்தோம். இன்று குமாரபுரம் படுகொலை நடந்து 23வருடங்கள் ஆனநிலையில் எந்த நீதிகளுமற்று கிடக்கிறது தமிழினம்.

கட்டுரை: ரிசிந்தன் நிசாந்த்
Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...