பெண்களே..! “நாடகக் காதலில் விழாதீர்கள்!” மீண்டும் மீண்டும் எச்சரிக்கும் பாமக ராமதாஸ்!

ramadoss

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரம் பெரும் பூதாகாரமாக வெடித்துள்ளது. இதற்குக் காரணம், பெண்களை மயக்கி சிலர் பணத்துக்காகவும் தீய எண்ணத்துக்காகவும் செயல்பட்டுக் கொண்டிருப்பதுதான்!

அதைவிட, சாதி, மத, இன ரீதியாக சமூகத்தில் வெறுப்பு உணர்வைத் தூண்டும் இயக்கங்கள், கட்சிகள், அரசியல் நோக்கத்துடன் இளைஞர்களை மூளைச் சலவை செய்து, அவர்களை தவறான வழியில் செல்ல வைப்பதும், அவர்களை குற்றவாளிகள் ஆக்குவதுமே என்று தெளிவாகக் கூறுகிறார்கள் சமூக நோக்கர்கள்.

கோவை கொங்கு மண்டலப் பகுதியிலும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டிவனம், கடலூர் உள்ளிட்ட சில பகுதிகளிலும் நாடகக் காதலால் பாதிக்கப் படும் பெண்கள் குறித்து அடிக்கடி எச்சரித்து வருகிறார் பாமக., நிறுவனர் ராமதாஸ்.

இதுகுறித்து அவர் இப்போதும் வெளியிட்டிருக்கும் டிவிட்டர் பதிவுகள் அறிக்கைகளில்…

பொள்ளாச்சி பகுதியில் வக்கிரத்தில் வார்த்தெடுக்கப்பட்ட கும்பலால் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கும், அதைத் தொடர்ந்து மிரட்டல்களுக்கும் ஆளாக்கப்பட்டு வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்துகின்றன. இச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் இரக்கம் காட்டப்பட தகுதியற்றவர்கள்; தண்டிக்கப்படுவதற்கே தகுதியானவர்கள்.

பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவன் தலைமையிலான கும்பல் தான் கற்பனையில் கூட சிந்தித்துப் பார்க்க முடியாத அளவுக்கு பாலியல் வக்கிரங்களையும், கொடூரங்களையும் அரங்கேற்றி உள்ளது. முகநூல் மூலம் தோழிகள் ஆனவர்கள், நண்பர்களின் உறவினர்கள், வலிமையான பின்னணி இல்லாத எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை இலக்கு வைத்து பழகி, காதல் ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாகவும், அதை படம் பிடித்து வைத்துக் கொண்டு அதையே காட்டி பணம் பறித்தல், மீண்டும், மீண்டும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்குதல் உள்ளிட்ட குற்றங்களை இந்த கும்பல் அரங்கேற்றியிருப்பதாக ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வருகின்றன.

சகோதரிகளாக பார்க்க வேண்டிய பெண்களை மிருகங்களாக மாறி சிதைத்த இவர்களிடம் கருணை காட்டக்கூடாது. இதற்குக் காரணமாக திருநாவுக்கரசு என்பவன் உள்ளிட்ட நால்வரை காவல்துறை கைது செய்திருக்கின்றனர். இவர்கள் மட்டுமே இந்தக் கொடூரங்களை அரங்கேற்றியிருக்க முடியாது. இதயத்தை பதைபதைக்கச் செய்யும் இந்த பாலியல் குற்றங்களின் பின்னணியில் உள்ளவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதுடன், கடுமையான தண்டனையையும் பெற்றுத் தர வேண்டும்.

1) பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சி அளிக்கின்றன. இதில் சம்பந்தப்பட்ட அரக்கர்களை தப்பவிடக் கூடாது. இக்கொடூரத்தில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து கடுமையாக தண்டிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்!

2) பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் சொல்லும் உண்மை என்னவெனில் நம்மைச் சுற்றி மனிதர்கள் என்ற போர்வையில் மிருகங்கள் உலவிக் கொண்டிருக்கின்றன என்பது தான். காதல் என்று நாடகமாடும் எவரையும் இளம்பெண்கள் நம்பக்கூடாது. காதல் வலை வீசி வீழ்த்தும் மனித மிருகங்களிடம் எச்சரிக்கை தேவை!

  • என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

தற்போது இத்தகைய பிரச்னைகளுக்கெல்லாம் ஆணி வேராகத் திகழும் (லவ் ஜிஹாத் / நாடகக் காதல்) பேச்சுகளில் ஒரு சாம்பிள்.. இது !

Advertisements

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.