அடியோடு மறையவேண்டும் இந்த வீர மரணங்கள்..

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து. எல்லா இடங்க ளிலும் பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என்று ஆவேசக்குரல் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது..

இன்னொரு பக்கம் அரசியல் தாண்டவமாடுகிறது. தேர்தலுக்காக ஏன் இதை நிகழ்த்தியிருக்கக்கூடாது என்று திருப்பி இங்கேயே பௌல் பண்ணுகிறார்கள்.

ஆனால் நமக்கு தோன்றுவது, உலக அரங்கில் பாகிஸ்தானை எப்படி யெல்லாம் தனிமைப்படுத்த வேண்டும் என்பதை ஏன் தொடர்ச்சியாக மறந்து விடுகிறார்கள் என்பதுதான்…

காஷ்மீரில், பாகிஸ்தான் தீவிரவாதி ஒருத்தன் காரில் வந்து மனிதவெடிக்குண்டு தாக்குதல் நடத்துகிறான் என்றால், நேராகவா வந்திருப்பான்..? உள்ளுர் ஆசாமிகள் உடந்தையாக இல்லாமல் அவன் அப்படி செய்திருக்க வாய்ப்பே இல்லை..

அதே மாதிரிதான் பாகிஸ்தானும் தனக்கான துணிச் சலோடு மட்டுமே தீவிரவாதிகளை வளர்த்து இந்தியாவில் நாசம் செய்துகொண்டிருக்கமுடியாது..

இந்தியா நிம்மதியாகவே இருக்கக்கூடாது என்று பாகிஸ்தானுக்கு ஊட்டி ஊட்டி வளர்க்கும் சில நாடுகளையும் சர்வதேச அளவில் ஒடுக்கிவைக்க ராஜதந்திர நடவடிக்கைகள் தேவை..

நாம் வழக்கமா என்ன செய்வோம்? விருப்ப பட்டியல் நாடுகள் பட்டியலிலிருந்து தூக்கிவிடுவோம். அதைவிட இன்னும் ஒருபடி மேலேபோய் கிரிக்கெட் விளையாட முடியாது என்று பீதியை கிளப்பிவிடுவோம்.

சில விஷயங்களை சொல்லிவிட்டு செய்ய வேண்டும். சில விஷயங்கள சொல்லாமலேயே செய்யவேண்டும்..

அதில் ஒருவகை, புத்திசாலிகள் செய்வது. ஒருவன் தொடர்ந்து பிரச்சினை கொடுத்துக் கொண்டேயிருந் தால், அவனை நேரடியாக அடிக்கவே மாட்டார்கள்.

அவனுக்கே தெரியாமல் புதிதாக ஆனால் மிகவும் பெரியதாக ஒரு பிரச்சினையை உருவாக்கிவிட்டு விடுவார்கள். அவன் அந்த பிரச்சினையை கட்டிக் கொண்ட அழவே நேரம் போதாது.. அப்புறம் எங்கே அவனுக்கு பழைய பிரச்சினையை பற்றி நினைப்பு வரப்போகிறது..

சுருக்கமாக சொன்னால் எரிவதை பிடுங்கினால் கொதிப்பது அடங்கப்போகிறது.. அடுத்து லெவல், விஷம் வெச்சும் கொல்லலாம். வெல்லம் கொடுத்தும் கொல்லலாம்..

முக்கியமான ஒரு விஷயம்.. போர் முனையில் மடிந்தாலும் சரி, வேறு பணியில் இருந்தாலும் சரி, பாதுகாப்பு படையினர் தீவிரவாத தாக்குதலுக்கு பலியாவது வீரமரணம்தான்..

இவர்களைவிட இன்னும் வீரமரணம் அடைபவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வேறு யாருமல்ல.. சம்மந்தமே இல்லாமல் தீவிரவாதிகளால் கொல்லப் படுகிறார்களே அந்த அப்பாவி பொது மக்கள்தான்..

தீவிரவாத தாக்குலுக்கு ஆளாகும் எவருமே வீரமரணம் அடைபவர்கள்தான். அந்த ஒட்டுமொத்த வீர மரண எண்ணிக்கை குறைந்து அடியோடு சூன்ய கணக்குக்கு வரவேண்டும். வந்தே ஆகும் என்று நம்புவோம். அதனை செய்யவேண்டியது ஆட்சியாளர்களின் கடமை..

– ஏழுமலை வெங்கடேசன் *(பத்திரிகையாளர்)
Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...