பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் பேசியது குறித்து பல்வேறு கருத்துக்களை அவரவர் மனநிலைக்கேற்ப பதிவிடுகின்றனர்.
நான் இது குறித்து எனது நிலைப்பாட்டை பத்திரிக்கையாளன் என்ற முறையில் தெரிவிக்க விரும்புகிறேன்…

தமிழகத்தின் தலைநகரில் பணிபுரியும் பத்திரிக்கை,தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு தனித்துவமான மாண்பு இருக்கவேண்டும்.பேட்டி கொடுப்பவர்கள் யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது.

உள்நோக்கோடு,உணர்வை தூண்டும் வகையில் நடந்துகொள்ள கூடாது.அந்த பேட்டியை முழுமையாக திரும்ப திரும்ப கேட்டுப்பார்த்தேன்.

பிரேமலதா தெளிவாகவும்,பதட்டமில்லாமலும் தான் பேசி வந்தார்.கூட்டணிக்காக கூளை கும்பிடு போடுபவராக இருந்தால் ஜெயலலிதாவை சட்டமன்றத்தில் எதிர்த்து கேள்வி கேட்டவர் கேப்டன் என சொல்வாரா?

எல்லோருக்கும் ஒரே நேரத்தில் தொகுதி பங்கீடு பேசியிருந்தால் இந்த வருத்தம் வந்திருக்காது என வெளிப்படையாக பேசினாரே..

அவர் இரண்டு நாள் பொறுங்கள் என திரும்ப திரும்ப சோல்லியும் பள்ளிக்குழந்தைகள் போல ஒரே கேள்வியை கேட்டது பத்திரிக்கையாளர்களிடையே புரிதல் இல்லாமல் இருப்பதை உணர்த்தியது.

அவரோடு தொடர்பில் இருந்த பத்திரிக்கையாளர்கள் சிலரை உரிமையோடு பெயர் சொல்லி அழைத்து பேசியது போலத்தான் இருந்தது.

இதே பத்திரிக்கையாளர்கள் ஜெயலலிதாவையோ, கலைஞரையோ, தளபதியையோ, துரைமுருகன் அவர்களையோ பேட்டி எடுக்கும் போது ஒரு வித பண்போடு கேள்வி கேட்பதையும் நாஞ்சில் சம்பத், வைகோ, விஜயகாந்த், பிரேமலதா போன்றவர்களிடம் வேறு வித உள்ளுணர்வோடு கேள்வி கேட்பதை வழக்கமாகி கொண்டுள்ளனர்.

அதனால் தான் இன்று பத்திரிக்கையாளர்கள் சங்கடப்பட நேர்ந்தது.

மேலும் இந்த பேட்டியை தொலைக்காட்சியில் பார்த்தவர்களும் சமூக வலை தளங்களில் ஊடக நண்பர்களை சகட்டுமேனிக்கு காரி துப்புவதும் கண்கூடக பார்க்க முடிகிறது.

யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம்.ஏன் அரசியல் தலைவர்களிடம் நட்புணர்வோடு பத்திரிக்கையாளர்களால் பேசவே முடியாதா..அப்படி பேசினால் என்ன ஆகிவிடும்.

அரசியலில் நடக்கும் கூத்துக்களை புரிந்த பத்திரிக்கையாளர்களே காழ்ப்புணர்வோடு கேள்வி கேட்டு எதிரில் இருப்பவர்களை நெருக்கடிகொடுக்க வைத்தால் அவர்களுக்கு தெரிந்த முட்டாள் தனத்தை தான் கையாளுவார்கள்..

ஒருவர் காரிதுப்புவார் இன்னொருவர் மைக்கை அடிக்க ஓங்குவார்..இன்னொருவர் ஒருமையில் பேசுவார்.

எனவே நம்மை நாம் தரம் தாழ்த்திக்கொள்ளாமல் புரிதலோடு கேள்வியை வெளிப்படுத்தினால் இது போன்ற சங்கடங்களை தவிர்க்க முடியும்.என் வீட்டுக்கு முன்னால் ஏன் ஏதோ ஒன்றை போல படுத்துக்கிடக்கிறீர்கள் என கேட்குமளவிற்கா தரம் தாழ்ந்து போவது.

இது உங்களுக்கு மட்டும் அல்ல..ஒட்டு மொத்த பத்திரிக்கையாளர்களுக்கும் அவமானமே..

தலைமையிடத்து பத்திரிக்கையாளர்களிடம் இருந்து நாங்கள் எதை கற்றுக் கொள்வது. இதன் மூலம் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்.

இதன் மூலம் ஒட்டுமொத்த பத்திரிக்கையாளர்களும் பொதுஜனங்களிடையே நன்மதிப்பை இழந்து வருகிறார்கள் என்பது மட்டுமே உண்மை.

இன்று நான் முதன்முறையாக பத்திரிக்கையாளர் என கூற வெட்கப்படுகிறேன்.இது என் மனதில் தோன்றிய ஆதங்கமே தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை..

– திரு. சிவராஜ். பத்திரிக்கையாளர், சென்னிமலை.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...