ஈழப் பிரச்னையில் திமுக அடித்த அந்தர் பல்டிகளையும் மு.க.ஸ்டாலின் கவனத்தில் கொள்வது நல்லது!

1) தனி ஈழம் அமைத்தே தீருவோம்! ‘டெசோ’ (Tamil Eelam Supporters Organisation) மாநாடு மதுரையில் நடந்த போது!

2) விடுதலைப் புலிகளைக் கொன்ற இந்திய ராணுவத்தை வரவேற்கப் போகமாட்டேன்!

3) ஈழப் பிரச்னை நம் கையை விட்டுப் போய்விட்டது. (1996 ல் ஆட்சிக்கு மீண்டும் வந்தவுடன்!)

4) செக்கோஸ்லோவேகியாவை செக் – ஸ்லோவேகியா என்று இரண்டு நாடுகள் ஆக்கியதைப் போல, ஈழம் – சிங்களம் என்று பிரித்துவிடலாம்!

5) டில்லி அரசுக்கு கடிதம் எழுதுவோம். (அந்த ‘டில்லி அரசு’ வேறு எதுவும் இல்லை! இவர்கள் பங்கேற்ற மத்திய அரசுதான்! பதவியில் பங்கேற்று அனுபவிக்கும் போது அது ‘நடுவண்’ அரசு! ஈழத் தமிழனுக்காகக் கடிதாசி எழுதும் போது ‘டில்லி’ அரசு!)

5) ‘டெசோ’ மாநாடு நடத்துவோம் – மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்துவோம்!

6) ஐயகோ பிரபாகரனும், மதிவதனியும், ஒன்றும் அறியாத பிஞ்சுக் குழந்தை பாலச்சந்திரனும் கொல்லப்பட்டதைக் கண்டு நெஞ்சு பதைக்கிறது!

7) ஈழப் போர் தோற்றதற்கு விடுதலைப் புலிகள் நடத்திய சகோதர யுத்தமே காரணம்!

ஒரே ஒரு பிரச்னையில் இத்தனை ‘அந்தர் பல்டி’ அடித்த கட்சி திமுகதான்!

இந்த லட்சணத்தில் பாமக அந்தர் பல்டி அடித்ததாக ‘ஜப்பான் துணை முதல்வர்’ கொந்தளிக்கிறார்!

– கருத்து: முரளி சீதாராமன்

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...