17/10/2019 8:27 AM
Reporters Diary கோத்ரா... கொடூர நிகழ்வு! 17 ஆண்டுகள் கழிந்த நிலையில்...!

கோத்ரா… கொடூர நிகழ்வு! 17 ஆண்டுகள் கழிந்த நிலையில்…!

-

- Advertisment -
- Advertisement -

17 வருடங்கள் கழிந்து விட்டது அந்தக் கொடூரம் நிகழ்ந்து..!

27 : பெப்ரவரி : 2002 – காலை 7:45 மணிக்கு கோத்ரா ஸ்டேஷனிலிருந்து அப்போதுதான் சபர்மதி எக்ஸ்பிரஸ் கிளம்பிய சிறிது நேரத்தில் யாரோ அபாயச் சங்கிலியை இழுத்த காரணத்தினால் வண்டி பாஃலியா சிக்னல் அருகே நிறுத்தப்பட்டது. உடனே… சிலர் அந்த ரயிலின் ஓட்டுனரை கற்களால் அடித்து பலமாக காயப்படுத்தினர். அதன் முக்கிய காரணம் அந்த ரயிலை உடனே அங்கிருந்து கிளப்ப முடியாமல் செய்வதற்காகத் தான்.

உடனே 2000 த்திற்கும் மேற்பட்ட நன்றாக திட்டமிடப்பட்ட கலகக்கார முஸ்லீம் கும்பல் அந்த ரயிலின் S6 பெட்டியைச் சூழ்ந்து கொண்டு கொலை வேகத்துடன் கற்களை எரிந்தார்கள். இதில் அந்தப் பெட்டி முழுவதும் அயோத்யாவின் உள்ள ராம்ஜென்ம பூமியில் கரசேவை செய்து விட்டு திரும்ப தங்கள் ஊருக்கு வந்தவர்கள் மட்டுமே இருந்தனர்.

140 லிட்டர் பெட்ரோலை ( ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன்னால் பெட்ரோல் பங்குகளில் வாங்கி அமான் கெஸ்ட் ஹவுஸில் வைத்திருந்தது) அந்த பெட்டி S6 முழுவதும் ஊற்றி கொளுத்தினார்கள். இதில் மேலும் நடந்த கொடுமை இந்த அயோக்யர்கள் அந்த பெட்டிகளின் கதவுகளை வெளியிலிருந்து பூட்டிவிட்டார்கள். ஏனென்றால் அப்போதுதான் ஒருவரும் உயிரோடு தப்ப முடியாது என்று. மீறி தப்பிக்க முயன்றவர்கள் கட்டையாலும், கத்தியாலும் அடித்து அங்கேயே கொல்லப்பட்டனர். இதில் ஒரு 5 வயதுக் குழந்தையையும் ஈவு இரக்கமில்லாமல் கொன்றனர்.

59 கரசேவக்குகளை இவர்கள் உயிரோடு கொளுத்தினார்கள். இதில் 27 பெண்களும், 10 குழந்தைகளும் அடக்கம். இவர்கள் செய்த ஒரே தவறு ஹிந்துக்களாகப் பிறந்தது மட்டுமே…!

இதற்குப் பிறகு நடந்தது இன்னமும் அவமானகரமானது. ஒவ்வொரு நடுநிலை யாளர்களும், மதச்சார்பின்மை பேசும் கபோதிகளும் இத்தனை நிகழ்ந்ததற்குக் காரணம் என்று ஹிந்துக்கள் மேலேயே பழி போட்டதுதான். இந்த எரிப்பை ஹிந்துகள் தாங்களாகவே நிகழ்த்தி முஸ்லீம்களுக்கு பழி பாவத்தை உண்டாக்கியது போல் கதை கட்டி விட்டனர். ஆனால் இதன் பிறகு நடந்த விசாரணைகளிலும், புலனாய்வுகளிலும் உண்மை வெளிவந்தது. மிகவும் செல்வாக்குள்ள ஒரு இஸ்லாமிய மௌலானாவே இந்த குற்றத்தை நிகழ்த்த பல மாதங்களுக்கு முன்பாகவே ப்ளான் செய்து நிகழ்த்தியது தெரியவந்தது.

மோடியை ஒழித்துக்கட்ட, காங்கிரஸ் கட்சியும், நடுநிலை என்ற பெயரில் உலவும், விலைக்கு சோரம் போன ஊடகங்களும், மனித உரிமை அமைப்புக்களும், கோத்ரா இனப்படுகொலைக்குப் பின்விளைவாக, இயற்கையாக நிகழ்ந்த குஜராத் கலவரத்தில், நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு முன்னமே, மோடியைக் குற்றவாளியாக சித்தரித்தது..!

அதன் பின் பலப்பல அப்பீல்களிலும், கமிஷன்களிலும், உச்ச நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுகளிலும், மோடி குற்றமற்றவர் எனத் தெரிந்த பிறகும்,… கோத்ரா படுகொலை பற்றி, இன்னமும் வாயே திறக்கவில்லை ஹிந்து விரோதிகள்!

தீக்கிரையாக்கப்பட்ட அப்பாவி ஹிந்துக்களுக்காக இதுவரை, ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்தவில்லை! அவர்கள் குடும்பத்தில் உள்ளோர் ஒருவரின் துயரத்தில் கூட பங்கெடுக்கவில்லை.! அவர்கள் பற்றி எந்தச் செய்தியுமில்லை! முழுக்க முழுக்க இருட்டடிப்பு செய்யப்பட்டனர்..!

17 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த இந்த கொடூரத்திற்கு ஒரு பலன் கிடைக்க வேண்டுமானால்… கண்டிப்பாக வெகு சீக்கிரம் அயோத்யாவில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும்..!

ஹிந்துக்களே எதையும் மறக்காதீர்கள்..! யாரையும் மன்னிக்காதீர்கள்..!

  • என். முரளிதரன் 
- Advertisement -
- Donate via PayTM -
Tamil Dhinasari News..! We are in the path of protecting our Hindu dharma! Please consider supporting us to run this Tamil web portal continuously.
-Advertisement-

சினிமா:

-Advertisement-
-Advertisement-
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you

%d bloggers like this: