மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர்..! வலுக்கும் கோரிக்கைகள்!

மதுரை விமான நிலையத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன்  #முத்துராமலிங்க_தேவர் பெயரை வைக்க வேண்டும் என்பது பல தரப்பினரும் முன்வைக்கும் நீண்ட நாள் கோரிக்கை!

இதற்காக #பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் #வெங்கய்யா_நாயுடு  தேசிய தலைவராக இருந்த போது பசும்பொன் வந்தார்! அவரிடம் கோரிக்கை பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் தெரிவிக்கப் பட்டது! அதை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் #சுப்ரமணிய_சுவாமி  மற்றும் 
#இல_கணேசன் ஆகியோர்களால் கோரிக்கை வைக்கப்பட்டது!

அதற்கு பதிலளித்த விமான போக்குவரத்து துறை அமைச்சர் #கஜபதி_ராஜி  இது மாநிலம் சம்மந்தபட்டது என்பதால் தமிழக அரசு கோரிக்கை வைத்தால் நாங்கள் பரிசீலிக்கிறோம் என்றார். இந்த வேளையில் திடீரென மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மீனாட்சி பெயரை விமான நிலையத்திற்கு வைக்க வேண்டும் என ஒரு தனி நபர் வழக்கு தொடுத்து அது குறித்து 6 மாதத்திற்குள் பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது! இது ஏதோ திட்டமிட்ட செயல் போலவே தோன்றுகிறது!

மதுரையே அன்னை மீனாட்சி தான் எனவே ஒரு விமான நிலைய பெயரில் சுருக்க வேண்டியது இல்லை! திராவிட மண் என கூறியவற்களுக்கு மத்தியில் தமிழகம் என்றும் தேசியத்தின் பக்கமே என முழங்கிய  #தேவர் பெயரை விமான நிலையத்திற்கு வைப்பதே சிறந்த தேசபக்த செயல்! #தேசியமும்_தெய்வீகமும் #இரு_கண்கள்

  • ராஜா ஸ்ரீவி.
  • தமிழ்நாட்டில் பல பொது இடங்களுக்கு தேவர், சிதம்பரம் பிள்ளை, பாரதியார், சுப்ரமணிய சிவா, வாஞ்சிநாதன், கொடிகாத்த குமரன், பாண்டித்துரைத் தேவர், சேதுபதிகள் போன்ற ஆன்மீக தேசிய தலைவர்கள் பெயரை வைக்க வேண்டும்! மதுரையில மட்டும் வைக்க கூடாது .எங்கோ சம்பந்தம் இல்லாத பெரியார், காமராஜ், அண்ணா பெயர் எல்லாம் வைக்கும் போது இவர்களின் பெயர்களை அந்த அந்தப் பகுதியிலாவது சூட்டக்கூடாதா?

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...