தேசமும் தேவருமே இரு கண்கள்! இதுவே நம் கொள்கை முழக்கம்!

உங்கள் கால்களில் விழுந்து கேட்கிறேன் – தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று வாழ்ந்த தேவர் திருமகனாரை தெய்வமாகக் கொண்டாடும் -தேவரின மக்களே –

தான் வாழ்ந்த காலத்திலேயே நாம் எப்படி வாழ வேண்டும் என்று எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்த தேவர் திருமகனாரின் கொள்கைகளைக் குழி தோண்டிப் புதைக்கத் துனை போய்விடாதீர்கள்- ஒன்பது வயதுச் சிறுவனாக இருந்த பொழுதே மதம் மாற்றப் பாதிரியை எதிர்த்தவர் நம் தேவர் ஐயா –

கடவுளை நிந்தனை செய்து வந்த ஈ.வே.ராமசாமிக்கு தேவர் பெயரைக் கேட்டாலே சிம்ம சொப்பனம் தான் – தனது தாடியைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே மதுரைப் பக்கம் வராமல் ஓடிப்போனவன் அந்த ஈனக் கிழவன் –

“அடியே, கள்ளி மீனாட்சி , உனக்கெதுக்கடி வைர மூக்குத்தி” என்று மதுரையில் வந்து பேசிய அண்ணாத்துரை அன்று தேவரின் கோபத்திலிருந்து தப்பிக்க ஒளிந்து மறைந்து ஓடிப்போனது வரலாறு – ஒரு வேளை அவன் அன்று மாட்டியிருந்தால் தமிழக வரலாரே மாறிப் போயிருக்கும் –

வடநாட்டுத் தேவர் நேதாஜியை ஒழித்துக்கட்டிய காங்கிரஸ் – தென் நாட்டு நேதாஜி தேவர் ஐயாவையும் ஒழித்துக்கட்ட முயன்றது கூட வரலாற்றில் இருக்கிறது –

இவ்வாறு தேவர் அவர்கள் தன் வாழ்நாளெல்லாம் எதை/யாரை எதிர்த்தாரோ அவர்கள் பின்னால் நாம் செல்வது நியாயமா?- முருகப்பெருமானின் அருள் பெற்ற தேவர் அவர்களின் வழி வந்த நாம் சிந்திக்க வேண்டாமா? –

“பசும்பொன் தேவர் முருகக்கடவுள் மீது பக்தி கொண்டவர்” –

பசும்பொன் தேவரின் உயிர் பிரியும்போது – “முருகா இவ்வுலகத்தின் ஏழை மக்களைக் காப்பாற்று” என்றவாறே உயிர் துறந்தார்- என்பார் அப்போது அருகில் இருந்த பசுமலை பார்வர்ட் பிளாக் துணைத் தலைவர் எஸ்.என். ரத்தினர் –

கந்தசஷ்டி விழாவின் போது ஒவ்வொரு படை வீட்டிலும் ஒருநாள் பிரசங்கம் செய்வார்- ஒருதடவை சுவாமிமலை, பழனிமலை, திருச்செந்தூர் முதலிய இடங்களுக்கு சென்றபோது அன்று பேசிய ஆன்மிகப் பேச்சைப் போல இன்று யார் பேசுகின்றார்கள் –

ஒருநாள் பேசியதை மறுநாள் பேசமாட்டார் – கடல் மடை திறந்தது போல் பேசுவார் என்பார் உடன் இருந்த எஸ்.என். ரத்தினர் –

தேவர் பழனி முருகன் கோவிலுக்கு அடிக்கடி வருவார். முருகனை மெய்மறந்து வழிபடுவார் – முருகன் சிலை முன்பு நின்று திருப்புகழ்ப் பாடல்களை நெஞ்சுருகப் பாடுவார் –

பார்க்கின்ற போது புல்லரிக்கும் – விசேஷ காலங்கள் மட்டுமல்லாமல் எல்லா காலங்களிலும் வந்து வணங்குவார் -என்பார் பழனி கே. சின்னப்பன் கவுண்டர்.

“நீறில்லா நெற்றிப்பாழ்” என்பர். தேவர் நெற்றில் எப்பொழுதும் திருநீற்றை அள்ளிப் பூசியிருப் பார்கள் – மதுரை மீனாட்சி அம்மன் ஆலய சிவாச்சாரியார் ஒருவர் தேவருக்குப் பூ மாலை அணிவித்து குங்குமப் பிரசாதம் அளித்து விட்டு சொன்னார் –

“மீனாட்சி அம்மனின் சந்நிதிக்கு அருகில் இருந்து கொண்டு அன்றாட அபிஷேக ஆராதனை செய்து வரும் நான் உங்களின் இறைபக்திக்கு ஈடாகமட்டேன் –

தாங்கள் அரசியலைத் துறந்து விட்டு ஆன்மீகத்திற்கு முழுத் தொண்டு புரிய வந்துவிட்டால் இந்து சமூகத்திற்கு அதைவிட பெரிய ஆனந்தம் இருக்க முடியாது.” –

இப்படி சிவாச்சாரியார் பேசிவிட்டு தேவரை இறுகத் தழுவிக் கொண்டார் –
தேவர் மெல்லபுன்னகைத்தார் – குமரி முதல் இமயம் வரை தேவர் போகாத கோயில்கள் இல்லை – வழிபாடு செய்யாத தெய்வங்களும் இல்லை –

அவற்றின் பெருமைகளைப் பேசாத இடமும் இல்லை – காஞ்சி காமகோடி பீடம் ஆச்சாரிய சுவாமிகள் தேவரோடு பலமுறை உரையாடினர் –

காவி உடையும், கழுத்தில் உருத்திராக்கமும், காதில் குண்டலும் அணிந்திடாதவர் –

களங்கமற்ற ஞானி, ஒழுக்கத்தின் குன்று – மடந்தையர் அனைவரையும் மாதா என்று போற்றும் மகான் தூய பிரம்மச்சாரி –

முன் பின் திருவருட்பாவை படித்திராமலே தங்கு தடையின்றி பாடும் தெய்வ அருள் பெற்ற தேவர் வழி வந்த நாம் சிந்திக்க வேண்டாமா? –

இப்படிக் காலமெல்லாம் தெய்வீகம் போற்றிய தேவர் வழி வந்த மக்கள் –

இன்று தேவர் திருமகனாரின் படத்தைப் போட்டே கிறிஸ்த்தவத்திற்கு ஆள் சேர்ப்பது வேதனை அளிக்கிறது –

என்று நீ மதம் மாறி விட்டாயோ அன்றே நான் தேவர் என்று கூறும் பெருமையை இழந்து விடுகிறாய் என்ற உண்மையை மறந்து விட வேண்டாம் –

இன்று கம்யூனிஸ இனையப் பக்ககளில் (வினவு, கீற்று போன்ற) சென்று பாருங்கள் தேவர் பெருமகனாரைப் பற்றி அவதூறான தகவல்களைப் பரப்பி வருகிறான்கள் –

தயவு செய்து தேவரினத்தைச் சேர்ந்த பெரியோர்களே- இவர்களைத் தட்டிக் கேளுங்கள் – தேசியத்தையும், தெய்வீகத்தையும் மதிக்காகவர்கள் பின்னால் சென்று ஐயாவின் ஆன்மாவை நோகடித்து விடாதீர்கள்- தேசமும், தேவருமே என் தெய்வம் –

தேசப்பணியில் என்றும் –
ந.முத்துராமலிங்கம் – 

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...