நடந்தது என்ன? இன்று அதிகாலை மூன்றரை மணிக்கு 12 மிராஜ் 2000 போர் விமானங்கள் 1000 கிலோ குண்டுகளுடன் புறப்பட்டன

புல்வாமாவில் தாக்குதல் நடத்திய ஜெய் ஷே முகமது அமைப்பின் பயிற்சி முகாம்கள், லஷ்கர் ஏ தொய்பா , ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம்களைக் குறி வைத்தன

பாலாகோட், சக்கோதி, முஸாபராபாத் ஆகிய இடங்களில் உள்ள கட்டுப்பாட்டு அறைகளும் குறி வைக்கப்பட்டன

லேசர் கருவிகளின் துணையோடு துல்லியமாகத் தாக்குதல் நடத்தப்பட்டது

திட்டம் 100 % வெற்றி என நமது ராணுவம் கூறுகிறது

பாகிஸ்தான் சுதாரித்துக் கொள்வதற்குள் எல்லாம் முடிந்து விட்டது

ஏனெனில் மொத்தத் தாக்குதலுமே 19 நிமிடங்களில் முடிந்து விட்டது.

12 விமானங்களும் பத்திரமாகத் திரும்பின

பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட சேதம் பற்றிய விவரங்கள் இனித் தெரிய வரும். 200-300 தீவிரவாதிகள் பலியாகி இருக்கக் கூடும் எனச் சிலர் மதிப்பிடுகிறார்கள்

பாகிஸ்தான் தாக்கப்பட்டதை ஒப்புக் கொண்டுள்ளது

பாகிஸ்தான் அயலக அமைச்சர் ஷா முகமது குரேஷி அவசரக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார்

இந்திய எல்லையில் நமது படைகள் விழிப்போடு இருக்கின்றன

இந்தியா இதைப் போன்ற துல்லிய தாக்குதல் நடத்துவது இரண்டாம் முறை

2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று இதைப் போல எல்லையில் இருந்த் 7 தீவிரவாத முகாம்கள் தாக்கப்பட்டன

நமது வீரர்கள் உயிரைப் பணயம் வைத்து நடத்திய தாக்குதலை அரசியல் காழ்ப்பு /மனச் சாய்வின் காரணமாக நமது அரசியல் கட்சிகள் சிலவும், சில ஊடகங்களும் கேலி செய்தன

இன்றும் அவர்கள் அதை மீண்டும் செய்யக் கூடும்

அதைப் பொருட்படுத்தாமல் அவர்களைப் புறந்தளுங்கள்

அரசியல், மதம் கடந்து நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய தருணம் இது.
பலன் யாருக்கு பதவி யாருக்கு என்பதைப் பற்றிக் கவலைப் படாமல் முதலில் பகை முடிப்போம்

நாடு நமது. வீரர்கள் நம்மவர்கள்

விரத்திற்குத் தலை வணங்குவோம். வெற்றிக்கு மனம் மகிழ்வோம்

இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம்

– பத்திரிகையாளர் மாலன்

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...