அண்மையில் பிஜேபியை எதிர்ப்பது என்பது வேறு ; ஹிந்து மதத்தை எதிர்ப்பது என்பது வேறு!  நாங்கள் பிஜேபியைத்தான் எதிர்க்கிறோம்; ஹிந்து மதத்தை எதிர்க்கவில்லை என்று கூறியிருந்தார் திமுக., தலைவர் ஸ்டாலின்!

அந்த அளவுக்கு இப்போது ஹிந்து மதத்தை எதிர்ப்பது தவறு என்ற அறிவு ஓரளவு வந்திருக்கிறது என்றால், ஹிந்து மக்களிடையே ஏற்பட்டுள்ள ஒற்றுமையும் பிரசார பலமும்தான்!

இது மட்டும் ஒரு ஓட்டு வங்கியாக உருமாறி அரசியல் கட்சிகளை பயமுறுத்தத் தொடங்கி விட்டால்… கீழ்க்காணும் விவகாரங்கள் நடைபெற்றிருக்காதுதான்!

மதுரை மீனாட்சியையும் ஶ்ரீரங்கம் ரங்கநாதனையும் பீரங்கி வைத்து பிளக்கும் நாள் எந்த நாளோ-  என்றது பிஜேபி எதிர்ப்பதா ஹிந்து மதத்தை எதிர்ப்பதா?

சரஸ்வதி நாவில் குடியிருக்கிறாள் என்றால்-  அவள் மலஜலம் எங்கே கழிப்பாள் என்று எகத்தாளம் பேசியது பிஜேபி எதிர்ப்பதா ஹிந்து மதத்தை எதிர்ப்பதா ?

ராமர் எந்த என்ஜினீரிங் காலேஜில் படித்தார் என்று நக்கலடித்தது பிஜேபி எதிர்ப்பதா ஹிந்து மதத்தை எதிர்ப்பதா

அணில் முதுகில் விரல்களை பதித்ததால் மூன்று கோடுகள் வந்தது எனில் சீதையை ராமர் வருடவேயில்லையா என்று பேசியது பிஜேபி எதிர்ப்பதா ஹிந்து மதத்தை எதிர்ப்பதா ?

தில்லை நடராஜர் இடது காலை தூக்கி நடனமாடியதை கீழ்த்தரமான அர்த்தத்தில் பகடி பேசியது பிஜேபி எதிர்ப்பதா இந்து மதத்தை எதிர்ப்பதா ?

தமிழ்த்தாய் ஆண்டாளை தாசி என்று அவதூறு பேசியது பிஜேபி எதிர்ப்பதா இந்து மதத்தை எதிர்ப்பதா ?

ஐயப்பன் கோவில் விவகாரத்தில் அவசியம் இல்லாமல் தலையிட்டு ஹிந்து பெண்களே வேண்டாம் என்று தவிர்த்ததை வம்படியாக வேண்டும் என்று அராஜகம் செய்தது பிஜேபி எதிர்ப்பதா இந்து மதத்தை எதிர்த்ததா?

முஸ்லிம் ரம்ஜான் நோன்பு கஞ்சி குடித்துவிட்டு முஸ்லிம்கள் அமைத்துக்கொடுத்த மேடையில் அவர்கள் முன் இந்து என்றால் திருடன் என்று சொல்லி பலத்த கைத்தட்டல் வாங்கி மகிழ்ந்தது பிஜேபி எதிர்ப்பதா இந்து மதத்தை எதிர்ப்பதா ?

திருப்பதி சாமி உண்டியலுக்கு காவல் எதற்கு? அத்தனை சக்தி படைத்த சாமிக்கு தன் உண்டியலை பாதுகாத்துக் கொள்ளத் தெரியாதா என்று கேலி பேசியது – பிஜேபி எதிர்ப்பதா இந்து மதத்தை எதிர்த்ததா

இஸ்லாமிய திருமணத்தில் சம்மந்தமே இல்லாமல் ஹிந்து திருமண சடங்குகளை கேவலப் படுத்தியது –  பிஜேபி எதிர்ப்பதா இந்து மதத்தை எதிர்த்ததா

#பிஜேபியை நீங்களாம் எதிர்ப்பதே!! பிஜேபி இந்து மதத்துக்கு ஆதரவான கட்சி என்ற ஒரே காரணத்தினால் தான் என்று தமிழகத்திற்க்கே தெரியும்

இந்த ஹிந்து-விரோத ,அந்நிய மதவெறி கூலிப்படை திமுக கூட்டணியை தமிழக புண்ணிய பூமியில் இருந்து வேரறுப்போம்

அனைத்து தமிழக ஹிந்துக்களும் ஒன்றுபட்டு வருங்கால தமிழக நலனிற்க்காக இதை சாதித்துக் காட்டுவோம்!

  • உரத்த சிந்தனையாளன்
Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...